ராங்கால் கொரோனா கோட்டையான தலைமைச் செயலகம்! அலறும் பணியாளர்கள்!

jj

""ஹலோ தலைவரே, அடுத்த ஆண்டு தேர்தல் நெருங்கி வருவதால் காவல்துறை பதவி நியமனங்களில் அதிக கவனத்தைச் செலுத்துது எடப்பாடி அரசு.''

""ஆமாம்பா, கலைஞராக இருந்தாலும் சரி, ஜெயலலிதாவாக இருந்தாலும் சரி, ஆட்சியின் கடைசி வருசங்களில் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்குத் தோதான அதிகாரிகளை உட்காரவைக்கவே நினைப்பாங்க. ஏன்னா, தேர்தல் நேரத்தில் உளவுத்துறை உள்ளிட்ட காவல்துறையின் ஒத்தாசை இருந்தாத்தான் ஆட்சியைத் தக்க வச்சிக்கவோ பெரியளவில் டேமேஜ் ஏற்படாமலோ காப்பாத்திக்க முடியும்ங்கிறது ஆட்சியாளர்களின் நம்பிக்கை.''

ssa

""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி அரசும் காவல்துறையின் முக்கிய பதவிகளில் தங்களுக்கு நம்பிக்கையான அதிகாரிகளே இருக்கணும்னு நினைக்கிது. மே கடைசியில் ஓய்வு பெறும் உளவுத்துறை ஐ.ஜி. சத்தியமூர்த்தியையே மீண்டும் பதவி நீட்டிப்பில் இருக்கும்படி எடப்பாடி கேட்டுக்கிட்டார். சத்தியமூர்த்தி அதுக்கு ஒத்துக்கலை. அவருக்கு பதில் உளவுத்துறை ஐ.ஜி.யாக யாரை நியமிக்கலாம், காலியாகவே இருக்கும் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. பதவியையும் சேர்த்து நிரப்பிடலாமா என்றெல்லாம் உள்துறைச் செயலாளர் பிரபாகரிடமும், டி.ஜி.பி. திரிபாதியிடமும் எடப்பாடி ஆலோசிச்சிருக்காரு. அதே சமயம் உளவுத்துறை ஐ.ஜி.பதவியைக் குறிவச்சி டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் காய்நகர்த்தறாங்க.''

""டேவிட்சன் தேவ ஆசிர்வாதம், கூவத்தூரில் அதிரடி ரெய்டை நடத்தியவராச்சே. ஜாமீனில் வருவதற்கான ஆயத்தத்தில் சசிகலா இருக்கும் போது, அவர் தரப்பை டென்ஷனாக்கிய இவரை உளவுத்துறையில் எடப்பாடி உட்காரவைப்பாரா?''

""சரியா கேட்டீங்க தலைவரே, எடப்பாடிக்கு அவர்மேல் ஆர்வம் இருந்தாலும், கூவத்தூரை சிலர் நினைவுபடு

""சரியா கேட்டீங்க தலைவரே, எடப்பாடிக்கு அவர்மேல் ஆர்வம் இருந்தாலும், கூவத்தூரை சிலர் நினைவுபடுத்தியதால், அந்த ஆர்வத்தை எடப்பாடி குறைச்சிக்கிட்டார். அதனால் உளவுத்துறை ஐ.ஜி. பதவி ஈஸ்வரமூர்த்திக்குக் கிடைக்க வாய்ப்பு அதிகம்னு டிபார்ட்மென்ட்லயே டாக் அடிபடுது. இந்த நேரத்தில் உளவுத்துறைக்கு ஆசைப்பட்ட ஜாபர்சேட்டைத் தூக்கி, முக்கியத்துவம் இல்லாத சிவில் சப்ளை கார்ப்பரேசன் குற்றப் புலனாய்வுப் பிரிவு டி.ஜி.பி.யா உட்காரவச்சிட்டார் எடப்பாடி.''

""பெரிய போஸ்ட் கிடைக் கும்னு நினைச்ச சூழலில் ஏன் இந்த டம்மி போஸ்ட்?''

""ஜாபர்சேட் சி.பி.சி.ஐ. டியின் டி.ஜி.பி.யா இருந்ததால், தமிழ்நாடு தேர்வாணைய கேள்வித்தாள் மோசடி விவகா ரம் தொடர்பாக, அமைச்சர் ஜெயக்குமார் உதவிகேட்டுப் பேசிய பேச்சையும், நிர்மலா தேவி தொடர்பான உரையாடல் களையும், பொள்ளாச்சி விவகாரம் தொடர்பா வி.ஐ.பிக்கள் கெஞ்சிய கெஞ்சல்களையும், இன்னும் பல சீக்ரெட் விவகாரங்களையும் ரெக்கார்ட் பண்ணி வச்சிருந்தாராம். போஸ்டிங்குக்காக அதை துருப்புச் சீட்டா ஜாபர் பயன்படுத்திய நிலையில், உளவுத்துறை ஐ.ஜி.சத்திய மூர்த்தி மூலம், அந்த ஆதாரங்கள் எல்லாம் கைப்பற்றப் பட்டிருக்கு. துருப்புச்சீட்டு கைமாறியதால், போஸ்ட்டிங்கின் பவரும் குறைஞ்சிடிச்சாம்.''

""நானும் கேள்விப்பட் டேம்ப்பா.. சி.பி.சி.ஐ.டி.க்கு ஜாபரை நியமிக்கும் போதே ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க. வி.ஐ.பி.க்கள் மீதான வழக்குகளில் அதிரடி காட்டனும்ன்னு அசைன்மெண்ட் கொடுக்கப்பட்டும், அவர் குறைந்தபட்சம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான மா.சு, செந்தில் பாலாஜி விவகாரங்களில் கூட அதிரடி காட்டலைன்னு எடப்பாடி எரிச்சலில் இருந்தாராமே?''

jaff

""உண்மைதாங்க தலைவரே, அதோட தி.மு.க. புள்ளிகளோடு நெருக்கமான தொடர்பில் ஜாபர் இருப்பதாகவும், மாவட்டம் தோறும் அமைச்சர்களின் மீது ஊழல் புகார்களைத் தொகுக்கப் போவதாக அறிவித்திருக்கும் தி.மு.க.வுக்கு, ஜாபர் மறைமுகமாக ஆதரங்களைத் திரட்டிக் கொடுத்து உதவலாம்னும் அவருக்கு எதிரானவங்க, எடப்பாடிக்கிட்ட போட்டுக்கொடுத்திருக்காங்க. எல்லாம் சேர்ந்துதான் அவரை டம்மியாக்கியிருக்கு. இதே சூட்டில் ஏ.டி.ஜி.பி.க்களான கந்தசாமி, மாகாளி, ஷகில் அக்தர், ராஜேஷ்தாஸ் உள்ளிட்டோரின் புரோமோசனுக்கான ஆர்டரும், சிலரின் டிரான்ஸ்பர் லிஸ்டும் தயாராகிக்கிட்டு இருக்குது.''

""ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தரப்பிலும் சலசலப்பு தெரியுதே?''

""ஆமாங்க தலைவரே, கடும் ஊழல் புகார்களில் சிக்கிய ஐந்து ஐ.ஏ.எஸ் அதிகாரிகளுக்கும் எடப்பாடியின் உத்தரவின் பேரில் டிரான்ஸ்பர் ஆர்டர் தயாராகுதாம். ஆனால் அந்த அதிகாரிகளோ, அதைத் தடுக்கும் முயற்சியில் இறங்கி, பல பக்கமும் மூவ் பண்ணிக் கிட்டு இருக்காங்களாம். இந்த நிலையில், நாலு வருடங்களுக்கு மேல் மாவட்ட ஆட்சியராகவே இருக்கும் அதிகாரி களை வெவ்வேறு இடங்களுக்கு மாற்றவும் பட்டியல் தயாராகுதாம்.''

""தி.மு.க.வின் ஒன்றிணைவோம் வா' செயல்பாட்டுக்கு எதிரா உணவுத்துறை அமைச்சர் காமராஜ் திடீர்னு பொங்கி யிருக்காரே?''

""அதற்கொரு பின்னணி இருக்குதுங்க தலைவரே, ஏற்கனவே சர்ச்சைகளில் அடிபட்ட கிறிஸ்டி ஃபுட் நிறுவனத்தின் வழியாக, உணவுப் பொருள்களைக் கொள்முதல் செய்ததில் அமைச்சர் காமராஜ் புகுந்து விளையாடிட்டாராம். அவர் மகன் டாக்டர் இனியனின் மனைவி மற்றும் மாமனார் குடும்பத்தின் பெயரில், தஞ்சை சரபோஜி கல்லூரி எதிரில் கோடிக் கணக்கான ரூபாய்க்களைக் கொட்டி ஒரு மல்டி லெவல் மருத்துவமனை கட்டப்படுவது பற்றி நம்ம நக்கீரனில் ஒரு செய்தி வந்திருக்குது. அதை அந்த நிறுவனமே கிஃப்ட்டா கட்டித்தருதாம், இது சம்பந்தமான விவரங்களை தி.மு.க தரப்பு திரட்டியிருக்குது. இதையறிந்த எடப்பாடி, தி.மு.க.வால் குறிவைக்கப்பட்டிருக்கும் நீங்களே, தி.மு.க.வுக்கு பதில் கொடுத்து அதோடு ஃபைட்டை ஆரம்பியுங்கள். தி.மு.க, தலைமைச் செயலாளரிடம் கொடுத்த ஒரு லட்சம் மனு குறித்து பதில் சொல்லுங்கள்ன்னு சொல்லிடடாராம். அதனால அமைச்சர் காமராஜூம், தி.மு.க. தந்த பொதுமக்கள் மனுக்களில் சிறு-குறு தொழில் பற்றிய கோரிக்கைகள் இல்லை. ரேஷன் பொருள் தட்டுப்பாடு பற்றித்தான் இருக்குதுன்னு மீடியாக்களிடம் சொன்னாரு. ஆனா, இதே அமைச்சர்தான் ஏற்கனவே, தமிழகத்தில் உணவுப் பொருள் தட்டுப்பாடே இல்லாமல் ரேஷனில் வழங்கப்படுதுன்னு சொல்லியிருந்தாரு.''

""கொரோனா காலத்தில் முதல்வர் முதல் அமைச்சர்கள் வரை எல்லாருக்கும் தடு மாற்றம்தான்...''

""ஆமாங்க தலைவரே, கொரோனா கட்டுக்குள் இருக்குன்னு எடப்பாடி அரசு கிளிப்பிள்ளை மாதிரி சொல்லிவரும் நிலையில், அரசு நியமித்த மருத்துவ ஆலோசனைக் குழு வோடு 26-ந் தேதி முதல்வர் ஆலோசனை நடத்தினார். அப்போது உலக சுகாதாரத் துறையைச் சேர்ந்த சௌமியா சாமிநாதனும் இந்தக் கூட்டத்தில் நியூயார்க்கில் இருந்தபடியே வீடியோ கான்பரன்ஸிங் மூலம் கலந்துக்கிட்டார். நீங்கள் கொரோனாவைக் கட்டுப்படுத்துவதில் தவறிவிட்டீர்கள். ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 18 ஆயிரம் பேருக்காவது தொற்றுப் பரிசோதனை நடத்தனும். ஆனால் நீங்க 11 ஆயிரம் பேரை இன்னும் தாண்டலை. தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டிருக்காங்க. கணக்கை மறைப்பதால் கொரோனா பாதிப்பின் அளவு குறைஞ்சி டாதுன்னு கடுமையாக விமர்ச்சிருக்கார். அதனால் அவரது பேச்சு விபரத்தை அரசு முறைப்படி வெளியிடலை.''

vv

""திமு.க.வில் இருந்து அண்மையில் பா.ஜ.க.வில் ஐக்கியமான வி.பி.துரைசாமி மூலம், மேலும் சில தி.மு.க. புள்ளிகளுக்கு வலை விரிக்கப்படுதாமே?''

""ஆமாங்க தலைவரே, பா.ஜ.க. கொடுத்த அசைன்மெண்ட்டின்படி, தி.மு.க. முக்கிய புள்ளிகளிடம் பழைய நட்பில் பேசும் வி.பி. துரைசாமி, தி.மு.க. இப்ப ஐ.பேக்கின் கைக்குப் போயிடிச்சி. வர்ற தேர்தலில் ஒருவேளை ஸ்டாலினே முதல்வரானாலும் ஐபேக்கின் அட்வைஸ்படி இளைஞர்களுக்கே அமைச்சர் பதவி கிடைக்கும். அதனால் பா.ஜ.க.வுக்கு வந்துடுங்க. உங்களுக்கு டெல்லியில் கேபினட் அந்தஸ்தோட பதவி கிடைக்க ஏற்பாடு பண்றேன்னு தூண்டில் போடறாராம். இது ஒரு பக்கம்னா, தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், கேபினட்டில் ரெண்டாம் இடம் யாருக்குங்கிற டாக் இப்பவே அறிவாலயம் சைடில் தொடங்கிடிச்சாம். குறிப்பா துரைமுருகன், கே.ன்.நேரு, எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் இந்த பட்டியல்ல இருக்காங்களாம்.''

zs

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன்.. இப்ப தலைமைச்செயலகம் கொரோனா கோட்டையா மாறிக்கிட்டு இருக்கு. தலைமைச் செயலகத்தின் பத்தாவது மாடியில் முதன்முதலாக பணியாளர் ஒருவரை டச் பண்ணிய கொரோனா, இரண்டே வாரத்தில் கிடுகிடுன்னு வனத்துறை, சமூக நலத்துறை, பொதுப் பணித்துறை, பொதுக் கணக்குக் குழு இருக்கும் பழைய கட்டிடம்ன்னு பல தளங்களிலும் இருக்கும் பணியாளர்களுக்குப் பரவிடிச்சி. இது சம்மந்தமா அங்குள்ள பணியாளர்கள்ட்ட கேட்டப்ப, நிலைமை தீவிரமா இருக்கு. கபசுர குடிநீர், மல்டி விட்டமின் மற்றும் ஜின்ங் மாத்திரைகளைக் கொடுத்து எங்களை வேலைக்கு வரச்சொல்லும் அரசு, எங்கள் குடும்பத்தினருக்கு இதையெல்லாம் தர்றதில்லை. இதனால் பணி முடிந்து வீட்டுக்குப் போகும் போது, எங்கள் குடும்பத்தினரே, எங்களைக் கண்டு விலகி நிற்கும் நிலை நிலவுதுன்னு சொல்றாங்க.''

nkn300520
இதையும் படியுங்கள்
Subscribe