Advertisment

கங்கை நதியில் கொரோனா பிணங்கள்! -மோடியை விமர்சிக்கும் சர்வதேச பத்திரிகைகள்

hg

கொரோனா இரண்டாவது அலை யைச் சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாறிவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. உலகின் பல்வேறு இதழ்களும் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

Advertisment

gangai

தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வார கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும் தமிழகத்தில் நாளொன்றுக்கு 30,000 பேருக்கும் சென்னையில் மட்டும் 7,000-க்கும் அதிகமான பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவருகிறது. அதிகரித்துவரும் கொரோனா தொற்றைச் சமாளிக்க, 12,700 ஆக்ஸிஜன் வசதிகளுடன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சேமிப்புக்கிடங்கு வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

ஆக்ஸிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தானே எடுத்துக்கொண்டதுடன், தமிழகம், புதுச்சேரிக்குத் தேவையான ஆக்ஸிஜன் மருந்து சப்ளையை மத்திய அரசு உடனடியாகத் தரவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழகத்துக் கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இம்மாத இறுதியில் தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 800 டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசி கிடைப்பதிலும் தொய்வு நிலவுவது

கொரோனா இரண்டாவது அலை யைச் சமாளிக்க முடியாமல் இந்தியா தடுமாறிவருகிறது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் முழுமையாகவும் பகுதியளவிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையிலும், கொரோனா முழுமையாகக் கட்டுப்பாட்டுக்குள் வந்தபாடில்லை. உலகின் பல்வேறு இதழ்களும் இந்தியாவின் கொரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை விமர்சிக்கத் தொடங்கியுள்ளன.

Advertisment

gangai

தமிழகம்

தமிழகத்தில் கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த இரண்டு வார கால ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்த போதும் தமிழகத்தில் நாளொன்றுக்கு 30,000 பேருக்கும் சென்னையில் மட்டும் 7,000-க்கும் அதிகமான பேருக்கும் கொரோனா நோய்த் தொற்று ஏற்பட்டுவருகிறது. அதிகரித்துவரும் கொரோனா தொற்றைச் சமாளிக்க, 12,700 ஆக்ஸிஜன் வசதிகளுடன் படுக்கைகளை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 11 ஆயிரம் கிலோ லிட்டர் ஆக்ஸிஜன் சேமிப்புக்கிடங்கு வசதியும் அமைக்கப்பட்டு வருகிறது.

Advertisment

ஆக்ஸிஜன், தடுப்பூசி, ரெம்டெசிவிர் மருந்துப் பற்றாக்குறை தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றம் வழக்கை தானே எடுத்துக்கொண்டதுடன், தமிழகம், புதுச்சேரிக்குத் தேவையான ஆக்ஸிஜன் மருந்து சப்ளையை மத்திய அரசு உடனடியாகத் தரவேண்டுமென உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலினும் பிரதமருக்கு கடிதம் எழுதிய நிலையில் தமிழகத்துக் கான ஆக்ஸிஜன் ஒதுக்கீடு 419 டன்னாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் இம்மாத இறுதியில் தமிழகத்தின் ஆக்ஸிஜன் தேவை 800 டன்னாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு நாளொன்றுக்கு 20 ஆயிரம் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுக்கு ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழகத்துக்குத் தேவையான தடுப்பூசி கிடைப்பதிலும் தொய்வு நிலவுவது பின்னடைவாகும்.

gangai

ஆந்திரா

ஆந்திராவின் திருப்பதி அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சப்ளை செய்யும் குழாயில் ஏற்பட்ட கோளாறு காரண மாக 11 பேர் உயிரிழந்துள்ளனர். 30 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தற்போதைய ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணங்களில் பெரும்பாலானவை ஆக்ஸிஜன் குழாயில் கோளாறு எனவோ, வேறு உடல்நல பிரச்சினைகளால் மரணம் எனவோ குறிப்பிடப்படுவதால் இதனையும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை மரணம் என்றே கருதவேண்டியிருக்கிறது.

கர்நாடகம்

கர்நாடகத்திலும் கொரோனா இரண்டாவது அலை காரணமாக படுக்கைத் தட்டுப்பாடு, ஆக்ஸிஜன் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில், நிலைமையைச் சமாளிக்க கொரோனா "வார் ரூம்' அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூரு மாநகராட்சியின் தெற்கு வார் ரூமுக்கு பெங்களூரு தெற்கு எம்.பி. தேஜஸ்வி சூர்யா மே-5 ஆம் தேதி வருகை தந்து சோதனைகளை மேற்கொண்டார்.

200 பேரைக் கொண்ட தன்னார்வலர் பட்டியலில் 17 முஸ்லிம் பேரைக் கண்ட அவர், “"கார்ப்பரேஷனுக்கு ஆள் எடுத்திருக்கிறீர்களா அல்லது மதரஸாவுக்கு ஆள் எடுத்திருக்கிறீர்களா?'’ என விமர்சனம் செய்தார். மேலும் "படுக்கைகள் ஒதுக்குவதில் நடைபெறும் ஊழலுக்கு அவர்களே காரணம்' எனவும் விமர்சித்தார்.

தேஜஸ்வியின் கருத்துக்கு மாநிலமெங்கும் எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து தேஜஸ்வி சூர்யா மறுநாள் தனது கருத்துக்கு அவர்களிடம் மன்னிப்பு கேட்டதாக செய்தி வந்தது. இதை தேஜஸ்வி சூர்யா தரப்பு மறுத்துள்ள நிலையில், தன்னார்வலர்களாக சேர்க்கப்பட்டுள்ள முஸ்லிம் உறுப்பினர்கள் காவல்நிலையத்துக்கு அழைக்கப் பட்டு விசாரிக்கப்பட்டுள்ளனர். எனினும், அவர்கள் தன்னார்வலர்கள் பொறுப்பிலிருந்து நீக்கப்படவில்லை.

gagna

"மாநிலமே, கொரோனா அலையால் தவித்துவரும் நிலையிலும் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரை மட்டும் படுக்கையை ஒதுக்குவதில் காசு பார்ப்பதாக ஆதார மின்றிக் குற்றம்சாட்டுபவர்கள், கொரோனா கிருமிகளை விட ஆபத்தானவர்கள்' என எதிர்க்கட்சிகள் தரப்பி லிருந்து கடுமையான விமர்சனம் எழுந்துள்ளது.

குஜராத்

குஜராத், நீண்ட காலமாக பா.ஜ.க. ஆளும் இந்துத்துவ அரசுக்கான சோதனைச்சாலையாக இருப்பது மட்டுமின்றி, மூடநம்பிக்கை அமோக விளைச்சல் காணும் மண்ணாகவும் இருந்துவருகிறது. கொரோனா முதல் அலையின்போது குஜராத்தில், நோய் எதிர்ப்பு சக்தியை அளித்து கொரோனா வராமல் தடுக்கும் மருந்தாக கோமியத்தை விற்பனை செய்தனர். இரண்டாவது அலையில் பெருவாரியாக கொரோனா மரணங்களும் நிகழ்ந்துவரும் நிலையில், குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் கோசாலையை கொரோனா சிகிச்சை மையமாக்கி கோமியம், நெய், பசும்பாலிலிருந்து தயாரித்த மருந்துகளை அளித்து குணப்படுத்த முயல்கின்றனர். ஆக்ஸிஜன் அளவு குறைவான நோயாளிகளுக்கும் இங்கு சிகிச்சை தரப்படுவது விமர்சனத்துக்கு ஆளாகியுள்ளது. பாரம்பரிய, வேத சிகிச்சையென்ற பெயரில் நோயாளி களின் உயிருடன் விளையாடுவது ஆபத்தானது என அலோபதி மருத்துவர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர்.

டெல்லி

டெல்லியின் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான கோபால் லோதி, தன் மனைவி சந்தியாவுக்கு மருத்துவமனையில் இடம்கிடைக்க மாவட்ட நீதிபதி உத்தரவைப் பெறவேண்டி யதானது. இடம் கிடைத்தபின்னும் 3 மணி நேரம் படுக்கை கிடைக்கவில்லை. தரையிலேயே படுக்கவைக்கப்பட்டார். தன் மனைவிக்கு பலமணி நேரம் உணவோ, படுக்கையோ கொடுக்கவில்லை என குற்றம்சாட்டியுள்ளார். எம்.எல். ஏ.வான என் நிலைமையே இதுவென்றால் சாதாரண மனிதனின் நிலை குறித்து கேள்வியெழுப்பியுள்ளார். டெல்லி நிலைமை சீரடையவில்லை என்பதையே இது காட்டுகிறது.

பீகார், உ.பி. எல்லை

gag

பீகாரின் சௌசா கிராம எல்லையோரத்தில், கங்கைநதிக் கரையில் நாற்பதுக்கும் அதிகமான பிணங்கள் மிதந்துவந்தது பலரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இது கிழக்கு உத்தரப்பிரதேசத்திலிருந்து மிதந்து வந்திருக்கலாம் என கருதப்படுகிறது.

இதில் மேலும் அதிர்ச்சியளிக்கும் விஷயம், இந்தப் பிணங்கள் கொரோனா நோய்த் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்தவர்களின் பிணமாக இருக்கலாம் என்ற சந்தேகமும், பிணங்களை தெருநாய்கள் கடித்துக் குதறுவதும்தான். இதனால் கிராம மக்களிடையே கொரோனா நோய்த்தொற்று பரவுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது.

உ.பி.யில் கொரோனா தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது. இறந்த உடல்களை ஆம்புலன்ஸில் கொண்டுசெல்ல ரூ 20,000 வரை கேட்கப்படுகிறது. உடலை எரியூட்ட 20,000 முதல் 30000 வரை செலவாகிறது. விறகு விலைகூட தாறுமாறாக அதிகரித்துள்ளது. இந்தத் தொகையைக் கொடுக்க வசதியற்றவர்கள் கங்கை நீரில் உடலை வீசியெறிந்து விடுகிறார்கள்.

பீகார் கிராமத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் அசோக்குமாரோ, "இவர்கள் இந்தக் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் கிடையாது. உடல்களோ சிதைந்து காணப்படுகின்றன. போஸ்ட்மார்ட்டம் எதுவும் செய்யாமல் இவர்கள் கோவிட் 19 நோயாளிகள் என்று எப்படி உறுதியாகச் சொல்லமுடியும்?'' என்கிறார்.

அதேசமயம் இந்த உடல்களின் எண்ணிக்கை 100 என்ற அளவில் இருக்கும் என உள்ளூர்ப் பத்திரிகையாளர்கள் குறிப்பிடுகின்றனர். நிச்சயமாக நாற்பது உடல்கள் காணப்படும் நிலையில் இந்த உடல்களை மீட்டு கௌரவமான இறுதிச் சடங்கு செய்ய அதிகாரிகள் வேலைகளைத் துரிதப்படுத்தியுள்ளனர்.

மோடி அரசை வெளுத்த லான்செட்

“கொரோனாவைக் கட்டுப்படுத்துவதை விடவும், தன் அரசைப் பற்றி விமர்சிக்கும் ட்வீட்டுகளை அகற்றுவதில் அக்கறை காட்டுவதாக”பெயர் சர்வதேச மருத்துவப் பத்திரிகையான லான்செட், மோடி அரசை விமர்சித்துள்ளது.

முதல் அலையின்போது சில மாதங்களாக கொரோனா தொற்று குறைந்த நிலையில், கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்ததாக சுகாதார அமைச்சர் ஹர்ஷவர்தன் ட்வீட் போட்டுக் கொண்டிருந்தார். கொரோனா புதிய வைரஸ் பற்றியும் இரண் டாவது அலைக்கு வாய்ப்பிருப்ப தாகவும் உலகமே பல முறை எச்சரித்தபோதும், இந்தியர்களுக்கு ஹெர்ட் இம்யூனிட்டி வந்து விட்டதாகக் கூறி கொரோனாவை எதிர்கொள்ள ஆயத்தமில்லாத நிலையில் இருந்தது இந்தியா.

எக்காரணம் கொண்டும் பெருங்கூட்டம் சேரக்கூடாதென எச்சரித்திருந்த நிலையில், தேர்தல் கூட்டங்களையும், கும்பமேளா உள்ளிட்ட பெருந்திரள் களையும் கூட்டி கொரோனாவுக்கு தாம்பூலம் வைத்து இந்தியா அழைத்தது. இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில் மிகக்குறைந்த அளவான 17 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டிருப்பதையும் அதுவும் மிக மெதுவாக நடைபெறுவதையும் விமர்சித்துள்ளது லான்செட்.

இந்தியா அளித்துள்ள மருத்துவ புள்ளிவிவரங்களை வைத்து மதிப்பிட்டு, "ஆகஸ்ட் 1-க்குள் கோவிட்டால் பத்து லட்சம் பேர் பலியாவார்கள். இந்த பெரும் உயிர்ப்பலி... மோடி அரசு, தானே வரவழைத்துக்கொண்ட பேரழிவாகும்' என கடுமையாக விமர்சித்துள்ளது.

இதற்கிடையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பூசிகள், பங்களாதேஷ், பாகிஸ்தானைவிட அதிக விலையில் இந்தியாவில் விற்கப்படுகின்றன. அதிக விலை கொடுத்தாலும் பல இடங்களில் தடுப்பூசிகள் கிடைக்கவில்லை. "இந்தியா தடுப்பூசி போடப்படுவது இந்த வேகத்தில் போனால், இந்தியாவில் முழுமையாக தடுப்பூசி போட 3 ஆண்டுகளாகவிடும்' என கணக்கிடப் பட்டுள்ளது.

கொரோனாவைக் கட்டுப்படுத்த வேண்டிய பிரதமரின் செயல்பாடுகளின் வேகத்தைப் பார்த்து, கொரோனா நமுட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவோ, இழவு வீட்டைப்போல மாறி துயரக்கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கிறது.

nkn150521
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe