இஸ்லாமியர்களின் புனித ஸ்தலமான மெக்கா மதீனாவில் வழிபடுவோரின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்திருக்கிறது. கிறிஸ்தவ மதத்தின் தலைமையக மாகக் கருதப்படும் வாடிகன் நகரத்திலும், பாதுகாப்பு நடவடிக் கைகளை அதிகப்படுத்தி மக்கள் வருகையைக் குறைத்துவிட்டனர். இந்துக்கள் அதிகமாக வழிபடும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வருவோர், இருமல் தும்மல் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வருவதைத் தவிர்த்து விடுமாறு தேவஸ்தானம் அறிவித்துவிட்டது.
இப்படி எல்லாத் தரப்பினரையும், எல்லா மதத்தினரையும், பாரபட்சம் பார்க்காமல் தாக்கி இருக்கிறது கொரோனா வைரஸ். இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் இந்த நொடிவரை, உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 11 ஆயிரத்து 465 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள னர். 3 ஆயிரத்து 883 பேர் உயிரிழந்துள்ளனர். 62 ஆயிரத்து 671 பேர் தாக்குப்பிடித்து, முழுமையாக குணமடைந்துள்ளனர். 44 ஆயிரத்து 911 பேர் தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டு, சிகிச்சை பெற்றுவருகின்றனர்.
கொரோனா பாதிப்புக்கான தாக்கங்களும், உயிரிழப்புகளும் பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களுக்கே அதிகமாக இருந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அதேசமயம், நம்பிக்கையைத் தளரவிடாமல் சிகிச்சைக்கு ஒத்துழைத்த 90, 100 வயதுக் காரர்களும் இருக்கவே செய் கிறார்கள். இந்தியாவில் அடுத் தடுத்து 43 பேர் கொரோனா வைரஸ் தாக்கத்திற்கான அறி குறிகளுடன் அனுமதிக்கப்பட்டு, கண்காணிப்பில் வைக்கப்பட் டுள்ளனர். இதுவரை கேரளா, தெலங்கானா வரை பரவியிருந்த கொரோனா, இப்போது தமிழ் நாட்டிலும் நுழைந்துவிட்டது.
கடந்த மார்ச் 01-ந்தேதி மஸ்கட்டிலிருந்து வந்த இஞ் ஜினியர் ஒருவருக்கு 04-ந்தேதி வரை காய்ச்சல் இருந்திருக் கிறது. 04-ந்தேதி அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு வந்திருக்கிறார். காய்ச்சலால் மூச்சுவிட சிரமப்பட்ட அவரை பரிசோதித்த டாக்டர்களுக்கு கொரோனாவாக இருக்குமோ? என்கிற சந்தேகம் ஏற்பட்டது. உடனே அவரை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றினார்கள். அவரது ரத் தத்தை எடுத்து பரிசோதனைக் காக கிண்டியிலுள்ள கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு அனுப்பி வைத்தனர். அங்கும் சந்தேகம் வலுவடைந்ததால் தேசிய வைரஸ் ஆராய்ச்சிக் கழகம் அமைந்துள்ள புனேவிற்கு அனுப்பினர். அவருக்கு வந்துள் ளது கொரோனா வைரஸ்தான் என புனே ஆய்வகம் உறுதி செய்தது.
அவருக்கு தீவிரமாக சிகிச்சையளித்து வருகிறார்கள். என்ன சிகிச்சை அளிக்கப்படுகிறது என டாக்டர்களிடம் கேட்டபோது... ""அவருக்கு ஜுரம் அதிகமானால் ஜுரத்திற்கான சிகிச்சை, இருமல் அதிகமானால் அதற்கான சிகிச்சை, சர்க்கரை நோயாளியான அவரின் சர்க்கரை அளவு அதிகமானால் அதற்கான சிகிச்சை என நோய் அறிகுறிகளை வைத்து சிகிச்சை தருகிறோம். அவருடனே மார்ச் 01-ந்தேதி முதல் வசித்து வரும் அவரது மனைவிக்கு கொரோனா இருக்கிறதா என சோதித்தோம். அவரது மனைவியை கணவரின் நோய் பாதிக்கவில்லை என ரிசல்ட் வந்திருக்கிறது'' என்கி றார்கள்.
""அதேபோல் அமெரிக்கா வின் டெக்சாஸ் மாகாணத்திலிருந்து வந்த ஒரு மாணவருக்கு கொரோனா இருப்பதாக மருத்துவர்கள் சந்தேகித்தனர். அவரது ரத்த மாதிரிகள் புனேவிற்கு அனுப்பப்பட்டன. அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படை யில், கொரோனா பாதிப்பு இல்லை என ரிசல்ட் வந்திருக் கிறது. இன்று தமிழக்தை பொறுத்தவரை ஒரேயொரு வர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அதுவும் அவருக்கு வெளிநாட்டிலிருந்து தான் தொற்று ஏற்பட்டுள்ளது. கொரோனா நோயாளிகளை சமாளிப்பதற்கு என தமிழக அரசு 300 படுக்கைகளை தயார் செய்துள்ளது. அதேபோல் தனியார் மருத்துவமனைகள் ஒவ்வொன்றும் பத்து படுக்கை களை தயார்செய்து வைத்திருக்க அரசு உத்தரவிட்டுள்ளது. மக்கள் அதிகம் புழங்கும் ரயில் நிலையங்கள், வெளிநாட்டுப் பயணிகள் வரும் விமானநிலை யங்கள், பேருந்து நிறுத்தங்கள் போன்றவற்றில் கொரோனா வைரஸுக்கெதிராக சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் எடுக்கப் பட்டுள்ளதாக அரசு அறிவித் துள்ளது'' என்கிறார்கள் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள்.
இந்தியா முழுவதும் 87 இடங்களில் புதிய சோதனைக் கூடங்கள் அமைக்கப்படுகிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த சுத்தப்படுத்தும் நடவடிக்கை இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. இந்தியா முழுவதும் 35-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுவரை வெளி நாட்டு இறக்குமதியாக உள்ள கொரோனா, உள்நாட்டு பொரு ளாக மாறும் நாள் வெகு தொலைவில் இல்லை'' என்கிறார்கள் மருத்துவர்கள்.
- தாமோதரன் பிரகாஷ்