பன்னிரண்டாம் வகுப்பு பாடப்புத்தகத்தில் இடம்பெற்ற ஒரு பாடம் சர்ச்சையைக் கொண்டு வந்துள்ளது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பன்னிரண்டாம் வகுப்பில் “"அறவிய லும் இந்தியப் பண்பாடும்'” எனும் துணைநூல் சேர்க்கப்பட்டது. இந்த பாடத்திட்டத்தில், இந்தியப் பண் பாடும் சமயங்களும் என்னும் பாடம் இடம்பெற்றுள்ளது.
அந்தப் பாடத்தில் இந்து தர்மம் என்னும் தலைப்பில் இடம் பெற்ற விவரங்கள் சர்ச்சைக்கு உள்ளாகி வருகின்றன. அந்தப் பாடம் இடம் பெற்றுள்ள 58-ஆம் பக்கத்தில், “இந்து சமயம், சனாதன தருமம், வேத சமயம், வைதிக சமயம் போன்ற பல்வேறு பெயர்களால் அழைக்கப்படு கிறது. சனாதன தருமம் என்றால், அழிவில்லாத நிலையான அறம் ஆகும்- என இடம்பெற்றுள்ளது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/12book.jpg)
அடுத்த பக்கத்தில் இந்து தர்மத்தின் சமூகக் கடமைகளைப் பற்றிக் கூறவரும்போது, வர்ணா சிர தர்மம் எனும் உபதலைப்பில், “இந்து சமயம் ஒவ்வொரு மனிதனும் அவன் சார்ந்துள்ள சமூகத் திற்கென சில கடமைகளை ஆற்றவேண்டும் எனக் குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் சமூகம் நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அவையாவன: பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆவர். இவை சமூகத்திற்கான தொழில் கடமைகளேயாகும். இவற்றில் உயர்வு தாழ்வு கிடையாது”- எனக் குறிப்பிடப்பட் டுள்ளது.
புத்தகத்தின் 58-ஆம் பக்கம் இடம்பெற்றுள்ள இக்கருத்து, இந்து சமயம் வைதிக சமயம் அல்லது வேத சமயம் என்ற விளக்கம் வேதசமயம் மட்டுமே இந்து மதம் என்ற தொனியில் இடம்பெற்றுள்ளது தவறான விளக்க மாகும். சைவம், வைணவம், நாட்டார் மதங் கள், ஒரு கணிசமான அளவு பௌத்த, சமண மதங்களின் தத்துவங்களின் தாக்கங்கள் என பல்வேறு தத்துவங்களின் செழுமையான இணைவே இந்து மதமாகும்.
அதேபோல, சமூகத்தின் நால்வகைப் பிரிவில் உயர்வு-தாழ்வு கிடையாதென்பதும் அப்பட்டமான பொய்யாகும். நால்வகை வர்ணப்பிரிவே நாளடைவில் சாதியப் பிரிவினை களுக்கும், பிறப்பின் அடிப்படையில் உயர்வு கற்பிப்பதற்கும் இட்டுச்சென்றது. இத்தகைய தவறான, ஒரு சமூகச் சார்பான கருத்துகள் இடம்பெற்றிருப்பதை பாடநூல் குழுவினர் சரிபார்த்துத் திருத்தவில்லை. என பல்வேறு கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் அதிருப்தி தெரிவித்துவருகின்றனர்.
"கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் உதயச் சந்திரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக்கல்வித் துறை செயலாளராக பதவி வகித்தபோது, பாடத்திட்ட உருவாக்கத்தில் இடம்பெற்ற நிபுணர் குழுவில், சில தவறான நபர்கள் இடம்பெற்றதால்தான் இத்தகைய கருத்துகள் இடம்பெற்றுள்ளன. இவற்றை தற்போதைய ஆட்சியிலாவது அகற்றவேண்டும் அல்லது திருத்தவேண்டும்'' என்கிறார்கள் பல்வேறு ஆசிரியர்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச் சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி சரி செய்வாரா?
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-10/12book-t.jpg)