Advertisment

கவுன்சிலர்களுக்கு போனஸ் அறிவித்த மேயரால் சர்ச்சை! -சர்ச்சையில் மேயர்!

ff

"அரசாங்கப் பணத்தை திட்டங்களுக்குச் செலவிடுவதில் எச்சரிக்கையுணர்வுடன், கவன மாகச் செயல்பட வேண்டு மென்று தமிழக முதல்வர் சொன்னதை, தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களும், மேயர்களும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதே புரியவில்லை'' என்று கவலையுடன் நம்மிடம் கூறினார், கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் தோழர். அவரது கவலைக் குக் காரணமான சம்பவம் குறித்து அவரே நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

mayor

"சென்ற 19ஆம் தேதி கோவை மாநக ராட்சி மாமன்றக் கூட்டம், தி.மு.க. மேயர் கல

"அரசாங்கப் பணத்தை திட்டங்களுக்குச் செலவிடுவதில் எச்சரிக்கையுணர்வுடன், கவன மாகச் செயல்பட வேண்டு மென்று தமிழக முதல்வர் சொன்னதை, தி.மு.க. மாமன்ற உறுப்பினர்களும், மேயர்களும் நினைவில் வைத்திருக்கிறார்களா என்பதே புரியவில்லை'' என்று கவலையுடன் நம்மிடம் கூறினார், கோவை மாநகராட்சியின் மாமன்ற உறுப்பினரான கம்யூனிஸ்ட் தோழர். அவரது கவலைக் குக் காரணமான சம்பவம் குறித்து அவரே நம்மிடம் பகிர்ந்துகொண்டார்.

Advertisment

mayor

"சென்ற 19ஆம் தேதி கோவை மாநக ராட்சி மாமன்றக் கூட்டம், தி.மு.க. மேயர் கல்பனா தலைமையில் நடைபெற்றுள்ளது. அதில் பல்வேறு தீர்மானங்களைப் பற்றி விவாதங்கள் நடைபெற்றது. கவுன்சிலர்களுக்கு மதிய உணவும் வழங்கப்பட்டது. இந்த நிலையில் தொடர்ந்து நடந்த மாமன்ற கூட்டத்தில், தி.மு.க.வைச் சேர்ந்த 49வது வார்டு கவுன்சிலர் அன்னக்கொடி எழுந்து நின்று மேயரைப் பார்த்து, 'மேயர் அவர்களே, சாப்பாடு போட்டீங்க நன்றி... அப்படியே இப்போது தீபாவளி வருது, தீபாவளிக்கு போனஸ் கொடுத்தால் பரவாயில்லை' எனக் கோரிக்கை வைக்க, அடுத்த நிமிடமே மேயர் கல்பனா, 'மாமன்ற உறுப்பினரின் கோரிக்கைப்படி நாளை அனைவருக்கும் போனஸ் வழங்கப்படும்' எனக் கூட்டத்தில் வெளிப்படையாக அறிவித்தார். இது பெரும்பாலான கவுன்சிலர்களை அதிர்ச்சியடைய வைத்தது.

பொதுவாக, கவுன்சிலர்களுக்கு அரசாங்கம் போனஸ் கொடுக்கும் வழக் கம் இல்லை. பிறகெப்படி, கவுன் சிலர்களுக்கு போனஸ் கொடுக்கப்படும் என்று மேயர் வெளிப்படையாக அறிவித்தார் எனக் கேள்விக்குறியோடு மறுநாள் அனைவரும் அவைக்கு வந்தனர். முதல் நாளில் மேயர் அறிவித்ததுபோலவே 20ஆம் தேதி கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்களுக்கு தலா 50,000 ரூபாய் போனஸ் வழங்கப் பட்டது.

mayor

Advertisment

ஆனால் இந்த போனஸ் பணம் எந்த நிதியிலிருந்து வழங்கப்பட்டது என்பதைத் தெரிவிக்கவில்லை. இந்த நிகழ்வுதான் இப்போது விவாதப் பொருளாகியுள்ளது. ஏற்கெனவே சொல்லிவைத்ததுபோல் உறுப்பினர் கேட்பதும், மேயர் அதை ஏற்றுக்கொள்வதும் வெளிப்படையாக நடந்தது. இது மிகவும் தவறான முன்னு தாரணமாக அமைந்துள்ளது. இதனை முழுமையாகத் தவிர்த்திருக்க வேண்டும். இதைத்தான் முதல்வர் அவர்கள், 'படுக்கை அறையிலும், பாத்ரூம்களிலும் தவிர அனைத்து இடங்களிலும் மூன்றாவது கண் இருக்கிறது. எல்லோரும் எச்சரிக்கையாக கவனமாகச் செயல்பட வேண்டும்' என அறிவுறுத்தினார். ஆனால் அந்த அறிவுரை, இப்படிப்பட்ட தி.மு.க. நிர்வாகிகள் காதில் விழவில்லையா? இப்படி முரண்பாடான முறைகளில் பணத்தைக் கொடுப்பதால் தி.மு.க. தலைமைக்குத்தான் கெட்ட பெயர் உண்டாகிறது'' என்று வேதனையுடன் கூறினார் கம்யூனிஸ்ட் தோழர்.

உள்ளாட்சி மன்றத்தில் பேசுவதும், சட்டசபையில் பேசுவது போல அனைத்துமே பதிவுகள் தான். இதனை ஏதோ விளையாட்டு மைதானம் போல நினைத்துச் செயல் படக்கூடாது. இப்படி யானவர்களுக்கு தி.மு.க. மூத்த நிர்வாகிகள் வகுப்பெடுக்க வேண்டும்.

nkn261022
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe