தமிழ்நாடு முழுவதுமுள்ள இ-சேவை மையங்களில் டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் களாகப் பணியாற்றுவோருக்கு ஒப்பந்தத்தில் சொன்னபடி ஊதியம் வழங்கவில்லை எனப் புலம்புகிறார்கள்.
இதுகுறித்து, தமிழ்நாடு தரவு உள்ளீட் டாளர்கள் சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் மனோஜ்குமார் நம்மிடம், "இ-சேவை, ஆதார் மையங்களில் பணியாற்ற மும்பையைச் சேர்ந்த டி அன்ட் எம் கன்சல்டிங் நிறுவனம் எங்களை வேலைக்கு எடுத்தது. மாதம் 8 ஆயிரம் ரூபாய் சம்பளம், 6 மாதத்துக்கு ஒருமுறை 500 ரூபாய் சம்பளம் உயர்த்தித் தரப்படும்னு சொன்னாங்க. பி.எப், இ.எஸ்.ஐ. பிடித்தம் போக, மாதம் 6,619 ரூபாய் சம்பளம் தந்தாங்க. 6 மாதம் கடந்தும் சம்பளத்தை உயர்த்தி வழங்கவில்லை. பலமுறை கேட்டும் வழங்காததால், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தோம். நீதிமன்ற உத்தரவுப்படி 2019ல் 1,200 ரூபாய் சம்பளம் உயர்த்தித் தந்தாங்க. அதன்பின் சம்பளம் உயர்த்தவில்லை.
இப்போது இ-சேவை மையங்கள், ஆதார் மையங்களுக்கு பணியாளர்க ளைத் தரும் ஒப்பந்தத்தை இன்டஸ்ட்ரி யல் செக்யூரிட்டி அன்ட் இன்டலிஜென்ஸ் பிரைவேட் நிறுவனத்துக்கு மாற்றியிருக்காங்க. மதுரையைச் சேர்ந்த அந்த நிறுவனம், ரூ.6,274 முதல் அதிகபட்சமாக 7,714 ரூபாய் வரை நான்குவிதமாக சம்பளம் தர்றாங்க. கடந்த 3 மாதங்களாக அதையும் சரியாக வழங்கவில்லை, சம்பளப் பட்டியலும் தரவில்லை. எங்கள் சம்பளத்தில் பிடித்தம் செய்த பி.எப், இ.எஸ்.ஐ. தொகையினை சம்பந்தப்பட்ட அமைப்புக்கு செலுத்தவில்லை. அதுபற்றி கேள்வி எழுப்பினால் பதில் சொல்லமாட்டேங்கிறாங்க. கேபிள் டி.வி. நிறுவனம் ஒரு பணியாளருக்கு எவ் வளவு சம்பளம் வழங்குதுன்னு ஆர்.டி.ஐ. தகவல் வழியா கேட்டபோது, 9,724 ரூபாய்னு சொல்லியிருக்காங்க. எங்களுக்கு அதிலிருந்து 1,500 முதல் 2 ஆயிரம் வரை குறைவா தர்றாங்க''’என்றார்.
தரவு உள்ளீட்டாளர்கள் சங்கத்தின் மாநில தலைவரும், சி.ஐ.டி.யு. மாநிலச்செயலாளருமான கோபிகுமார் நம்மிடம், "இ-சேவை மையங்களில் ஒப்பந்தப் பணியாளர்களே பணியாற்றுகிறார்கள். இவர்களை கேபிள் டி.வி. நிறுவனம் நேரடியாக வேலைக்கு எடுக்காமல் மேன் பவர் ஏஜென்ஸி மூலமாக எடுக்கிறது. அரசுக்கும் - மேன் பவர் ஏஜென்ஸிகளுக்கும் உள்ள ஒப்பந்தம் என்ன என்பதை சி.ஐ.டி.யு. சார்பில் பலமுறை கேபிள் டிவி நிறுவன எம்.டியிடம் கேட்டும் சொல்ல மறுக்கிறார்'' என்றார்.
குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் பெற தமிழ்நாடு கேபிள் டி.வி. நிறுவன சேர்மன் குமரகுருபன் ஐ.ஏ.எஸ்.ஸை தொடர்புகொண்டபோது, அவர் நமது லைனை எடுக்கவில்லை. அரசுக்கும் பொதுமக்களுக்கும் பால மாக இருக்கும் இ-சேவை மையப் பணியாளர்களுக்கு நியாயம் கிடைக் கட்டும்.