சென்னை, தரமணியில் மத்திய பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் கணவன் கண்ணெதிரே மனைவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, ஒட்டுமொத்த குடும்பமே கொடூரமாகக் கொல்லப்பட்ட சம்பவத்தின் தாக்கம் மறையுமுன்பே, மீண்டும் சென்னை, நந்தனம் அரசு கலைக்கல்லூரி கேண்டீனில் பணிபுரிந்த இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் வெளியாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.

Advertisment

சென்னை, நந்தனம் அரசு கல்லூரியின் வளாகத்திற்குள்ளே முத்துச்செல்வன் என்பவர் கேன்டீன் நடந்திவந்துள்ளார். இந்த முத்துச் செல்வனின் நண்பரான மகேஷ் என்பவன் கும்பகோணத்திலிருந்து ஒரு இளம்பெண்ணை அழைத்துவந்து, முத்துச்செல்வனின் கேண்டீனில் அப்பெண்ணுக்கு வேலை வாங்கித் தந்துள்ளான். இந்த பெண்ணுக்கு வேலை வாங்கிகொடுப்பதாகச் சொல்லி சென்னைக்கு அழைத்துவந்து முதலில் பாலியல் வன்கொடுமை செய்துள்ளான் மகேஷ். பிறகு மனம் உடைந்திருந்த அந்த இளம்பெண்ணை வேறு வழியில்லாமல் முத்துச்செல்வனிடம் பணிக்கு சேர்த்துவிட்டதோடு, ஏழ்மையின் காரணமாக வேறெங்கும் தங்கவைக்க இயலாமல், அதே கல்லூரியில் பணிமுடிந்த பிறகும் தங்கவைத்து வந்துள்ளான். இந்த சூழ்நிலையில் தான் மகேஷ் இந்த பெண்ணை பற்றிய முழு விவ ரங்களையும் முத்துச்செல்வனிடம் உளறிக்கொட்ட, அந்த பெண்ணின்  ஏழ்மையை பயன்படுத்திக் கொண்டு உரிமையாளர் முத்துச்செல்வம், மாஸ்டர் குணசேகரன், அவரது நண்பரான கார்த்திகேயன் மற்றும் பாக்கியராஜ் ஆகியோர் கூட்டாகச் சேர்ந்து, கல்லூரி வளாகத்திற்குள்ளேயே வைத்து அந்த இளம்பெண்ணை மிரட்டி, அடிக்கடி பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளனர். 

Advertisment

இதுவே தொடர்கதையாக, இதை பொறுத்துக்கொள்ளமுடியாத அந்த இளம்பெண், கல்லூரி காவலாளியிடம் தெரிவிக்கவே, அவர் போலீசுக்கு தகவல் கொடுக்க, இவ்விவகாரம் வெளியில் பரவி கல்லூரி முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது! இதன்பின்னர் அக்கல்லூரி மாணவர்கள் இவ்விவகாரம் குறித்து போராட்டத் தில் ஈடுபட, உடனடியாக சைதாப்பேட்டை மகளிர் போலீசார் அங்கு வந்து உடனடியாக வழக்கு பதிவு செய்து அப்பெண்ணிடம் விசாரணை நடத்தி, அதில் தொடர்புடைய நான்கு பேரை கைது செய்து  சிறையில் அடைத்துள்ளனர்.  

இந்த சிக்கலுக்கு அடிப்படையான காரண மே, அரசு கல்லூரிகளில் கேண்டீன் அமைப்பதில் இருக்கும் அரசியல் தலையீடு தான் எனக் கூறுகிறார்கள். முறைப்படி அரசு அனுமதியுடன் கேண்டீன் வைப்பதாக இருந்தால், அரசின் பொதுப்பணித்துறையே கல்லூரி வளாகத்தில் கேண்டீனுக்கான கட்டடத்தை கட்டிவிடும். கேண்டீன் நடத்துபவர்கள் அந்த கட்டடத்துக்கான வாடகையை செலுத்தி பயன்படுத்திக்கொள்ள வேண்டியது தான். அப்படியான கேண்டீன் அரசின் கண்காணிப்பில் இருக்கும். அதேபோல், கல்லூரி முதல்வரின் அனுமதியோடு கேண்டீன் நடத்துவதற்கான வாய்ப்பும் இருக்கிறது. ஆனால் அந்த கேண்டீன் மொபைல் கேண்டீன் போல் இருக்கும். அங்கே கட்டடமாக தங்கியிருக்கும் வாய்ப்பில்லை. ஆனால் நடைமுறையில் அப்படி யில்லை. அரசியல்வாதிகளின் அதிகாரத்தை பயன்படுத்தி கேண்டீன் அமைப்பதற்கு உரிய அனுமதி பெறாமலேயே கேண்டீன் நடத்து கிறார்கள். இவர்களை கல்லூரி முதல்வராலும் கூட கேள்வி கேட்க முடியாத சூழல். எனவே அந்த கேண்டீன் எப்படி நடத்தப்பட்டாலும் அதை யாரும் கண்காணிக்க இயலாத நிலை. இதுபோல் சூழல் இருப்பதால் தான் கேண்டீனில் இளம்பெண் தங்கியிருந்ததை கூட யாராலும் கேள்வி எழுப்ப முடியவில்லை. அப்பெண்ணுக்கு தொடர்ச்சியாகப் பலரால் பாலியல் டார்ச்சர்கள் நடந்ததையும் யாரும் கண்டுகொள்ளவில்லை. 

Advertisment

இப்படி முறையாக அனுமதி பெறாமல் 12 ஆண்டுகளாக நந்தனம் கல்லூரியில் முத்துச்செல் வம் எப்படி தொடர்ச்சியாக கேண்டீன் நடத்தி வந்தார் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. இதே போல சென்னை மாநிலக் கல்லூரியிலும் முக்கிய தி.மு.க. பிரமுகர் மூலமாக பிரகாஷ் என்பவர் கல்லூரிக்குள் கேண்டீன் நடத்திவருகிறார். அவரும் பொதுப்பணித்துறை  அனுமதி பெறாமல்தான் நடத்துகிறார். மேலும், கல்லூரி விடுதியிலும் மாண வர்களுக்கான உணவை இவரே வழங்கிவருகிறார். இப்படி அரசியல் அதிகாரத்தை வைத்து, எண்ணற்ற அரசு கல்லூரிகளில் இதேபோல் கேண்டீன்கள் முறையான அனுமதியில்லாமல் நடத்தப்படுகின்றன. இதுபோலிருந்தால், கல்லூரி யில் படிக்கும் மாணவிகளுக்கு என்ன பாதுகாப்பு இருக்கும் என்ற கேள்வி எழுகிறது. இதுபோன்ற நிலையை மாற்றி, கேண்டீன்கள் நடத்துவதில் அரசு கண்டிப்புடன் இருக்க வேண்டுமென் கிறார்கள் அரசு கல்லூரி பேராசிரியர்கள்.

இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் சங்கரிடம் கேட்டபோது, "கல்லூரிக்குள் நடந்த விவ காரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது. மேலும் இதுபோன்ற அரசு கல்லூரிகள் ஆய்வு செய்யப்பட்டு, பொதுப்பணித்துறை அனுமதி பெறாத உணவகங்களின் அனுமதி ரத்து செய்யப்படும்.  மேலும், கல்லூரி வளாகத்தினுள் கேண்டீன், கட்டுமானப்பணி  என எந்த காரணத்துக்காகவும் வெளியாட்கள் இரவில் தங்குவதற்கு அனுமதியில்லை. இதுபோன்ற சம்பவங்கள் மேலும் நடக்காதிருக்க தமிழக அரசின் வழிகாட்டுதல்படி நடவடிக்கை மேற்கொள்ளப் படும்'' என்றார் .

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் வன்கொடு மைகள் நடப்பது தொடர்கதையாகிவரும் நிலையில் இதனை தடுக்க காவல்துறை கூடுதல் கவனத்தோடு செயல்பட வேண்டுமென்றும், வெறுமனே வேடிக்கை பார்க்கக்கூடாதென்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகிறார்கள்.

-சே