இந்திய நாட்டின் அதிஉயர் பெருமைக்குரிய கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாதின் முயற்சியில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எந்த நோக்கத்திற் காக இவை உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கத்தை இவை எய்தினவா என்பதை ஆராய்ந்தால், கனத்த சோகமே இதற்கு விடையாகும்.
அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிவெறி தலைவிரித்தாடுவதாகக் குற்றஞ்சாட்டி விபின் என்ற உதவிப் பேராசிரியர் பதவி விலகினார். அதற்கு முன்பு தமிழ்நாட்டுக் கணித மேதையான முனைவர் வசந்தா கந்தசாமி, சாதிவெறி கொண்டவர்களால் சென்னை ஐ.ஐ.டி.யில் மோசமாகப் பழிவாங்கப்பட்ட நிகழ்வு சமூகநீதி களப் போராளிகளால் ம
இந்திய நாட்டின் அதிஉயர் பெருமைக்குரிய கல்வி நிறுவனமாக ஐ.ஐ.டி. எனப்படும் இந்திய தொழில்நுட்பக் கழகம் கூறப்படுகிறது.
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வியமைச்சரான மௌலானா அபுல்கலாம் ஆசாதின் முயற்சியில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., சாகித்ய அகாடமி உள்ளிட்ட பல்வேறு கலை, அறிவியல், தொழில்நுட்ப கல்வி நிறுவனங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால் எந்த நோக்கத்திற் காக இவை உருவாக்கப்பட்டனவோ அந்த நோக்கத்தை இவை எய்தினவா என்பதை ஆராய்ந்தால், கனத்த சோகமே இதற்கு விடையாகும்.
அண்மையில் சென்னை ஐ.ஐ.டி.யில் சாதிவெறி தலைவிரித்தாடுவதாகக் குற்றஞ்சாட்டி விபின் என்ற உதவிப் பேராசிரியர் பதவி விலகினார். அதற்கு முன்பு தமிழ்நாட்டுக் கணித மேதையான முனைவர் வசந்தா கந்தசாமி, சாதிவெறி கொண்டவர்களால் சென்னை ஐ.ஐ.டி.யில் மோசமாகப் பழிவாங்கப்பட்ட நிகழ்வு சமூகநீதி களப் போராளிகளால் மக்களின் கவனத்திற்கு வந்தது.
அண்மையில் ஃபாத்திமா லத்தீஃப் என்ற மாணவி, சில ஆசிரியர்களின் மதவாத வெறுப்பரசியலால் விளைந்த வக்கிர புத்தியால் பாதிக்கப்பட்டு தன்னையே மாய்த்துக் கொண்ட சம்பவம் சென்னை ஐ.ஐ.டி.யில் நடந்தது.
ஃபாத்திமா லத்தீஃப் படுகொலையைத் தமிழக அரசின் நேர்மைமிகு காவல் அதிகாரி ஈஸ்வரமூர்த்தி முறையாக விசாரித்துக்கொண்டி ருக்கும்போதே அவ்விசா ரணை மத்திய குற்றப்புலனாய்வுத் துறைக்குத் திடீரென மாற்றப்பட்டது ஏன் என்ற மர்மம் புரியவில்லை. அதில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் தற்போது நிம்மதியாக அடுத்தடுத்த குற்றங்களுக்கு ஆயத்தமாகிக்கொண்டிருக்கலாம்.
ஹைதராபாத் பல்கலைக் கழகத்தில் தலித் சமுதாயத்தைச் சேர்ந்த ரோகித் வெமுலா என்ற முனைவர் பட்ட ஆராய்ச்சி மாணவர், விடுதி யிலேயே சாதியக் கொடுமை தாங்காமல் தன்னையே பலியிட்டுக் கொண்ட சம்பவம் உலகையே உலுக்கியது. ஒன்றிய பா.ஜ.க. அரசோ ஒன்றுமே நடக்காதது போல, ஒய்யாரமாய் இருந்தது.
அண்மையில் ஐ.ஐ.டி.யில் தமது கல்வியைத் தொடர முடியாமல் பாதியிலேயே படிப்பை நிறுத்துவோரின் புள்ளிவிவரம் இந்திய நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ஐ.ஐ.டி.யிலிருந்து கல்வியைத் தொடர முடியாமல் வெளியேறுவோரில் 60% முதல் 88% வரை தலித் மாணவர்கள் என்ற அதிரவைக்கும் உண்மை அம்பலமாகியுள்ளது.
5-8-2021 அன்று மாநிலங் களவையில் தொடுக்கப்பட்ட வினா ஒன்றிற்கு விடையளிக் கும் போது, கடந்த ஐந்தாண்டுகளில் ஐ.ஐ.டி உயர் தொழில் நுட்பக் கல்வி நிறுவனத்திலிருந்து அதிகமாக ஒடுக்கப் பட்ட தலித் சமுதாய மாணவர்கள் பாதியிலேயே வெளி யேறும் புள்ளிவிவரம் ஒன்றிய அரசின் கல்வியமைச்சகத்தால் வழங்கப்பட்டுள்ளது.
குவஹாத்தி ஐ.ஐ.டி.யி லிருந்து வெளியேறுவோரில் 88% தலித் மாணவர்கள், டெல்லியில் 76%, சென்னை யில் 70%, கான்பூரில் 61%, கரக் பூரில் 60% இதைத் தற்செய லானதாகப் பார்க்க முடியாது. தலித் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்கள் மட்டும் மிக அதிக அளவில் ஐ.ஐ.டி.யி லிருந்து வெளியேறுவதில் உள்ள ஆதிக்க சூட்சுமம் அதிபெரிய ரகசியமும் அல்ல.
நீட் தேர்வால் வடிகட் டப்பட்ட அனிதாக்கள் போக, தடைகளைத் தாண்டி ஐ.ஐ.டி. போன்ற உயர் கல்வி நிலையங் களில் உள்நுழைந்த மீதி மாணவர்களையும் சாதியச் சுடுகணைகள் மூலம் சர்வ நாசம் செய்வதை எத்தனை காலம்தான் வேடிக்கை பார்ப்பதோ..? இந்த அதிஉயர் நிறுவனங்கள் ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருப்பவை.
ஒன்றிய அரசு எத்தகையோரின் நேரடிக் கட்டுப்பாட் டில் இருக்கிறது என்பது உலகுக்கே தெரியும். கல்வி முழுமையாக மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்பட்டால் ஒழிய இந்த அலங்கோலங்களுக்கு விடிவு பிறக்காது.
சேரன்மாதேவியில் வ.வே.சு. ஐயர் நடத்திவந்த குருகுலத்தில் கடைப்பிடிக்கப் பட்ட ஆரிய சனாதனக் கொடுமை, தந்தை பெரியாரை காங்கிரசிலிருந்து வெளியேற்றி, சுயமரியாதையின் களம் காண வைத்தது. அதுபோல, உயர் கல்வி நிலையங்களில் தொடரும் சாதீய வன்கொடுமைகள், கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்றிட வழிவகுக்க வேண்டும்.
புராண காலத்தில் ஏகலைவர்கள் கட்டை விரலைத்தான் இழந்தார்கள். புதிய இந்தியாவிலோ ரோகித் வெமுலாக்களும், பாத்திமா லத்தீஃப்களும், அனிதாக்களும் உயிரையே இழக்கிறார்கள். “அறவழியில், அறிவியல் நெறியில் நடக்கிற ஒரு தலை முறையைத் தயாரிக்கின்ற உயர்கல்வி நிறுவனங்களுக்குள் சாதிய சனாதன வெறியாதிக்கம் புகுந்திருப்பது வேதனைக் குரியது.
சனாதனக் கொடுமைகள் குறித்த சமூகத்தின் கவலைகள் சமூக நீதி, சமத்துவம் நோக்கிய செயல்பாடாக மாற்றம் பெற வேண்டியது காலத்தின் கட்டாயம்.