குடியாத்தம் (தனி)
அமுலு தி.மு.க. - பரிதா அ.தி.மு.க. - ஜெயந்தி அ.ம.மு.க.
அமுலு தனது கணவர் வன்னியர் என்பதால் முன்னிலை பெறுகிறார். இடதுசாரிகள் கைகொடுக்கிறார்கள். அ.ம.மு.க. ஜெயந்தி, அ.தி.மு.க. பரிதாவின் வாக்குகளைப் பிரிக்கிறார். நா.த.க. கலையேந்திரி, ஐ.ஜே.கே. ராஜன் களத்தில் உள்ளனர்.
திருச்சி கிழக்கு
இனிகோ இருதயராஜ் தி.மு.க. - வெல்லமண்டி நடராஜன் அ.தி.மு.க.
இனிகோவின் பலம் உதயசூரியன்+ மைனாரிட்டி வாக்குகள். பலவீனம்... மக்கள் மத்தியில் அறிமுகமின்மை. அ.தி.மு.க. அமைச்சர் நடராஜன் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. சாதி ஓட்டுக்கள் பலம். அ.ம.மு.க. மனோகரன் ஓட்டுகளைப் பிரிக்கிறார். கட்சி நிர்வாகிகளை அரவணைத்துச் செல்ல வேண்டிய இடத்தில் இருக்கிறார் தி.மு.க. வேட்பாளர்.
திருச்சி மேற்கு
கே.என்.நேரு தி.மு.க. - பத்மநாபன் அ.தி.மு.க.
தி.மு.க. பலம் தொகுதி முழுக்க வீசும் தி.மு.க. அலை + நேருவின் கட்சி கடந்த செல்வாக்கு. அ.தி.மு.க. அதை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை. அ.ம.மு.க., எஸ்.டி.பி.ஐ.கூட்டணி முகமதுஹாசன் நா.த.க. வினோத் ஓட்டுப் பிரிப்பும் கூடுதல் நெருப்பு.
முசிறி
காடுவெட்டி என்.தியாகராஜன் தி.மு.க. - எம்.செல்வராசு அ.தி.மு.க.
அ.தி.மு.க. செல்வராசுக்கு முன்னாள் அமைச்சர் சிவபதி எதிராக நிற்கிறார். அ.ம.மு.க. கூட்டணி தே.மு.தி.க. செல்வராசும் ஓட்டுகளை பிரிக்கிறார்கள். முன்னணி வகிக்கும் தி.மு.க.வுக்கு அக்கட்சி வேட்பாளரின் துடுக்கான பேச்சு பலவீனம். நா.த.க. ஸ்ரீதேவி, ம.நீ.ம. கோகுல் களத்தில் நிற்கிறார்கள்.
மணப்பாறை
ஆர்.சந்திரசேகர் அ.தி.மு.க. - ம.ம.க. ப.அப்துல்சமது.(லப்பை) தி.மு.க.கூட்டணி
அ.தி.மு.க. பலம் பல்வேறு மக்கள் நலப்பணிகள். ஊராலிக் கவுண்டர் சாதி பலம். பலவீனம் தே.மு.தி.க., அ.ம.மு.க. ஓட்டுப் பிரிப்பு. தி.மு.க. பலம்- அ.தி.மு.க..மீது மக்கள் சலிப்பு. பலவீனம்... புதிய வாக்காளர்கள் ஓட்டுப் பிரியும்.
திருவெறும்பூர்
அன்பில் பொய்யாமொழி தி.மு.க. - பா.குமார் அ.தி.மு.க.
தி.மு.க. பலம் தொகுதிநிதியை முழுமையாக தொகுதிக்கே செலவு செய்து நல்லபெயர் எடுத்தது. பலவீனம் உள்கட்சி பூசல்கள். அ.தி.மு.க. பலம் தாராளமாகப் பணம் செலவிடுதலும் மனைவி வழி உறவினர் செல்வாக்கும். பி.ஜே.பி.வாக்குகள். பலவீனம் வெளியூர் கள்ளர்சமுதாயம். ம.நீ.ம. நா.த.க. போட்டியில் உள்ளன. கூட்டணி பலத்துடன் களப்பணி தீவிரமாகும்போது தொகுதியை தி.மு.க. தக்க வைக்கும்.
துறையூர்
ஸ்டாலின்குமார் தி.மு.க. - இந்திராகாந்தி அ.தி.மு.க.
தி.மு.க.வுக்கு உறுதியான கூட்டணி பெரும் பலம். வேட்பாளர் மக்களை சந்திக்காதது பலவீனம்.அ.தி.மு.க. பலம் ஜான் பாண்டியன் கட்சியின் செல்வாக்கு. அ.ம.மு.க. பீரங்கி சுப்பிரமணியன், நா.த.க.தமிழ்ச்செல்வி, ம.நீ.ம. சட்டக்கல்லூரி மாணவர் யுவராஜ் இவர்களால் ஓட்டுக்கள் பிரியும்.
ஸ்ரீரங்கம்
பழனியாண்டி -தி.மு.க. - கு.ப.கிருஷ்ணன் -அ.தி.மு.க.
தி.மு.க. பலம். வாக்குகள் பிரியாத கூட்டணி. ஜெயலலிதா இல்லாத சூழலில் தி.மு.க.வின் தனிப்பட்ட வாக்கு வங்கி 7 சதவீதம் உயர்வு. அ.தி.மு.க. வேட்பாளர் மேல் மக்களின் நம்பிக்கையின்மை ஆகியவை. அதனால் முன்னேறுகிறது. அ.தி.மு.க. பலம் பணபலம் மட்டுமே. பலவீனம் அ.ம.மு.க. சாருபாலா தொண்டைமான் ஐ.ஜே.கே. செல்வரதி, நா.த.க. பிரான்சிஸ் மேரி ஆகியோர் பிரிக்கும் ஓட்டுகள்.
லால்குடி
சவுந்திரபாண்டியன் -தி.மு.க.- தருமராஜன் -த.மா.க.
உடையார் சமூகம் ஆதிக்கம் செலுத்தும் தொகுதியில் போட்டியிடும் இருவருமே அதே சமூகம். அதில் எம்.எல்.ஏ.வாக மூன்று முறை இருந்தும் கடனாளியாக வாழும் சவுந்திரபாண்டியன் நேருவின் தயவால் முந்துகிறார். நா.த.க. மலர், அ.ம.மு.க. விஜயசுந்தரி நிற்கிறார்கள்.
மண்ணச்சநல்லூர்
கதிரவன் -தி.மு.க. - பரஞ்ஜோதி -அ.தி.மு.க.
தி.மு.க.வின் பலம் பணம். கூட்டணியின் ஒற்றுமை. அ..தி.மு.க.வின் பலவீனம். அ.ம.மு.க. ராஜசேகரன், நா.த.க.கிருஷ்ணமூர்த்தி ஓட்டைப் பிரித்தல், போட்டி கடுமையாக உள்ளது.
மயிலாடுதுறை
ராஜ்குமார். காங்கிரஸ் - சித்தமல்லி பழனிச்சாமி. பா.ம.க
தி.மு.க.வின் பலமாக கூட்டணிக் கட்சிகள், தலித் வாக்குகள்.உள்ளன. பா.ம.க. வேட்பாளரின் கொள்ளிடக்கரை மணல்கொள்ளை. தொகுதியில் பா.ம.க. இருமுறை தோல்வி. அ.தி.மு.க. கூட்டணியின் ஒற்றுமையின்மை ஆகியவை பலவீனமாக்குகிறது. அ.ம.மு.க. கோமல் அன்பரசன் செல்வாக்கும், புதிய வாக்காளர்களின் வாக்குகளை நா.த.க.வின் மரம் காசிராமன் பிரிப்பதும் களத்தில் முக்கியத்துவம் பெறுகிறது.
சீர்காழி (தனி)
பன்னீர்செல்வம் -தி.மு.க. - பாரதி -அ.தி.மு.க.
ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தி.மு.க.வின் எக்ஸ் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். சிட்டிங் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க. பாரதி அதற்கு நேரெதிரானவர். அ.ம.ம

ஒரு எம்.எல்.ஏ. எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தி.மு.க.வின் எக்ஸ் எம்.எல்.ஏ. பன்னீர்செல்வம். சிட்டிங் எம்.எல்.ஏ.வான அ.தி.மு.க. பாரதி அதற்கு நேரெதிரானவர். அ.ம.மு.க. பொன்பாலு ஒளிர்வது அ.தி.மு.க.வின் பலவீனம். கூட்டணியால் தி.மு.க. மின்னுகிறது.
பூம்புகார்
நிவேதா முருகன் தி.மு.க. - பவுன்ராஜ் - அ.தி.மு.க.
சிட்டிங் எம்.எல்.ஏ. பவுன்ராஜின் அடாவடித்தனமும், அ.தி.மு.க.வினரின் அதிருப்தியும் அவரது பலவீனம். பவுன்ராஜின் வாக்குகளை அ.ம.மு.க.வின் செந்தமிழன், நா.த.க.வின் காளியம்மாள் பிரிப்பதும் தி.மு.க.வுக்கு சாதகம். தன்னிச்சையான செயல்பாடுகள் நிவேதா முருகனுக்கு பலவீனம் என்றாலும் இஸ்லாமியரின் வாக்குகளும், கூட்டணியும் தி.மு.க.வுக்கு பலம் சேர்க்கிறது.
ஈரோடு கிழக்கு
திருமகன் ஈ.வே.ரா காங்கிரஸ் - யுவராஜ் த.மா.க.
தி.மு.க.வின் பலம் ஈ.வே.ராவுக்கு பலம். அறிமுகமின்மை பலவீனம். முதலியார் வாக்குகளை அறுவடை செய்ய போட்டி நடக்கிறது. அ.தி.மு.க. பலத்துடன் பலவீனமான காங்கிரசுடன் பலமாக மோதுகிறார் த.மா.கா. யுவராஜ். ம.நீ.ம. ராஜா, நா.த.க.கோமதி, அ.ம.மு.க. முத்துக்குமார் களத்தில் உள்ளனர்.
ஈரோடு மேற்கு
சு.முத்துசாமி தி.மு.க. - கே.வி.ராமலிங்கம் அ.தி.மு.க.
முத்துசாமிக்கு உள்ள நல்ல பெயரும், தி.மு.க. கூட்டணியும் பலம். கடும் போட்டியை ஏற்படுத்தும். ராமலிங்கம் மீது நிலவும் அதிருப்தி பலவீனம். ம.நீ.ம. துரை சேவகன், அ.ம.மு.க. சிவசுப்ரமணியன், நாம் தமிழர் சந்திரகுமார் களத்தில் உள்ளனர்.
மொடக்குறிச்சி
சுப்புலட்சுமி தி.மு.க.- டாக்டர் சரஸ்வதி பா.ஜ.க.
பா.ஜ.க. போட்டியிடுவது அ.தி.மு.க.வினருக்குப் பிடிக்கவில்லை. நன்கு அறிமுகமான சுப்புலட்சுமி, தி.மு.க.வுக்கு ப்ளஸ். ம.நீ.ம. ராஜேஸ், நாம் தமிழர் பிரகாஷ், அ.ம.மு.க. தங்கராஜ் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
அந்தியூர்
வெங்கடாசலம் தி.மு.க. - சண்முகவேல் அ.தி.மு.க.
அ.தி.மு.க. சண்முகவேலுக்கு மக்கள் மத்தியில் அறிமுகமில்லை. சிட்டிங் எம்.எல்.ஏ. அ.தி.மு.க. ராஜாகிருஷ்ணன் மீது அதிருப்தியிருக்கிறது. தி.மு.க. வெங்கடாஜலம் மக்களிடம் நெருங்கிப் பழகுவது அவருக்குப் ப்ளஸ். ச.ம.க. குருநாதன், நாம் தமிழர் சரவணன், அ.ம.மு.க. செல்வம் களத்திலிருக்கிறார்கள்.
பவானிசாகர் (தனி)
சுந்தரம் இந்திய கம்யூனிஸ்ட் - பன்னாரி அ.தி.மு.க.
மக்களுடன் இணைந்து போராடியது தோழர் சுந்தரத்தின் பலம். தி.மு.க.வின் அதிருப்தி பலவீனம். அறிமுகமில்லாத வேட்பாளர், கட்சி ஒத்துழைப்பு இல்லாமை அ.தி.மு.க.வின் பலவீனம். பணம் பலம். ம.நீ.ம. கார்த்திக், தே.மு.தி.க. ரமேஷ், நாம் தமிழர் சங்கீதா களத்தில் உள்ளனர்.
பவானி
கேப்டன் துரை - தி.மு.க. - கே.சி.கருப்பணன் - அ.தி.மு.க.
அமைச்சர் கே.சி.கருப்பணனுக்கு கட்சியினரிடம் செல்வாக்கும், பண பலமும் ப்ளஸ். மக்களின் அதிருப்தி மைனஸ். தி.மு.க.வின் கேப்டன் துரைக்கு மக்களின் வரவேற்பும், கூட்டணியும் பலம். கடுமையான போட்டி. ம.நீ.ம சதானந்தம், நா.த.க. சத்யா, அ.ம.மு.க. ராஜா கிருஷ்ணன் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
கோபிச்செட்டிபாளையம்
மணிமாறன் - தி.மு.க - செங்கோட்டையன் - அ.தி.மு.க.
நீண்ட கால எம்.எல்.ஏ., அமைச்சராக இருந்தும் தொகுதிக்கு அடிப்படை வசதிகளே செய்துதராதது செங்கோட்டையனின் பலவீனம். பணமே பலம். சுறுசுறுப்பான களப்பணியும், கூட்டணியின் ஒத்துழைப்பும் தி.மு.க.வின் மணிமாறனுக்கு பலம். ம.நீ.ம. பிரகாஷ், நா.த.க. சீதாலட்சுமி, அ.ம.மு.க. துளசி மணி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
பெருந்துறை
கே.சி.பாலு கொ.ம.தே.க. - ஜெயக்குமார் - அ.தி.மு.க. - தோப்பு வெங்கடாச்சலம் சுயேச்சை
தொகுதி முழுக்க உள்ள அறிமுகம், கூட்டணி தி.மு.க.வின் பலம். சுயேச்சை தோப்பு பிரிக்கும் வாக்குகள் அ.தி.மு.க.வின் பலவீனம். கடைசி நேர கரன்சி பாய்ச்சலை அ.தி.மு.க. நம்பியுள்ளது. ம.நீ.ம. நந்தகுமார், நாம் தமிழர் லோகநாதன், தே.மு.தி.க. குழந்தைவேல் களத்தில் உள்ளனர்.
சங்கரன்கோவில் (தனி)
ராஜா- தி.மு.க. - ராஜலட்சுமி- அ.தி.மு.க. - அண்ணாத்துரை அ.ம.மு.க.
அமைச்சரான ராஜலட்சுமிக்கு மக்கள் அதிருப்தி, வாக்கு கேட்கும் போது எதிர்ப்பு. விசைத்தறி தொழில்சார்ந்த பிரச்சனைகள் முட்டுக்கட்டைகள். கலைஞர் ஆட்சி யில் விசைத்தறித் தொழிலாளருக்களித்த சலுகைகள், தற்போதைய தேர்தலறிக்கை போன்றவை ராஜாவின் பலம். அ.ம.மு.க. பிரிக்கும் சமூக வாக்குகள், புதிய தமிழகம் சுப்பிரமணியன் பிரிப்பதும் ஆளும்கட்சி வாக்குகளே! சங்கரன்கோவிலில் தி.மு.க. முந்துகிறது.
வாசுதேவநல்லூர் (தனி)
சதன்திருமலைக்குமார் - ம.தி.மு.க. மனோகரன் அ.தி.மு.க.
கட்சியினர் அதிருப்தியும் உள்ளடியும் அ.தி.மு.க. மனோகரனின் முதுகிலுள்ள சுமைகள். தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்படவில்லை. சதன் திருமலைக்குமாருக்கு தி.மு.க. கூட்டணியும், மக்கள்நலப் பணிகளும் பலம். அ.ம.மு.க. தங்கராஜும், புதிய தமிழகத்தின் பொன்னுத்தாயும் அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பிரித்து வெற்றிக்கு உதவு வார்கள் என்பது ம.தி.மு.க.வின் நம்பிக்கை. எனினும் போராடித்தான் ஜெயிக்கவேண்டும்.
கடையநல்லூர்
முகம்மது அபுபக்கர்- முஸ்லிம் லீக் - கிருஷ்ணமுரளி அ.தி.மு.க.
தொகுதியின் பெரும்பான்மை சமூகத்தவர் இஸ்லாமியர், தேவர், தாழ்த்தப்பட்ட மக்கள். இதில் இஸ்லாமிய வாக்குகள் அபுபக்கருக்கும், தேவர் வாக்குகளில் கணிசம் அ.ம.மு.க.வின் அய்யாத்துரைபாண்டியனுக்கும். கரன்சி, அ.தி.மு.க. சின்னம் மட்டுமே கிருஷ்ணமுரளியின் ஒரே நம்பிக்கை. ம.நீ.ம. அம்பிகாதேவி, நாம் தமிழரின் முத்துலட்சுமி யும் களத்தில். ரேஸில் முந்துவது அபுபக்கரே.
தென்காசி
பழனிநாடார் -காங்கிரஸ் - செல்வமோகன்தாஸ் பாண்டியன்-அ.தி.மு.க.
கடந்த தேர்தலில் வெற்றியைப் பறிகொடுத்த பழனிநாடார், வெற்றிக்கு வேகம் காட்டுகிறார். புதிய திட்டங்கள் எதுவும் தொகுதிக்கு வராதது, மைனாரிட்டி வாக்குகளின் எதிர்ப்பு, தேவர் சமூக வாக்கு சிதறல் செல்வமோகன்தாஸுக்கு சறுக்கல். இருதரப்பும் பணத்தால் வாக்கு அறுவடையில் இறங்கலாம். அ.ம.மு.க. முகம்மதுராஜா வாக்கைப் பிரிப்பார். ம.நீ.ம. திருமலைமுத்துவும் களத்திலுண்டு. காங்கிரஸ் ஓரடி முன்னால் ஓடுகிறது.
ஆலங்குளம்
பூங்கோதை-தி.மு.க. மனோஜ்பாண்டியன் -அ.தி.மு.க.
தி.மு.க.வின் பூங்கோதை சிட்டிங் எம்.எல்.ஏ. தொகுதி மக்களுக்காக முன்நிற்பது, தொகுதிப் பணிகள் என தன் ஏரியாவை க்ளீனாக வைத்திருக்கிறார். மனோஜுக்கு உட்கட்சி அதிருப்தி, வெளியூர் வேட்பாளர் எனும் கண்டனம், விலைவாசி ஏற்றம் என சிலபல முட்டுக்கட்டைகள். ச.ம.க. செல்வகுமார், அ.ம.மு.க. ராஜேந்திரநாத்தும் களத்தில். கடும் போட்டிக்கிடையே வாக்காளர் சாய்ஸில் பூங்கோதை முந்துகிறார்.
அம்பாசமுத்திரம்
ஆவுடையப்பன் - தி.மு.க. இசக்கி சுப்பையா - அ.தி.மு.க. ராணி ரஞ்சிதம் - அ.ம.மு.க.
மூத்த அரசியல்வாதியான ஆவுடையப்பனுக்கு மக்களிடமிருக்கும் நற்பெயரும், கூட்டணியும் பலம். அ.ம.மு.க.வின் ராணி ரஞ்சிதம், அ.தி.மு.க.வின் வாக்குகளைப் பிரிப்பதும், உள்ஒதுக்கீட்டுக்குக் கிளம்பிய எதிர்ப்பும் அ.தி.மு.க.வின் இசக்கி சுப்பையா வுக்கு பலவீனம். பணப்பட்டுவாடா பலம். ச.ம.க.வின் கணேசன் களத்தில் உள்ளார்.
நாங்குநேரி
ரூபி மனோகரன் - காங்கிரஸ், தச்சை கணேசராஜா - அ.தி.மு.க. - பரமசிவன் அய்யப்பன் - அ.ம.மு.க.
கொரோனாவின்போது செய்த உதவிகளும், கூட்டணி பலமும் ரூபி மனோகரனை முந்தவைக்கிறது. அ.தி.மு.க.வினரின் அதிருப்தியும், பறிக்கப்பட்ட உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பும் கணேசராஜாவுக்கு பலவீனம். பணம், பலம். அ.ம.மு.க.வின் பரமசிவன் அய்யப்பன், மும்முனைப் போட்டியை உருவாக்குகிறார்.
ராதாபுரம்
அப்பாவு - தி.மு.க. இன்பதுரை - அ.தி.மு.க.
தொகுதியிலிருக்கும் நற்பெயரும், 2016ல் சொற்ப வாக்குகளால் தோல்வியடைந்த அனுதாபமும், கூட்டணியும் அப்பாவுக்கு முன்னிலையை தருகிறது. கொரோனாவின் போது சுறுசுறுப்பாகச் செயல்பட்டது சிட்டிங் எம்.எல்.ஏ. இன்பதுரையின் பலம். தொகுதியை முன்னேற்றாதது பலவீனம். நா.த.க.வின் ஜேசுராஜ் களத்தில் உள்ளார்.
பாளையங்கோட்டை
அப்துல் வகாப் - தி.மு.க. - ஜெரால்டு - அ.தி.மு.க.
மைனாரிட்டி சமூகத்தினரின் ஆதரவும், மதச்சார்பற்ற தன்மையும், கூட்டணி பலமும் தி.மு.க.வின் அப்துல்வகாப்பை முந்தச்செய்கிறது. எஸ்.டி.பி.ஐ. முபாரக், இஸ்லாமிய வாக்குகளை ஓரளவு பிரிக்கிறார். உள்ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பும், பா.ஜ.க.வுடனான கூட்டும் அ.தி.மு.க.வின் ஜெரால்டுக்கு பலவீனம்.
திருநெல்வேலி
ஏ.எல்.எஸ்.லட்சுமணன் - தி.மு.க. - நயினார் நாகேந்திரன் - பா.ஜ.க.
பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரனுக்கு அ.தி.மு.க.வினர் ஒத்துழைக்காதது பலவீனம். பணம் மட்டுமே பலம். பா.ஜ.க. மீதான எதிர்ப்பும், கூட்டணி பலமும், மைனாரிட்டி சமூக வாக்குகளும் லட்சுமணனை முந்தவைக்கிறது. அ.ம.மு.க.வின் மகேஷ் கண்ணன் களத்தில் இருக்கிறார்.
தர்மபுரி
தடங்கம் சுப்பிரமணி தி.மு.க.-எஸ்.பி. வெங்கடேஸ்வரன் பா.ம.க.
ஆட்சிக்கெதிரான அலை, தொகுதி பா.ம.க.வுக்கு மாறியதால் அ.தி.மு.க. சைடில் உற்சாகமின்மை, மூன்று வேட்பாளர்களும் வன்னியர் என்பதால் வாக்கு பிரிவது வெங்கடேஸ்வரனுக்கு பலவீனம். கட்சி மற்றும் தனிப்பட்ட செல்வாக்கு, பணபலம், தலித்- முஸ்லிம்கள் வாக்கு சுப்பிரமணிக்கு களத்தை சாதகமாக்குகிறது. அ.ம.மு.க. டி.கே.ராஜேந்திரன் தர்மபுரி தாண்டி பரிட்சயமில்லாதது பா.ம.க.வுக்கு ஆறுதல்.
பாலக்கோடு
கே.பி.அன்பழகன் அ.தி.மு.க.- தி.மு.க. பி.கே. முருகன்
அமைச்சர் அன்பழகனின் தொகுதிமீதான அக்கறையின்மை, தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் சமூகத்தினரே அதிகமிருப்பது அன்பழகனின் பலவீனம். மக்களுக்கு தாராளம்காட்டத் தயங்குவது முருகனின் பலவீனம். தே.மு.தி.க. ஜெயக்குமார், ம.நீ.ம. ராஜசேகர், நா.த. கலைச்செல்வியும் களத்தில். கிடைமட்டமாக இருக்கும் வெள்ளித் தட்டு, வெயிட்டாக கரன்சிக்கட்டு விழும் பக்கம் தாழும்.
பாப்பிரெட்டிப்பட்டி
பிரபுராஜசேகர் தி.மு.க. - பழனியப்பன் அ.ம.மு.க.
தொகுதிக்கு எதுவும் செய்யாதது, அ.தி.மு.க. மேலான கோபம் கோவிந்தசாமி மீது திரும்பியுள்ளது. சீட் கிடைக்காத பா.ம.க. மா.செ. சத்தியமூர்த்தியின் கோபமும் ஆளும்கட்சிக்கு பாதகம். அ.ம.மு.க.வின் பழனியப்பன் அமைச்சராக இருந்தபோது செய்த நலத்திட்டங்கள் சாதகமாக இருக்கிறது. பிரபுராஜசேகர் ரேஸில் முந்த, இரண்டாமிடத்துக்கு கோவிந்தசாமியுடன் பழனியப்பனும் போட்டியிடுகிறார்.
பென்னாகரம்
இன்பசேகரன் தி.மு.க.- ஜி.கே. மணி பா.ம.க.
ம.நீ.ம ஷகிலா, நா.த. தமிழழகன் போன்றோர் களத்தில் இருந்தாலும் இன்ப சேகரனுக்கும் ஜி.கே. மணிக்கும் தான் போட்டி. வன்னியர் ஓட்டுக்கள் ஜி.கே. மணிக்குச் சாதகம். அன்புமணி தோல்வியடைந்ததும் பென்னாகரம்தான். தொகுதிக்காரர்களுக்கு ஒன்றென்றால் வந்துநிற்பவர் இன்பசேகரன். போட்டி பலமாக இருந்தாலும், தி.மு.க. பக்கமே காற்று வீசுகிறது.
அரூர்
ஆர்.ஆர்.முருகன் அ.ம.மு.க..- குமார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்- சம்பத் அ.தி.மு.க.
சிறுத்தைகள் சுணக்கம் காட்ட, பணமூட்டையை அவிழ்க்காததால் உ.பி.களும் தயக்கம்காட்ட தோழர் குமார் தடுமாறுகிறார். சம்பத்துக்கு இலைக்கட்சியின் பலம் இருந்தாலும் ஆட்சிக்கெதிரான அலை படுத்துகிறது. அ.ம.மு.க.வின் ஆர்.ஆர்.முருகன் ஸ்கோர் செய்கிறார். நாம் தமிழர் கீர்த்தனா, ம.நீ.ம. ஜோதிக்குமாரும் களத்தில். பணமூட்டையைப் பிரித்தால் முருகனுக்கே ஜெயம்.
திருவாடானை
ஆனந்த் -அ.ம.மு.க. கரு.மாணிக்கம் -காங்கிரஸ் ஆனிமுத்து -அ.தி.மு.க.
அ.ம.மு.க.வின் பலம் சமூக வாக்குகள். அனைத்து சமூக கட்சி வாக்குகளையும் கவர தனி முயற்சிகள். காங்கிரஸ் இழுபறிதான் எனினும் இஸ்லாமிய- யாதவ- தலித் வாக்குபலம் உண்டு. அ.தி.மு.க. ஆனிமுத்தின் பலவீனம் முக்குலத்தோர் புலிப்படை கருணாஸின் கைவிடல்.
முதுகுளத்தூர்
ராஜ கண்ணப்பன் தி.மு.க. - கீர்த்திகா முனியசாமி அ.தி.மு.க.
தி.மு.க.வின் பலம் சமூக வாக்குகள்+கூட்டணி. அ.தி.மு.க. வேட்பாளர் கீர்த்திகா முனியசாமியின் தாத்தாபாட்டி இம்மானுவேல் சேகரன் கொலையில் தொடர்பு என்கிற பழங்கதை கிளப்பல். பலவீனம் அ.ம.மு.க. முருகன், நா.த.க. ரஹமத்நிசா, ம.நீ.ம., ச.ம.க. கூட்டணி நவபன்னீர்செல்வம் ஓட்டுப் பிரிப்பார்கள்.
பரமக்குடி
முருகேசன் தி.மு.க. சதர்ன் பிரபாகர் அ.தி.மு.க.
தி.மு.க. முருகேசனின் பலம். மூன்று முறை எம்.எல்.ஏ.வாக இருந்த டாக்டர் சுந்தரராஜின் அபாரமான முழு ஆதரவு. அ.தி.மு.க. உள்ளடிகள். பலவீனம் ம.நீ.ம. கமலின் சொந்தஊர் என்பதால் ஓட்டுப் பிரியும். பா.ஜ.க.வின் நயினார் நாகேந்திரன் செல்வாக்கு.
ராமநாதபுரம்
காதர் பாட்சா முத்துராமலிங்கம் தி.மு.க. - குப்புராம் பா.ஜ.க.
தி.மு.க. பலம் கட்சியின் நிரந்தர வாக்குகள். முனியசாமி அ.ம.மு.க. வாக்குப் பிரிதல், பா.ஜ.க. கட்சி வேட்பாளருக்கு எதிரான சமூக வேறுபாடுகள். அ.தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் உள்ளடி வேலைகள். பலவீனம் நா.த.க.இளங்கோ., ம.நீ.ம. சரவணன் பத்தாயிரம் ஓட்டுக்கள் பிரியும் அபாயம்..
நாகப்பட்டினம்
ஆளூர் ஷாநவாஸ் -வி.சி.க. தி.மு.க. கூட்டணி தங்க கதிரவன் -அ.தி.மு.க.
பானை சின்னத்தில் போட்டியிடும் ஆளூர் ஷாநவாஸ் வி.சி.க.வின் பலம் 77 ஆயிரம் தலித் மற்றும் முஸ்லிம் வாக்குகள், கூட்டணி வாக்குகள். வி.சி.க.தலைவர் திருமாவளவனின் கட்சிக் கட்டுப்பாடு சார்ந்த முயற்சிகள். அ.தி.மு.க. தங்ககதிரவனின் பலம் பணம், தொகுதியில் நற்பெயர். பலவீனம் அ.ம.மு.க., மஞ்சுளா சந்திரமோகன், அகஸ்டின் அற்புதராஜ் நா.த.க. ஓட்டுப் பிரிதல். பொதுத் தொகுதியில் வி.சி.க. முன்னேறுகிறது.
வேதாரண்யம்
வேதரத்தினம் -தி.மு.க. - ஓ.எஸ்.மணியன் -அ.தி.மு.க. .
தி.மு.க. வெற்றி வாய்ப்பு. பலம் கம்யூனிஸ்ட், வி.சி.க., காங்கிரஸ், தலித் கூட்டணிக் கட்சிகளின் வாக்குவங்கி. அ.தி.முக.வின் பலம் கோடிக்கணக்கான பணத்தை வாரி யிறைத்தல். பலவீனம் முஸ்லிம்கள் மற்றும் மீனவகிராம மக்கள் இறால் பண்ணை நில அபகரிப்பு விசயங்களில் அ.தி.மு.க.வேட்பாளர் மீது கொண்டிருக்கும் வெறுப்பு. தி.மு.க. முன்னேறும் நிலையில் முகம்மது அலி ம.நீ.ம., அ.ம.மு.க. பி.எஸ்.ஆறுமுகம் ஓட்டுப் பிரிக்கிறது.
கீழ்வேளூர் (தனி)
நாகை மாலி. மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி - வடிவேல் ராவணன். பா.ம.க.
கம்யூனிஸ்ட்களின் செல்வாக்கான தொகுதி. பலமான வேட்பாளர் முன்னாள் எம்.எல்.ஏ. என்கிற மக்கள் செல்வாக்கு, தி.மு.க. வி.சி.க. வாக்கு வங்கி. 70 சதவீத தலித்கள் ஆதரவு இவை மாலிக்கு பெரும் பலம். பா.ம.க.வேட்பாளர் அ.தி.மு.க.வை நம்பி களமிறங்குகிறார்.
பொள்ளாச்சி
டாக்டர் வரதராஜன் தி.மு.க. - பொள்ளாச்சி ஜெயராமன் அ.தி.மு.க.
பொள்ளாச்சி கொடூரத்தில் ஏற்பட்ட களங்கத்தை மாற்றுவேன் என்கிற ஜெயராமனின் பேச்சை மக்கள் செவிமடுக்கவில்லை. தி.மு.க. எளிதாக முன்னேறுகிறது. ம.நீ.ம. சதீசும், நா.த.க. லோகேசுவரியும், பொள்ளாச்சி கொடூரத்தைப் பற்றியே பேசுகிறார்கள்.
கிணத்துக்கடவு
குறிச்சி பிரபாகரன் தி.மு.க. - தாமோதரன் அ.தி.மு.க. - ரோஹிணி அ.ம.மு.க.
கட்சி மாறிவந்த தாமோதரன் மீது அ.தி.மு.க.வினர் கடும் கோபம் கொண்டிருக்கிறார்கள். அதுவே தி.மு.க.வுக்கு வெற்றிக்கனியைத் தந்திருக்கிறது. அ.ம.மு.க.வில் இருக்கும் முன்னாள் எம்.எல்.ஏ. ரோஹிணி கடும் முயற்சியில் இருக்கிறார். ம.நீ.ம. சிவா, நா.த.க. உமா களத்தில் நிற்கிறார்கள்.
கோவை தெற்கு
மயூரா ஜெயகுமார் காங்கிரஸ் - வானதி சீனிவாசன் பா.ஜ.க. - கமலஹாசன் ம.நீ.ம.
வானதி சீனிவாசனுக்கு சொந்த தொகுதி. கமலைப் பார்க்க கூட்டம் கூடுகிறது. அ.தி.மு.க. பலத்தில் வானதி நிற்கிறார். தி.மு.க. கூட்டணி பலத்தில் காங்கிரஸ் ஜொலிக்கிறது. அ.ம.மு.க. சேலஞ்சர் துரை, நாம் தமிழர் அப்துல் களத்தில் நிற்கிறார்கள். கடைசி வரை கவனம் செலுத்த வேண்டிய வி.ஐ.பி. தொகுதி இது.
கோவை வடக்கு
சண்முகசுந்தரம் தி.மு.க. - அம்மன் அர்ச்சுனன் அ.தி.மு.க.
தி.மு.க. சண்முகசுந்தரம் தொகுதி முழுக்க முகம் தெரிந்தவராக இருக்கிறார். முகமே தெரியாத புதிய வேட்பாளராக அம்மன் அர்ச்சுனன் சிரமப்படுகிறார். ம.நீ.ம. சார்பில் தங்கவேலு, நா.த.க.வின் பாலேந்திரன், அ.ம.மு.க. அப்பாதுரை களத்தில் நிற்கிறார்கள்.
தொண்டாமுத்தூர்
எஸ்.பி.வேலுமணி அ.தி.மு.க. - கார்த்திகேய சிவசேனாதிபதி தி.மு.க.
வேலுமணியையும் சிவசேனாதிபதியையும் ஒருவரை ஒருவர் எதிர்கொள்வது இருவருக்குமே சிரமமானதுதான். செல்வாக்குமிக்க அமைச்சரை தொகுதிக்குள் முடக்கியுள்ளது தி.மு.க. ம.நீ.ம. ஷாஜஹானும், அ.ம.மு.க. சதீசும், நா.த.க.வின் கலையரசியும் கஷ்டப்படுகிறார்கள்.
கவுண்டம்பாளையம்
பையா கிருஷ்ணன் தி.மு.க. - பி.ஆர்.ஜி.அருண்குமார் அ.தி.மு.க.
கோவையிலேயே பெரிய தொகுதியில் பண பலமே பிரதானமென்பதால் தி.மு.க.வில் பையா கிருஷ்ணன் முந்துகிறார். அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.எல்.ஏ. அருண்குமாரால் வலுவான போட்டியை உருவாக்க இயலவில்லை. ம.நீ.ம.வின் பங்கஜ் ஜெயின், அ.ம.மு.க.வின் அருணா, நா.த.க.வின் கலாமணி ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சூலூர்
ப்ரீமியர் செல்வம் கொ.ம.தே.க. - கந்தசாமி அ.தி.மு.க.
அ.தி.மு.க.வின் சிட்டிங் எம்.எல்.ஏ. கந்தசாமி, தொகுதிக்கு எதுவும் செய்யவில்லையென்ற குற்றச்சாட்டு பலவீனம். தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள திட்டங்கள், கொ.ம.தே.க.வின் ப்ரீமியர் செல்வத்துக்கு பலமாக இருப்பதாலும் சமுதாய வாக்குகளாலும் முன்னேறுகிறார். ம.நீ.ம.வின் ரங்கநாதன், அ.ம.மு.க.வின் செந்தில்குமார், நா.த.க.வின் இளங்கோ ஆகியோர் களத்தில் உள்ளனர்.
மேட்டுப்பாளையம்
டி.ஆர்.சண்முகசுந்தரம் தி.மு.க - ஏ.கே.செல்வராஜ் அ.தி.மு.க.
15 ஆண்டுகளாகத் தொகுதியை வசப்படுத்தியுள்ள அ.தி.மு.க, தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லையென்ற கோபம், செல்வராஜுக்கு பலவீனம். மக்களின் எதிர்பார்ப்பும், பண பலமும் தி.மு.க.வின் சண்முக சுந்தரத்துக்கு பலம். அ.ம.மு.க.வின் சரவணன், நா.த.க.வின் யாஸ்மின் ஆகியோர் களத்தில் உள்ளனர்.
சிங்காநல்லூர்
கார்த்திக் தி.மு.க.-கே.ஆர்.ஜெயராம் அ.தி.மு.க.
சிட்டிங் எம்.எல்.ஏ. கார்த்திக்குக்கே, இம்முறையும் வாய்ப்பு சாதகமாக உள்ளது. கே.ஆர்.ஜெயராமுக்கும் கார்த்திக்குமான ரேஸில் கார்த்திக் பல அடிகள் முன்னே ஓடுகிறார். ம.நீ.ம.வின் பொள்ளாச்சி மகேந்திரன் டார்ச் வெளிச்சம் போதாது. அ.ம.மு.க. செல்வாவும், நாம் தமிழர் நர்மதாவும் களத்தில்.
வால்பாறை
குனியமுத்தூர் ஆறுமுகம் -இந்திய கம்யூனிஸ்ட் - அமுல் கந்தசாமி -அ.தி.மு.க.
தோட்ட தொழிலாளர்களுக்காக சிந்திய வியர்வை கம்யூனிஸ்ட் ஆறுமுகத்தின் பலம், பணம் அமுல் கந்தசாமியின் பலம். தே.மு.தி.க. முருகராஜ் அ.தி.மு.க.வுக்கு ஓட்டைப் பிரித்து கிலி கொடுக்கிறார். ம.நீ.ம. செல்வராஜ் மலைக்கு மேலே வரவில்லை. நா.த.க. கோகிலா களத்தில் நிற்கிறார்.
ஊட்டி
கணேஷ் -காங்கிரஸ் - போஜராஜன் -பா.ஜ.க.
கடந்தமுறை எம்.எல்.ஏ.வாக இருந்த கணேஷ் சுற்றுலாதலத்தையும் மார்க்கெட்டையும் ஒழுங்குபடுத்தி நல்ல பெயரை சம்பாதித்துள்ளார். பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணி மார்க்கெட் விவகாரத்தில் கெட்ட பெயர் எடுத்திருக்கிறார்கள். அ.ம.மு.க.வின் தேனாடு லட்சுமணனின் செல்வாக்கு வாக்குகளை பிரிக்கிறது..
குன்னூர்
கப்பச்சி வினோத் அ.தி.மு.க. - இளித்துறை ராமச்சந்திரன் தி.மு.க.
வினோத் இளைஞர் படையுடன் நகராட்சியை கைப்பற்றி அசத்த, ராமச்சந்திரன் அரசியல் அனுபவம் மூலம் களம் காண்கிறார். தி.மு.க. முபாரக் தரப்பின் உள்ளடி வேலை கஷ்டப்படுத்துகிறது. ம.நீ.ம. ராஜ்குமார், அ.ம.மு.க. கலைச்செல்வன், நா.த.க. லாவண்யா நிலை அந்தோ பரிதாபம் என்கிறது களம்.