மீபத்தில் தமிழக காவல்துறை தலைவராக சங்கர் ஜிவால் ஐ.பி.எஸ். பதவியேற்றதும், "ரவுடி களைக் கட்டுப்படுத்து வோம்' என்று தெரிவித் திருந்தார், ஆனால் தலை நகருக்கு அருகில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங் களில், அரசியல் ஆதாயக் கொலைகள் மற்றும் கஞ்சா போதையில் கொலைச் சம்பவங்கள் நடப்பது நின்றபாடில்லை.

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஸ்ரீபெரும்புதூர் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க. பிரமுகர் பி.பி.ஜி.சங்கர் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை அருகே வெடி குண்டு வீசி, கொடூரமாகக் கொல்லப்பட்டார். இதனைத் தொடர்ந்து, மே 22ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் தர்காசை பகுதியைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகி மனோகர், கூலிப்படையால் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். விசாரணையில், இவர் அப்பகுதியில் கஞ்சா விற்பனை நபர்களைப் பற்றி போலீசில் தகவல் கூறியதால் இந்தக் கொலை அரங்கேறியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

kk

இதைத்தொடர்ந்து, அதே பகுதியைச் சேர்ந்த பா.ம.க. நிர்வாகியான காளி என்கிற காளிதாஸ் என்பவரை, கூலிப்படையைச் சேர்ந்த கும்பல் இருமுறை கொலை செய்ய முயன்றதில் தப்பியவர், அதே கும்பலால், கடந்த ஜூன் 13ஆம் தேதி கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார். இந்த இரண்டு வழக்கிலும் தீனா என்கிற தினகரன் என்பவனுக்கு தொடர்புள்ளதாகத் தெரியவந்துள்ளது. அதே பகுதியைச் சேர்ந்த தி.மு.க. பிரமுகரும் இக்கொலையில் சம்பந்தப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

Advertisment

இந்நிலையில், கடந்த ஜூலை ஒன்பதாம் தேதி செங்கல்பட்டு நகர பா.ம.க. செயலாளர் நாக ராஜ், மர்ம நபர்களால் வெட்டிக் kkகொல்லப்பட்டார். செங்கல்பட்டு அருகே மணிக்கூண்டு பகுதியில் பூ வியாபாரம் செய்துவரும் நாகராஜ், கடந்த ஜூலை 9ஆம் தேதி இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு, வீடு திரும்பும்போது மர்ம கும்பலால் வெட்டிக் கொல்லப்பட்டார். இதைத் தொடர்ந்து, அப்பகுதி பா.ம.க.வினர் சாலை மறிய லில் ஈடுபட்டனர். செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் எஸ்.பி. சாய் பிரினீத் பேச்சு வார்த்தை நடத்தி, கொலையாளி களை உடனடியாகக் கைது செய்வதாக உறுதியளித்ததும் கலைந்து சென்றனர். இந்நிலையில், கொலையாளிகள் செங்கல்பட்டை அடுத்த அஞ்சூர் வனப்பகுதியில் மறைந்திருந்த கொலையாளிகள் இருவரை துப்பாக்கிச் சூடு நடத்தி கைது செய்தனர். இதில் அஜய் என்பவனுக்கு காலில் தோட்டா பாய்ந்ததால் காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் அவனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் தினேஷ், மாரி, கார்த்திக், சூர்யா, விஜய் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கடந்த வாரம் வழக்கு விசாரணைக் காக செங்கல்பட்டு நீதிமன்றம் வந்திருந்த தாம்பரத்தைச் சேர்ந்த லோகேஷ் என்பவன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்டான். இந்த தொடர் கொலைகள்... செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை பரபரப்பாக்கியுள்ளன. புதிதாக பொறுப்புக்கு வந்துள்ள தமிழ்நாடு காவல்துறை, சென்னை மற்றும் சென்னை புறநகர் காவல்துறை அதிகாரிகள், தீவிர கவனம் செலுத்தி, கூலிப்படையினர் ஆதிக்கத்தை ஒழித்தாக வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பு.

Advertisment