அந்த வளாகத்தில் இரவு-பகல் எல்லா நேரமும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களில், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டுக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. 108 ஆம்புலன்ஸுகள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கும் என சீறிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன. குளுகோஸ் ஏற்றப்பட்ட நிலையில் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். திடீர் திடீரென்று மயங்கி கீழே விழுகிறார்கள் பெண்கள். டிசம்பர்மாத குளிரில் பசிப் பட்டினியுடன் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பரிதாபமாய் கிடக்கும் இவர்கள் யார்?
இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள்.
""ஒரே கல்வித்தகுதியில் ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை எங்களுக்கும் கொடுங்கள்''’ என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்துதான் கடந்த ஐந்துநாட்களாக ஆண்கள்- பெண்கள் என பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்குள் உ
அந்த வளாகத்தில் இரவு-பகல் எல்லா நேரமும் அவர்கள் நிறைந்திருக்கிறார்கள். அவர்களில், சென்னை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அட்மிட் செய்யப்பட்டுக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கின்றது. 108 ஆம்புலன்ஸுகள் தொடர்ந்து அரசு மருத்துவமனைகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை வளாகத்துக்கும் என சீறிப் பாய்ந்துகொண்டிருக்கின்றன. குளுகோஸ் ஏற்றப்பட்ட நிலையில் தரையில் படுத்துக்கிடக்கிறார்கள். திடீர் திடீரென்று மயங்கி கீழே விழுகிறார்கள் பெண்கள். டிசம்பர்மாத குளிரில் பசிப் பட்டினியுடன் பள்ளிக் கல்வித்துறை வளாகத்தில் பரிதாபமாய் கிடக்கும் இவர்கள் யார்?
இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள்.
""ஒரே கல்வித்தகுதியில் ஒரே பணியில் இருக்கும் ஆசிரியர்களுக்கு இணையான சம்பளத்தை எங்களுக்கும் கொடுங்கள்''’ என்ற ஒற்றைக்கோரிக்கையை முன்வைத்துதான் கடந்த ஐந்துநாட்களாக ஆண்கள்- பெண்கள் என பள்ளிக்கல்வித்துறை வளாகத்திற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள். பி.பி., ஷுகர், வீசிங்(மூச்சிரைப்பு) என பல்வேறு பிரச்சனைகளால் பாதிக்கப்படுவதோடு, தொடர்ந்து சாப்பிடாததால் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் பாதிக்கப்படும் நிலைக்கும் ஆளாக்கப்பட்டுக்கொண்டிருக்கிறர்கள்.
போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர்கள் இயக்கம்(எஸ்.எஸ்.டி.ஏ.) மாநில பொதுச்செயலாளர் ஜே. ராபர்ட்டிடம் கேட்டோம். அவரது உடம்பில் குளுகோஸ் ஏறிக்கொண்டிருக்க…குளுகோஸ் பாட்டிலை இன்னொருவர் பிடித்துக்கொண்டிருக்க மயக்கத்தில் பேசமுடியாத சூழலிலும் நம்மிடம் வேதனையுடன் பேச ஆரம்பித்தார். ""இந்த உண்ணாநிலைப் போராட்டத்தை திடீரென்று நாங்கள் ஆரம்பித்துவிடவில்லை. தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை எங்களுக்கு வாக்குறுதிகள் கொடுத்து ஏமாற்றியதால் வேறு வழியில்லாமல்தான் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம்'' என்றவர் போராட்டத்தின் பின்னணியை சொல்ல ஆரம்பித்தபோது நமக்கே பி.பி. எகிறியது.
""1960-ஆம் ஆண்டு முதல் ஊதியக்குழுவில் 90 ரூபாயாக இருந்த இடைநிலை ஆசிரியர்களின் அடிப்படை ஊதியம் படிப்படியாக 2009-ல் ஆறாவது ஊதியக்குழுவின்போது 8,370 ரூபாயாக உயர்த்தப்பட்டது. ஆனால், 2009 மே 31-ந்தேதிக்கு மறுநாள் ஜூன்-1 ந்தேதிக்குப் பிறகு நியமனம் செய்யப்பட்ட எங்களுக்கு 5200 ரூபாய் என அடிப்படை ஊதியத்தை குறைத்துவிட்டது அரசு. அதாவது, ஒரே கல்வித்தகுதிதான், ஒரே வேலைதான். ஒருநாள் முன்பு நியமனம் செய்தவர்களுக்கு எங்களைவிட 3,170 ரூபாய் சம்பளம் அதிகம் என்பது என்ன நியாயம்? இன்றைய நிலையில்... ஒரு மாதத்திற்கு சுமார் 20,000 ரூபாய் சம்பளத்தைக் கொடுக்காமல் எங்களது உழைப்பை சுரண்டிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு'' என்று வேதனையை வெளிப்படுத்தும் ஜே. ராபர்ட் உள்ளிட்ட ஆசிரியர்கள் 2011 ஒரு நபர் ஊதியக்குழுவிலாவது தங்களது சம்பளம் உயரும் என்று காத்திருந்தார்கள். ஆனால், டிப்ளமோ படிப்புப் படித்தவர்கள் உட்பட 36 பிரிவினர்களுக்கு 9,300 வரை அடிப்படை ஊதியத்தை உயர்த்திக்கொடுத்த ராஜிவ் ரஞ்சன் ஐ.ஏ.எஸ். தலைமையிலான ஒருநபர் ஊதியக்குழு ஆசிரியர்களுக்கு உயர்த்தாததால் ஏமாந்துபோனார்கள்.
""2013-ல் மூன்று நபர் ஊதியக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும், இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்தவில்லை. நிதிச்சுமை அதிகமாக உள்ளது’ என்று சொல்லி நிராகரித்துவிட்டார் கிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.
இதனால், தொடர் போராட்டங்களில் ஈடுபட ஆரம்பித்தோம். மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் விடுமுறை நாட்களில்தான் போராடினோம். 7-வது ஊதியக்குழுவின்போது உங்களது ஊதிய முரண்பாடுகளை களைவோம் என்று தொடக்கக் கல்வி இயக்குநர் இளங்கோவன் உள்ளிட்டவர்கள் உத்திரவாதம் கொடுத்ததால் போராட்டத்தை கைவிட்டோம்.
2017 அக்டோபர்-1 ந்தேதி அமல்படுத்தப்பட்ட ஏழாவது ஊதியக்குழுவின் பரிந்துரையிலும் எங்களுக்கு ஊதிய உயர்வு செய்யாமல் ஏமாற்றிவிட்டார்கள். மீண்டும் போராடினோம். தொடக்கக் கல்வி இயக்குநர் கருப்பசாமி, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் பிரதீப் யாதவ் ஐ.ஏ.எஸ்., காவல்துறை அதிகாரிகள் எல்லாம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். ஊதியத்தை உயர்த்தச்சொல்லி ஒரு நபர் ஊதியக்குழுவுக்கு பரிந்துரை செய்கிறேன் என கடிதமும் அனுப்பினார்கள். 8 மாதம் காத்திருந்தும் உயர்த்தவே இல்லை. முதல்வரிடம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துச்செல்வதாக சொல்லி ஏமாற்றிவிட்டார்கள் அதிகாரிகளும் அமைச்சரும். அதனால்தான், கடந்த டிசம்பர் 23-ந்தேதியிலிருந்து தண்ணீர்கூட குடிக்காமல் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறோம். எங்கள் மீது வழக்கு போடப்போவதாகவும் காவல்துறையினர் மிரட்டிக்கொண்டிருக்கிறார்கள்'' என்று சொல்லும்போதே அவரது உடல்நிலை மிகவும் மோசமாகிக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது.
108 ஆம்புலன்ஸ் சத்தம் ஒலித்துக்கொண்டேயிருக்கிறது. உயிரைக் காவு வாங்காமல் அரசாங்கம் விழிக்காதோ?
-மனோசௌந்தர்
படங்கள் : எஸ்.பி.சுந்தர், அசோக்