நீதிமன்ற அவமதிப்பு! 4 ஆண்டுகளாக பாலியல் குற்றவாளிகளை காப்பாற்றிய போலீஸ்! பொள்ளாச்சி கொடூரம்!

d

"பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நிகழ்ந்த பண்ணை வீடுகளைச் சுற்றியுள்ள உல்லாச விடுதிகள், பண்ணை வீடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான்கு வருடங்களுக்குமுன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மதித்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்திருந்தால் பொள் ளாச்சியில் இப்படியொரு பாலி யல் கொடூரமே நிகழ்ந்திருக்காது'’’ என்று அதிரவைக்கிறார் பொது நல வழக்கு தொடுத்த சமூக செயற்பாட்டாளர் பொள்ளாச்சி ஆனைமலை எஸ்.வி.சுப்பையா.

poஇதுகுறித்து, அவரிடம் நாம் பேசியபோது, ""பொள்ளாச்சி மாச்சன் நாயக்கன்பாளையம், உள் வட்டம், சுப்பே கவுண்டன்புதூர், ஆத்துப்பொள் ளாச்சி, வாழைக்கொம்பு நாகூர், ஆனைமலை, செம்மனாம்பரி, ஆழியாறு, சேத்துமடை, டாப் ஸ்லிப் அடிவாரப்பகுதி, பெரியபோது உள்ளிட்ட தென்னை விவசாய பூமிகளிலும் அரசுக்கு சொந்த மான இடங்களையும் ஆக்கிரமித்து பண்ணை வீடு களும் உல்லாச விடுதிகளையும் கட்டிவிட்டார்கள்.

பெரும்பாலும் கல்லூரி மாணவிகள், பெண் கள் என பலரையும் வலையில் விழவைத்து, இந்த இடங்களுக்கு அழைத்து வந்து சட்டத்துக்குப்புறம் பான செய

"பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நிகழ்ந்த பண்ணை வீடுகளைச் சுற்றியுள்ள உல்லாச விடுதிகள், பண்ணை வீடுகள் குறித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நான்கு வருடங்களுக்குமுன்பே சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை மதித்து அரசு அதிகாரிகள் நட வடிக்கை எடுத்திருந்தால் பொள் ளாச்சியில் இப்படியொரு பாலி யல் கொடூரமே நிகழ்ந்திருக்காது'’’ என்று அதிரவைக்கிறார் பொது நல வழக்கு தொடுத்த சமூக செயற்பாட்டாளர் பொள்ளாச்சி ஆனைமலை எஸ்.வி.சுப்பையா.

poஇதுகுறித்து, அவரிடம் நாம் பேசியபோது, ""பொள்ளாச்சி மாச்சன் நாயக்கன்பாளையம், உள் வட்டம், சுப்பே கவுண்டன்புதூர், ஆத்துப்பொள் ளாச்சி, வாழைக்கொம்பு நாகூர், ஆனைமலை, செம்மனாம்பரி, ஆழியாறு, சேத்துமடை, டாப் ஸ்லிப் அடிவாரப்பகுதி, பெரியபோது உள்ளிட்ட தென்னை விவசாய பூமிகளிலும் அரசுக்கு சொந்த மான இடங்களையும் ஆக்கிரமித்து பண்ணை வீடு களும் உல்லாச விடுதிகளையும் கட்டிவிட்டார்கள்.

பெரும்பாலும் கல்லூரி மாணவிகள், பெண் கள் என பலரையும் வலையில் விழவைத்து, இந்த இடங்களுக்கு அழைத்து வந்து சட்டத்துக்குப்புறம் பான செயல்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்கள். இதுமட்டுமல்ல, இந்த உல்லாச விடுதிகளில் மிகப் பெரிய பைனாக்குலர் வைக்கப்பட்டிருக்கும். லைசென்ஸ் வாங்காமலேயே மதுபார்கள் இருக்கிறது.

ஆற்று ஓரங்களில் அமைக்கப்பட்டுள்ள உல்லாச விடுதியினர் குடிசைகள் அமைத்து ஆற்றில் குளிக்கும் பெண்களை பைனாக்குலர் வைத்துப் பார்க் கும் கேவலமான செயல்களும் நடந்துவந்தது.

இதனால், சட்டத்துக்குப்புறம்பான சமூக சீரழிவுகளுக்கு வழி வகுக்கும் இப்பகுதி யிலுள்ள பண்ணை வீடுகள், உல்லாச விடுதிகளை அகற்றி இளைய சமுதா யத்தை காப்பாற்ற வேண்டும் என்று 2011 ஆம் வருடம், கோவை மாவட்ட அப்போதைய ஆட்சியர் கருணாகரன் ஐ.ஏ. எஸ்.ஸிடம் புகார் கொடுத் தேன்''’’ என்கிற சுப்பையா வைப் போலவே, விவசாயி களான சபரிமுத்து விக்ரம், ஆலாங்கடவு விவசாயி சண்முக சுந்தரம் உள்ளிட்ட வர்கள் புகார் கொடுத்தார்கள். இதுகுறித்து, நடவடிக்கை எடுக்கும்படி பொள்ளாச்சி அப்போதைய ஆர்.டி.ஓ (வருவாய் கோட்டாட்சியர்) அழகிரிசாமிக்கு உத்தரவிட்டார் கலெக்டர்.

d

ஆர்.டி.ஓ. அழகிரிசாமி தலைமையில் பண்ணை வீடுகள் மற்றும் உல்லாசவிடுதிகளில் ரெய்டு நடத்தியபோது புகாரில் சுட்டிக்காட்டி யதைவிட சமூக சீரழிவு மற்றும் சட்டத்துக்குப்புறம் பான செயல்கள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும், ஆழியாறு ஆற்றுப்படுகை குடிநீரை எடுத்து உல்லாச விடுதிகளின் நீச்சல் குளங்களுக்கும் உல்லாச விடுதிகளின் பயன்பாட்டிற்கும் பயன்படுத் தப்பட்டதையும் கண்டுபிடித்தார்கள். அருகிலுள்ள, dமாச்சன்நாயக்கன் பாளையம் ஆற்றுப்பகுதியை ஒட்டியுள்ள அரசுக்கு சொந்தமான நிலங்களில் ஆக் கிரமிப்பு செய்து உல்லாச விடுதிகள் கட்டப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதனால், இப்பகுதியி லுள்ள அனைத்து உல்லாச விடுதிகள் மற்றும் பண் ணை வீடுகளை ரெய்டு நடத்த காவல்துறை அதி காரிகளுக்கு மாவட்ட ஆட்சியரும் ஆர்.டி.ஓ.வும் உத்தரவிட்டார்கள்.

அதற்குப்பிறகு நடந்தது என்ன என்பது பற்றி சுப்பையா நம்மிடம் விளக்கினார். “""அப்போதைய, எஸ்.பி. உமா ரெய்டு நடத்தவரு கிறார் என்பது காவல்துறையிட மிருந்தே பண்ணைவீடுகள், உல்லாச விடுதியினருக்கு தகவல் போய்விட்டது. மேலும், பேருக்கு இரண்டு உல்லாச விடுதிகளை மட்டுமே ரெய்டு நடத்திவிட்டு சட்ட விரோத செயல்கள் எதுவும் நடக்கவில்லை என்று சொல்லி விட்டார். அதிரடி நடவடிக்கைகள் எடுத்ததால் 40-க்கும் மேற்பட்ட பொள்ளாச்சி உல்லாச விடுதி உரிமையாளர்களின் அழுத்தத்தால் ஆர்.டி.ஓ. அழகிரிசாமி அதிரடியாக மாற்றப்பட்டுவிட்டார். அதற்குப்பிறகு, அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதனால், மாநில நகர் ஊரமைப் புத்துறை ஆணையருக்கும் மாவட்ட ஊரமைப்புத்துறை ஆணையருக்கும் மாவட்ட ஆட்சியருக்கும் விதிமீறல் உல்லாச விடுதிகளை அகற்றக்கோரி மீண்டும் மனுக்கள் கொடுத்தேன். ஆனால், அது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், சப் கலெக்டர் அருண்சுந்தர் தயாளனின் உத்தரவை மீறி பொள்ளாச்சி தாசில்தார் சண்முகநாதன் ஓய்வுபெறுவதற்கு ஒருவாரம் இருக்கும் நிலையில் அரசின் 2 சி பட்டாக்களை உல்லாசவிடுதியினர் அனுபவித்துக்கொள்ள அனுமதி கொடுத்துவிட்டுப் போய்விட் டார்''’என்கிற சுப்பையா, துவண்டுபோகாமல் சென்னை உயர்நீதிமன்றத்தில் 2014 ஆம் ஆண்டு பொதுநல வழக்கு தொடுத்தார்.

poஇதுகுறித்து, சுப்பையாவின் வழக்கறிஞரும் பொதுநல வழக்கு ஆர்வலருமான புருஷோத்தம னிடம் பேசியபோது, “""வழக்கை விசாரித்த மாண்பமை நீதிமான் கே.பி.கே. வாசுகி அவர்கள், மனுதாரரின் புகார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கச்சொல்லி பரம்பிக்குளம், ஆழியாறு, வேட்டக்காரன் புதூர் எக்ஸிகியூட்டிவ் ஆபீசர் கள், சப்-கலெக்டர் ரெஸ்மி சித்தார்தே ஹெக்டே ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட அதி காரிகளுக்கு உத்தரவிட் டார். இதுகுறித்து, சுப்பையா, “""நீதிமன்றமே உத்தரவிட்டபிறகும்கூட இதுவரை எந்த நட வடிக்கையும் எடுக்க வில்லை. பொள்ளாச்சி பாலியல் கொடூரம் நிகழ்ந்த பண்ணை வீடானது நான் புகார் கொடுத்ததற்கு அருகில்தான் உள்ளது. அப்போதே, நடவடிக்கை எடுத்திருந்தால் இப்படியொரு சமூகச்சீரழிவு நடந்திருக் காது''’என்று குற்றஞ்சாட்டுகிறார்.

நீதிமன்ற உத்தரவையே மதிக்காத அதிகாரிகள்தான் நக்கீரனில் உண்மை அம்பல மானதும், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகை யில், மிரட்டல் விசாரணையைக் கையாள் கிறார்கள். பொதுமக்களைப் பாதுகாக்க வேண்டிய காவல் துறை இளம்பெண்களை சீரழிக்கும் பாலியல் கயவர் களுக்குப் பாதுகாவலனாக இருப்பதை என்ன பெயர் சொல்லி அழைப்பது?

-மனோசௌந்தர்

nkn090419
இதையும் படியுங்கள்
Subscribe