Advertisment

அதிகாரிகளுடன் ஆலோசனை! தொழில்துறை வளர்ச்சியில் டி.ஆர்.பி.ராஜா!

tt

மிழக அரசின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தொழில்துறையின் புதிய அமைச்சராகப் பெறுப்பேற்றுக் கொண்டதுமே, துறையின் உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளர் கிருஷ் ணன் ஐ.ஏ.எஸ்., திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சிறப்பு செயலா ளர் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ்., கூடுதல் செயலாளர் மரியம்பல்லவி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்., டிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீமுரளி தரன் ஐ.ஏ.எஸ்., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு வழிகாட்டி நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயரதிகாரி கள் பலரும் கலந்துகொண்டனர்.

trb

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துறையின் செயலாளர் கிருஷ்ணன், "தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தொழில்துறையில் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள், துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதன் பங்களிப்புகள், வெளிநாட்டு முதலீ

மிழக அரசின் மிகப்பெரிய துறைகளில் ஒன்றான தொழில்துறையின் புதிய அமைச்சராகப் பெறுப்பேற்றுக் கொண்டதுமே, துறையின் உயரதிகாரிகளுடன் ஒரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி முடித்திருக்கிறார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா.

Advertisment

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் துறையின் முதன்மைச் செயலாளர் கிருஷ் ணன் ஐ.ஏ.எஸ்., திட்டக்குழு துணைத் தலைவர் ஜெயரஞ்சன், சிறப்பு செயலா ளர் பூஜாகுல்கர்னி ஐ.ஏ.எஸ்., கூடுதல் செயலாளர் மரியம்பல்லவி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு சிமெண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் காமராஜ் ஐ.ஏ.எஸ்., டிட்கோ நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ஜெயஸ்ரீமுரளி தரன் ஐ.ஏ.எஸ்., சிப்காட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சுந்தரவள்ளி ஐ.ஏ.எஸ்., தமிழ்நாடு வழிகாட்டி நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் விஷ்ணு ஐ.ஏ.எஸ். உள்ளிட்ட உயரதிகாரி கள் பலரும் கலந்துகொண்டனர்.

trb

ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய துறையின் செயலாளர் கிருஷ்ணன், "தி.மு.க. அரசு அமைந்த பிறகு கடந்த 2 ஆண்டுகளில் தொழில்துறையில் நடை முறைப்படுத்தப்பட்ட திட்டங்கள், நடந்து கொண்டிருக்கும் திட்டங்கள், துறை யின் கட்டுப்பாட்டில் உள்ள பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சி மற்றும் அதன் பங்களிப்புகள், வெளிநாட்டு முதலீடுகளின் நிலை உள்பட துறையை பற்றிய முன்னோட்டத்தை விவரித்துப் பேசினார்.

இதனையெல்லாம் குறித்துக்கொண்ட அமைச்சர் ராஜா, "தமிழகத்தின் தொழில் வளர்ச்சி கடந்த இரண் டாண்டுகளில் அபரிமிதமான நிலையை பெற்றிருப்பதை என்னால் உணரமுடிகிறது. உங்களின் ஒத்துழைப்புடன் தான் இது சாத்தியப்பட்டிருக்கிறது. என்னிடம் பல யோசனைகள் இருக்கின்றன. அடுத்தடுத்த கூட்டங்களில் அதுபற்றி விவாதிக்கலாம்''”என அழுத்தமாக தெரிவித் திருக்கிறார். தொழில்துறையின் அறிமுக கூட்டம் என்ப தால் பெரியளவிலான விவாதங்கள் எதுவும் ஆலோசனைக் கூட்டத்தில் நடக்கவில்லை. இந்த நிலையில், "முந்தைய அ.தி.மு.க. ஆட்சியின்போது பெரும் சரிவை சந்தித்திருந் தது தொழில்துறையின் வளர்ச்சி. தற்போதைய தி.மு.க. ஆட்சியில் அந்த சரிவை மீட்டெடுத்தார் அமைச்சர் தங்கம் தென்னரசு. இளைஞரான டி.ஆர்.பி.ராஜா, தற்போது துறைக்கு அமைச்சராகியிருக்கிறார். இந்த துறை ஒரு சவாலான துறை என்பதால் ராஜாவிடம் நிறைய எதிர்பார்க்கிறோம்''‘என்கிறார்கள் துறையின் அதிகாரிகள்.

இதுகுறித்து மேலும் விசாரித்தபோது,’ தொழில் துறையின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடு அரசின் வழிகாட்டி நிறுவனம், டிக், டிட்கோ, டி.என்.பி.எல், டான்செம், சால்ட் கார்ப்பரேஷன், சிப்காட் உள்ளிட்ட நிறுவனங்கள் இருக்கின்றன. இவைகள் அனைத்துமே முந்தைய அ.தி.மு.க. ஆட்சியில் பெருத்த நட்டத்தில் இருந்தன. இதனால் தொழில்துறை மிகுந்த தேக்கத்தை எதிர்கொண்டிருந்தது.

Advertisment

trb

தொழில்துறையின் வளர்ச்சிக்கும் வீழ்ச்சிக்கும் பல காரணிகள் இருந்தாலும் மேற்கண்ட நிறுவனங்களின் பங்களிப்பு தொழில் வளர்ச்சிக்கு மிக முக்கியம். அந்த வகையில், அ.தி.மு.க. ஆட்சியில் இந்த நிறுவனங்களில் ஏற்பட்டிருந்த நட்டம், தொழில்துறையையும் பாதித்தது. இந்த சூழலில்தான், தி.மு.க. ஆட்சியில் இத்துறையின் அமைச்சராக பொறுப்பேற்றார் தங்கம் தென்னரசு.

தொழில்துறையின் ஒரு அங்கமான மேற்கண்ட நிறுவனங்களின் உயரதிகாரிகளுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்திய தங்கம் தென்னரசு, உயரதிகாரிகளிடம் பேசும்போது, "தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு முதல் மாநில மாக வரவேண்டும். அதற்காக நான் உழைக்கத் தயார். என்னுடன் நீங்கள் ஒத்துழைத்து துறையின் வளர்ச்சியில் உங்களின் பங்களிப்பும் ஈடுபாடும் முழுமையாக எனக்கு கிடைக்கவேண் டும். என் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த நிறுவனங்கள் லாபத்தில் இயங்க வேண் டும். அதற்காக என்னிடம் நீங்கள் எதிர்பார்க் கும் அனைத்தும் செய்வேன். சுதந்திரமாக என் தலைமையில் இயங்கலாம். எந்த சந்தேகமாக இருந்தாலும், எந்த யோசனையாக இருந்தாலும் என்னிடம் நீங்கள் விவாதியுங்கள்'' என்று அழுத்தம் திருத்தமாகப் பேசினார்.

அவரின் இந்த அணுகுமுறை அதிகாரி களை ஆச்சரியப்பட வைத்தது. அதேசமயம் அமைச்சரின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் வகையில் உழைத்தனர். நட்டத்தில் மூழ்கியிருந்த அந்த நிறுவனங்கள் (வழிகாட்டி நிறுவனம் மற்றும் சிப்காட் தவிர) கடந்த 2 ஆண்டுகளில் அதிலிருந்து மீட்கப்பட்டதுடன் எப்போது மில்லாத அளவுக்கு உயர்ந்த லாபத்தையும் ஈட்டியிருக்கிறது.

tt

உதாரணமாக, தமிழ்நாடு சிமெண்ட்ஸ் எனச் சொல்லப்படும் டான்செம் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநராக காமராஜ் ஐ.ஏ.எஸ்.சை நியமித்தது தி.மு.க. அரசு. அவர் பொறுப்பேற்ற நாளில், டான்செம் நிறுவனத்தில் சிமெண்ட்டின் விற்பனை 14,84,690 மெட்ரிக் டன் என்ற அளவில் இருந்தது. தங்கம் தென்னரசுவின் வழிகாட்டலில், அர்ப்பணிப்புடன் காமராஜ் ஐ.ஏ.எஸ். உழைத்ததில் கடந்த 2 ஆண்டில் டான்செம் மின் அரசு சிமெண்ட் விற்பனை 17,97,389 மெட்ரிக் டன்னாக உயர்ந்தது. அதாவது அ.தி.மு.க. ஆட்சியை விட தி.மு.க. ஆட்சியில் விற்பனை அதிகரித்திருக் கிறது. இதன்மூலம் 156 கோடியே 42 லட்ச ரூபாயை லாபமாக ஈட்டியிருக்கிறது டான்செம் நிறுவனம்.

அதேபோல, ஆண்டு வருவாய் (டேர்ன் ஓவர்) 731 கோடியே 15 லட்சமாக இருந்ததை 911 கோடியே 99 லட்சமாக உயர்த்தியிருக்கிறார் காமராஜ். மொத்தத்தில், சிமெண்ட் விற்பனையில் 21.06 சதவீத வளர்ச்சியையும், லாபத்தில் 33.69 சதவீத வளர்ச்சியையும், ஆண்டு வருமானத்தில் 24.73 சதவீத வளர்ச்சியையும் எட்டியுள்ளது டான்செம் நிறுவனம். எப்போதுமில்லாத சாதனை இது! அரசு சிமெண்ட்டின் இந்த வளர்ச்சியால் தனியார் நிறுவனங்களின் சிமெண்ட் விலை உயராமல் கட்டுப்படுத்தப்பட்டிருக்கிறது.

டான்செம் போல, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் (டிக்), தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் (டிட்கோ), தமிழக அரசின் உப்புக் கழகம் ஆகியவையும் லாபத்தை ஈட்டியிருக்கின்றன. ஆக, தொழில்துறையின் வளர்ச்சியில் தங்கம் தென்னரசு போல, டி.ஆர்.பி.ராஜாவும் சீரியஸ் காட்ட வேண்டும்''’என்கிறார்கள் தொழில்துறை அதிகாரிகள்.

தமிழகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் தொழில் வளர்ச்சியை உருவாக்கி நீடித்த பொருளாதார வளர்ச்சியினைப் பெற்று அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தருவதே தி.மு.க. அரசின் கொள்கையாக இருப்பதால் அதனை நிறைவேற்றும் பொறுப்பு அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா வுக்கு இருக்கிறது.

nkn200523
இதையும் படியுங்கள்
Subscribe