ரசு பொறியியல் கல்லூரி களில் பணிபுரியும் பட்டியிலின உதவிப் பேராசிரியர்களின் பதவி உயர்வில் சதிகள் நடப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன.

Advertisment

இதுகுறித்து நம்மிடம் பேசிய உயர்கல்வித்துறையினர், "தமிழக உயர்கல்வித் துறையின் கட்டுப் பாட்டிலுள்ள தமிழக தொழில் நுட்பக் கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசின் பொறியியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கு கடந்த 2001-ல் ஆள் சேர்ப்பு நடத்தியது தமிழக அரசு.

அப்போது, பொதுப் பிரிவில் 40 பணியிடங்களும் (ஜெனரல் கரண்ட் வேகன்சி), பட்டியல் இனப் பிரிவில் 39 பணியிடங்களும் (ஸ்பெ ஷல் ஷார்ட்ஃபால் வேகன்சி) நிரப்பப்பட்டன. இதில், ஸ்பெஷல் ஷார்ட்ஃபால் வேகன்சி என்பது கடந்த 26 ஆண்டுகாலமாக நிரப்பப் படாத பட்டியலினப் பணியிடங்களாகும்.

asst

Advertisment

இந்த பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு முடிவு களின்படி, 10.01.2001 மற்றும் 19.01.2001 ஆகிய தேதிகளில் பொதுப் பிரிவினருக்கும், 14.02.2001-ல் பட்டியலின பிரிவுக்கும் நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு, தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவரும் 2001 ஆகஸ்டில் பணியில் சேர்ந்தனர். ஆனால், 21 ஆண்டுகளாகியும் இவர்களுக்கான பதவி உயர்வு வழங்கப்படவில்லை. நீதிமன்றத்தில் வழக்குகள் போடப்பட்டன. பதவி உயர்வு வழங்க அறிவுறுத்தியது நீதிமன்றம். இந்த நிலையில், பதவி உயர்வுக்கான சீனியாரிட்டி பட்டியலை கடந்த டிசம்பரில் தயாரித்தார் துறையின் செயலாளர் கார்த்திகேயன் ஐ.ஏ.எஸ். அப்போது, பட்டியலின உதவிப் பேராசிரியர்களின் சீனியாரிட்டியை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார். இதில் மிகப்பெரிய சதி நடந்து கொண்டிருக்கிறது''’என்று குற்றம்சாட்டுகிறார்கள்.

இந்த விவகாரத்தை அறிந்து, தலைமைச்செயலாளர் இறையன்புவிற்கு கடிதம் எழுதியுள்ள ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும் முன்னாள் கூடுதல் தலைமைச் செயலாளருமான கிறிஸ்துதாஸ் காந்தியிடம், அதுபற்றி கேட்ட போது, "கடந்த 20.12.2021-ல் தொழில்நுட்ப கல்வித்துறைக்கு கடிதம் மூலம் ஒரு உத்தரவை (கடித எண்: 17989/1 1/2017-2) பிறப்பித்திருக்கிறார் உயர்கல்வித்துறை செக்ரட்டரி கார்த்திகேயன்.

அதில், ஸ்பெஷல் ஷார்ட்ஃபால் வேகன்சி என்பது பற்றாக்குறை பணியிடங்கள் என்றும், பின்னடைவு பணியிடங்கள் அல்ல என்றும் தெரிவித்து, பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்ட உதவிப் பேராசிரியர் களை சீனியாரிட்டியில் முதலிடத்தில் வைத்தும், பட்டியலின உதவி பேராசிரியர்களை இரண்டா மிடத்தில் வைத்தும் பட்டிய லினத்தை பின்னுக்கு தள்ளியிருக்கிறார். இதனால் தகுதி யானவர்கள் பாதிக்கப்பட்டுள்ள னர். இது அரசு விதிகளுக்குப் புறம்பானது.

asst

அதாவது, இந்த பணி யிடங்களுக்கான சீனியாரிட்டியை பணியாளர்கள் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறையின் உதவியுடன் 2011-ல் வரையறை செய்த உயர்கல்வித்துறை, ஷார்ட்ஃபால் வேகன்சி என்பது 26 வருடங்களாக நிரப்பப் படாமல் இருக்கும் பின்னடைவு பணியிடங்கள்தான் எனத் தெரிவித்து, ஸ்பெஷல் ஷார்ட் ஃபால் வேகன்சியில் தேர்வு செய்யப்பட்ட பட்டியிலின உதவி பேராசிரியர்களை முத லிடத்திலும், பொதுப் பிரிவில் தேர்வு செய்யப்பட்டவர்களை அதற்கு பின்னதாகவும் வைத்து சீனியாரிட்டி தயாரிக்கவேண்டும் என தொழில்நுட்பத்துறையின் ஆணையருக்கு அப்போதே உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி சீனியாரிட்டி பட்டியலும் வெளியிடப் பட்டது.

இதனை எதிர்த்து பொதுப்பிரிவினர் நீதிமன்றம் சென்றனர். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஷார்ட்ஃபால் பணியிடங்களில் அமர்த்தப் பட்ட உதவிப்பேராசிரியர்களின் கருத்துக்களையும் பெற்று, அரசு விதிகளின்படி ஆணைகள் பிறப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள் ளது. ஆனால், உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், சீனியாரிட்டி விசயத்தில் நீதிமன்ற உத்தரவுப்படி நடந்து கொள்ளவில்லை. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

கார்த்திகேயன் தயாரித்த சீனியாரிட்டி கருத்துருவுக்கு தமிழக மனிதவள மேலாண்மைத்துறை எதிர்ப்பு தெரிவித்திருப்பதையும் புறந்தள்ளியதாக தகவல் வருகிறது.

இது குறித்தெல்லாம் கார்த்திகேயனின் கவனத்துக்குச் சென்றபோது, குறிப்பிட்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வினை பொதுப்பிரிவில் உள்ளவர்கள்தான் முதலில் எழுதினார்கள் என்றும், பட்டியலினத்தவர்கள் இரண்டாவதாகத்தான் எழுதினார்கள் என்றும் காரணம் சொல்லிக்கொண்டிருக்கிறாராம்.

asst

வெவ்வேறு தேதிகளில் எழுத்துத் தேர்வு நடந்தாலும் இரு தரப்பும் ஒரே நாளில்தான் பணியில் சேர்ந்துள்ளனர். பணியில் சேர்ந்த நாள்தான் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். மேலும், மதிப்பெண்கள் அடிப்படையில் சீனியாரிட்டியை கணக்கிட்டதாகவும் சொல்லியுள் ளார். சீனியாரிட்டிக்கு மதிப்பெண் எப்படி அளவுகோலாக இருக்க முடியும்? அப்படியே பார்த்தாலும் கூட, பட்டியிலின பிரிவில் இருக்கும் உதவிப்பேராசிரியர்கள்தான் மதிப்பெண்கள் அதிகம் பெற்றுள்ளனர்.

விதிகளின்படி சீனியாரிட்டி வழங்கினால், தொழில்நுட்ப கல்வித்துறையின் பொறியியல் கல்லூரிகளில் பட்டியலின உதவிப் பேராசிரியர்கள் பலருக்கும் பிரின்சிபாலாக பதவி உயர்வு கிடைத்து விடும். அதைத் தடுக்கவே இப்படிப்பட்ட சதிகள் நடக்கின்றன. இந்த அநீதியை அரசுக்கு சுட்டிக்காட்டி கடிதம் எழுதினாலும் ஆக்சன் நஹி''’என்று கோபத்துடன் வெடிக்கிறார் கிறிஸ்துதாஸ் காந்தி.

இது குறித்து துறையின் செயலாளர் கார்த்திகேயனிடம் கேட்ட போது... "சீனியாரிட்டியை முடிவு செய்ததில் எந்தத் தவறும் இல்லை, இருந்தாலும் இதைப்பற்றி விசாரிக்கிறேன்'' என்று உறுதியளித்தார்.