டெல்லி உயர்நீதிமன்றம் அவ்வப்போது பரபரப்பான தீர்ப்பு வழங்கி அதிர்வுகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான். கடந்த ஆண்டு, ஒரு சிறுமிக்கு திருமணமாகி கர்ப்பமான வழக்கில், டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடு முழுக்க விவாதமானது. அதேபோல் தற்போது ஒரு 15 வயது சிறுமியை 25 வயது ஆண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்த ஆண் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது இந்தியாவெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில், ஒரு 15 வயது சிறுமியை, அந்த வீட்டில் பணியாற்றிய 25 வயது இளைஞன் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, அச்சிறுமியின் தாய் புகாரளித்தார். புகாரை விசாரித்தபோது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட, அவனை சிறையில் தள்ளினர். அவ்வழக்கில் 11 மாதங்களாக சிறையிலிருந்த இளைஞன், தன்னை ஜாமீனில் வ
டெல்லி உயர்நீதிமன்றம் அவ்வப்போது பரபரப்பான தீர்ப்பு வழங்கி அதிர்வுகளை ஏற்படுத்துவது வழக்கமான ஒன்று தான். கடந்த ஆண்டு, ஒரு சிறுமிக்கு திருமணமாகி கர்ப்பமான வழக்கில், டெல்லி நீதிமன்றம் அளித்த தீர்ப்பு நாடு முழுக்க விவாதமானது. அதேபோல் தற்போது ஒரு 15 வயது சிறுமியை 25 வயது ஆண் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், அந்த ஆண் மீது போக்சோ சட்டப்படி வழக்கு பதிவு செய்ய முடியாது என்று டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்திருப்பது இந்தியாவெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டில், ஒரு 15 வயது சிறுமியை, அந்த வீட்டில் பணியாற்றிய 25 வயது இளைஞன் கடத்திச்சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக, அச்சிறுமியின் தாய் புகாரளித்தார். புகாரை விசாரித்தபோது, சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதி செய்யப்பட, அவனை சிறையில் தள்ளினர். அவ்வழக்கில் 11 மாதங்களாக சிறையிலிருந்த இளைஞன், தன்னை ஜாமீனில் விடுவிக்கக்கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தான். மனுவை விசாரித்த நீதிபதி விகாஸ் மகாஜன் தனது தீர்ப்பில், "பாதிக்கப்பட்டவர் ஒரு சிறுமி. எதிர்த் தரப்பில் அவன்மீது போக்சோவில் நடவடிக்கை எடுக்க வாதாடினார்கள். வாலிபருக்கு ஆதரவாக நீதிமன்றம் இருக்கவில்லை. அதே வேளை, அந்த வாலிபரோடு சம்மதத்தோடுதான் காதல் உறவில் இருந்துள்ளதாக சிறுமி வாக்குமூலம் கொடுத்துள்ளார். 18 வயதுக்குட்பட்ட குழந்தை களை பாலியல் துஷ்பிரயோகத்தில் இருந்து பாதுகாப்பதே போக்சோ சட்டத்தின் நோக்கம். அதற்காக இளம் வயதினரிடையே ஒருமித்த காதல் உறவுகளை குற்றமாக்குவது போக்சோ சட்டத்தின் நோக்கமல்ல. இருவரின் சம்மதத்துடன் நடந்த உடலுறவு குற்றமாகாது. எனவே அந்த வாலிபருக்கு ஜாமீன் வழங்கப்படுகிறது'' எனக்கூறி உத்தரவிட்டுள்ளார்.
இந்த தீர்ப்புதான் தற்போது கடுமையாக விவாதிக்கப்படுகிறது. இந்தத் தீர்ப்பு ஏற்புடையது தானா? என்று கேட்டபோது வழக்கறிஞர் அருள்மொழி, "18 வயது ஆகும்வரை அவர்கள் சிறுவர், சிறுமியாகத்தான் கருதப்படுவார்கள். எனவே அவர்கள் 18 வயதுக்கு முன்புவரை சம்மதமே கொடுத்தாலும் அது செல்லாது. அவர்கள் வலுக்காட்டாயமாக "விரும்ப வைக்கப்பட்டார்கள்' என்றுதான் கருதப்பட வேண்டும். சம்மதம் கொடுத்தால் சிறுவர்கள் திருமணம் செய்து குழந்தை பெற்றுக்கொள்ள முடியுமா? அது, குழந்தை திருமணத்தை ஆதரிப்பது போலாகுமே. அது சட்டப்படி தவறு. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்துக்கு போனால் தீர்ப்பு மாற்றப்படும்'' என்று தெளிவுபடுத்தினார்.
சிறுமிக்கு சம்மதம் தெரிவிக்குமளவுக்கு மெச்சூரிட்டி இருக்குமா என்பதுகுறித்து மனநல ஆலோசகர் அகிலப்ரியா கூறுகையில், "15 வயது சிறுமிகளுக்கு பாலியல்ரீதியாக முடிவெடுக்கும் மெச்சூரிட்டி இருக்காது. அச்சிறுமியின் சம்மதம் என்பதை கணக்கில் கொள்வது சரியானதாக இருக்காது. இந்த விவகாரத்தில், பெற்றோர் தரப்பில் போதிய அன்பும், அக்கறையும் காட்டாததால் பாலியல் துன்புறுத்தல் நடந்திருக்கலாம். அந்த சிறுமிக்கு உண்மையான அன்பு எதுவென்று தெரியாது. அப்படிப்பட்ட குழந்தைக்கு கூடுதல் அன்பை, அரவணைப்பைக் காட்டுவதுபோல் பாலியல் சீண்டலில் ஈடுபட்டிருக்கக்கூடும். ஒரு குழந்தை பிறந்து 3 ஆண்டு காலத்துக்கு அக்குழந்தைக்கு அன்பின் தேவை (ய்ங்ங்க் ர்ச் ப்ர்ஸ்ங்) அதிகமாக இருக்கும். அது முழுமையாகக் கிடைக்க வேண்டும். அதேபோல், மூன்றாண்டுகளுக்குப் பின்னர் பாதுகாப்பு குறித்த தேவை, தேடல் அதிகமிருக்கும். அதுவும் அக்குழந்தைக்கு பெற்றோரிடமிருந்து கிடைக்க வேண்டும். இப்படியான வளர்ப்பில் பெற்றோர் நிறைவைத் தராத சூழலில், அக்குழந்தைகள் மிகுந்த சென்சிடிவாக இருப்பார்கள். இதன்காரணமாக இக்குழந்தைகளிடம் கூடுதல் பாசத்தைக் காட்டியோ, மிரட்டல்கள் மூலமோ தவறாக நடக்க வாய்ப்புள்ளது'' என்றார்.
இத்தீர்ப்பு குறித்து பெண்ணிய செயற்பாட்டாளர் தோழர் பா.ஜீவசுந்தரி கூறுகையில், "இத்தீர்ப்பு மிகவும் தவறானது. 15 வயது குழந்தைக்கு செக்ஸ் குறித்த புரிதல் இருந்திருக்காது. அதிலும், ஒரு மைனர் குழந்தையை வயது வந்த நபர் கடத்திச் செல்வது முதல் தவறு. அக்குழந்தையை கஸ்டடியில் வைத்திருக்கும்போது அந்நபருக்கு இணங்கியே ஆகவேண்டிய சூழல் ஏற்படுகிறது. உயிர்ப்பயம், வாழ்க்கை குறித்த பயம் காரணமாக பாலியல் பலாத்காரம் நடந்திருக்கும். இது மிரட்டிப் பணிய வைப்பதே ஆகும். சம்மதத்தோடு நடப்பது என்பதில் இது சேராது.
இப்போது நீதித்துறையே வேறு மாதிரியாக இருக்கிறது. அதிகாரமும், பணபலமும் படைத்தவராக இருந்த காங்கிரஸ் கட்சியின் தலைவரான ராகுல்காந்தியையே ஆட்டிப் படைக்க முடிகிறது. இப்படியான சூழலில் 15 வயது சிறுமிக்கு நடந்த பாலியல் பலாத்காரத்தை அக்குழந்தையின் சம்மதத்துடன் நடந்ததாகக்கூறி நியாயப்படுத்துவது பெருந்தவறு. போக்சோ சட்டமே நீர்த்துப்போவதுபோல் இருக்கிறது. அதில் திருத்தங்கள் செய்து மேலும் கடுமையாக்க வேண்டும்'' என்றார். போக்சோவுக்கே போக்கு காட்டுவது நியாயமா?