தென்காசி மாவட்டம் சத்திரப்பட்டி கிராமம்..., திடீரென நுழைந்த போலீஸ் டீமால் பரபரப்பில் இருக்கிறது.

அங்குள்ள மரக்கடை ஒன்றில் மினி டெலிபோன் பூத் ஒன்று ரகசியமாக செயல்படுவதாக காவல்துறைக்குத் தகவல் போக, சற்றும் தாமதிக்காத எஸ்.பி. சுரேஷ்குமார் உடனே இந்தத் தகவலைக் கூறி சங்கரன்கோவில் டி.எஸ்.பி. சுதிரை முடுக்கிவிட்டார். இதைத் தொடர்ந்து சத்திரப்பட்டியை முற்றுகையிட்ட தனிப்படை, அந்த மரக்கடையை ரவுண்ட்-அப் செய்தது.

teer

அங்கே நுழைந்து தீவிர சோதனையை நடத்தினர். அப்போது, அந்த ஒதுக்குப்புறமான இடத்தில் மினி டெலிபோன் எக்ஸ்சேஞ்ச் செயல்பட்டதையும், அங்கே 600 சிம்கார்டுகள், நவீன தொலை தொடர்புச் சாதனங்கள், லேப்டாப்புகள், 30-க்கும் மேற்பட்ட செல்போன்கள், வைபை மோடம், பெரிய சைஸ் பேட்டரி உள்ளிட்டவை இருப்பதைக் கண்டு அதிர்ந்தனர்.

Advertisment

இவற்றைப் பறிமுதல் செய்த போலீஸ் டீம், இவற்றை இயக்கிவந்த யோசுவா என்பவரை மடக்கினர். அதிரடியாகக் கைது செய்யப்பட்ட யோசுவாவிடம் போலீசார் தங்கள் பாணியில் தீவிர விசாரணை நடத்தியதில், பல தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

இந்த தொலைத் தொடர்புக் கருவிகளைக் கொண்டு ஐ.எஸ்.டி. கனெக்சன் இல்லாமல், சாட்டிலைட் கால் முறையில் உள்நாட்டிலிருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களுடன் தொடர்பை ஏற்படுத்தி ஜோசுவா பலரையும் பேச வைத்திருக்கிறார். இதன் பின்னணியில் தீவிரவாதக் குழுக்கள் ஏதேனும் இருக்குமோ என்கிற கோணத்தில் விசாரணையை முடுக்கினர்.

கைதான யோசுவா வெளி நாட்டில் வேலைபார்த்து வந்தவராம். அண்மையில் நாடு திரும்பியவர் தன் கிராமத்தில் இந்த உபகரணங்களை, தனது சகோதரனின் மரக்கடையில் பொருத்தியிருக்கிறார்.

Advertisment

அதி நவீன தொலை தொடர்புக் கருவிகள் மூலமாக சாட்டிலைட் லிங்க்கை ஏற்படுத்திக் கொண்டு, அதன்மூலமாக வெளிநாடு, உள்நாடு களில் வசிப்பவர்களுடனான தொடர்புகளை, டெக்னிக்கலாக உள்நாட்டு போன் கால்களாக மாற்றிப் பேச வைத்திருக்கிறாராம். இதனை கடந்த ஆறு மாதமாகவே நடத்தி வந்திருக்கிறார் என்கிறார்கள் காவல்துறையினர்.

ttஇந்த முறையில் செயல்பட்டதால் யார் யாருடன் எந்தெந்த நம்பரில் என்ன பேசினார்கள் என்பதை ட்ரேஸ் பண்ண முடியாதாம். இதன் மூலம் வெளிநாட்டுத் தொடர்புகள் குறித்த சந்தேகம் காவல்துறைக்கு வலுத்திருக்கிறதாம். இதுபோன்ற மினி டெலிபோன் பூத் அமைத்து பணம் பார்ப்பதும் சட்டப்படி கடுமையான குற்றம் என்கிறது காவல்துறை. அதுபோக, வெளிநாட்டுத் தீவிரவாதிகளும் இந்த நெட்ஒர்க் மூலம் பேசியிருக்கலாம் என்கிற கனமான சந்தேகமும் தங்களுக்கு இருப்பதாகக் கூறுகிறது போலீஸ்.

நம்மிடம் இது குறித்துப் பேசிய விசாரணைக் காக்கிகள் "நவீன டெக்னாலஜி முறையில் அனைவரும் வீடியோ கால் பயன்படுத்துவதால், இவர்கள் டெலிபோன் எச்சேஞ் நடத்தியிருக்க வாய்ப்பில்லை. வேறு எதற்காகவோ நடத்தியிருக் கிறார்கள். தவிர, யோசுவாவிற்கு சிம்கார்டுகள் தொடங்கி இதர சாதனங்கள் வரை அனைத்தையும் சப்ளை செய்து தொலைதொடர்பு இணைப்பு களையும் கொடுத்தவரான முனீஸ்வரன் என்பவரையும் மடக்கி இருக்கிறோம். இவர் தனியார் தொலைதொடர்பு நிறுவனம் ஒன்றில் வேலை பார்க்கிறவராம்.

கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மாலத்தீவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அகமது அபித் என்பவரை, ஊழல் மற்றும் கிரிமினல் குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக அந்நாட்டு பிரதமர் அவரைக் கைது செய்ய உத்தர விட்டார். அங்கிருந்தால் கடும் தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதால், பதறிப்போன அகமது அபித் மாலத்தீவு மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளின் கரன்சிக் கட்டுகளுடன் தூத்துக்குடிக்குத் தப்பி வந்தார். அப்படி வரும் போது, நடுக்கடலில் இருந்த படி சாட்டிலைட் போன் மூலம் யாருக்கோ பேசி யிருக்கிறார். அந்த டீட் டெய்ல் அமெரிக்காவின் நாசாவில் பதிவாக, நாசா அதிகாரிகள் உடனே இந்தத் தகவலை இந்திய அரசுக்குத் தெரியப்படுத்தி அலர்ட் செய்தார்கள்.

இதைத் தொடர்ந்து, மத்திய கடலோரப் பாதுகாப்பு படையினர், மாஜி அமைச்சர் அகமது அபித்தை வெளிநாட்டுக் கரன்சிகளுடன் மடக் கினர். அவரிடமிருந்த சாட்டிலைட் போனையும் பறிமுதல் செய்தனர். இது இரு நாட்டு ராஜீய விவகாரம் என்பதால் அகமது அபித்தை மட்டும் அவரது மாலத்தீவு அரசிடம் ஒப்படைத்தார்கள். இப்படிப்பட்ட சிக்கல்களும் சாட்டிலைட் போனால் வரும் என்பதால்தான், அது இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளால் தடை செய்யப்பட்டிருக்கிறது.

ter

தீவிரவாத போதை மற்றும் கடத்தல் மாஃபியாக்கள்தான் தங்களைப் பற்றிய அடையாளம் தெரியாமலிருக்க சாட்டிலைட் போனைப் பயன்படுத்து கின்றனர். ஆனாலும் சாட்டிலைட் போனின் இணைப்பு சாட்டிலைட்டில் பதிவாகுவதால். அவைகளைக் கண் காணிக்கிற விண்வெளி ஆராய்ச்சி மையம் மூலம் அனைத்தும் தெரிய வந்துவிடும்''’என்றார்கள் விரிவாகவே. சத்திரப்பட்டி மரக்கடை மினி சாட்டிலைட் பூத் பற்றி டி.எஸ்.பி. சுதிரிடம் நாம் கேட்ட போது "சிம் கார்டுகள், செல்போன்கள் மற்றும் பிற டெக்னிக்கல் சாதனங்களைக் கொண்டு நெட் மூலம் வாய்ஸ் மெசேஜாகப் பேசியது தெரியவருகிறது. எனினும் விசாரணை முடியவில்லை. நடந்து கொண்டிருக்கிறது. சாதனங்கள் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளன. ரிப்போர்ட் வந்தபிறகே மற்றவை தெரியவரும்'' என்றார்.

"இந்த பிரைவேட் சேட்டிலைட் டெலிபோன் பூத், தீவிரவாதச் செயல்களுக்கு பயன்பட்டதா?' என்பதற்கான விடை... விரைவில் வெளிப்படும்.

-செய்தி & படங்கள்: ப.இராம்குமார்