அ.தி.மு.க. பொதுக்குழுவில் பேசிய சி.வி.சண்முகம் ‘"துரோகிகளும், புரோக்கர்களும் அ.தி.மு.க.வின் அரசியலைத் தீர்மானிக்கிறார்கள்'’ எனக் குறிப்பிட்டார். இது எடப்பாடிக்கும் சி.வி.சண்முகத்துக்கும் இடையேயான போராக வெடித்திருக்கிறது. சி.வி.சண்முகம் இப்படி பேசியதை எடப்பாடி ரசிக்கவில்லை. ஏனென்றால், சி.வி.சண்முகம் புரோக்கர்’ எனக் குறிப்பிட்டது ஆடிட்டர் குருமூர்த்தியைத்தான். ஓ.பி.எஸ்.ஸை டெல்லிக்கு அழைத்துச் சென்று அமித்ஷாவுடன் ஒரு சமரசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார் குருமூர்த்தி. ஓ.பி.எஸ்.ஸை பொறுத்தவரை அவரது மகனுக்கு எப்படியாவது மந்திரி பதவி வாங்கிவிட வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறார். அதற்கு எடப்பாடி தடையாக இருக்கக்கூடாது என அடிக்கடி எடப்பாடியுடன் சமரசப் பேச்சு மேற்கொள்வார் ஓ.பி.எஸ். அரசியல் ஆலோசனைக் குழு ஒன்றை அமைத்து அதன் தலைவர் பதவியை யும் ஒருமுறை ஓ.பி.எஸ்.ஸுக்காக தயார் செய்தார் எடப்பாடி. இப்படி அசுர வேகத்தில் நடந்த சமரச முயற்சிகளை அ.மலை முறித்துவிடுவார்.
ஓ.பி.எஸ். உடனிருக்கும் வைத்திலிங்கம், எடப்பாடியுடன் சமரசமாகப் போவதற்கு பெரிய தடை விதித்து வந்தார். தற்பொழுது செங்கோட் டையனுடன் நட்பிலிருக்கும் வைத்திலிங்கம் த.வெ.க.வுக்கு செல்வதற்காக ஆதவ் அர்ஜுனா வுடன் பேரம் பேசி வருகிறார்.
வைத்திலிங்கம் சி.எம்.டி.ஏ. துறை அமைச்ச ராக இருந்தபோது, அவர் மீது எழுந்த ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக அவர் மீதும், அவரது மகன் மீதும் போடப்பட்ட வழக்கு ஒன்று நிலுவை யில் உள்ளது. அதை நீக்கவேண்டுமென்று தி.மு.க. தரப்பில் டிமாண்ட் வைத்திருக்கிறார். இதற்கு தி.மு.க. மறுக்கவே, த.வெ.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார் வைத்திலிங்கம். இது ஓ.பி.எஸ். ஸை கலவரப்படுத்தியுள்ளது. அவருடன் இருந்த மனோஜ்பாண்டியன் தி.மு.க.வுக்கு போய்விட்டார். வைத்திலிங்கமும் போய்விட்டால் என்ன செய்வது என யோசித்த ஓ.பி.எஸ். சாட்சிக்காரன்கள் காலில் விழுவதை விட சண்டைக்காரனின் காலில் விழுவது மேல் என எடப்பாடிக்கு சமரச தூது அனுப்பினார். இந்த முறை குருமூர்த்தி ஏற்பாட்டின் மூலம் அமித்ஷாவை சந்தித்து சமரசத் தூது அனுப்பினார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/ops1-2025-12-12-11-37-13.jpg)
அமித்ஷாவின் தூதை ஏற்றுக்கொண்ட எடப்பாடி ஓ.பி.எஸ்.ஸுக்கு ஏற்கெனவே அவர் வகித்த பொருளாளர் பதவியைத் தரமுடியாது. அவைத்தலைவர் பதவியைத் தரலாம் என முடிவு செய்தார். உடல் நடுக்கத்துடன் பேச முடியாமல் இருக்கும் தமிழ் மகன் உசேனை மாற்றும் விதமாக பொதுக்குழுவுக்கு தற்காலிக அவைத்தலைவராக ஓ.பி.எஸ். ஸுக்கு ஒரு காலத்தில் நெருக்கமாக இருந்த கே.பி.முனுசாமியை கொண்டுவந்தார். இந்த சமரச ஏற்பாட்டைத்தான் சி.வி.சண்முகம் பொதுக்குழுவிலேயே எதிர்த்தார். இந்த ஏற்பாட்டைச் செய்த குருமூர்த்தியை புரோக்கர் என வர்ணித்தார். சி.வி.சண்முகத்தின் மத்திய அரசு தொடர்பான சில தொழில்களுக்கு குருமூர்த்தி இடைஞ்சலாக இருந்தார் என்பதுதான் சண்முகத்தின் கோபத்துக்குக் காரணம் என்கிறார்கள் அ.தி.மு.க.வினர். ஓ.பி.எஸ். தனது எதிர்ப் புக்கள் அனைத்தையும் தூர எறிந்து விட்டு எடப்பாடியிடம் சரண்டராகி விட்டார்.
ஓ.பி.எஸ். போலவே எடப்பாடி யை எதிர்த்துவந்த டி.டி.வி. தினகரனும் ஆயிரம் கோடி மதிப்புள்ள லண்டன் ஹோட்டல் கேஸ் மற்றும் இரட்டை இலை சின்னம் பெற சுகேஷ் சந்திர சேகர் என்கிற புரோக்கருக்கு லஞ்சம் கொடுத்த வழக்கு இரண்டையும் காட்டி எடப்பாடி முகாமுக்கு கூட்டணிக் கட்சியாக கொண்டுவரும் வேலைகள் வேகம் பெற்றுள் ளன. ஓ.பி.எஸ்.ஸை குருமூர்த்தி கொண்டுவர, டி.டி.வி.யை கொண்டுவரும் பொறுப்பு அவரது நண்பரான அ.மலையிடம் ஒப்படைக் கப்பட்டுள்ளது. இந்த இருவரையும் இது நாள்வரை ஆபரேட் செய்து வந்ததும் அ.மலைதான். ஆக இருவரையும் அ.தி.மு.க. முகாமுக்குள் கொண்டுவரும் நடவடிக்கைகள் வேகம் பெற்றுள்ளன. எடப்பாடியை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்கிற அவரது எதிர்ப்பு கோஷ்டிகளின் கோரிக்கைகளை நடந்து முடிந்த பொதுக்குழு மூலம் முறியடித்துவிட்டார் எடப்பாடி. எடப்பாடியிடம் முரண்பட்டிருந்த தங்கமணி, சி.வி.சண்முகம், நத்தம் விஸ்வநாதன் உட்பட அனைவரையும் பொதுக்குழுவில் மேடை யேற்றி எடப்பாடியை வாழ்த்திப் பேச வைத்து தனக்கு எதிர்ப்பு இல்லையென காட்டினார் எடப்பாடி. அதே நேரத்தில் செங் கோட்டையனையும் த.வெ.க.வையும் எதிர்த்து ஒரு வார்த்தைகூடப் பேசாமல் விஜய்யை அ.தி.மு.க. கூட்டணிக்குள் கொண்டுவரும் அமித்ஷாவின் முயற்சிகளுக்கு பச்சைக்கொடியும் பொதுக்குழுவில் காட்டப்பட்டது. இப்படி அ.தி.மு.க. கூட்டணியை வலுப்படுத்த அனைத்து முயற்சிகளையும் எடப்பாடி மேற்கொள்கிறார். “தென்னிந்திய பா.ஜ.க. செயலாளர் பதவியை எனக்கு தராவிட்டால் அ.தி.மு.க.வின் கூட்டணி முயற்சிகளை உடைப் பேன் என எதிர் சவால் விட்டுக்கொண்டிருக்கிறார் அ.மலை என்கிறது பா.ஜ.க. வட்டாரங்கள். இவையனைத்தும் அடுத்துவரும் அமித்ஷாவின் தமிழக விசிட்டில் தெளிவாகிவிடும்” என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/party-2025-12-12-16-01-31.jpg)
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/12/ops-box-2025-12-12-11-37-29.jpg)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2025/12/12/ops-2025-12-12-11-36-45.jpg)