சுப்ரீம் கோர்ட்டில் புஸ்ஸிஆனந்தும் நிர்மல்குமாரும் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப் படவில்லை. காலதாமதமாக அந்த வழக்கு விசாரணைக்கு வரும் என்கிறார்கள். இதற்கிடையே ஆதவ்அர்ஜுனா மீது போடப்பட்ட வழக்கில், அவரை கைது செய்யவேண்டாம் என முன்ஜாமீன் வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்ய முடியாது என வழக்கறிஞர்கள் மறுத்து விட்டனர்.
தமிழகத்தின் கரூர் சம்பவம் தொடர்பாக "நேபாளத்தில் நடந்ததைப் போல புரட்சி நடக்கும்' என ஆதவ் போட்ட டுவீட்டின் விளைவு, அவர் உத்தரகாண்ட் மாநிலத்தில் கலந்துகொண்ட விழாவில் எதிரொலித்தது. அந்த விழாவில் தேசிய கூடைப்பந்து வாரியத்தின் சார்பில் அந்த மாநில பா.ஜ.க. முதலமைச்சர் கலந்துகொண்டார். அவர் நேரடியாகவே ஆதவ்விடம், "நீங்கள் இந்த விழாவில் கலந்துகொண்டால் என்னை இந்த விழாவிற்குச் செல்லவேண்டாம் என மத்திய உளவுத்துறை எச்சரித்துள்ளது. எனவே, இந்த விழாவிலிருந்து வெளியேறிவிடுங்கள்''’என கேட்டுக்கொண்டார். அதன்படி ஆதவ் அங்கிருந்து வெளியேறி சென்னைக்கு வந்துவிட்டார். வருவதற்கு முன், ஆதவ் டெல்லியில் அமித்ஷாவின் பிரதிநிதிகளை சந்தித்துப் பேசினார். சென்னை வந்த அவரை போலீஸ் கைது செய்யும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விமான நிலையத்திலிருந்து வீடு வந்து சேர்ந்த அவரை போலீஸ் ஒன்றும் செய்யவில்லை. எந்த நேரத்திலும் அவர் கைது செய்யப்படலாம் என்கிற நிலை மட்டும் நீடிக்கிறது. அவர் முன்ஜாமீன் கேட்டு மாவட்ட நீதிமன்றத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பிறகு உயர்நீதிமன்றம், அடுத்து உச்சநீதிமன்றம் என்கிற நிலையே நீடிக்கிறது.
கரூர் சம்பவம் நடந்தவுடன் இது தி.மு.க. சதி என அ.தி.மு.க.வும் பா.ஜ.க.வும் முன்னெடுத்த பிரச்சாரம் ஓரளவு வெற்றியடைந்தது. அதன்பிறகு தி.மு.க. தரப்பிலிருந்து அமுதா ஐ.ஏ.எஸ். மற்றும் செந்தில்பாலாஜி கொடுத்த விளக்கங்கள் நிலைமையை மாற்றியது. கரூர் சம்பவத்தால் விஜய்யின் செல்வாக்கு அதிகரித்து விட்டது. மக்கள் செத்ததற்கு விஜய் எப்படி காரணமாவார்? என த.வெ.க. முன்வைத்த பிரச்சாரத்தின் தொடர்ச்சியாக சமூக வலைத்தளங்களில் விஜய்க்கு எதிராக முன்வைத்த கடும் எதிர்ப்புப் பிரச்சாரங் களால் முறியடிக்கப்பட்டது. விஜய் ஏன் கைது செய்யப்படவில்லை என எழுந்த பிரச்சாரம் த.வெ.கவுக்கு எதிராகப் போனது. மாநில அரசு விஜய்யை கைது செய்யத் தயங்குகிறது என சமூக வலைத்தளங்களில் எழுந்த பிரச்சாரம் அரசுக்கு சாதகமானதாகப் போனது. விஜய்யை பழிவாங்க அரசு முயற்சிக்கவில்லை என எழுந்த பிம்பத்தை பயன்படுத்தி உயர் நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என வழக்கை விஜய் தரப்பு கொண்டுசென்றது. உச்ச நீதிமன்றத்தில் தங்களுக்கு சாதகமான நிலை ஏற்பட்டால் அதைப் பயன்படுத்தி கரூருக்குச் செல்ல விஜய் திட்டமிட்டிருந்தார். அதற்காக, பாதிக்கப்பட்ட அனைவரையும் ஒரு திருமண மண்டபத்தில் திரட்டி, அங்கு விஜய் சென்று இறந்தவர்களுக்கு இருபது லட்சம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு இரண்டு லட் சம் ரூபாய் கொடுக்க த.வெ.க. திட்டமிட்டிருந் தது. ஆனால் உச்சநீதிமன்ற வழக்குகள் தாமதமாகப் போனதால் விஜய் வெளியே வருவது தள்ளிப்போனது என்கிறார்கள் த.வெ.க.வைச் சேர்ந்தவர்கள்.
கரூர் சம்பவத்தால் த.வெ.க.வின் வாக்கு சதவிகிதம் அதிகரித்துள்ளது என மார்க்சிஸ்ட் கட்சியின் எம்.பி.யான சு.வெங்கடேசன் தெரிவித்ததாக சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்பட்டது. ஆனால், கரூர் சம்பவத்தால் த.வெ.க.விற்கு விஜய்யின் ரசிகர்களைத் தாண்டியிருந்த பொதுமக்களின் ஆதரவு சுருங்கிவிட்டதாகவும், அதனால் விஜய்யுடன் கூட்டணி வைத்தால் எதிர்வினை ஏற்படும் எனவும் அ.ம.மு.க.வின் தலைவர் தினகரன் பேசிவருகிறார் என சமூக வலைத்தளங்களில் கருத்துக்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்நிலையில் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகிய கட்சி கள் தங்கள் கூட்டணிக்கு விஜய் வரவேண்டும் என கோரிக்கை வைத்து பேசி வருகின்றன. காங்கிரசும் விஜய் தங்கள் பக்கம் வரவேண்டும் என காய் நகர்த்திக் கொண்டிருக்கிறது. ராஜேஷ்குமார், கார்த்தி சிதம்பரம் என காங்கிரஸ் தலைவர்கள் த.வெ.க.வுடன் பேசிவருகிறார்கள். தனது கைது நட வடிக்கையை தவிர்க்கவும் தனக்கு நெருக்க மானவர்களைக் காப்பாற்றவும், ராகுல்காந்தி மூலமாக விஜய் முதலமைச்சர் ஸ்டாலினிடம் பேசி சாதித்துள்ளார். ஆனால், காங்கிரஸ் எதிர்பார்க்கும்படி நேரடியாக காங்கிரசுடன் கூட்டணி அமைக்க விஜய் தயாராகவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் விஜய்யுடன் கூட்டணி அமைத்து 25 எம்.பி.க்களை தமிழகத்திலிருந்து பெறலாம் என்கிற காங்கிரசின் கணக்கு பாழாகிப்போனது. கரூர் சம்பவம் இதுபோல் பல விளைவுகளை அரசியலில் ஏற்படுத்தி வருகிறது.
இதனிடையே அஸ்ரா கார்க் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு... புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரைத் தேடி புறப்பட்டுவிட்டது. புஸ்ஸி புதுச்சேரிக்கும் ராமேஸ்வரத்திற்கும் இடையே கடலில் கப்பலில் தப்பி யோடிக்கொண்டிருக்கிறார் என கண்டுபிடித்து அவரை நெருங்கிக் கொண்டுள்ளது விசாரணைக் குழு. உச்ச நீதிமன்றத்தில் தாமதம் ஏற்பட்டால் விபத்தை ஏற்படுத்திய விஜய்யின் பிரச்சார வாகன பறி முதல், அதன் ஓட்டுனர், புஸ்ஸி, நிர்மல், ஆதவ் ஆகியோர் கைது செய்யப்படலாம். ஆனாலும் விஜய் கைது செய்யப்படமாட்டார் என்கிறது காவல்துறை வட்டாரங்கள்.