ட்கட்சிப் பூசலால் காங்கிரஸ் ஆட்சியைப் பறிகொடுத்த மாநிலங்களில் மத்திய பிரதேசமும் ஒன்று. கிட்டத்தட்ட தமிழ்நாட்டுக்கு இணையாக 230 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்டுள்ள இம்மாநிலத்தில், கடந்த 2018 தேர்தலில், காங் கிரஸ்தான் அதிகப்படியாக 114 தொகுதிகளையும், பா.ஜ.க. 109 தொகுதிகளையும் கைப்பற்றி யிருந்தது. பெரும்பான்மைக்கு 116 இடங்கள் தேவை என்ற நிலையில், உதிரிக் கட்சிகளின் கூட்டணி யோடு காங்கிரஸ் அரியணையேற, கமல்நாத் முதல்வரானார்.

Advertisment

அடுத்த ஓராண்டு காலத்தி லேயே அங்குள்ள பா.ஜ.க. தனது பிரித்தாளும் சூழ்ச்சியை செயல் படுத்தியது. கமல்நாத்துக்கும், இளம் காங்கிரஸ் தலைவரான ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு மிடையே முட்டல் மோதல் தொடங் கியது. தனக்கும் முதல்வர் பதவி தேவையென்று போர்க்கொடி தூக்கினார் ஜோதிர்ஆதித்ய சிந்தியா. எவ்வளவோ சமாதான முயற்சிகள் நடந்தும், இறுதியில் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் பா.ஜ.க. பக்கம் தாவ, காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சியைப் பிடித்தது. ஜோதிர்ஆதித்ய சிந்தியாவுக்கு பா.ஜ.க.வில் ராஜ்யசபா எம்.பி. பதவி தரப்பட்டு, மத்திய அமைச்சராக்கப்பட்டார்.

pp

தற்போது சிவ்ராஜ்சிங் சவுகான் தலைமையில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டின் இறுதியில் அங்கு தேர்தல் நடைபெறவுள்ள சூழலில், பா.ஜ.க.வினுள்ளேயே அதிகாரப் போட்டி எழுந்துள்ளது. ம.பி. முதல்வருக்கும், மற்ற சீனியர் தலைவர்களுக்குமிடையே மோதல் போக்கு எழுந்துள்ளது. அமைச்சரவையிலுள்ள சிலரை நீக்க வேண்டு மென்று சீனியர் தலைவர் கள் போர்க்கொடி தூக்கி யுள்ளனர். மத்திய பிரதேசத் தையடுத்து, ராஜஸ்தான், சத்தீஸ்கர், மிசோராம், தெலங்கானா ஆகிய மாநி லங்களில் தேர்தல் நடை பெறவுள்ளதால், உட்கட்சிப் பிரச்சனை பா.ஜ.க.வுக்கு தலைவலியாக உருவெடுத்துள்ளது.

Advertisment

ஏற்கெனவே கர்நாடகாவில் ஆட்சியை இழந்த பா.ஜ.க., அதேபோல், மத்திய பிரதேசத் திலும் ஆட்சியைப் பறிகொடுப்பதற்கான அத்தனை கிரகநிலைகளும் பா.ஜ.க.வுக்கு எதிராக இருப்பதாகத் தெரிகிறது. காங்கிரஸைப் பொறுத்தவரை கமல்நாத்துக்கு இருந்த ஒற்றைத் தலைவலியான ஜோதிர்ஆதித்ய சிந்தியா வெளியேறியதால், அக்கட்சி தற்போது முழுக்க கமல்நாத்தின் கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது ப்ளஸ். அடுத்ததாக, கர்நாடகாவில் பெற்றுள்ள வெற்றி, காங்கிரஸை புத்துணர்வாக்கி யுள்ளது.

மேலும், மத்திய பிரதேசத்தில் ஆளுங் கட்சியாக உள்ள பா.ஜ.க., அப்படியொன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக ஆட்சி நடத்த வில்லை. எனவே பொதுமக்கள் மத்தியில் அக்கட்சி மீது அதிருப்தி நிலவுகிறது. அதேபோல், அதிக தொகுதிகளில் வென்றும், பா.ஜ.க.வின் உள்ளடியால் காங்கிரஸ் ஆட்சியை இழந்துள்ளதால் அதன்மீது அனுதாப அலையும் உள்ளது.

இந்த சூழலில் காங்கிரஸ் தலைவர் களின் ஒருவரான பிரியங்கா, கடந்த திங்களன்று, மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் நடைபெற்ற தேர்தல் பணிகள் தொடக்க விழா பேரணியில் கலந்து கொண்டு, பல்வேறு தேர்தல் வாக்குறுதிகளை அளித்துள்ளார். அவையனைத்தும் தமிழ்நாட்டின் தேர்தல் பிரச்சார உத்தியை ஒட்டியுள்ளன. மின்சாரக்கட்டணத்தைப் பொறுத்தவரை, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் என்றும், 200 யூனிட் வரை பாதியாக மின்சாரக்கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அறிவித்தார். அரசுப் பணியாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் அமல்படுத்தப்படும். பெண்களுக்கு மாதாமாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டத்தை பா.ஜ.க. முதல்வர் தொடங்கிவைத்துள்ள நிலையில், அதையும் முறியடிக்கும்விதமாக, பெண்களுக்கு மாதாமாதம் 1,500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என்று பிரியங்கா அறிவித்திருப்பதற்கு வரவேற்பு கிடைத்துள்ளது.

Advertisment

pp

மேலும், சமையல் கேஸ் சிலிண்டர்களுக்கு 500 ரூபாய் மானியம் வழங்கப்படும், 2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட விவசாயக் கடன்கள் ரத்து செய்யப்படும் என்ற அறிவிப்புகளும் தாய்மார்கள் மற்றும் விவசாயிகள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இத்தகைய அறிவிப்புகளை வெளியிட்ட பிரியங்கா, "கர்நாடகா தேர்தலின்போது நாங்கள் 5 முக்கிய உத்தரவாதங் களை வழங்கினோம். அவை அனைத்தும் கர்நாடக காங்கிரஸ் அமைச்சரவையால் நிறைவேற்றப் பட்டுள்ளன. அதே போல், ராஜஸ் தானில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப் பட்டுள்ளது. சத்தீஸ் கரில் விவசாயிகள் தங்கள் பயிர்களுக்கு நல்ல விலையைப் பெற்றுவருகிறார்கள். இமாச்சல பிர தேசத்திலும் எங்கள் வாக்குறுதிகள் அனைத்தையும் செயல்படுத்திவருகிறோம். அதேபோல் மத்திய பிரதேசத்திலும் 100% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியளிக் கிறேன்'' என்றார். பிரியங்காவின் இந்த பேச்சு, மக்கள் மத்தியிலும், காங்கிரஸ் தொண்டர்கள் மத்தியிலும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முள்ளை முள்ளால் எடுப்பதுபோல், இந்துத்வா அரசியல் செய்யும் பா.ஜ.க.வை வீழ்த்தும்விதமாக, நர்மதா நதிக்கரையில் உள்ள குவாரிகாட்டில் பூஜை செய்த பிரியங்கா, நர்மதா தேவியின் நதிக்கரையில் பூஜை செய்த பிறகுதான் எனது பிரச்சாரத்தைத் தொடங்குவேன் என்று அறிவித்தது, மோடியின் இந்துத்வா வேடத்தைத் தாக்குவதாக உள்ளது. ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி பிரியங்கா எக்ஸ்பிரஸ் வேகமெடுத் துள்ளது. பா.ஜ.க. இதை ஓவர்டேக் செய்யுமா என்பது போகப்போகத் தெரியும்!