தி.மு.க. கூட்டணியில் முதல்வர் ஸ்டாலி னை சந்தித்து தொகுதி பேச்சுவார்த்தையைத் துவக்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. தேர்தல் காலங்களில் எந்த ஒரு விஷயத்திலும் ஜவ்வு மாதிரி இழுத்து கடைசி நேரத்தில் முடிவு எடுத்தே பழக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, தேர்தல் தேதி அறிவிப்புக்கே இன்னும் 3 மாதங்கள் இருக்கும் சூழலில், பேச்சுவார்த்தையை இப்போதே துவக்கியிருப்பதைக்கண்டு தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்!
தேசிய அளவில் காங்கிரசுக்கு தி.மு.க. எப்படி தேவையோ, அதேபோல தமிழகத்தில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தேவையாக இருக்கிறது. அதனால் தான், 2004-ல் உருவான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி (2014 நாடாளுமன்றத் தேர்தல்) இப்போதுவரை நீடித்துவருகிறது. இந்த கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்தான் இருந்துவந்தது காங்கிரஸ். அதாவது, தி.மு.க. தருகிற சீட்டு களையும், தொகுதிகளையும் பெற்றுக்கொண்டு கூட்டணியில் அமைதியாக காலம் தள்ளுவதுதான் அதன் முடிவாக இருந்தது. ஆனால் அந்த முடிவு, நடிகர் விஜய் கட்சி துவக்கி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தோழமைக் க
தி.மு.க. கூட்டணியில் முதல்வர் ஸ்டாலி னை சந்தித்து தொகுதி பேச்சுவார்த்தையைத் துவக்கியிருக்கிறது காங்கிரஸ் கட்சி. தேர்தல் காலங்களில் எந்த ஒரு விஷயத்திலும் ஜவ்வு மாதிரி இழுத்து கடைசி நேரத்தில் முடிவு எடுத்தே பழக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி, தேர்தல் தேதி அறிவிப்புக்கே இன்னும் 3 மாதங்கள் இருக்கும் சூழலில், பேச்சுவார்த்தையை இப்போதே துவக்கியிருப்பதைக்கண்டு தி.மு.க.- காங்கிரஸ் தலைவர்களுக்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியம்தான்!
தேசிய அளவில் காங்கிரசுக்கு தி.மு.க. எப்படி தேவையோ, அதேபோல தமிழகத்தில் தி.மு.க.வுக்கு காங்கிரஸ் தேவையாக இருக்கிறது. அதனால் தான், 2004-ல் உருவான தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி (2014 நாடாளுமன்றத் தேர்தல்) இப்போதுவரை நீடித்துவருகிறது. இந்த கூட்டணியில் எவ்வித பிரச்சனையும் இல்லாமல்தான் இருந்துவந்தது காங்கிரஸ். அதாவது, தி.மு.க. தருகிற சீட்டு களையும், தொகுதிகளையும் பெற்றுக்கொண்டு கூட்டணியில் அமைதியாக காலம் தள்ளுவதுதான் அதன் முடிவாக இருந்தது. ஆனால் அந்த முடிவு, நடிகர் விஜய் கட்சி துவக்கி, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தோழமைக் கட்சிகளுக்கு ஆட்சியில் பங்கு தருவோம் என்று சொல்லும் வரையில்தான் காங்கிரசுக்கு இருந்தது. ஆட்சியில் பங்கு என விஜய் சொன்னதுமே அதிகாரக் கனவில் மிதக்கத் தொடங்கினர். தமிழக காங்கிரஸின் பெரும் பாலானோரின் நாடி நரம்பிலும் இந்த அதிகார போதை சுண்டி இழுத்தது.
தமிழக காங்கிரஸின் மேலிடப் பொறுப் பாளரும் ராகுல்காந்தியின் நெருங்கிய நண்பரும், கோவா மாநிலத்தின் சி.எம். வேட்பாளருமான கிரீஸ் சோடங்கர் தலைமையில் சத்தியமூர்த்தி பவனில் அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தினர். ஓவ்வொரு கூட்டத்திலும், தி.மு.க.விடம் கூடுதல் சீட் கேட்கவேண்டும்; கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக்கொள்ள வைக்க வேண்டும். இதை தி.மு.க. மறுத்தால், தி.மு.க.விடமிருந்து விலகி, விஜய்யின் த.வெ.க. கட்சியுடன் கூட்டணி வைக்கவேண்டும் என்கிற குரல்கள்தான் சத்தமாக கேட்டுக்கொண்டே இருந்தன. அரங்கத்தில் வெளிப்படுத்திய இந்த அபிலாஷைகளை பொதுவெளியிலும் வெளிப் படுத்தினர் காங்கிரசார்.
இதனையெல்லாம் ரசிக்காத தி.மு.க. தலைவர் ஸ்டாலின், ராகுல்காந்திக்கு சில மெசேஜ்களை அனுப்பினார். அத்துடன் கடந்த 18-ந்தேதி ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் டெல்லி சென்று ராகுலை சந்தித்தும் பேசினார் (இதனை ஏற்கனவே பதிவு செய்திருக்கிறோம்). இந்த நிலையில்தான், தி.மு.க.வுடன் தொகுதி உடன்பாடுகளைக் குறித்துப் பேச்சுவார்த்தை நடத்த, கிரீஸ் சோடங்கர் தலைமையில் செல்வப்பெருந்தகை, சூரஜ் ஹெக்டே, நிவேதித் ஆல்வா, ராஜேஸ்குமார் ஆகியோரைக் கொண்ட ஐவர் குழுவை அமைத்தார் ராகுல்காந்தி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2025/12/05/congress1-2025-12-05-10-26-50.jpg)
இந்த ஐவர் குழு குறித்து நாம் விசாரித்தபோது, "இந்த ஐவர் குழுவிலுள்ள கிரீஸ் சோடங்கரை மட்டும் அழைத்துப் பேசிய ராகுல், அவரிடம் சில யோசனைகளைத் தெரிவித்திருந்தார். அதாவது, முதலில் அதிகாரப்பூர்வமாக கட்சியினருடன் ஒன் டூ ஒன் கருத்துக் கேட்டு எனக்குத் தெரிவியுங்கள். பிறகு, தி.மு.க.விடம் என்ன பேசவேண்டும் என்பதைச் சொல்கிறேன் என சொல்லியிருந்தார். இப்படி அவர் சொன்னதற்கு ஒரு காரணம் இருக்கிறது.
அதாவது, தி.மு.க.வுடன் கூட்டணியை தொடரவேண்டும் எனவும், விஜய்யுடன் கூட்டணி வைக்கலாம் எனவும் இரு வேறு கருத்துக்கள் கட்சியின் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்களிடம் இருந்து வருகிறது. இந்த இரு வேறு கருத்துக்களையும் ராகுல்காந்தியிடம் புகுத்தி வைத்துள்ளனர்.
அதனால்தான் ஐவர் குழுவை அமைத்தார் ராகுல். அதன்படி இந்த ஐவர் குழு, தமிழக காங்கிரஸின் முன்னாள் தலைவர்கள், மாநில நிர்வாகிகள் உள்ளிட்ட பலரிடமும் கருத்துக் கேட்டது. அதிலும் இருவேறு கருத்துக்களை சொல்லியிருக்கிறார்கள். அதனை ராகுல்காந்தியிடம் தெரிவித்தார் கிரீஸ் ஜோடங்கர். இதனையடுத்தே, ஸ்டாலினை சந்தித்து விவாதியுங்கள் என ராகுல் உத்தரவிட்டார்''’என்கின்றனர் கதர்ச்சட்டையினர்.
இந்த பின்னணியில்தான், முதல்வர் ஸ்டாலினை 3-ந் தேதி சந்தித்தது, காங்கிரஸின் ஐவர் குழு. அந்த சந்திப்பில், ராகுல்காந்தி தம்மிடம் வலியுறுத்தியதை ஸ்டாலினிடம் விவரித்துள்ளார் கிரீஸ் சோடங்கர்.
இந்த சந்திப்பு குறித்து ஐவர் குழுவுக்கு நெருக்கமானவர்களிடம் நாம் விசாரித்தபோது, ‘’"2011-ல் காங்கிரசுக்கு 65 சீட்டுகளை ஒதுக்கினார் கலைஞர். அதேபோல 2016-ல் 45 சீட்டுகளை கொடுத்தார். இந்த இரண்டில் ஒன்றை ஸ்டாலின் தேர்ந்தெடுத்து ஒதுக்கீடு செய்ய அவரிடம் பேசுங்கள். பேச்சுவார்த்தையின் முடிவில், ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஒரு சீட் எனும் அளவுகோலில் 39 சீட் கட்டாயம் நமக்கு வேண்டும். ஒருவேளை 2021 தேர்தல் போல 25 சீட் தான் என தி.மு.க. தரப்பில் சொல்லப்பட்டால் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்துங் கள் என கிரீஸ் சோடங்கருக்கு அறிவுறுத்தியிருந்தார் ராகுல்காந்தி. அதன்படி, இந்த சந்திப்பில் ஸ்டாலினிடம் பேசப்பட்டிருக்கிறது. ஆனால், இதற்கெல்லாம் பிடிகொடுக்காத ஸ்டாலின், "தி.மு.க.வில் இன்னும் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படவில்லை. அமைக்கப்பட்டதும் விரிவாகப் பேசலாம்' என சொல்லி அனுப்பி வைத்துள்ளார்''’என்கிறார்கள்.
தி.மு.க. தரப்பில் நாம் பேசியபோது, "கூட்டணியை இயல்பாகவும் பிரச்சினை யில்லாமலும் கொண்டுபோக நினைக்கிறார் ஸ்டாலின். அதற்காக, த.வெ.க.வை முன்னிறுத்தி மிரட்டிப் பார்க்க காங்கிரஸ் நினைக்கக்கூடாது. கதர்ச்சட்டைகளின் செல்வாக்கு என்னவென்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அதனால், காங்கிரசின் கௌரவம் குறையாமல் ஸ்டாலின் பார்த்துக்கொள்வார். ஆனால், மிதமிஞ்சிய கற்பனையில், இந்த விவகாரத்தை காங்கிரஸ் அணுகினால், கூட்டணியை விட்டு வெளியேற்றவும் ஸ்டாலின் தயங்கமாட்டார். எதார்த்தத்தை புரிந்துகொள்வது காங்கிரசுக்கு நல்லது'' என்கிறார்கள் தி.மு.க. சீனியர்கள்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us