"ஹலோ தலைவரே, அனைத்து அரசியல் கட்சிகளிடமும் தேர்தல் தொடர்பான விறுவிறு ஏறியிருக்கும் நிலையில், காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான  திடலுக்கு, பா.ஜ.க.வைச் சேர்ந்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்றிருப்பது, பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யிருக்கு.''” 

Advertisment

"ஆமாம்பா, அந்தத் திடல் பற்றிய அத்தனை ஆவணங்களையும் திரட்டித் தனக்கு அனுப்பும்படி நிர்மலா சீதாராமன் சொல்லிவிட்டுப் போயிருக் கிறாராமே?''”

"பரபரப்புக்குக் காரணமே அதுதாங்க தலைவரே,  மூப்பனார் நினைவு நாளை யொட்டி, த.மா.கா. வாசனின் அழைப் பை ஏற்று, கடந்த 30ஆம் தேதி சென்னை வந்தார் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்.  காங்கிரஸ் கட்சிக்குச் சொந்தமான அந்தத் திடலில்தான் மூப்பனாரின் நினைவிடம் இருக்கு. அங்கு சென்று  நிர்மலா அஞ்சலி செலுத்தினார். அங்கு அஞ்சலிக் கூட்டமும் நடந்திருக்கு. திடலின் விஸ்தீரணத்தையும் மதிப்பையும் கேட்டுத் தெரிஞ் சிக்கிட்ட நிர்மலா, அதுகுறித்து விசாரித்திருக் கிறார். அப்போது, 200 கோடி மதிப்பிலான அந்தத் திடல் பற்றியும், அங்கே ஒரு வணிக வளாகம் கட்ட மார்வாடி ஒருவரிடம் அக்ரிமெண்ட் போடப் பட்டது குறித்தும், அந்த விவகாரம் சிக்கலாக இருப்பது குறித்தும் பா.ஜ.க. நிர்வாகிகள் அவரிடம் விளக்கியிருக்காங்க. எல்லாவற்றையும் ஆர்வமாகக் கேட்டுக்கொண்ட நிர்மலா, இது தொடர்பான  அத்தனை ஆவணங்களையும் திரட்டி, எனக்கு அனுப்பி வையுங்கள்னு சொல்லிவிட்டு, டெல்லிக்குக் கிளம்பிவிட்டாராம். இதையறிந்து ஷாக் ஆன காங்கிரஸ் தரப்பு, முதலில் நம் திடலில் உள்ள மூப்பனார் நினை விடத்தை அகற்ற ஏற்பாடு செய்யுங்கள் என்று, தங்கள் கட்சியின் டெல்லித் தலைமைக்குத்  தகவல் அனுப்பியிருக்காங்களாம்.''”

"அது சரிப்பா, அந்த மூப்பனார் அஞ்சலிக் கூட்டத்தில் ஏகப்பட்ட களேபரங்கள் நடந்திருக்கே?''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, அந்த காங்கிரஸ் திடலில் உள்ள மூப்பனார் நினைவிடத்தி லேயே, அஞ்சலிக் கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தார் ஜி.கே.வாசன். இந்த நிகழ்ச்சிக்கு அ.தி.மு.க. எடப்பாடி, பா.ஜ.க. நயினார், பா.ஜ.க.வின் மாஜி மாநில தலைவர்னு பலரையும் அவர் அழைத்திருந்தார்.  கூட்டமேடையில் எடப்பாடிக்கும், அவருக்குப் பிடிக்காத அந்த பா.ஜ.க. மாஜிக்கும், அருகருகே சீட் இருக்குமாறு வாசன் பார்த்துக்கொண்டார். காரணம், அவர்களுக்குள் ஒரு நல்லிணக்கம் ஏற்படணும்னு அவர் நினைச்சாராம். தன் பக்கத்து சீட்டில் அந்த பா.ஜ.க. மாஜி உட்கார்ந்ததைப் பார்த்து, எடப்பாடி ஏகத்துக்கும் டென்சனாகிவிட்டாராம். இருந்தும் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தன்னால் சர்ச்சை வேண்டாம் என்று, அவர் தன்னை இயல்பாகக் காட்டிக்கொண்டாராம்.  நிகழ்ச்சி முடிந்தபின், தன் சகாக்களிடம் பேசிய எடப்பாடி, "இந்த கூட்டத்துக்கு அந்த ஆள் வருவது தெரிந்திருந்தால் நான் வந்திருக்கவே மாட்டேன். நிர்மலாவும் நயினாரும் வருவதாகத்தான் என்னிடம் வாசன் சொன்னார். அவரது பேச்சை நம்பிவிட்டேன்'’ என்று ஏகத்துக்கும் எரிச்சலை வெளிப்படுத்தி யிருக்கிறார்.''”

"சரிப்பா, பீகாரில் தமிழக முதல்வர் ஸ்டாலின் ஸ்கோர் செய்ததால் ஏற்பட்ட பா.ஜ.க. தரப்பின் வயிற்றெரிச்சல், இன்னும் தீரலை போலிருக்கே?''”

"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலின் பீகாரில் ராகுல்  காந்தி நடத்திய வாக்குத் திருட்டுக்கு எதிரான பேரணியின் நிறைவு விழாவில்  கலந்துகொண்டார். அதன் பிறகே, வெளிநாட்டுப் பயணத்துக்கு சென்றிருக்கிறார்.  இருந்தும் பீகாரில் ஒன்றிய அரசின் ஓட்டு மோசடிகள் குறித்து, ஸ்டாலின் அதிரடியாகப் பேசிய கருத்துக்களை பா.ஜ.க. தரப்பால் இன்னும் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லையாம்.  ஸ்டாலின் பீகாருக்குக் கிளம்பும்போதே ,மத்திய மந்திரி எல்.முருகன், "அவர் அங்கேபோய் இந்தியில் பேசுவாரா? இங்லீஷில் பேசுவாரா?' என கிண்டலாகக் கேள்வி எழுப்பினார். ஆனால், யாரும் எதிர்பார்க்காத வண்ணம் பீகாரில் போய் தமிழில் பேசிய ஸ்டாலின், தான் பேசியதை மிகச்சரியாக பீகாரிகள் புரிந்துகொள்ளும் வண்ணம், அதை மொழிபெயர்க்க, ஒரு மொழி பெயர்ப்பாளரையும் கூடவே அழைத்துச் சென்றிருந்தார். அங்கே அவர் எழுப்பிய கேள்வி கள், பீகார் மக்களது மனதில் ஆழப் பதிந்தது மட்டுமல்லாமல், பீகாரில் ஒரு தமிழ் ஹீரோ என ஸ்டாலின் சூப்ப ரான பாராட்டை யும் பெற்றார். இப்போது அவற்றை மறக்கடிக்க, என்ன செய்யலாம் என்று  தலையைப் பிய்த்துக்கொண்டு இருக்கிறார்கள் பா.ஜ.க.வினர்.''” 

Advertisment

"அது கிடக்கட்டும்பா, பா.ம.க. நிறுவனர் ராமதாஸுக்கும் இரண்டாவது மனைவி சுசீலாவுக்கும் நடந்த  50 ஆம் ஆண்டு திருமண விழாவின் புகைப்படம், யார் மூலம் கசிந்ததாம்?''”

rang2

"மாமல்லபுரம் ஓட்டல் ஒன்றில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அந்த 50 ஆம் ஆண்டு மண விழாவை, தனக்கு வேண்டப்பட்டவர்களுடன் மட்டும் கொண்டாடியிருக்கிறார் ராமதாஸ். அங்கு வந்தவர்களிடம், யாரும் செல்போன்கள் மூலமோ, கேமராக்கள் மூலமோ  படமெடுக்கக் கூடாது என்று கொஞ்சம் கறார் தொனியிலேயே கேட்டுக்கொள்ளப்பட்டிருக்கிறார்கள். அப்படி இருந்தும்,  விழா முடியும் தருணத்தில், ஜி.கே. மணிக்கு நெருக்கமான பெண் உறவினர் ஒருவர் தனது செல்போனில் அந்த மணவிழாக் காட்சிகளைப் படமெடுக்க, அந்தப் படம், தர்மபுரி, கிருஷ்ணகிரி பகுதியிலிருந்து மணிக்குத் தெரிந்தே சமூக ஊடகங்களில் அப்லோடு செய்யப்பட்டிருக்கிறது. ராமதாஸ் இத்தனை வருடங்களாக வெளிப்படுத்தாத ஒரு விஷயத்தை, அந்தப் படத்தின் மூலம் பகிரங்கமாக்கி, அவரை டேமேஜ் செய்யும்  முயற்சியாகவே இது நடந்திருக்கிறது.  தனது ஆதாயத்துக்காக தந்தையையே காட்டிக் கொடுக்கக்கூடியவரான அன்புமணி தரப்புதான் இந்தப் படத்தை அம்பலமாக்கி இருக்கிறது என்கிறார்கள் தைலாபுர ஆதரவாளர்கள்.''”

"நடிகர் விஜய் ரசிகர்களே அவர் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள் என்கிறார்களே?''”

"உண்மைதாங்க தலைவரே, சர்க்கார் படத்தில் அமெரிக்காவிலிருந்து தமிழகத்துக்கு ஓட்டுப் போட வர்ற விஜய், தனது ஓட்டை இன்னொருவர் போட்டதற்கு எதிராக சட்டப் போராட்டம் நடத்தப்போய், ஆட்சி அதிகாரத்தி லிருக்கும் கும்பலுடன் மோத வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுவார். இதுதான் அந்தப் படத்தின் மையக் கரு. அந்தப் படத்தில் வருவதைவிட,  படுமோசமான வாக்குத் திருட்டு விவகாரத்தை, காங்கிரஸ்

rang1

தலைவர் ராகுல்காந்தி பட்டவர்த்தனமாக அம்பலப்படுத்தியதோடு, சட்டப் போராட்டம் மூலம், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக பம்பரமாய் சுழன்று வருகிறார். அதற்குத் துணையாய் தமிழக முதல்வரும் இருந்திருக்கிறார். அப்படியிருந்தும் இந்த விவகாரத்தில் த.வெ.க. தலைவர் விஜய் இதுவரைக்கும் எந்த ஒரு  கருத்தையும் தெரிவிக்கவில்லை. லட்ச லட்சமாக வாக்காளர்கள் நீக்கப்படுவது பற்றியோ, சேர்க்கப்படுவது பற்றியோ, தன் மதுரை மாநாட்டிலும்  அவர் ஒரு வார்த்தைகூடப் பேசலை. இந்த விவகாரத்தை வச்சிப் படமெடுத்த நம்ம தலைவர், இதைப்பத்தி ரெண்டு வரி பேசவாவது செஞ்சிருக்கலாமே,…ஏன் இப்படி சைலண்டா இருக்கார்? படத்துல மட்டும்தான் புரட்சி வெங்காயம் எல்லாம்?னு அவரது ரசிகர்களே ஆதங்கத்தோட கேள்வி கேட்க ஆரம்பிச்சிட்டாங்க.''

"விளையாட்டுப் போட்டியில் பங்கேற்க முட்டுக்கட்டை போடும் பள்ளி பற்றி, அரசல் புரசலா ஒரு தகவல் வருதே?''”

"ஆமாங்க தலைவரே, தமிழக பள்ளி மாணவ-மாணவி கள் மத்தியில்  விளையாட்டுத் திறனையும் வளர்க்க பல்வேறு முயற்சிகளை எடுத்துவருகிறார் துணை முதல்வரும் விளை யாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின். ஆனால் சில பள்ளிகள் இதற்கு எப்படியெல்லாம் முட்டுக்கட்டை போடுகின்றன என்பதற்கு ஒரு உதாரண சம்பவத்தைப் பார்ப்போம். தமிழகம் முழுவதும், முதலமைச்சர் கோப்பை 2025-க்கான விளையாட்டுப் போட்டிகளை அரசு நடத்திவருகிறது. அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் 6ஆம் தேதி இந்தப் போட்டி நடக்க இருக்கிறது. இதில் சிலம்பப் போட்டியில் கலந்துகொள்ள மிக ஆர்வமாக இருந்தார் ஆரைகுளம் டி.ஐ.எம்.இ. தனியார் மெட்ரிகுலேசன் பள்ளியின் 10-ஆம் வகுப்பு மாணவரான இக்லாஸ்.''”

"என்ன நடந்துச்சு?''”

"ஏற்கனவே பல பரிசுகளையும் இவர் வாங்கியிருக்கிறார். எனவே, இந்த போட்டியில் கலந்துகொள்ள இக்லாஸ் ஆன் லைன் மூலம் பதிவு செய்திருக்கிறார். ஆனால் இவருக்கு அனுமதிக் கடிதம் தரமறுத்திருக்கிறது அவரது பள்ளி. அவரது குடும்பத்தினர் முறையிட்ட பிறகு, மிகவும் தாமதமாக அனுமதிக் கடிதத்தை அந்தப் பள்ளி கொடுத்திருக்கிறது. அதற்குள் பதிவுநேரம் முடிந்துவிட்டதாம். எனவே, உரிய நேரத்தில் அனுமதிக் கடிதம் தராமல் இழுத்தடித்த பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும், 6ஆம் தேதி நடக்கும் விளையாட்டுப் போட்டியில் இக்லாஸை அனுமதிக்க வேண்டியும் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை கடிதம் கொடுத்திருக் கிறார் இக்லாஸின் தந்தை மைதீன் பிச்சை. இக்லாஸுக்கு அனுமதி கிடைக்குமா என்று, அவரது சொந்த கிராமமான மேலப்பாளையமே கவலையோடு காத்திருக்கிறது.''”

"நெல்லை காங்கிரஸ் மாநாட்டைத் தடபுடலாக நடத்திக்காட்ட காங்கிரஸ் கட்சி வரிந்துகட்டி இறங்கியிருக்கிறதே?''”rang3

’"தமிழக காங்கிரஸ் கட்சி ’வாக்குத் திருட்டைத் தடுப்போம்; வாக்கு அதிகாரத்தைப் பெற்றுக் கொடுப்போம்’ என்கிற முழக்கத்துடன் 7ஆம் தேதி பெரிய மாநாட்டை நெல்லையில் நடத்தும் மும்முரத்தில் இருக்கிறது. இந்த மாநாட்டிற்கு  பிரியங்கா வரமறுத்த நிலையில், ராகுல்காந்திக்கு நெருங்கிய நண்பரும், அகில இந்திய காங்கிரசின் ஊடகப்பிரிவு தலைவருமான பவன்கேராவை வைத்து இந்த மாநாடு நடத்தப்படவுள்ளது. இதற்கான பந்தக்கால் நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப் பெருந்தகை, ’"நெல்லையில் நடக்கும் மாநாடு ஒரு திருப்புமுனையை ஏற்படுத் தும். இதில் ஏறத்தாழ 1 லட்சம் தொண்டர்கள் பங்கேற் பார்கள்'’என்று காலரைத் தூக்கி விட்டுக்கொண்டார். இந்த மாநாட்டுக்கான செலவு களை பார்த்துக்கங்கன்னு அக்கட்சியின் எம்.பி.க் களான ராபர்ட்புரூஸ், விஜய்வசந்த், தென்மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் 6 பேர்,  மற்றும் கிழக்கு மாவட்டப் பொருளாளர் களக்காடு பால்ராஜ்  ஆகியோரிடம் ஒப்படைத்திருக்கிறார்களாம்.''

"சென்னையில் காவலர் மீது தாக்குதல் நடத் திய பா.ம.க. வழக்கறிஞரை கைது செஞ்சிருக்காங் களே...''

"ஆமாங்க தலைவரே... சென்னை, முகப்பேரில் அடுக்குமாடி குடியிருப்பில், அங்கு வசிப்பவர்களுக்கும், குடியிருப்போர் சங்க நிர்வாகிகளுக்குமிடையே கடந்த 3ஆம் தேதி நள்ளிரவில் சண்டை நடந்துள்ளது. அப்போது அவ்வழியே ரோந்து சென்ற நொளம்பூர்  காவல் நிலைய ரோந்து காவலர் பாலாஜி, சண்டையை விலக்கிவிட முயற்சித்திருக்கிறார். அப்போது அவர்மீது, ஓய்வுபெற்ற இன்ஸ்பெக்டர் என்றும் வழக்கறிஞர் என்றும் சொல்லிக்கொண்ட இருவர் தாக்குதல் நடத்தினர். இதில் பா.ம.க.வை சேர்ந்த வழக்கறிஞர் வெங்கடேசன் என்பவர், ரோந்து காவலரின் கன்னத்தில் அறைந்தார். இச்சம்பவத்தில், வழக்குப் பதிவு செய்த நொளம்பூர் போலீசார், வெங்கடேசனை கைது செஞ்சிருக்காங்க.''’

"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியத் தகவலைப் பகிர்ந்துக்கறேன்.  நெல்லை காங்கிரஸ் மாநாட்டுச் செலவைக் காரணம் காட்டி, தொகுதியின் காங்கிரஸ் எம்.பி.யான ராபர்ட் புரூஸ், செல்வாக்கான புள்ளிகளிடம் பல கோடிகளை வசூலித்திருக்கி றாராம். எனினும் அதையெல்லாம் அவர் பர்சனல் கணக்கில் வைத்துக்கொண்டு விட்டாராம். ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலின்போது, தி.மு.க. அமைச்சர் ஒருவரிடம் 5 ’சி’யைக் கடனாக வாங்கிய அவர், இன்னும் டிமிக்கி கொடுத்து, அவரையே தவிக்கவைத்து வருகிறாராம். ராபர்ட்டின் இந்தத் தில்லாலங்கடி வேலைகள் குறித்து காங்கிரஸின் டெல்லித் தலைமைக்கு, இங்கிருக்கும் நிர்வாகிகள் புகார் அனுப்பி வருகிறார்களாம்.''’

_____________
இறுதிச் சுற்று!

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பெரியார்!

rangbox

லண்டன் சென்றுள்ள தமிழ் நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் தந்தை பெரியாரின் திருவுருவப்படத்தை 4-9-2025 அன்று  திறந்துவைத்தார். பெரியாரின் படத்தை கலை இயக்குநர் தோட்டா தரணி வரைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் திருவுருவப் படத்தை திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின், அதன்பின்னர்,"சுயமரியாதை இயக்கம், அதன் மரபுகள்' எனும் தலைப்பில் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாநாட்டில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்கள் மத்தியில் சிறப்புரையாற்றினார். சுயமரியாதை இயக்கத்தின் நூறாண்டு வெற்றிவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்ற நிலையில்... தற்போது  நாடு கடந்தும் கொண்டாடப்படுவது குறிப்பிடத்தக்கதாகும்!