Advertisment

காங்கிரஸ் தலைவர் சித்திரவதை படுகொலை! உயிரைப் பறித்த அரசியல் !

dd

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக் குமாரின் மர்ம மரணம் அரசியல் ரீதியாக வும், சட்டம் ஒழுங்கு ரீதியாகவும் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக் கிறது. அவருடைய மரண வழக்கை 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்துவரும் நெல்லை மாவட்ட காவல்துறையினர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் புலனாய்வினை வேகப்படுத்தியிருக்கிறார்கள்.

Advertisment

கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயக்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது செல்போனுக்கு ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரீன் பலமுறை தொடர்புகொண்டும் லைன் போகவில்லை. அவரது குடும்பத்தினர் பலரும் முயற்சித்த போதும், நாட் ரீச்சபிள் என்றே வந்துள்ளது. இதனால் பதட்டமானது ஜெயக்குமாரின் குடும்பம்.

Advertisment

இதனையடுத்து தனது தந்தையை காணவில்லை என உவரி காவல் நிலையத்தில் 3-ந்தேதி புகார் கொடுக்கிறார் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா. வழக்குப் பதிவு செய்யப்படு கிறது. அதேசமயம், மரண வாக்குமூலம் எனும் பெயரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் ஒன்று ரிலீஸாக, ஏகத்துக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

6 நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளதுடன், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மேற்படி நபர்கள்தான் பொறுப்பு என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது மரண வாக்குமூலம் கடித்ததில் தெரிவித்திருக் கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் இந்த கடிதம் ரிலீசாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டுக்கு பின்புறமுள்ள தென்னந் தோப்பில் எரிந்து கரிக் கட்டையான நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜெயக்குமார் தனது மரண வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை நாம் தொடர்புகொண்டபோது, யாருமே நமது லைனை அட்டெண்ட்

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக் குமாரின் மர்ம மரணம் அரசியல் ரீதியாக வும், சட்டம் ஒழுங்கு ரீதியாகவும் அதிர்ச்சி யையும் பரபரப்பையும் ஏற்படுத்தியிருக் கிறது. அவருடைய மரண வழக்கை 7 தனிப்படைகள் அமைத்து விசாரித்துவரும் நெல்லை மாவட்ட காவல்துறையினர், கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் புலனாய்வினை வேகப்படுத்தியிருக்கிறார்கள்.

Advertisment

கடந்த 2-ந் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற ஜெயக்குமார் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனையடுத்து அவரது செல்போனுக்கு ஜெயக்குமாரின் மகன் கருத்தையா ஜாப்ரீன் பலமுறை தொடர்புகொண்டும் லைன் போகவில்லை. அவரது குடும்பத்தினர் பலரும் முயற்சித்த போதும், நாட் ரீச்சபிள் என்றே வந்துள்ளது. இதனால் பதட்டமானது ஜெயக்குமாரின் குடும்பம்.

Advertisment

இதனையடுத்து தனது தந்தையை காணவில்லை என உவரி காவல் நிலையத்தில் 3-ந்தேதி புகார் கொடுக்கிறார் ஜெயக்குமாரின் மகன் கருத்தையா. வழக்குப் பதிவு செய்யப்படு கிறது. அதேசமயம், மரண வாக்குமூலம் எனும் பெயரில், மாவட்ட எஸ்.பி. சிலம்பரசனுக்கு ஜெயக்குமார் எழுதிய புகார் கடிதம் ஒன்று ரிலீஸாக, ஏகத்துக்கும் அதிர்ச்சியைத் தந்தது.

6 நபர்களின் பெயரை குறிப்பிட்டுள்ளதுடன், எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் மேற்படி நபர்கள்தான் பொறுப்பு என்றும், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படியும் கேட்டுக்கொள்கிறேன் என்று தனது மரண வாக்குமூலம் கடித்ததில் தெரிவித்திருக் கிறார் ஜெயக்குமார்.

ஜெயக்குமாரின் இந்த கடிதம் ரிலீசாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், அவரது வீட்டுக்கு பின்புறமுள்ள தென்னந் தோப்பில் எரிந்து கரிக் கட்டையான நிலையில் ஜெயக்குமாரின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

ஜெயக்குமார் தனது மரண வாக்குமூல கடிதத்தில் குறிப்பிட்டுள்ள நபர்களை நாம் தொடர்புகொண்டபோது, யாருமே நமது லைனை அட்டெண்ட் பண்ணவில்லை.

cc

ஜெயக்குமாரின் அண்ணன் செல்வ ராஜிடம் நாம் தொடர்புகொண்டு பேசியபோது, "மரண வாக்குமூலத்தில் என் தம்பி சொல்லியிருக்கும் விசயம் எதுவும் எங்களுக்குத் தெரியாது. குடும்பத்தினரிடமும் அவர் சொல்லவில்லை. எங்களிடம் சொல்லியிருந்தால் பிரச்சனையை சரி செய்திருக்க முயற்சி எடுத்திருக்க முடியும். பிசினஸ் ரீதியாக, அரசியல் ரீதியாக அவருக்கு எதிரிகள் இருக்கலாம்... இல்லை என சொல்லிட முடியாது. உடல் கண்டெடுக்கப்பட்டதை கவனிக்கும்போது தற்கொலைக்கு வாய்ப்பிருப்பதாக தெரியவில்லை. படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றுதான் நாங்கள் நினைக்கிறோம்.

அதாவது, ஜெயக்குமார் பயன்படுத்தி வந்த இனோவா கார் மட்டும் திடீரென இரவு வீட்டுக்கு வந்து நிறுத்தப்பட்டிருக்கிறது. காலையில்தான் கார் நிற்பதை தம்பி குடும்பத்தினர் கவனித்திருக்கிறார் கள். ஆனால், அவர் வீட்டில் இல்லை. காரை நிறுத்திவிட்டு வெளியே சென்றிருக்கலாம் என நினைத்து, ஜெயக்குமாரை தொடர்புகொண்ட போது அவரது லைன் கிடைக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்துதான் போலீஸில் புகார் கொடுக்கப்பட்டது. கார் எப்படி வந்தது? யார் ஓட்டி வந்து வீட்டில் நிறுத்தினார்கள்? என்று கூட தெரியவில்லை. இதையெல்லாம் போலீசிடம் சொல்லியிருக்கிறோம்.

அவரது கை, கால்கள் எலெக்ட்ரிக் வயர்களால் கட்டப்பட்டிருந்தது. அவரது வயிற்றுப் பகுதியில் இரும்புத் தகடுகள் இறுக்கி கட்டப்பட்டிருந்திருக்கிறது. என்னன்னு தெரியாத சில பொருட்கள் வாயில் திணிக்கப்பட்டிருந்தன.

இதையெல்லாம் வைத்து பார்க்கும்போது, கரண்ட் ஷாக் கொடுத்து, பிறகு எரித்து கொலை செய்திருப்பார்களோ என சந்தேகம் வருகிறது. அதுவும் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தில் இந்த சம்பவம் நடந்திருக்க வாய்ப்பில்லை. வேறு எங்கேயோ சம்பவத்தை நடத்திவிட்டு இங்கு (வீட் டுக்கு பின்புறம் உள்ள தோட்டத்தில்) கொண்டு வந்து உடலை போட்டுவிட்டு போயிருக்கிறார்கள் என்றுதான் நாங்கள் சந்தேகப்படுகிறோம்.

இதற்கு காரணமானவர்களை போலீசார் விரைந்து கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும். இப்போது வரை போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் எங்களுக்கு கொடுக்கப்படவில்லை''’என்கிறார் செல்வராஜ்.

ஜெயக்குமாரின் மரணம் குறித்து காவல்துறை அதிகாரிகள் தரப்பில் நாம் விசாரித்தபோது, "உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்தை ஆராய்ந்தபோதும், உடல் எரிக்கப்பட்ட நிலையை கவனித்தபோதும் கொலையாக இருக்கலாம் என சந்தேகிக்கும்படி யான விபரங்களே கிடைக்கின்றன. ஆனால், மோப்ப நாயை வரவழைத்து பார்த்தபோது, தோட்டத்தைத் தாண்டி மோப்ப நாய் எங்கும் செல்லவில்லை. அதேபோல, அவரது குடும்பத்தின ருக்கு எழுதியதாக இரண்டாவதாக ஒரு கடிதம் தற்போது கிடைத்துள்ளது. முதல் கடிதம் போலீசுக்கு கிடைக்கும் முன்பு மீடியாக்களுக்கு போனது. இரண்டாவது கடிதமும் அப்படியே நடக்கிறது. மீடியாக்களுக்கு அனுப்பியது யார்? என்கிற கோணத்திலும் எங்கள் விசாரணை நடக்கிறது. அந்த 2 கடிதங்களும் ஜெயக்குமார் எழுதியவைதானா? உண்மையான கடிதங்கள் தானா? என்பதை தடய அறிவியல் துறையினர் ஆராய்ந்துவருகிறார்கள். அதேபோல, தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் சொல்லியிருக்கும் நபர்களையும் விசாரணை வளையத்துக்குள் கொண்டு வந்திருக்கிறோம். சட்டப்படி அவர்கள் விசாரிக்கப்படுவார்கள்.

காண்ட்ராக்ட் தொழில் மற்றும் ரியல் எஸ்டேட் தொழிலில் ஜெயக்குமார் ஈடுபட்டிருந்ததால் கொடுக்கல் -வாங்கல் பிசினஸ் டீலிங் குறித்தும் புலனாய்வு செய்யப்படுகிறது. போஸ்ட்மார்ட்டத்தின் முழுமையான ரிப்போர்ட் வரவில்லை. திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை வந்துவிடும். அதேசமயம், போஸ்ட்மார்ட்டத்தின் முதற்கட்டத் தகவல், மர்ம மரணம் என்பதாகவும், அவர் துன்புறுத்தப்பட்டிருக்கிறார் என்பதாகவும், வாயில் துணிகள் திணிக்கப்பட்டிருந்ததாகவும் ஓரலாக கொடுக்கப்பட்டிருக்கிறது. முழுமையான ரிப்போர்ட் வந்த பிறகுதான் இதன் மர்ம முடிச்சுகள் அவிழும்.

எல்லாவற்றுக்கும் மேலாக, ஜெயக்குமார் பயன்படுத்திய செல்போன் இதுவரை கண்டு பிடிக்கப்படவில்லை. ஆனால், கடந்த சில மாதங்களாக அவருக்கு யார் யார் போன் செய் தார்கள்? இவர் யார் யாருக்கெல்லாம் போன் செய்தார்? கடந்த ஒரு வாரமாக அவரது செல் போன் சிக்னல் எங்கெல்லாம் இருந்தது? என்பதை தீவிரமாக தனிப்படை போலீசார் துப்பறிந்து வருகின்றனர். அந்த சிக்னல் விபரங்கள் மூலம் சில உண்மைகள் தெரியவரும்''” என்கின்றன போலீஸ் புலனாய்வு வட்டாரங்கள்.

போஸ்ட்மார்ட்டம் முடிந்ததும் ஜெயக்குமாரின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. சர்ச்சில் வைத்து சில சம்பிரதாயங்கள் முடிந்ததும் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

காங்கிரஸ் மூத்த நிர்வாகிகளிடம் நாம் விசாரித்தபோது, "அரசியல் ரீதியாக எடுத்துக் கொண்டால் நெல்லை மாவட்டத்தில் சொந்த கட்சியில் எம்.எல்.ஏ. ரூபி மனோகரனிடம் தான் ஜெயக்குமாருக்கு நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. மாவட்ட தலைவரான ஜெயக்குமாரை ரூபி மனோகரன் மதிப்பதே இல்லை. நாங்குநேரியில் ஜெயக்குமாரிடம் ஆலோசிக்காமலே பலரையும் மாற்றினார்.

இதனால் ஏகப்பட்ட தகராறு நடந்தது. கடந்த ஆண்டு சத்தியமூர்த்திபவனில் ரூபி மனோகரனின் அரசியல் அராஜகத்தை எதிர்த்து ஜெயக்குமார் உள்பட காங்கிரஸ் தலைவர்கள் பலரும் போராட்டம் நடத்தினார்கள். அப்போது ரூபி மனோகரனின் ஆட்களுக்கும் மாவட்ட தலைவர்களுக்கும் மோதல் வெடித்தது.

இதனையடுத்து, ரூபிமனோகரனுக்கு எதிராக கொடுக்கப்பட்ட புகாரில், நடவடிக்கை எடுத்த காங்கிரசின் ஒழுங்கு நடவடிக்கை குழு ரூபி மனோகரனை கண்டித்தது. சீரியசாக நடவடிக்கை எடுத்தபோது கட்சியின் மே-ட பொறுப்பாளராக அப்போதிருந்த தினேஷ்குண்டுராவை கைக்குள் வைத்துக்கொண்டு தனக்கு எதிரான நடவடிக் கையை தடுத்து நிறுத்தினார் ரூபி.

நாடாளுமன்றத் தேர்தலில் தனது மகனுக்கு சீட் வாங்கிட எல்லாவற்றையும் செய்து வைத்திருந்தார் ரூபி. இதற்காக, தனது சொத்தை, மார்க்கெட் விலையை விட குறைந்த விலைக்கு விற்று சில கோடிகளை திரட்டி வைத்திருந்தார். ஆனால், ஜெயக்குமாரின் தலையீட்டில் ரூபியின் மகனுக்கு சீட் கிடைக்கவில்லை. இதனால் ஜெயக்குமார் மீது ரூபி மனோகரனுக்கு கோபம் இருந்தது. அதேபோல, பில்டர்ஸ் நிறுவனம் நடத்தி வரும் ரூபிக்கு, கட்டுமானத் தொழில் ரீதியாக ஜெயக்குமாரிடம் பிரச்சனை இருந்து வந்துள்ளது. அதனால் ரூபி மீது ஜெயக்குமார் சொல்லி யிருக்கும் குற்றச்சாட்டுகளில் உண்மை இருப்ப தாகத்தான் தெரிகிறது.

ஜெயக்குமார் உடல் கண்டெடுக்கப் பட்டதை பார்க்கும்போது அவர் கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றுதான் நாங்களும் சந்தேகிக்கிறோம். பொதுவாகவே, நெல்லை மாவட்ட அரசியல்வாதி களுக்கு மும்பையை சேர்ந்த கிரிமினல்களுடன் நிறைய தொடர்பு இருக்கிறது. இது காலம் காலமாக இருந்துவரும் உறவு என்றேகூட சொல்லலாம். அந்தவகையில், ஜெயக்குமாரின் மரணத்தில் மும்பை கூலிப்படையினர் சம்பந்தப்பட்டிருக்கலாம். விரைவில் இந்த மர்மம் விலகும்''’என்று விவரிக்கிறது காங்கிரஸ் மேலிட வட்டாரங் கள்.

இதுகுறித்து கருத்தறிய ரூபிமனோகரனை பலமுறை நாம் தொடர்புகொண்டும் நமது லைனை அட்டெண்ட் பண்ணவில்லை. ஆனால், ஜெயக் குமாரின் கடிதத்தில் அவரது பெயர் குறிப்பிடப் பட்டிருப்பதால் இது குறித்து விளக்கமளித்திருக் கும் அவர், "என் மீதான குற்றச்சாட்டுக்கும் எனக்கும் சம்பந்தமில்லை. கொடுக்கல் -வாங்கல் எதுவும் இல்லை. ஜெயக்குமாரும் நானும் நல்ல நண்பர்கள்'’என்று சொல்கிறார்.

இந்த நிலையில், ஜெயக்குமாரின் மரணம் தொழில்ரீதியான அரசியல் படுகொலை என்கிற ரீதியில் போலீஸின் புலனாய்வு சென்றுகொண்டி ருப்பதால், அதனை அமுக்கி வாசிக்க அரசியல் ரீதியாக முயற்சிப்பதாகவும் தகவல்கள் கசிகின்றன. திருச்சி ராமஜெயம் படுகொலை போல தமிழக காவல்துறைக்கு தலைவலியை கொடுக்கக் காத்திருக்கிறது ஜெயக்குமாரின் மரணம்!

nkn080524
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe