"ஹலோ தலைவரே, பரபரப்பான அரசியல் களேபரங்களுக்கு நடுவே முதல்வர் ஸ்டாலின் வெளிநாட்டுப் பயணத்துக்குத் தயாராகிவருகிறார்.''”

"ஆமாம்பா, தமிழகத்துக்கு முதலீடு களைத் திரட்டத்தானே அவர் கிளம்பறார்!”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பல்வேறு துறைகளைச் சேர்ந்த வெளிநாட்டு நிறுவனங் களின் முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதற்காக இந்த மாதம் 31ஆம் தேதி  பிரிட்டன், ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர்  ஸ்டாலின் பயணம் மேற்கொள்கிறார்.  அவ ரோடு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உட்பட, முக்கிய உயரதிகாரிகளும் செல்கிறார்கள். இந்த முறை, 50 ஆயிரம் கோடி மதிப்பிலான முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களைப் போடவேண்டும் என்கிற இலக்கில் இந்தப் பயணம் திட்டமிடப்பட்டி ருக்கிறது. எத்தனை கோடி முதலீடுகள் தமிழகத்திற்கு வருகிறது என்பது ஸ்டாலின்  திரும்பிவரும் போது தான் தெரிய வரும் என்கிறார்கள் தொழில்துறையினர். இதற்கிடையே, இந்தியாவின் ஒட்டுமொத்த தொழில் வளர்ச்சி முக்கியம் என்பதால், அரசியல்ரீதியாக கருத்து வேறுபாடுகள் இருப்பினும், பிரதமர் மோடி எடுக்கும் முடிவுகளுக்குப் பக்கபலமாக நாங்கள் இருக் கிறோம் என்று டி.ஆர்.பி.ராஜா கூறியது, தொழில் துறை மத்தியில் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.''” 

"இந்த வெளிநாட்டுப் பயணத்திற்கு முன்பாக  ஸ்டாலின் பீகார்  மாநிலத்திற்கும் செல்ல இருக்கிறாரே?''”

rang1

Advertisment

"பீகார் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அந்த மாநிலத் தில் நடந்துள்ள வாக்குத் திருட்டு, தேசிய அளவில் பெரும் அதிர்ச்சி யை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில், "வாக்காளர் உரிமை' என்ற பெயரில் பீகாரில் யாத்திரை மேற்கொண்டு வருகிறார் ராகுல். அது 27ஆம் தேதி நிறைவு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பும் விடுக்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவே பீகார் செல்கிறார் ஸ்டாலின். அப்போது, வாக்கு திருட்டுக்கு எதிராகவும், தேர்தல் ஆணையத்தைக் கண்டித்தும் அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக் கவும்  திட்டம் தீட்டப்பட்டுள்ளதாம். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள இருக்கும் சி.பி.ஐ. (எம்.எல்.) கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அங்கு ஸ்டாலினைச் சந்திக்கும்போது,  தூய்மைப் பணி யாளர்கள் விவகாரம் குறித்து அவரிடம் விவா திக்க விருக்கிறாராம். ஏற்கனவே, தூய்மைப் பணி யாளர்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் குறித்து கடந்த 17ஆம் தேதி அவர் ஸ்டாலினுக்குக் கடிதம் எழுதியிருந்தார். இந்த சந்திப்பின்போது, தூய்மைப் பணியாளர் களைத் தனியாரிடம் ஒப்படைப்பதை ரத்து செய்யுமாறும்  அவர்களை மாநகராட்சிப் பணியாளர்களாக நிரந்தரப் படுத்துமாறும் பட்டாச்சார்யா வலியுறுத்தவிருக்கிறாராம்.''”

"என்னப்பா தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் பற்றி ஒரு செய்தி பரவிக்கிட்டு இருக்கே?''”

"நடிகர் விஜய், காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைக்கிறார். இதற்காக டெல்லியில் இருந்து அக்கட்சியின் முக்கியப் பிரமுகர் ஒருவர், ரகசியமாக சென்னை வந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார். காங்கிரஸுக்கு  71 சீட்டுகளும் துணை முதல்வர் பதவியும் தருவதாக  நடிகர் விஜய் உறுதியளித்திருக்கிறார். இப்படியாக ஒரு செய்தி சமூக ஊடகங்களில் பரவி, அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியது. கடைசியில் இது டுபாக்கூர் தகவல் என்றும், தி.மு.க. கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ் தரப்பை உசுப்பிவிடுவதற்காகவும் தங்கள் பக்கம் இழுக்க முடியுமா என்று பார்ப்பதற்காகவும், விஜய்யுடன் இருக்கும் வியூக அமைப்பாளர் ஜான் ஆரோக்கியசாமி கிளப்பிய பூதம்தான் இது என்பது  தெரியவந்தது. இந்தத் தகவல் பரவியதும், காங் கிரஸின் முக்கியத் தலைவர்கள், உடனடியாக தி.மு.க. தரப்பை தொடர்புகொண்டு, நீங்கள் யோசிக்கவேண்டாம், இது சுத்த ஹம்பக்’ என்று நிலைமையை விளக்கியிருக்கிறார்கள்.''”

Advertisment

"அதெல்லாம் இருக்கட்டும்பா, பிரியங்காகாந்தி பங்கேற்கும்  நிகழ்ச்சியை  நடத்த முடியாதுன்னு குமரி காங்கிரஸ் பிரமுகர்கள் கைவிரித்தார்களாமே?''”

"ராகுல்காந்தி எழுப்பிவரும் வாக்காளர் உரிமை முழக்கத்தை, தேசம் முழுவதும் எதிரொலிக்கச் செய்ய வேண்டும் என்று அகில இந்திய காங்கிரஸ்  முனைப்பில் இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு மாநில காங்கிரஸுக்கும் சில வழிகாட்டுக் குறிப்புகளை அது கொடுத்திருக்கிறது.  அதன்படி, இது குறித்து தமிழகத்தில் பிரமாண்டமான பொதுக் கூட்டத்தை பிரியங்காகாந்தியை வைத்து நடத்தத் திட்ட மிட்டார் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை. இது தொடர்பாக காங்கிரசுக்கு செல்வாக்குள்ள குமரி மாவட்ட நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தினார்.  ஆனால், மேலிட உத்தரவின்படி அந்தக் கூட்டத்தை நடத்த இயலாது என்று அவர்கள் மறுத்துவிட்டனராம். இத்தனைக்கும்,  குமரி மாவட்டத்தில் தான் காங்கிரஸுக்கு 1 எம்.பி.யும் 3 எம்.எல்.ஏ.க்களும் இருக்கின்றனர். இங்குள்ள எம்.எல்.ஏ.க்களில் ஒருவரான ராஜேஸ்குமார் தான், தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவராக இருக்கிறார். வசந்த் அன்கோ விஜய் வசந்த் அங்கே எம்.பி.. இவர்கள் எல்லாம் இருந்தும் பிரியங்கா கூட்டத்தை நடத்த யாரும் முன்வர வில்லை. இது காங்கிரஸ் தரப்பையே அதிரவைத்திருக்கிறது. இந்த நிலையில், நாங்கள் அந்தக் கூட்டத்தை நடத்துகிறோம் என்று நெல்லை காங்கிரஸ் எம்.பி. ராபர்ட் புரூஸும், நாங்குநேரி எம்.எல்.ஏ. ரூபி மனோகர னும் சொல்லியிருக்கிறார்களாம். எனினும், பொதுக்கூட்ட இடத்தைத் தேர்வு செய்வதில் இவர்களுக்குள் ஒத்த கருத்து இல்லையாம்.''”  

"அண்மையில் தமிழகம் வந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வும், நடிகர் விஜய்யும், எடப்பாடியும் ஒரே நேரத்தில் தி.மு.க.வையும் முதல்வர் ஸ்டாலினையும் கடுமையாக அட்டாக் செய்திருக்கிறார்களே?''”

"ஆமாங்க தலைவரே, நெல்லைக்கு வந்த அமித்ஷா, தி.மு.க.வை ஊழல் கட்சி என்று கடுமையாக விமர்சித்ததோடு, உதயநிதியை முதல்வராக்க நினைக்கிறார் ஸ்டாலின். அது ஒருபோதும் நடக்காது என்று வரிந்துகட்டிக்கொண்டு பேசி னார். அதேபோல், மதுரை மாநாட்டில், முதல்வரை அங்கிள் என்று எகத்தாள மாக விளித்து, கடுமையாகவும் மோச மாகவும் நடிகர் விஜய். தி.மு.க.வுக்கு எதிராகப் புழுதிவாரித் தூற்றினார். பிரச்சார டூரில் இருக்கும்  எடப்பாடியும் தனது ’திரட்டல் கூட்டம்’ மூலம், முதல்வருக்கு எச்சரிக்கை விடுத்தபடியே இருந்தார். இப்போதும் அதைத் தொடர்கிறார். இவையெல்லாம் தி.மு.க.வைப் பாதித்ததா என்று பார்த்தால், அங்கே எவரும் இவற்றைக் கண்டுகொண்டதாகவே தெரியவில்லை. முதல்வர் ஸ்டாலினே, இந்த பரபரப் பான நேரத்தில் மிகவும் கூலாக, தன் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், தன் 50ஆவது திருமண நாளையொட்டி  லீலா பேலஸ் ஓட்டலில் விருந்து கொடுத்துக்கொண்டிருந்தார்.''”

"நெல்லையில் அமித்ஷா, மீண்டும் எடப்பாடியைச்  சீண்டியிருக்கிறாரே?''”

"உண்மைதாங்க தலைவரே, நெல்லையில்  கடந்த 22ஆம் தேதி, தமிழக பா.ஜ.க.வின் பூத் கமிட்டிக் கூட்டம்  நடந்தது. இதில் மத்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார். அங்கு அவர் பேசும்போது, தங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் தமிழகத் தலைவர் எடப்பாடியைப் பற்றி ஒரு வார்த்தை கூட குறிப்பிடவில்லை. அதேசமயம், தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் நடக்கும் என மீண்டும் எடப்பாடியைச் சீண்டியிருக்கிறார் அமித்ஷா. கடந்த முறை தமிழகத்தில் இதே கருத்தை அவர்  வலியுறுத்தியபோது, ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல  என்று அவருக்கு எடப்பாடி பதிலடி கொடுத்தார். இருந்தும் இப்போதும்  மீண்டும் கூட்டணி ஆட்சியை அமித்ஷா வலியுறுத்துகிறார் என்றால், அவர் எடப்பாடியை  ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை என்று குமைகிறார்கள்.''”

"தர்மஸ்தலா விவகாரம் கர்நாடக மாநில அரசியலை புரட்டிப் போட்டுக்கொண்டு இருக்கிறதே?''”

"ஆமாங்க தலைவரே, கர்நாடக மாநில தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட  பெண்கள் வேட்டையாடிப் புதைக்கப் பட்டதாக, அங்கு வேலை பார்த்த முன்னாள் ஊழியர் பீமா என்பவர் புகார் கொடுத்தார். இந்த விவகாரத்தை விசாரித்துவரும் சிறப்புப் புலனாய் வுக்குழு, அங்கே புதைக்கப்பட்ட சடலங்களின் எலும்புக்கூடுகளைத் தோண்டி எடுத்த விவகாரமும் கர்நாடகாவைப் பதட்டப்படுத்தியது. இந்த நிலையில், புகார் கொடுத்த பீமாவையே, தகவலை மாற்றிச் சொன்னதாக விசாரணைக்குழு கைது செய்திருக்கிறது. இதன் பின்னணியில் அரசியல் இருப்பதாகச் சொல்கிறார்கள் அங்குள்ள சமூக ஆர்வலர்கள். கர்நாடக துணை முதல்வர் சிவகுமார் தரப்பு தர்மஸ்தலா கோயிலுக்கு ஆதரவாக பகிரங்கமாகவே களமிறங்கியிருக்கிறார். முதல்வர் பதவியில் கண் வைத்திருக்கும் அவர், வரும் நவம்பர் மாதத்திற்குள் கர்நாடக முதல்வர் சித்தராமையா பதவி விலகவேண்டும் என்று கெடு விதித்திருக்கிறாராம். கார ணம், அந்த சர்ச்சைக்குரிய கோயில் விவகாரத்தை விசாரிக்க முனைந்தது தானாம். அதேபோல் தர்மஸ்தலா கோயில் நிர்வாகியும் பா.ஜ.க. எம்.பி.யும், 4 லட்சம் கோடி சொத்துக்களின் அதிபதியுமான வீரேந்திர ஹெக்டே, தங்கள் கோயிலுக்கு எதிராக நட வடிக்கை எடுத்த சித்தராமையாவின் அரசைக் கவிழ்த்தே தீருவேன் என்று சூளுரைத்தபடி, கரன்ஸிகளை வாரியிறைத்துவருகிறாராம்.''”

"கோவையில் மாணவர் விடுதியில் பதுங்கியிருந்த கிரிமினல் கும்பல் ஒன்று வளைக்கப்பட்டிருக்கிறதே?''”

"கோவை செட்டிகுளம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மாணவர் விடுதியில் ஆறரை கிலோ கஞ்சாவோடும், பயங்கர ஆயுதங்களோடும் பதுங்கி யிருந்த  ஒரு கும்பல், அதிரடியாகக் கைது செய்யப் பட்டிருக்கிறது. மேலும், அவர்கள் பதிவு செய்யப் படாத வாகங்களையும் வைத்திருந்தார்களாம். கிரிமினல்களுக்கு அடைக்கலம் கொடுத்த அந்த மாணவர் விடுதி, கோவையைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் ஒருவரின் அண்ணனுக்குச் சொந்தமானது என்கிறார்கள். இது அங்கே பெரும் பதட்டப் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன்ப்பா. பொள்ளாச்சி அரசு உயர் நிலைப்பள்ளியில், ஏறத்தாழ 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த நிலையில், அங்கிருக்கும் தாவரவியல் ஆசிரியரும், இசை ஆசிரியரும் மாணவிகளுக்குப் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, காவல்துறைக்குப் புகார் சென்றது. இதனால் மக்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது. இந்த நேரத்தில், அந்த இரண்டு ஆசிரியர்களையும் காப்பாற்றும்படி, பொள்ளாச்சியில் இருக்கும் ஒரு வி.ஐ.பி., எஸ்.பி. கார்த்திகேயனிடம் கேட்டுக்கொண்டிருக் கிறார். இதுகுறித்து எஸ்.பி., முதல்வர் அலுவலகத்துக்குத் தகவல் கொடுக்க, முதலில் அந்த கெட்ட ஆசிரியர்களை போக்ஸோவில் உள்ளே தள்ளுங்கள் என்று அங்கிருந்து உத்தரவு பறந்து வந்திருக்கிறது.''”

''”