"ஜென் சி கிட்ஸ், உங்கள் வாக்கு உங்கள் அசல் சக்தி. பார்ம் 6 பூர்த்தி செய்து வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதே ஜனநாயகத்தில் உங்கள் முதலடியாகும்'' என இளைஞர்களை, முதல் தலைமுறை வாக்காளர்களை குறிவைத்து வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டார் நடிகர் விஜய். எது நடந்தாலும், ஆழ்ந்த மௌனம் காக்கும் விஜய்க்கு சட்டென விழிப்பு வந்தது எப்படி? அதுவும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் மட்டும் வீடியோ பதிவிடும் விஜய், இதற்கென 9 நிமிடத்திற்கு மேலாக வீடியோ போடவேண்டிய அவசியமென்ன? அனைத்திற்கும் காரணம் காங்கிரஸே'' என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

Advertisment

தேர்தல் பணிகளைச் செய்ய, வாக்களிப்பிற் கான பணிகளை நடத்த ஒவ்வொரு கட்சிக்கும் பூத் கமிட்டி அவசியம். தமிழ்நாட்டில் தேர்தல் ஆணை யத்தைப் பொறுத்தவரை தி.மு.க. கட்சிக்கு 65 ஆயிரம், அ.தி.மு.க.வுக்கு 63 ஆயிரம், பா.ஜ.க. விற்கு 38 ஆயிரம், காங்கிரஸிற்கு 24 ஆயிரம் மற்றும் தே.மு.தி.க.விற்கு 18 ஆயிரம் பூத் கமிட்டிகள் இருப்பதாகத் தெரிகிறது. மற்றபடி நாங் கள்தான் பெரிய கட்சி எனக்கூறும் கட்சிகளின் பூத் கமிட்டிகள் எண்ணிக்கையை மூன்று இலக் கத்தில் அடக்கிவிடலாம். அந்த நிலைதான் நேற்று கட்சி தொடங்கிய விஜய்யின் நிலையும். பூத் கமிட்டி இருந்தால் மட்டுமே மக்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல் கிடைக்குமென்பது அடிப்படையான ஒன்று. 

Advertisment

"கரூர் சம்பவத்திற்குப் பிறகு தனிமைப்பட்ட விஜய்க்கு, "நான் இருக்கிறேன்' என்ற ரீதியில் பா.ஜ.க. வும், காங்கிரஸும் மாறி மாறி குசலம் விசாரித்தன. ஒருகட்டத்தில் அ.தி.மு.க.வோ, "எங்களுடன்தான் விஜய் இருக்கின்றார்' என மறைமுகமாகக் கூறி விஜய்யை கூட்டணி வண்டியில் ஏற்றியது. இதற் காக, தான் பேசும் இடங்களில் த.வெ.க. கொடியை ஆங்காங்கே அசைக்கவைத்தார் எடப்பாடி பழனிச் சாமி. அமித்ஷா நேரடியாகப் பேச, ராகுலும் தன்னு டைய நெருக்கமான நண்பர் பைஜூவைக் கொண்டு விஜய்யுடன் பேசி உறவை வளர்த்தார். இந்த பைஜூதான் ராகுலின் யாத்திரையை திறம்பட நடத்தியவர். 

ஒருகட்டத்தில் அமித்ஷாவுடனான தொடர்பு துண்டிக்கப்பட, காங்கிரஸின் அடுத்த மூவாக கிரீஷ் ஜோடங்கரை விஜய்யுடன் நேரடியாகப் பேசவைத்தது காங்கிரஸ். இது காங்கிரஸ்- த.வெ.க. உறவில் அடுத்தகட்டத்தை நோக்கி முன்னேறியது என்றே கூறலாம். அதன்பின் புரபஷனல் காங் கிரஸின் பிரவீன் சக்கரவர்த்தியும் கலந்துகொள்ள, காங்கிரஸ் -த.வெ.க. கூட்டணி இறுதியானது என்றே கூறலாம். இதன் எதிரொலியாகத்தான் மாமல்லபுரத்தில் நடந்த சிறப்புப் பொதுக்கூட்டத் தில், "தி.மு.க.வுக்கும், த.வெ.க.வுக்கும் போட்டியே' என்றார் நடிகர் விஜய். இதேவேளையில் காங்கிர சும், "ஆட்சியில் பங்கு' என கூட்டணி ஆட்சிக்கான குழப்பத்தை செல்வப்பெருந்தகை மூலம் தி.மு.க.விடம் வெளிப்படுத்தி யது. "நாமாக வெளியேற வேண் டாம்... வெளியேற்றவேண்டும்' என்ற எண்ணம் காங்கிரஸின் அஜெண்டா வாக இருந்தது. ஆனால் இதனை மாநில அரசின் உளவுத்துறை மோப்பம் பிடித்து ஆளும் தலைமையிடம் குறிப்பு வைக்க, "பீகார் தேர்தலின் ரிசல்ட் வரட்டும் பார்த்துக்கலாம்' என்ற ரீதியில் காங்கிரஸின் கூத்தை ரசிக்கத் தொடங்கியது தி.மு.க.'' என்கிறார் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர்.

Advertisment

vijay1

இதற்கிடையில் ராகுல் தரப்போ, தங்களுக்கு வேண்டப்பட்ட ஏஜென்சியைக் கொண்டு தமிழ் நாட்டில் காங்கிரஸின் வாக்காளர்கள் குறித்தான சர்வேயை ரகசியமாக எடுக்கத் தொடங்கியது. மொத்தம் 117 தொகுதிகளில் எடுக்கப்பட்ட சர்வேயில் ஏறக்குறைய 90 தொகுதிகளில் காங்கிரஸிற்கென தனிப்பட்ட வாக்குகள் 30,000 இருக்கின்றது. விஜய்யுடன் கூட்டணி வைத்தால் ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்கின்ற நம்பிக்கையை அந்த சர்வே  விதைத்தது. இந்த சர்வேயைக் கொண்டு, "காங்கிரஸிற்கென 90 தொகுதிகளில் 30 ஆயிரத்திற்கும் குறையாத வாக்குகள் உள்ளன. கூட்டணி என வந்தால் எங்களுக்கு 70-லிருந்து 60 சீட்கள் கொடுங்கள். நீங்கள் 120 சீட்களுக்கு குறைவில்லாமல் போட்டியிடுங்கள். அதுபோக, 24 ஆயிரம் பூத் கமிட்டிகளும் உள்ளன. வலுவான கட்டமைப் புடன் இந்த தேர்தலை எதிர்கொள்வோம். 2026 ஆட்சி நமக்குத்தான்' என காங்கிரஸ் பிரவீன் சக்கரவர்த்தி விஜய்யிடம்  கூறிவைத்திருப்பதாக தகவல் வெளியானது. 

இதேவேளையில், "நம்மிடம் எலெக்சன் வேலை பார்க்க பூத் கமிட்டி கிடையாது. அவர்களிடம் 10 நபர்கள் (தற்பொழுது 9+1) கொண்ட 24 ஆயிரம் பூத் கமிட்டிகள் உள்ளன. அது தவிர, தொகுதிக்கு 30,000 வாக்குகள் அவர்களுக்கென தனியாக உள்ளது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலிருந்து ஆதரவு கிடைக்கும். கட்சிக்கு தேர்தல் செலவிற்கென பணமும் கிடைக்கும். மொத்தமாக சிறுபான்மையினர் வாக்குகளை அள்ளிவிடலாம். மிஷனரிகளும் நம் பக்கம்தான் என்பதால் கிட்டத்தட்ட ஓ.கே.தான்'' என விஜய்யும் இழுக்க... இதுதான் சந்தர்ப்பம் என ஆதவ் அர்ஜுனா பெங்களூரு சென்று கர்நாடகா துணை முதல்வர் டி.கே.சிவக்குமாரைச் சந்தித்து இதுகுறித்து பேசி உறவை வளர்த்திருக்கிறார்.

த.வெ.க.வின் மாநில நிர்வாகியோ, "காங்கிரஸ், த.வெ.க. இருவரும் கூட்டணிக்கான அறி விப்பினை விரைவில் வெளியிட வேண்டியதுதான் பாக்கி. அதற்குள் பீகார் தேர்தல் ரிசல்ட்டும் வந்தது. காங்கிரஸ் சிங்கிள் டிஜிட்டிலான சீட்களில் வெற்றிபெற்றது. உடனடியாக பிரவீன் சக்கர வர்த்தியை அழைத்தார் விஜய். அலைபேசியை அவர் எடுக்கவில்லை. அடுத்ததாக கிரீஷ் ஜோடங்கர் தொடங்கி பைஜூ, ராகுல் வரை அழைத்துப் பார்த்தார். எவரும் அலைபேசியை எடுத்ததாகத் தெரியவில்லை. கோபமடைந்த விஜய் தன்னுடைய அலைபேசி தவிர ஜான் ஆரோக்கிய சாமி, அருண்ராஜ் உள்ளிட்டவர்களை கொண்டு அழைத்துப்பார்த்தும் யாரும் போனை எடுக்க வில்லை. ஆனால், அதேநேரத்தில், "தி.மு.க.வுடன் எங்களது கூட்டணி வலிமையானது என்றும், தி.மு.க. கூட்டணியே' என்றார் காங்கிரஸின் செல்வப்பெருந்தகை. இதனால் மிகவும் டென்ஷனானார் விஜய். பூத் கமிட்டி இல்லாமல் வாக்குகளை வாக்குச்சாவடிக்குள் கொண்டுசெல்ல முடியாது. காங்கிரஸை நம்பியதால் தங்களுடைய கனவு கலைக்கப்பட்டு, நட்டாற்றில் விடப்பட்டார் விஜய் என்பதுதான் உண்மை'' என்றார் அவர்.

இந்தக் கூட்டணிக் குழப்பம் ஒருபக்கமிருக்க, தி.மு.க.வின் ந.செ.வாக இருந்த முஸ்தபா என்பவர் ஆதவ் அர்ஜுனா குறித்து ஒரு முக்கியமான விவரத்தை அளித்துள்ளார். "ஊட்டியில் காய்கறி கமிஷன் மண்டியில் தரகு வேலை பார்த்தவர் செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த அய்யாக்கண்ணு. இடையிடையே நிலம், வீட்டு மனை வாங்கி விற்கும் தொழிலும் செய்து வந்திருக்கிறார் அவர். அந்த வகையில் அய்யாக்கண்ணுவிற்கு அறிமுகமாகியவர் ஏழரை மூக்கன் (உறவினர்கள் தொடங்கி கட்சிக்குள்ளும் அதுதான் பெயர்) ஆதவ் அர்ஜுனா. இதில் காலிமனையுடன் இருக்கும் அய்யாக்கண்ணுவின் குடியிருக்கும் வீட்டை விற்றால் மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும். "நல்ல பையரை நான் கூட்டிட்டு வருகின்றேன். அதற்கு முன்னால் இடத்தை என்னுடைய பெயருக்கு பவர் பத்திரம் போட்டுக்கொடுத்துடுங்க' என நைஸாகப் பேசி பவர் பத்திரம் பெற்றுக்கொண்டார் ஆதவ் அர்ஜுனா. அத்தோடு அய்யாக்கண்ணு கண்ணில் படவில்லை ஆதவ் அர்ஜுனா.

vijay2

பின்னாளில் அய்யாக்கண்ணு வீடு எங்க ளுடையது என ஒருவர் வந்து போலி பத்திரத்துடன் "பொசிஷன்' எடுக்க முயல, உள்ளூர் தோழர்கள் அய்யாக்கண்ணுவிற்கு ஆதரவு கொடுத்தனர். ஒருகட்டத்தில் ஆதவ் அர்ஜுனா அங்கு வந்து "நீங்க எனக்கு வித்தீங்க. நான் அவருக்கு வித்தேன்" என மல்லுக்கட்ட கைகலப்பாகி காவல்துறை வரை சென்றது விவகாரம். இதில் ஆதவ் அர்ஜுனா இரண்டு நாட்கள் சிறையிலிருந்தார். அவன் அப்பவே சீட்டிங்தான்' என்கிறார் அந்தக் காலகட்டத்தில் தி.மு.க.வின் ந.செலிவாக இருந்த முஸ்தபா என்பவர். இது   குறித்து தனது முகநூல் பக்கத்திலேயே வீடியோவும் பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.   

கட்சிக்குள்ளே நடக்கும் செய்தி, மீடியாவிற்கு எப்படி செல்கின்றது? குறிப்பாக "நக்கீரனுக்கு' யார் செய்தி சொல்லுகிறார்கள்? என்றறிய, தனியார் துப்பறியும் நிறுவனத்தை நாடியுள்ளது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆப் காமன். இதற்காக த.வெ.க. கட்சியிலுள்ள மாநில நிர்வாகிகளின் அலைபேசி எண்களை சேகரித்து சி.டி.ஆர். (ஈஉத) போட்டுள்ளனர். அதில் யாரும் சிக்கவில்லை. வாட்ஸ்ஆப் காலில், பேஸ் டைமில் பேசியிருக்க வாய்ப்புண்டு என அவர்கள் முதலில் சந்தேகப்பட்டது தேர் தல் வியூக வகுப்பாளர் ஜான்ஆரோக் கியசாமியைத்தானாம். அதுவும் பிசிறடிக்க அருண்ராஜ், நிர்மல், புஸ்ஸி ஆனந்த் என சந்தேகப் பட்டியல் நீண்டுகொண்டே செல்கின்றது. 

__________________
இறுதிச்சுற்று!

சவுதி விபத்து! 42 இந்தியர்கள் பலி!

vijay-box

 சவுதி அரேபியா மதீனாவில்           நவம்பர் 17 அதிகாலை புனிதப் பயணம் மேற்கொண்ட இந்தியர்கள் பயணித்த  பஸ்ஸும், டீசல் லாரியும் மோதி விபத்துக்குள்ளாகி யுள்ளது. இதில் 20 பெண்கள், 11 குழந்தைகள் என 42 பேர் வரை உயிரிழந்துள்ளனர். விபத்தில் பலியானவர்கள் தெலுங்கானாவைச் சேர்ந்தவர்கள் என்று முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மெக்காவிலிருந்து மதீனாவிற்கு உம்ரா புனித பயணிகள் சென்ற பேருந்து டீசல் டேங்கர் லாரியுடன் மோதி விபத்தில் சிக்கியது. இந்திய நேரப்படி அதிகாலை 1:30 மணிக்கு இந்த கோர விபத்து ஏற்பட்டுள்ளது.  இந்த விபத்தில் இந்திய புனிதப் பயணிகள் 42 பேர்  பலியாகி யுள்ளனர். இந்திய வெளியுறவுத்துறை அதிகாரிகள் சவுதி அரேபிய தூதருடன் பேசி, தனி விமானம் மூலம் பலியான 42 பேரின் உடல்களையும் இந்தியா கொண்டுவர ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

-துரை.மகேஷ்