தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவரும் நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சிக்கு புத்துணர்ச்சி ஊட்டும் விதமாக, தமிழகம் முழுவதும் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுவருகிறார்கள். முன்னாள் மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரியால் 2021, ஜனவரியில் நியமிக்கப்பட்ட மாவட்ட, மாநில பொறுப்பாளர்களை மாற்றி, புதிய நிர்வாகி களை நியமனம் செய்யத் திட்டமிட்டு, அதற்கான பணியைத் தொடங்க மாநிலத்தலைவர் செல்வப்பெருந்தகையிடம் காங்கிரஸ் டெல்லி தலைமை கேட்டுக்கொண்டது. அதன்படி, 72 மாவட்ட தலைவர்களில் 69 மாவட்ட தலைவர்கள் நியமனம் நடந்துள்ளது. மீதமுள்ள 3 மாவட்டங்களுக்கு மட்டும் நிர்வாகிகள் நியமனத்தை நிலுவையில் வைத்துள்ளது. அதுவும், கன்னியாகுமரி மாவட்டத்தில் மூன்று எம்.எல்.ஏ., மற்றும் எம்.பி., இடையிலான உட்கட்சி கோஷ்டிப்பூசலால் கன்னியாகுமரியில் மூன்று மாவட்ட பொறுப்பாளர்களின் நியமனத்தையும் நிறுத்திவைத்துள்ளனர். மாநில பொறுப் பாளர்களின் இறுதி லிஸ்ட் முடிவாகி, இன்னும் 15 நாட்களில் வெளியாகவுள்ள நிலையில், பிரிவு தலைவர்களின் நியமனம், தேர்தல் முடிவுக்குப் பிறகே இருக்கும் என்கிறார்கள்.
இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியில் நிர்வாகப் பொறுப்புகளுக்காகப் பலரும் லட்சக்கணக்கில் வசூல் வேட்டையில் இறங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மாநில அமைப்புச் செயலாளரான ராம்மோகன் மற்றும் மாநில பொதுச்செயலாளரான டி.செல்வம் இருவரும் சேர்ந்து, இவ்விஷயத்தில் பல கோடிகளை கல்லா கட்டியுள்ளனர். தென்சென்னை மேற்கு மாவட்டத் தலைவர் பொறுப்புக் காக 1 வருடமாகக் காத்துக்கிடந்த தளபதி பாஸ்கர், எப்படியாவது இந்த பொறுப்பை வாங்கியே ஆக வேண்டுமெனத் திட்டமிட்டு, அதற்கு யாரை பிடித்தால் வேலையாகும் என விசாரித்து, ராம்மோகனிடம் "எனக்கு எப்படியாவது இந்த மாவட்டத் தலைவர் பதவியை பெற்றுத்தாருங்கள். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யத் தயாராக இருக்கிறேன்' எனக் கூறவே, "நிச்சயம் உனக்குத்தான்' என பேரம் பேசி, கோயம்பேட்டிலுள்ள கார் ஷோ ரூமில் கார் ஒன்றை விலைபேசியுள்ளனர். பிறகு அது சரிவராத காரணத்தால் மீண்டும் 45 லட்சம் பெற்றுள்ளார்.
இவரை மட்டுமே நம்பியிருக்காமல் மாநில பொதுச்செயலாளர் டி.செல்வத்திடமும் பணத்தை கொடுத்துள்ளார். இந்த இருவரும், இருவேறு தலைவர்கள், இருவேறு வகையிலான லாபிகளை செய்யக்கூடியவர்கள் என்பதால் இருவர் மூலமாகவும் முயற்சி செய்துள்ளார். ராம்மோகன், மாநிலத் தலைவர் செல்வப் பெருந்தகையின் தீவிர விசுவாசியாம். எந்தள விற்கு விசுவாசியென் றால், தற்போது வகிக்கும் மாநில அமைப்புச் செயலா ளர் பொறுப்பை ராம்மோகனுக்கு அகில இந்திய காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக வழங்கவில்லை. இந்த பொறுப்பு, செல்வப்பெருந்தகையால் தனிப் பட்டு வழங்கப்பட்ட பொறுப்பு.
மேலும், கீழ்ப்பாக்கத்திலுள்ள அரசு குடியிருப்பில், அரசு பணியில் உள்ளவர்களுக் கும், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், எக்ஸ் எம்.பி. போன்றவர்களுக்கே வீடு வழங்கப்படும். அதிலும், யாருக்கு வீடு வழங்கப்படுகிறதோ அவர்களின் பெயரில் வீடோ, நிலபுலன்களோ இருக்கக்கூடாது. ஆனால் இவருக்கோ தென்காசியில் சொந்த வீடு இருக்கிறது. ஒரு தனியார் பள்ளியையும் நடத்திவருகிறார். காங்கிரஸ்காரரான இவரது அந்த பள்ளியில், பொன்ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ்.
பயிற்சி முகாம், மூன்று நாட்களுக்கு நடந்துள்ளது. இப்படிப்பட்ட ஒருவர் செல்வப் பெருந்தகையின் விசுவாசியாக, அவரால் பலனடைந்துவருகிறார். மாநில பொதுச் செயலாளர் டி.செல்வம், டெல்லி லாபியான பிரவீன் சக்ரவர்த்தியின் தீவிர விசுவாசியாக இருக்கிறார். எனவே இருவரையும் பிடித்து வைத்துக்கொண்டால் நிச்சயம் ஏதோ ஒருவழியில் நமக்கு பொறுப்பு கிடைத்துவிடும் என நம்பி பணத்தை கொடுத்துள்ளார்.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/29/tanjore1-2026-01-29-17-18-03.jpg)
இந்த தளபதி பாஸ்கர், தற்போது செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் எனப் பல மாவட்டங்களில் சிட்பண்ட் பண மோசடியில் சிக்கி, குண்டாஸ் போடப்பட்டு சிறையில் உள்ளார். ராம்மோகன், தளபதி பாஸ்கரிடம் மட்டுமே பொறுப்புக்கு பணத்தை பெறவில்லை, இவரைப்போல தமிழ்நாடு முழுக்கவே பலரிடமும் வசூல் வேட்டையில் இறங்கியுள்ளாராம். தென்காசி மாவட்ட கடையம் காங்கிரஸ் ஒன்றிய கவுன்சிலர் மாரிக்குமார் தற்கொலை செய்துகொண்டார். அவர் தற்கொலைக்கு முன்பாக எழுதிவைத்துள்ள கடிதத்தில், "ராம் மோகன் அண்ணன், நீங்க எனக்கு தர வேண்டிய பணத்தை என் மனைவியிடம் கொடுத்துவிடுங்கள்'’என எழுதியுள்ளார். இந்த பணத்தை அவர் கடனாக வாங்கவில்லை, இவருக்கும் பொறுப்பு வாங்கித் தருவதாகக் கூறியே பெற்றுள்ளார். இப்படி வசூலில் இறங்கி பல கோடிகளில் வசூல் செய்துள்ளதாகவும், இதற்கு பின்புலத்தில் மாநில தலைவர் செல்வப்பெருந்தகையும், பிரவீன் சக்ரவர்த்தி யும் உள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படியாக, காங்கிரஸில் நிர்வாகப் பதவிக்காகவே கோடிக்கணக்காக பணத்தை பெற்றுக் கொண்டு பதவியை அளித்தால், இவர்களால் எப்படி காமராஜர் ஆட்சியை அமைக்க முடியும்? எனக் கேள்வியெழுப்பி, புகார்க் கடிதத்தை தேசிய தலைமைக்கு அனுப்பி வைத்துள்ளனராம். இதைக் கண்டு டெல்லி தலைமை அதிர்ச்சியடைந்துள்ளதாம்!
-சே
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/media_files/2026/01/29/tanjore-2026-01-29-17-17-52.jpg)