"ஹலோ தலைவரே..… மார்ச் 1-ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் தமிழகம் முழுவதும் கழகத் தொண்டர்களால சிறப்பா கொண்டாடப்பட்டிருக்கே. அவரது குடும்பத்தினர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என எல்லா திக்கிலுமிருந்து வாழ்த்துகள் வந்து குவிய, அவர் நெகிழ்ந்து போயிருக்கிறாரே.''”

Advertisment

"அதோட வழக்கம்போல பெரியார், அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்குப் போய் மாலையணித்து அஞ்சலி செலுத்தி அவர்களது நினைவோட தன் பிறந்த நாளை சீரும் சிறப்புமா கொண்டாடியிருக்காரே.''”

Advertisment

"ஆமாம் தலைவரே.. ஏற்கெனவே தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் இருக்கும் தொண்டர் களின் உற்சாக வாழ்த்தோட, அவரோட ஆட்சியின் நலத் திட்டங்களால பயனடைஞ்சவங் களும் வாழ்த்த ஒரே உற்சாகமா காணப்பட்டார் முதல்வர். தமிழகத்துல காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 5ஆம் தேதிதான் கடைசிநாள். ராஜ்யசபா தேர்தல்ல தி.மு.க., அ.தி.மு.க.வுல யாருக்கு சீட்யோகம் அடிக்கும்னு ஒரே பரபரப்பா இருக்கு.''” 

"அவங்களைவிடவும் நீ பரபரப்பா இருக்கிறதைப் பார்த்தா உனக்கு சில விஷயம் தெரியும்போல இருக்கே.''”

Advertisment

"ஆமாங்க தலைவரே.. அந்த 6 இடத்துல தி.மு.க. 4 இடத்துலயும், அ.தி.மு.க. 2 இடத்துலயும் ஜெயிக்கமுடியும். தி.மு.க.வுல.. காங்கிரசுக்கும், தே.மு.தி.க.வுக்கும் தலா 1 சீட் கொடுக்க தி.மு.க. முடிவு செஞ்சிருக்கு. கூட்டணியை இன்னும் காங்கிரஸ் உறுதிப்படுத்தாதனால ராஜ்யசபா சீட்டைப் பெற காங்கிரஸ் தயக்கம்காட்டி வருது. அதனால 4-ஆம் தேதி தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணி விவகாரம் தெரிஞ்சிடும்னு அரசியல் வட்டாரத்துல எதிர்பார்க்கிறாங்க. தி.மு.க.வுல ராஜ்யசபா சீட்டை இந்தமுறை புதியவர்களுக்கு தரணும், அதுவும் இளைஞரணியைச் சேர்ந்தவர் களுக்குத் தரணும்னு எதிர்பார்ப்பு அதிகரிச்சிருக்கு. கூட்டணிக் கட்சிகளுக்கு 2 சீட் போயிடுச்சுன்னா 2 சீட்டுலதான் தி.மு.க. நிற்கனும். இதுல ஒரு சீட் சபரீசனுக்கு ரிசர்வ் செய்யப்பட்டிருப்பதால மீதமுள்ள 1 சீட்டை இளைஞரணிக்கு ஒதுக்க ணும்னு கட்சித் தலைமைக்கு வேண்டுகோள் போயிருக்கு. சபரீசனை ராஜ்யசபா எம்.பி.யாக்க ணும்னு தலைமை நினைக்குது. இப்போ, அந்தப் பதவி தனக்கு வேணுமான்னு சபரீசனுக்கு ஒரு கேள்வி இருக்காம். நேரடி அரசியல் தனக்கு தோதுப்படாதுன்னு இன்ட்ரஸ்ட் காட்டாமலேயே இருக்காராம் சபரீசன்.''” 

"ராஜ்யசபா சீட்டைப் பிடிக்க காங்கிரஸ் தலைவர்கள் பலரும் டெல்லிக்கு படையெடுப் பாங்களே?''” 

ran1

"தி.மு.க. கொடுக்க முன்வந்த 1 சீட்டை காங்கிரஸ் பெற்றுக்கொள்ளுமா என்பதில் மார்ச் முதல் தேதி வரை எந்த முடிவும் ராகுல்காந்தி சொல்லலை. ஆனா, 1 சீட்டை கடைசி நேரத்துல காங்கிரஸ் வாங்கிக்கொள்ளும் என்ற நம்பிக்கையில் அதைக் கைப்பற்ற முன்னாள் தலைவர்கள் திருநாவுக்கரசு, கே.எஸ்.அழகிரி, தங்கபாலு, முன்னாள் எம்.பி. விஸ்வநாதன்னு பல பேர் டெல்லி தலைமையோட முட்டிமோதுறாங்க. இதுல, தற்போதைய தலைவர் செல்வப்பெருந்தகைக்கும் ராஜ்யசபா சீட் மேல ஒரு கண் இருக்காம்.''” 

"தி.மு.க.- காங்கிரஸ் பேச்சுவார்த்தை நடந்துச்சே, என்னாச்சு?''”

"கிரீஸ் ஷோடங்கர் தலைமையிலான காங்கிரஸ் பேச்சுவார்த்தைக்குழு அறிவாலயத்துக் குப் போச்சு. அங்கு டி.ஆர்.பாலு தலைமையிலான தி.மு.க. குழுவினரோடு பேச்சுவார்த்தை நடத்தினாங்க. வேதாளம் முருங்கை மரம் ஏறின கதையா, ஆட்சியில் பங்கு, 65 சீட், 3 மந்திரி பதவி, 2 ராஜ்யசபா சீட், உள்ளாட்சியில் 20 சதவீத இடஒதுக்கீடுன்னு மீண்டும் பேச்சை ஆரம்பிச்சாங்க. அதைக் கேட்டு மீண்டும் முதல்ல இருந்தா? என தி.மு.க.வினருக்கு சலிப்பு. ஆட்சியில் பங்கு இல்லைன்னு தலைவர் (ஸ்டாலின்) ஏற்கனவே சொல்லிட்டாரு. கூட்டணி ஆட்சியெல்லாம் தமிழ்நாட்டுக்கு ஒத்துவராது. அதனால, அதையெல்லாம் விட்டுத்தள்ளுங்க. இப்போ, அசெம்ப்ளி எலெக்சன், ராஜ்யசபா எலெக்சன் மட்டும் பேசுவோம். ராஜ்யசபாவுக்கு 1 சீட்டுன்னு தலைவர் உறுதிகொடுத்திருக்கிறாரு. அதைத்தாண்டி அதுல பேசறதுக்கு ஒண்ணும் இல்லே. அசெம்ப்ளி சீட்டை பொறுத்தவரைக்கும் கடந்த முறை ஒதுக்கின 25 சீட்டை அதிகரிக்க முடியாதுன்னு கறாரா தி.மு.க. தரப்புல சொல்லிட்டாங்க. இதை காங்கிரஸ் ஏத்துக்கலை. அவங்களோட எதிர்பார்ப்பு 41 சீட். இதை வாங்கணும்னா 65-ல ஆரம்பிச்சாதான் முடியும்னு நினைச்சி பழையபடியே பேசியிருக்காரு கிரீஸ் ஷோடங்கர்.''” 

"ரெண்டு ராஜ்யசபா சீட்டுக்கு ஏன் அடம்பிடிக்குது காங்கிரஸ்?''”

"ராஜ்யசபாவுல காங்கிரஸ் எண்ணிக்கை குறைய ஆரம்பிச்சிருக்கு. இதனால எதிர்க்கட்சி அந்தஸ்தை காங்கிரஸ் இழக்கும் சூழல். அந்த அந்தஸ்தை தக்கவச்சுக்கணும்னா 3 சீட் தேவைப்படுது. அதனால்தான் தி.மு.க.கிட்டே 2 சீட்டை எதிர்பார்த்து அடம்பிடிக்கிறார் ராகுல். ஆனா, 1 சீட்தான் ஒதுக்கமுடியும்னு கறாரா சொல்லிட்டது தி.மு.க. அந்த ஒரு சீட்டும் தமிழக காங்கிரசை சேர்ந்த தலைவர்களுக்குத்தான் கொடுக்கணும். வட இந்திய நபருக்குக் கொடுக்கக் கூடாதுன்னு ஏற்கனவே கண்டிசன் போட்டிருக் கிறார் ஸ்டாலின். அறிவாலயத்துல பேச்சை முடிச்சிட்டு அப்படியே மதியம் 2:30 மணி ஃப்ளைட்டை பிடிச்சி டெல்லிக்குப் பறந்த கிரீஸ் ஷோடங்கர், ராகுல்காந்தியை சந்திச்சி, தி.மு.க. வோட பேச்சுவார்த்தையில நடந்ததை முழுசா விவரிச்சதோட, பேச்சுவார்த்தை சுமுகமாக இல்லை. கறாரா இருக்காங்க. கூட்டணியில நாம் நீடிக்கணும்ங்கிற எண்ணம் தி.மு.க.வுக்கு இருக் கிறமாதிரியும் தெரியலை. இனி, நீங்கதான் முடி வெடுக்கணும்னு அழுத்தமா சொல்லியிருக்கிறாரு.''” 

"காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரத்தின் மீது ரொம்ப நாளைக்குப் பிறகு மீண்டும் அமலாக்கத்துறையின் பாய்ச்சல் நடந்திருக்கே?''”

ran3

"ஆமாங்க தலைவரே..… ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் மீது ஏர்செல்லிமேக்சிஸ் நிறுவனத்துக்கு சட்டவிரோதமாக அனுமதி வழங்கியதாகவும், அதில் ஊழல் நடந்திருப்ப தாகவும் பணமோசடி வழக்கை அமலாக்கத்துறை பதிவுசெஞ்சது. தனது அதிகாரத்தை ப.சிதம்பரம் தவறாகப் பயன்படுத்தினாருங்கிறது பிரதான குற்றச்சாட்டு, ஆனா, பணமோசடி தடுப்புச் சட்டத்தின்கீழ் ஒரு பொது ஊழியர்மீது விசாரணை நடத்தணும்னா, மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுவிடம் அனுமதிபெறணும்னு கடந்த 2024-ல் உச்சநீதிமன்றம் உத்தர விட்டிருந்தது. அந்த அனுமதியை இப்போதுதான் கொடுத்துள்ளது அமைச்சரவைக் குழு. இதனடிப்படையில், அவர்கள்மீது விசாரணை நடத்த டெல்லி நீதிமன்றத்தை அணுகியுள்ளது அமலாக்கத்துறை. இந்த விவகாரத்தில், தங்கள் மீதுள்ள குற்றச்சாட்டுகளை ஆரம்பத்திலிருந்தே மறுத்துவருகிறார் ப.சிதம்பரம். நீதித்துறையில் அவருக்கு ஏகப்பட்ட நண்பர்கள் இருப்பதால் அமலாக்கத்துறையின் இந்த வழக்கை ஊதித்தள்ளிடுவார்னு சொல்றாங்க அவரது ஆதரவாளர்கள்.''” 

"கோவையில் நடைபெற்ற தி.மு.க. மேற்கு மண்டல வாக்குச்சாவடி பாகமுகவர்கள் மாநாட்டில் முதல்வர், பா.ஜ.க.வையும் -அ.தி.மு.க.வையும் புரட்டியெடுத்திருக்கிறாரே?''”

"ஆமாம் தலைவரே, வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் அபார வெற்றியைக் குறிவைத்து மண்டல அளவிலான பாகமுகவர்கள் மாநாட்டினை நடத்திவருகின்றது கட்சித் தலைமை. கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், நாமக்கல் உள்ளிட்ட மாவட்டங்கள் அடங்கிய மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பாகமுகவர்கள் மாநாடு கோவை எல்.அண்ட் டி  பைபாஸ் ரோட்டிலுள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியருகே திறந்தவெளி மைதானத்தில் பிப்ரவரி 27-ஆம் தேதி நடைபெற்றது. 1.5 லட்சம் பாகமுகவர்கள் கலந்துகொண்ட மாநாட்டில் பேசிய முதல்வர், "டெல்லி முதல்வராக இருந்த அரவிந்த் கெஜ்ரிவால்மீது பா.ஜ.க., நேர்வழியில் தேர்தலை எதிர்கொள்ளமுடியாமல் கோழைத்தனமாக வழக்குப்போட்டது. அந்த வழக்கில் முகாந்திரம் இல்லை என நீதிமன்றம் கூறி கெஜ்ரிவாலை விடுவித்தது. அந்த டெல்லி ஃபார்முலாவை தமிழகத்திலும் செய்ய நினைக்கிறது பா.ஜ.க. உங்களது மிரட்டலுக்குப் பயப்பட நாங்கள் அடிமையும் இல்லை, கோழையும் இல்லை. பிரதமர் மோடி, ஜெயலலிதா புகழ்பாடத் தொடங்கியுள்ளார். நாட்டிலேயே அ.தி.மு.க. அரசுதான் ஊழல் அதிகமாக நடக்கும் அரசு என அமித்ஷா பேசியதை மறந்துவிட்டீர்களா?. இப்படிப்பட்ட என்.டி.ஏ சர்க்கஸ் ரிங் மாஸ்டர் பா.ஜ.க. கூறியபடி தமிழ்நாடு மக்கள் முன்பாக வித்தை காட்டுபவர்தான் பழனிசாமி. அவர்களது கூட்டணி கொள்கையில்லாத கூட்டணி. சந்தர்ப்பவாத கூட்டணி'' என புரட்டியெடுத்துவிட்டார்.''”

"தேர்தலுக்காக கோவை தொகுதிகளில் பொருட்களை வழங்கிய அ.தி.மு.க., வடக்கு சட்டமன்றத் தொகுதியை கண்டுக்காம புறக்கணிச்சிருக்காமே?''”

"ஜெயலலிதா பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டத்திலுள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளிலும் ஹாட்பாக்ஸ், ப்ளாஸ்க், தட்டு உள்ளிட்ட 6 பொருட்களை அ.தி.மு.க. வாக்காளர்களுக்கும், நடுநிலை வாக்காளர்களுக்கும் வீடுதேடிச் சென்று கொடுத்தனர் முன்னாள் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள். இதில் வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பொருட்களை விநியோகம் செய்த சில மணி நேரங்களில்  விநியோகத்தை நிறுத்திக்கொண்டனர். வடவள்ளி, பி.என்.புதூர், சீர்நாயக்கன்பாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு எந்தப் பொருளையும் வழங்காமலேயே சென்றுவிட்டனர். வடவள்ளி பகுதி கழகச் செயலாளர் நடராஜனை அ.தி.மு.க.வினர் தொடர்புகொண்ட நிலையில், "இங்கு பா.ஜ.க.தான் நிற்கின்றது. வேட்பாளராக வானதி சீனிவாசன் வருகிறார். அப்புறம் ஏன் பொருட்களை வழங்கவேண்டும்? என தலைமை கூறியதால் பொருட்களை கொடுக்கவில்லை' என்றிருக்கின்றார் அவர். தெற்கில் போட்டியிட்டு வென்ற வானதி சீனிவாசன், வரும் தேர்தலில் கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடுவது அ.தி.மு.க. வடவள்ளி பகுதி கழகச் செயலாளருக்கு தெரிந்திருக்கின்றது.''”

"தமிழ்நாட்டில் முதல்முறையா கஞ்சா வழக்கு ஒன்றில் காவல்துறை அதிகாரிகள், குழந்தைகள் விசாரணைக் குழுவின் முன்பு ஆஜராகியிருக் காங்களாமே?''” 

"ஆமாம் தலைவரே.. சேலம் மாநகர மையப் பகுதியில் அமைந்துள்ள பழைய பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் புதுப்பிக்கப்பட்டு இரண்டடுக்கு பேருந்து நிலையமாக தரமுயர்த்தப் பட்டது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதனை மாநகராட்சி நிர்வாகம் ஒப்பந்தமேதும் வழங்காமல் கிடப்பில் போட்டுள்ளது. இந்த பகுதிகளை பள்ளி, கல்லூரி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் இடமாக மாற்ற, மாணவர்கள் கஞ்சா பிடிக்கும் காட்சிகள் ஊடகங்களில் பதிவானது. இதையடுத்து தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை நடத்த முடிவெடுத்தது. 28.2.2026 அன்று, காவல் ஆணையர், சேலம் மாநகர காவல் துறை, ஆணையர், சேலம் மாநகராட்சி அலுவலகம், சேலம் டவுன் காவல் நிலைய இன்ஸ்பெக்டர்கள், எஸ்.ஐ. உள்ளிட்டோரை சேலம் மாவட்ட ஆட்சி யர் அலுவலகத்தில் ஆஜராக உத்தர விட்டது.''”

"காங்கிரஸ் மீது விஜய் உறுதியான நம் பிக்கையில் இருக்கிறா ராமே?''”

"காங்கிரஸை கடைசிவரை நம்பிக்கொண்டிருக்கிறார் விஜய். அந்த நம்பிக்கையை அவருக்குக் கொடுப்பவர் ஆதவ் அர்ஜுனா. காங்கிரஸில் இரண்டு பேருக்கு பைனான்ஸ் செய்கிறார் ஆதவ். ஒருவர் பிரவீன் சக்கரவர்த்தி, மற்றவர் மாணிக்கம் தாகூர். இதற்குக் கைமாறாக  இவர்கள் "தி.மு.க. மோசம், தி.மு.க., காங்கிரஸை அழித்துவிடும் என வாய்ப்புக் கிடைக்கும்போதெல்லாம் ராகுலின் செவியில் ஓதிக்கொண்டிருக்கிறார்களாம். எப்படியும் காங்கிரஸ் தங்கள் பக்கம் வருமென்ற நம்பிக்கையில் இருக்கிறார் விஜய். ஆனால், தி.மு.க. தனது வியூகத் தால் அவரை இலவு காத்த கிளியாக மாற்றிவிடும்' என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.''”

ran2

"சரி, நானும் ஒரு விஷயம் சொல்றேன் கேட்டுக்க. என்னதான் சங்கீதா விஷயம் தெரியும் என்றாலும் திடீரென அதை அறிவிப்பார் என விஜய்யின் பெற்றோர் எதிர்பார்க்கலையாம். அவர் அறிவிப்புச் செய்த நேரத்தில் விஜய்யின் பெற்றோரான எஸ்.ஏ.சந்திரசேகரையும் ஷோபாவையும் கூப்பிட்டு ஏதோ சில விஷயங்களை ஜக்கி பேசியிருக்கிறார். அதற்காக அவர்கள் ஈஷாவில் கடந்த பதினைந்து நாட்களாகப் தங்கியிருந்திருக்கின்றனர். இந்த நிலையில் சங்கீதா விவகாரம் சீரியஸாகப் மாறியதையறிந்து கோவையிலிருந்து அழுதபடி வந்திறங்கினாராம் ஷோபா.''’

___________
இறுதிச் சுற்று!

இ.பி.எஸ். டெல்லி பயணம்!  

டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை எடப்பாடி பழனிச்சாமி மார்ச் 2ஆம் தேதி சந்தித்துப் பேசுகிறார். கூட்டணியில் அ.தி.மு.க., பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

மார்ச் 6ஆம் தேதி தொகுதிப் பட்டியல் வெளியிடுவதற்கு வாய்ப்பு. அத்துடன், தி.மு.க.விற்கு உதவும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பட்டியலை அமித்ஷாவிடம் இ.பி.எஸ். ஒப்படைக்கிறார். அமைச்சர்கள் மீது தற்போது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாத நிலையில், அவர்கள் மீதான நடவடிக்கையை தீவிரப்படுத்த வலியுறுத்துகிறார் எடப்பாடி.

-இளையர்