செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாடு டெல்லியில் பிப்ரவரி 16ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரை நடைபெற்றது.  இந்த மாநாட்டின் கண்காட்சியில் சீன நிறுவனம் கண்டுபிடித்த ரோபோ நாயை தாங்கள் கண்டுபிடித்ததாகக் கூறி உத்திரபிரதேசத்தை சேர்ந்த கல்கோடியாஸ் பல்கலைக்கழகம் கண்காட்சியில் காட்சிப்படுத் தியது. இதனை சீன பத்திரிகைகள் கிண்டலடித்து செய்திகள் வெளியிட்டு, சர்வதேச அளவில் இந்தியாவுக்கு தலைகுனிவை உருவாக்கியது. 

Advertisment

இதுகுறித்து நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி கேள்வி எழுப்பினார். டெல்லி காங்கிரஸார் மாநாட்டு பகுதிக்குள் சென்று போராட்டம் நடத்தினர். இது ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க.வின் மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியது. இதனால் கோபமான பா.ஜ.க.வினர் ராகுல்காந்திக்கு கண்ட னத்தை தெரிவித்து வந்தனர். புதுச்சேரி பா.ஜ.க. இளைஞரணி யைச் சேர்ந்தவர்கள், பாண்டிச்சேரியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தின் முன்பு பிப்ரவரி 20ஆம் தேதி ராகுல்காந்தியின் உருவபொம்மையை எரித்தனர்.  

Advertisment

காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு  உருவ பொம்மை எரிப்பு செயல் காங்கிரஸாரை கோபப்படுத்தியது. பிப்ரவரி 21ஆம் தேதி காங்கிரஸ் மாநில தலைவர் வைத்திய லிங்கம், முன்னாள் முதலமைச்சர் நாரா யணசாமி உட்பட முக்கிய நிர்வாகிகள் தலைமையில் 100 காங்கிரஸார், பா.ஜ.க. அலுவலகத்தை முற்று கையிட்டு போராட் டம் நடத்தி பதிலடிதர முடிவுசெய்து 100 அடி சாலையில் குவிந்தனர். 

தங்கள் அலுவலகத்தை முற்றுகையிட காங் கிரஸார் வருகிறார்கள் என பா.ஜ.க.வினர் அறிந்து கொண்டு முன்னாள் எம்.எல்.ஏ. பாஸ்கர், செயலாளர் வெற்றிச்செல்வன் தலைமையிலான டீம் காங்கிரஸாரை தாக்க தடிகளுடன் காத்திருந்தனர். பா.ஜ.க. அலுவலகத்தை நோக்கி காங்கிரஸார் முன் னேறினர். கொஞ்ச தூரத்தில் அவர்களை போலீஸ் டீம் தடுத்தது. தடுப்பை மீறி காங்கிரஸார் முன் னேறிச்சென்று பிரதமர் மோடியின் உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். அப்போது காங்கிரஸ் நிர்வாகிகளும் -பா.ஜ.க. நிர்வாகிகளும் சந்தித்துக்கொள்ள, தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்படியே இருதரப்பும் கற்களையும், காலணிகளை யும் வீசி தாக்கிக்கொண்டனர். இதில் இரு கட்சி தொண்டர்களோடு சேர்ந்து போலீஸார் சிலருக்கும் காயம்பட்டது. பாதுகாப்புக்கு வந்திருந்த எஸ்.பி. வம்சி ரெட்டிக்கு கையில் லேசாக காயம் ஏற்பட்டது. இதனால் கோபமான போலீஸார் தடியடி நடத்தி, இரு தரப்பையும் விரட்டினர். இதனால் பதட்ட சூழ்நிலை உருவானது. 

Advertisment

pondy1

உருட்டுக்கட்டைகளுடன் வந்து காங்கிரஸ் தொண்டர்கள் மீது தாக்குதல் நடத்திய பா.ஜ.க. வினரை கைது செய்யவேண்டும் என நாராயண சாமி தலைமையில் காங்கிரஸார் சாலைமறியல் போராட்டத்தை நடத்தினர். இதனால் பா.ஜ.க.  அலுவலகத்தை சுற்றியும், காங்கிரஸ் அலுவலகம் முன்பும் போலீஸ் பாதுகாப்பை அதிகரித்தது. பா.ஜ.க. மாநில தலைவர் ராமலிங்கம் நேரில் வந்து விசாரித்தவர், காங்கிரஸார் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார். பா.ஜ.க.  அலுவலக முற்றுகை போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியினருடன் த.வெ.க.வைச் சேர்ந்தவர்களும் வந்தார்கள் என பா.ஜ.க. நிர்வாகிகள் தங்கள் மேலிடத்துக்கு கூறியுள்ளனர். 

இதற்கிடையில் புதுவை மாநில பா.ஜ.க. அலுவலகம் தீட்டுப்பட்டுவிட்டது எனச்சொல்லி மஞ்சள் நீர்போட்டு கழுவினர் புதுவை மாநில பா.ஜ.க.வினர். மகிளா மோர்ச்சா அமைப்பின் பா.ஜ.க.  மகளிரணி தலைவி தாமரைச்செல்வி வெளி யிட்ட வீடியோவில், "காங்கிரஸ் மகளிர் பிரிவு மாநிலத் தலைவியான நிஷா விபச்சாரம் செய் பவள், அவள் எல்லாம் எங்கள் அலுவலகத்துக்குள் நுழைந்து மோடியை அசிங்கப்படுத்தியுள்ளார். அவளின் கால்பட்ட இடத்தை புனித நீர் கொண்டு சுத்தம் செய்கிறோம்' எனச் சொல்லி மஞ்சள் கலந்த நீர் தெளித்து பா.ஜ.க. அலுவலகத்தின் முன்பு சுத்தம்செய்து கோஷமிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு தி.மு.க. மகளிரணி உட்பட மகளிர் அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. 

தாமரைச்செல்வி இதற்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்தார், அதன்பின் பா.ஜ.க.  பக்கம் போய்விட்டார். தாமரைச்சொல்வி -நிஷா இருவரும் காங்கிரஸ் கட்சியில் இருந்தபோதே இருவருக்கும் ஆகாது. இந்த விவ காரத்தின் பின்னால் மதரீதியான பிரச்சினை யும் உள்ளது. "நிஷா இஸ்லாமியர் என்பதால் இஸ்லாமிய பெண் ஒருத்தியின் கால்பட்ட இடத்தை சுத்தம் செய்து மதத் தீண்டாமையை செய்துள்ளார்கள் பா.ஜ.க. மகளிரணியினர்' என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

புதுவையில் கலவரச் சூழலை உருவாக்க பா.ஜ.க. திட்டமிட்டு தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது. தி.மு.க. அலுவலகம் முற்றுகை, காங்கிரஸ் அலு வலகம் முற்றுகை என தொடர்ந்து செயல் பட்டுவருகின்றனர்.                 

_________
இறுதிச் சுற்று!

வேலூரில் விஜய்!

pondy2

வேலூர் அகரம்சேரியில் பிப்ரவரி 23-ஆம் தேதி த.வெ.க. நிர்வாகிகள் சந்திப்பு நடைபெற்றது. கடந்த முறை நிர்வாகிகள் சந்திப்பின்போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் கூட்டத்தில் பலியானதையடுத்து முதல்முறையாக மேற்கூரை அமைப்புடனான கூட்டத்துக்கு த.வெ.க. ஏற்பாடு செய்திருந்தது. கூட்டத்தின் தொடக்கத்தில், “"எங்கள் ஓட்டு எங்கள் உரிமை! எங்களை யாரும் விலைக்கு வாங்கமுடியாது. யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்!''’என தொண்டர்கள் சார்பில் விஜய்யே வாக் குறுதி எடுத்து பேச்சைத் தொடங்கினார். "நம் ஆட்சி யமைந்ததும் ஒவ்வொரு கிராமத்துக்கும் வந்து மக்களைச் சந்திப்பேன். இந்தத் தேர்தல் தமிழ்நாட்டுக்கும், டெல்லிக்குமான தேர்தல் அல்ல... முதல்வருக்கும் விஜய்க்குமான தேர்தல். தமிழக மக்கள் தெளிவானவர் கள். இது தமிழக மக்களுக்கும் ஊழலுக்குமான போர். தமிழக மக்களுக்கும் நிர்வாகம் செய்யத் தெரியாத அரசுக்குமான போர். விஜய்க்கும் ஸ்டாலினுக்குமான போர். என்மீது வீசப்படும் அவதூறு, தமிழக மக்கள் மீதான அவதூறு. இனிமே எல்லாத்தையும் பார்த்துக்கொண்டு இருக்கமாட்டோம். ஏன்னா அடிப்படையிலேயே நாங்க விசில் ப்ளோயர்ஸ். ஒரு விசில் புரட்சி நடக்கும்''’என்ற விஜய், "தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம்' என ஒரு பட்டியலை முதன்முறையாக அறிவித்தார்.

-கிங்