உறுதி செய்த ரிப்போர்ட்! உத்தரவிட்ட முதல்வர்! கடலூர் எம்.பி. தொகுதியில் இடைத்தேர்தல்?

sta

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் எம்.பி. ரமேஷை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறது தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "ரமேஷின் முந்திரி ஆலையில் வேலை பார்த்த தொழிலாளி ssகோவிந்தராஜின் மரணம் தொடர்பான அனைத்து சந்தேகங்களும் ரமேசை நோக்கியே நீள்கிறது என முதல்கட்ட போலீஸ் விசாரணையிலும், கடலூர் மாவட்ட தி.மு.க.வினரின் விசாரணையிலும் கிடைத்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், குற்றவாளிகள் தி.மு.க.வினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என தீர்மானித்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, "கோவிந்தராஜ் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்'”என பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது. அதேபோல, சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக் கிறது. இவற்றை முதல்வரின் கவனத்துக்கு மாநில உளவுத்துற

கொலை வழக்கில் நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்ட கடலூர் எம்.பி. ரமேஷை தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிக்க முடிவு செய்திருக்கிறது தமிழக சி.பி.சி.ஐ.டி. போலீஸ்.

இதுகுறித்து அறிவாலய வட்டாரங்களில் நாம் விசாரித்தபோது, "ரமேஷின் முந்திரி ஆலையில் வேலை பார்த்த தொழிலாளி ssகோவிந்தராஜின் மரணம் தொடர்பான அனைத்து சந்தேகங்களும் ரமேசை நோக்கியே நீள்கிறது என முதல்கட்ட போலீஸ் விசாரணையிலும், கடலூர் மாவட்ட தி.மு.க.வினரின் விசாரணையிலும் கிடைத்த தகவல் முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தெரிவிக்கப்பட்டது. அதிர்ச்சியடைந்த அவர், குற்றவாளிகள் தி.மு.க.வினராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் என தீர்மானித்து, சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட்டார்.

இதற்கிடையே, "கோவிந்தராஜ் அடித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்'”என பிரேத பரிசோதனை அறிக்கை சொன்னது. அதேபோல, சி.பி.சி.ஐ.டி. விசாரணையிலும் கோவிந்தராஜ் கொலை செய்யப்பட்டதற்கான ஆதாரங்கள் கிடைத்திருக் கிறது. இவற்றை முதல்வரின் கவனத்துக்கு மாநில உளவுத்துறையினர் கொண்டு சென்றுள்ளனர். இதையடுத்து, கட்சியின் சீனியர்கள் சிலரிடம் மட்டும் விவாதித்தார் ஸ்டாலின்.

பின்னர், கட்சியின் துணை அமைப்பு செயலாளர் அன்பகம் கலையை தொடர்பு கொண்ட ஸ்டாலின், "எம்.பி. பதவியை ராஜினாமா செய்துவிட்டு வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள ரமேஷை வலியுறுத்தவும் என உத்தரவிட்டி ருக்கிறார். இதனை ரமேஷிடம் வலியுறுத்தினார் கலை. ஆனால், டெல்லியில் தனக்குள்ள பா.ஜ.க. சோர்ஸ் மூலம் இந்த விவகாரத்திலிருந்து தப்பிக்க வழி தேடினாரே தவிர, தலைமையின் உத்தரவுக்கு கட்டுப்பட்டு பதவியை ராஜினாமா செய்ய மறுத்தார் ரமேஷ். இதனை கட்சித் தலைமை ரசிக்கவில்லை.

ss

அதேசமயம், தலைவர் ஸ்டாலினையும் தனக்கு எம்.பி. சீட் வாங்கித் தந்த உதயநிதியையும் சந்தித்து தன்னிலை விளக்கமளிக்க ரமேஷ் பகீரத முயற்சிகள் பலவற்றை எடுத்தும், அவரை சந்திக்க இருவரும் விரும்பவில்லை. பதவியை ராஜினாமா செய்யாமலேயே கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தார் ரமேஷ்.

இந்த விவகாரம் பூதாகரமாகிக்கொண்டே சென்றதால் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வத்தை சந்தித்து விவாதித்த கடலூர் மாவட்ட தி.மு.க.வினர், மாவட்ட கட்சி சார்பில் நாம் ஏதேனும் ரமேஷுக்கு இதில் உதவ வேண்டுமா? என விவாதித்திருக்கிறார்கள். அதற்கு எம்.ஆர்.கே., "ஏற்கனவே இது குறித்து தலைமை யிடம் நான் பேசிவிட்டேன். அமைதியாக இருக்கச் சொல்லியுள்ளனர்''’என தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில்தான், கோவிந்தராஜின் மரணத்தை கொலை வழக்காகப் பதிவு செய்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். இதனையறிந்த ரமேஷ், எந்த சூழலிலும் கைது செய் யப்படலாம் என யோசித்தவர், தனது ராஜினாமா கடிதத்தை தலைவர் ஸ்டாலினுக்கு அனுப்பி வைத்துவிட்டு நீதிமன்றத்தில் சரண டைந்தார் என்று சொல் கிறது அறிவாலய தரப்பு.

நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு, ’"என் தலைவர் அவர்களின் நல்லாட்சியின் மீது வீண்பழி வீசுபவர் களுக்கு மேலும் இடம் கொடுத்திட வேண்டாம் என கருதி, சி.பி.சி.ஐ.டி. பதிவு செய்துள்ள வழக்கில் நீதிமன்றத்தில் நான் சரணடைகிறேன். என் மீதான புகார் ஆதாரமற்றது என்பதை சட்டத்தின் முன்பு நிரூபிப்பேன்'‘என ஒரு அறிக் கையை வெளியிட்டுவிட்டு பண்ருட்டி நீதிமன்றத்தில் சரணடைந்தார் ரமேஷ்.

உளவுத்துறை தரப்பில் விசாரித்த போது, “"ரமேஷுக்கு எதிராக உளவுத் துறை கொடுத்த. ரிப்போர்ட்டை ஆராய்ந்து விட்டு, ஆதாரங்கள் இருப்பின் கொலை வழக்கு பதிவு செய்யலாம் என காவல்துறை தலைவரான டி.ஜி.பி.யிடம் தெரிவித்தார் முதல்வர் ஸ்டாலின். அதன்பிறகு எடுக்கப்பட்ட நடவடிக்கை யில்தான் ரமேஷ் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், இதனை ரமேஷ் எதிர்பார்க்கவில்லை.

ஒரு குற்றவாளிக்குக்கூட தனது தரப்பு நியாயத்தை சொல்ல வாய்ப்பு கிடைக்கும்போது, தனக்கு கிடைக்க வில்லையே என்ற ஆதங்கம் இருந்ததால், பா.ஜ.க.-அ.தி.மு.க. வழக்கறிஞர்களுடன் விவாதிக்க ஆரம்பித்தார் ரமேஷ். அவர்கள் கொடுத்த தைரியத்தால்தான் பதவியை ராஜினாமா செய்வதை இழுத்தடித்தார்.

stalin

இந்த நிலையில், ரமேஷுக்கு எதிரான ஆதாரங்களை நிறையவே சேகரித்திருந்தது சி.பி.சி.ஐ.டி. போலீஸ். இதனை முதல்வர் ஸ்டாலினுக்கு உளவுத்துறை அதிகாரிகள் விவரித்த துடன், பா.ஜ.க. தரப்பிடம் ரமேஷ் நெருக்கம் காட்டு வதையும் சுட்டிக்காட்டியுள்ளனர். பா.ஜ.க.வினரிடம், எனது ஆலையிலிருந்து போலீஸ் ஸ்டேசனுக்கு கோவிந்தராஜ் செல்லும் போது உயிருடன்தான் இருந்தார். எந்த பிரச்சனையும் இல்லை. ஸ்டேசனில்தான் ஏதோ நடந்திருக்கிறது'’என போலீஸ் மீது குற்றம்சாட்டும் வகையில் சொல்லிவருகிறார். இதையே அவர் நீதிமன்றத்தில் சொன்னால் அரசுக்கு கெட்டபெயர் வரும் என்கிற கூடுதல் தகவல்களையும் ஸ்டாலினிடம் சொல்லியுள்ளனர்.

இதனையடுத்து நடந்த விவாதத்திற்கு பிறகு, கைது நடவடிக்கை வேண்டாம்; அவரை சரணடையச் சொல்லுங்கள் என்ற அதிகாரிகளின் யோசனையையேற்று சில நடவடிக்கைகளை எடுத்தார் ஸ்டாலின். அதன்படி ரமேஷை சரணடைய வைக்கும் முயற்சியை எடுத்தது கடலூர் மாவட்ட தி.மு.க. இந்த கொலை விவகாரத்தை பயன்படுத்தி தி.மு.க.வுக்கு எதிராக பா.ஜ.க. அரசியல் செய்ய இடம் தந்திடக்கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்துகிறார் முதல்வர் ஸ்டாலின்'' என்கிறார்கள் உளவுத்துறையினர்.

ரமேஷ் வென்ற கடலூர் எம்.பி. தொகுதிக்கு இடைத் தேர்தலை எதிர்பார்க் கிறது அரசியல் களம்.

nkn161021
இதையும் படியுங்கள்
Subscribe