ருப்புக்கோட்டையில் உள்ள ஒரு கல்லூரியின் உதவிப் பேராசிரியையான நிர்மலாதேவி, கவர்னரோடும் கவர்னர் மாளிகையோடும் உள்ள தொடர்பு பற்றி வெளிவந்த செய்திகளில் துளி அளவுகூட உண்மை இல்லை. இது முற்றிலும் பொய்யானது. நற்பண்புகள் மற்றும் உண்மையின் மீது கொண்ட வெறுப்புதான், எந்த ஒரு பத்திரிகையாளரையும் நக்கீரன் இதழில் வெளிவந்தது போல எழுத வைத்துவிடும். மஞ்சள் பத்திரிகைகள் போன்று எழுதப்பட்ட பொய்யான தகவல்களே இவை.’

-நக்கீரனில் நிர்மலாதேவி விவகாரம் வெளிவரத் தொடங்கி, ஆறு மாதங்கள் கடந்த நிலையில், இப்படி ஒரு விளக்கத்தை அளித்திருக்கிறது கவர்னர் மாளிகை.

nirmaladevi

‘துளிகூட உண்மை இல்லை’ என கவர்னர் பன்வாரிலால் புரோகித் தரப்பில் சொல்லப்பட்டிருப்பதால், ‘உண்மையில் நடந்தது என்ன?’ என்பதை மேலும் அறிந்து உறுதிப்படுத்துவதற்காக நக்கீரன் குழு களமிறங்கியது.

""ரொம்ப ரொம்ப ஹையர் அஃபிசியல். உங்களுக்கு கவர்னர் வர்ற வீடியோவெல்லாம் அனுப்பிச்சிருந்தேன்ல. சில விஷயங்கள் இன்னும் நடந்துச்சு. கவர்னர் தாத்தா இல்ல. கவர்னர் மீட்டிங் வீடியோவுல நான் எந்த அளவுக்கு பக்கத்துல இருந்து எடுத்திருக்கேன்னு உங்களுக்குத் தெரியும்..

ஸோ.. அந்த அளவுக்கு என்னால மூவ் பண்ண முடியும். சீக்ரஸி.. பிரைவஸி. இதை அவங்க மெயின்டெய்ன் பண்ணிக்கிட்டிருக்காங்க'' என்று நிர்மலாதேவி ஆடியோவில் பேசியிருந்ததால், கவர்னருடன் நிர்மலாதேவி இருக்கும் வீடியோவைப் பார்த்த அந்த 4 மாணவிகளையும் அருப்புக்கோட்டையில் தேடினோம்.

மாணவிகளின் இருப்பிடத்தை நன்கறிந்த தேவாங்கர் கலைக்கல்லூரியும், அருப்புக்கோட்டை காவல்துறையும், வழக்கறிஞர் ஒருவரும் ‘"பெரிய இடத்து விவகாரம்'’ என்று மாணவிகளின் முகவரியைத் தர மறுத்துவிட்ட நிலையில், வீதி வீதியாக சல்லடை போட்டுத் தேடினோம். ‘

முகத்திரை கிழியும்!

மாணவி ஒருவரின் பெற்றோர் பெயரைச் சொல்லி விசாரித்தபோது, ""அவரை எனக்கு நல்லாத் தெரியும். ஆனா, இந்தப் பிரச்சனைக்குப் பிறகு அவரு வீடு மாறிப் போயிட்டார்'' என்றவர், வேறொரு தெருவைக் குறிப்பிட்டார். அந்தத் தெருவில் ஒவ்வொரு வீடாக விசாரித்தோம். மளிகைக்கடைக்காரர் ஒருவர் ""இங்கேயிருந்து நாலாவது சந்து''’என்று கை காட்ட, ஒருவழியாக அந்த மாணவியின் வீட்டை அடைந்தோம்.

மாணவியின் அம்மா கதவைத் திறந்தார். பின்னர் அப்பா வந்தார். நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டு, ""நிர்மலாதேவி விவகாரத்தில் பாதிக்கப்பட்ட மாணவி நித்திலா (பெயர் மாற்றப்பட்டுள்ளது)வின் வீடுதானே இது? அந்த ஆடியோவிலேயே, உங்கள் மகளின் பெயரை நிர்மலாதேவி குறிப்பிட்டிருக்கிறாரே?'' என நாம் கேட்க, சட்டென மறுத்து நம்மை அனுப்புவதிலேயே கவனம் செலுத்தினர்.

governor

""கவர்னருடன் நிர்மலாதேவி இருந்த வீடியோவைப் பார்த்தவர் என்ற முறையில், இதுகுறித்து விசாரிக்கவே வந்திருக்கிறோம். நாட்டு மக்களுக்கு நாம் உண்மையைச் சொல்ல வேண்டும். நக்கீரனுக்கு ஒத்துழையுங்கள்'' என்று சொன்னதும், “""ஆமாங்க.. நான் ஆசிரியைதான்.. நித்திலா என் பொண்ணுதான். இளையவள்''’ என்று உண்மை பேச ஆரம்பித்தார் அம்மா.

""இந்த விஷயத்துல ஒரு அம்மாவா என்னால எதுவுமே பேச முடியல. ரெண்டு பொம்பள புள்ளய வச்சிருக்கேன். அடுத்து அவங்களுக்கு கல்யாணம் பண்ணணும். ஏமாற்று வேலை எத்தனை நாள் நடக்கும்? ஒருநாள் இந்த விவகாரத்துல தொடர்புடையவங்க முகத்திரை கிழியும். சம்பவம் நடந்து, கிட்டத்தட்ட ஒருவருஷம் ஆச்சு. இப்பத்தான் கவர்னருக்கு ஞானோதயம் வந்த மாதிரி அறிக்கை விட்டிருக்காரு'' என்று கூற, நித்திலாவின் அப்பா இடைமறித்து “இந்தப் பிரச்சனையில் ஆரம்பத்துல இருந்தே நக்கீரன்தான் உண்மையை வெளியிட்டுக்கிட்டிருக்கு'' என்றார் அழுத்தமாக.

இரண்டு விதமான விசாரணை!

நிர்மலாதேவி வழக்கில் கைதாகி சிறையில் இருக்கிறார் தமிழ் ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி. கருப்பசாமி சிறை சென்ற நாளில் இருந்து, வழக்கிற்காக லட்சக்கணக்கில் கடன் வாங்கி செலவு செய்து வருகிறது அக்குடும்பம். அவரது மனைவி கனகமணி ஆசிரியையாக இருக்கிறார்.

இதுவரையிலும் நிர்மலாதேவி வழக்கு குறித்து மவுனம் காத்துவந்த கருப்பசாமியின் குடும்பம், முதல்முறையாக நக்கீரனிடம் மனம் திறந்தது.

கருப்பசாமியின் மனைவி கனகமணி, மைத்துனர் அண்ணாதுரை மற்றும் நண்பர் லட்சுமணன் ஆகியோரை திருச்சுழியில் உள்ள வீட்டில் சந்தித்தோம். ""கருப்பசாமியைப் பொறுத்த மட்டிலும், அவரும் நிர்மலாதேவியும் பழகிய கால அளவு வெறும் பத்து நாட்கள் மட்டுமே. முருகன் சொன்னதன் அடிப்படையில், பல்கலை விடுதியில் நிர்மலாதேவிக்கு அறை ஒதுக்குவதற்கு ஏற்பாடு செய்ததும், ஒருமுறை காரில் பயணம் செய்தது மட்டுமே அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டதற்கான காரணங்கள். நிர்மலாதேவி கைது செய்யப்படும் நாளில், எந்தப் பதற்றமும் இல்லாமல் கருப்பசாமி எங்களுடன்தான் இருந்தார். எனக்கும் நிர்மலாதேவிக்கும் எந்தவித தப்பான தொடர்பும் இருந்ததில்லை என்பதே கருப்பசாமி அளித்த உறுதியான வாக்குமூலம்.

கருப்பசாமியிடம் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய விசாரணையும், கவர்னரால் நியமிக்கப்பட்ட சந்தானம் நடத்திய விசாரணையும் இரண்டுவிதமாக இருந்தது. கருப்பசாமியை நான்கு மணி நேரம் விசாரித்த சந்தானம், ‘""நிர்மலாதேவியோடு உங்கள் இருவருக்கு மட்டுமே தொடர்பு என்பதோடு நீங்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்'' என்று கூலாகச் சொல்லிவிட்டு,

amrish

""உங்கள் மீது எந்தத் தவறும் இல்லை. உங்களைக் குற்றவாளி ஆக்கினால், மான நஷ்ட வழக்கே தொடுக்கலாம் என்று அத்தனை உறுதியாகக் கூறியிருக்கிறார்'' என்றார்கள்.

செல்போனில் கருப்பசாமியுடன் பேசியதற்காக மைத்துனர் அண்ணாதுரையையும், உறவினரும் வழக்கறிஞருமான மணிராஜையும் சி.பி.சி.ஐ.டி. அதிகாரிகள் விசாரித்துள்ளனர்.

சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி.யிடம் மணிராஜ், ""கருப்பசாமி அளித்த வாக்குமூலத்தை அடிக்கடி மாற்றியிருக்கின்றீர்களே'' என்று கேட்டதற்கு, ‘""இது கவர்னர் தொடர்பான விவகாரம். அப்படித்தான் வாக்குமூலத்தை மாற்றுவோம்'' என்று சொல்லியிருக்கிறார்.

இந்த வழக்கில் முதலில் பெறப்பட்ட வாக்குமூலத்தைப் பதிவு செய்யாமல், இரண்டாவதாக, தங்களுக்குத் தேவையான வகையில் வாக்குமூலத்தை மாற்றிப் பதிவு செய்திருக்கிறார்கள். முதலில், கருப்பசாமிக்கு ஜாமீன் வழங்கும் அளவுக்கு நீதிமன்றம் தயாராக இருந்தது. ஜாமீன் வழக்கில் தீர்ப்பு வழங்கும் நாளிலோ, திடீரென்று ஜாமீன் மறுக்கப்பட்டது. என்ன நடக்கிறதென்றே தெரியவில்லை'' என்றார்கள் வேதனையுடன் இருவரும்.

காப்பாற்றப்படும் கவர்னர் மாளிகை!

நிர்மலாதேவி வழக்கில், கவர்னரால் நியமிக்கப்பட்ட சந்தானம் ஐ.ஏ.எஸ். இரண்டுவிதமாகச் செயல்பட்டிருப்பது தெரிகிறது. அவர் கருப்பசாமி மற்றும் முருகனிடம் ‘"இதற்கு மேல் எதுவும் சொல்லாதீர்கள்' என்று உத்தரவிட்டு, கவர்னர் மாளிகையை தப்பிக்கச் செய்திருக்கிறார். ஆனாலும், குற்றம் சாட்டப்பட்ட இருவரிடமும் தனிப்பட்ட முறையில், "நீங்கள் அப்பாவிகள்' என்று உண்மையை ஒப்புக்கொண்டிருக்கிறார். சிறையில் இருக்கும் மூவரும் சிறுபான்மை மற்றும் ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்.

சி.பி.சி.ஐ.டி. போலீசாரோ, ஒருபடி மேலே சென்று, பலப்பிரயோகம், மிரட்டல் அஸ்திரம் போன்றவற்றைக் கையில் எடுத்திருக்கின்றனர். சாட்சிகளையும் குற்றம் சாட்டப்பட்டவர்களையும் கடுமையாக மிரட்டியிருக்கின்றனர். "நிர்மலாதேவி மாணவிகளைத் தவறான நோக்கத்துடன் அழைக்கவில்லை. மாணவிகள்தான் தவறாகப் புரிந்து கொண்டார்கள்' என்கிற ரீதியில் ஒருபுறமும், "முருகன் மற்றும் கருப்பசாமிக்காகத்தான் மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசினார்' என்று இன்னொரு புறமும், திட்டமிட்டே வழக்கை திசை திருப்பியிருக்கின்றனர்.

nirmaladevi

அத்துடன், ""உங்கள் லெவலில் உள்ளவர்களையோ, உங்களைக் காட்டிலும் கீழ் நிலையில் பொறுப்பு வகிப்பவர்களையோ, நான்கு பேரைக் கை காட்டுங்கள். நான்கு மாணவிகளுக்கும் நான்கு பேர் என்று கணக்கைச் சரிசெய்து விடலாம், உங்களை விட்டுவிடுகிறோம் என்று டீல் பேசியிருக்கின்றனர். ஆனால், உங்களுக்கு மேலான பொறுப்புக்களில் உள்ள யார் பெயரையும் கூற வேண்டாம்'' என்று கடுமையாகக் கூறியிருக்கின்றனர்.

சந்தானம் கமிஷன் அமைத்துத் தந்த பாதையிலேயே பயணித்த சி.பி.சி.ஐ.டி., மூன்று பேரோடு வழக்கை முடித்துவிட திட்டமிட்டு செயல்பட்டிருப்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.

இந்த வழக்கில் சிலரைத் தப்ப வைப்பதற்காக, அம்ரேஷ் பூஜாரி தலைமையிலான சி.பி.சி.ஐ.டி. போலீசார் எஸ்.பி.ராஜேஸ்வரி மூலம், பேரம் நடத்தியதாக குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு கண்ணீர் மல்கச் சொல்கிறது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகப் பாதுகாப்புக்குழு கூட்டமைப்பின் செயலாளர் முரளி ""மதுரை காமராஜர் பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் தங்கவில்லை என்று சொல்கிறார் கவர்னர். ஆனால், கவர்னர் தங்குவதற்காக பல லட்ச ரூபாயில் அந்த கெஸ்ட் ஹவுஸின் கழிப்பறை புதுப்பிக்கப்பட்டது. கவர்னர் வராத கெஸ்ட் ஹவுஸின் கழிப்பறைக்காகவா லட்சம் லட்சமாக பல்கலைக்கழகம் செலவு செய்தது? அதற்கான ஆவணங்கள் என்னிடம் உள்ளன'' என்றார்.

விருதுநகர் மாவட்டத்தில் பிரபல பஸ் கம்பெனி அதிபர் ஒருவரும், உயர் கல்வித்துறை அமைச்சரும், இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சிலருக்காக உதவியிருப்பதாக, இந்த வழக்கை ஆரம்பத்திலிருந்தே கவனித்துவரும் சமூக ஆர்வலர்கள் வருத்தத்துடன் நம்மிடம் பகிர்ந்து கொண்டனர். நம்மிடமும் ஏராளமான ஆதாரங்கள் உள்ளன. தோண்டத் தோண்ட பல ரகசியங்கள் வெளிப்படுகின்றன.

-சி.என்.இராமகிருஷ்ணன், தாமோதரன் பிரகாஷ், அண்ணல்

Advertisment

கெஸ்ட் ஹவுசில் கவர்னர் தங்கினார்!-நேரில் பார்த்த சாட்சி!

Advertisment

lawyer

நண்பர்கள் பலரை இணைத்து, அருப்புக்கோட்டை அரண்கள் என்ற பெயரிலான முகநூல் பக்கத்தின் மூலம், உள்ளூர் பிரச்சனைகளை அலசி ஆராய்ந்து, சமூக சேவையில் தன்னை ஈடுபடுத்தி வருபவர் வழக்கறிஞர் தங்கப்பாண்டி. நிர்மலாதேவி விவகாரத்தை அறிந்த அவரை அருப்புக்கோட்டையில் உள்ள வழக்கறிஞர் அலுவலகத்தில் சந்தித்தோம்.

""நிர்மலாதேவி ஆடியோவில் பேசியதை கோடிக்கணக்கான பேர் கேட்டார்கள். அதில் கவர்னரைப் பற்றி நிர்மலாதேவி குறிப்பிடுவதை விவரித்து நக்கீரன் எழுதியதைப் பார்த்த ஒரு மாணவர், என்னுடைய முகநூல் பக்க இன்பாக்ஸில் வந்தார். "கவர்னர் பன்வாரிலால் அன்னை தெரஸா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவுக்கு வந்த அன்று இரவு ஒரு மாநில அமைச்சருடன் பல்கலைக்கழக விடுதியில் தங்கினார். கவர்னருக்கு உணவு பரிமாறுவதற்கு பல்கலைக்கழகத்தில் கேட்டரிங் துறையில் படிக்கும் மாணவர்களை அனுப்பினார்கள். அதில் நானும் இடம் பெற்றிருந்தேன். நான், கவர்னர் மற்றும் அவருடன் தங்கியிருந்த அமைச்சருக்கு உணவு பரிமாறினேன்' என்று தகவல் அளித்தார்.

அன்று கவர்னருடன் தங்கியிருந்தது அமைச்சர் ஓ.எஸ்.மணியனா, கே.பி. அன்பழகனா என்று புரியாமல் இருந்தார். ஆனால், நக்கீரன் அட்டையில் கவர்னரின் படத்தைப் பார்த்துவிட்டு, பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுஸில் இரவு தங்கியது கவர்னர்தான் என்று உறுதியாகச் சொன்னார். அந்த மாணவர் பிறகு நேரிலும் வந்து என்னைச் சந்தித்து, இந்த தகவல்களை உறுதிப்படுத்தினார். இந்த சம்பவத்தில் தொடர்புடைய மாணவிகளையும், அவர்களுடைய பெற்றோரையும் எனக்கு மிக நன்றாக தெரியும். ஆடியோ வெளியான சமயத்திலிருந்து இன்றுவரை, அவர்கள் என்னுடன் தொடர்பில் இருக்கிறார்கள். இந்த சம்பவத்தில் தொடர்புடைய நான்கு மாணவிகளை தவிர அந்தக் கல்லூரியில் படித்த பல மாணவிகளை நிர்மலாதேவி பயன்படுத்தியிருக்கிறார். அதில் ஒருவர், அருப்புக்கோட்டையைச் சேர்ந்த மாணவி, இப்போது திருமணமாகி வாழ்ந்துகொண்டிருக்கும் அவர், என்னிடம் வந்து, "நிர்மலாதேவி பற்றி வந்த ஆடியோ அனைத்தும் உண்மை' என்றார். ஆனால், மீடியாவுக்குப் பேச மறுத்துவிட்டார்.

தற்போது நான்கு மாணவிகளை சி.பி.சி.ஐ.டி. போலீசார் மிரட்டி வைத்திருக்கிறார்கள். யார் கேட்டாலும் "நிர்மலாதேவி மேடம் தப்பா பேசல. அந்த சிச்சுவேசன்ல நிர்மலாதேவி மேடம் பேசியதை நாங்க தப்பா புரிஞ்சிக்கிட்டோம்' என சொல்லச் சொல்லி இருக்கிறார்கள். ஆகவே, யாரும் வாய் திறக்க மாட்டார்கள்'' என்ற வழக்கறிஞர் தங்கப்பாண்டியன், கவர்னர் பல்கலைக்கழக கெஸ்ட் அவுசில் தங்கியது உண்மை என, அவருக்கு உணவு பரிமாறிய பல்கலைக்கழக மாணவன் அனுப்பிய இன்பாக்ஸ் மெசேஜை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வாட்ஸப்பில் நமக்கு அனுப்பினார்.

கவர்னரை சந்திக்கும் வீடியோ என மாணவிகளிடம் நிர்மலாதேவி சொன்ன நிலையில், அந்த வீடியோவை கைப்பற்றும் முயற்சியிலேயே, சி.பி.சி.ஐ.டி. இறங்கவில்லை. மாணவிகளை யாருக்காக அழைத்தார் என்பது குறித்த மிக முக்கியமான ஆதாரமாக இருந்தும், அந்த வீடியோ குறித்த உண்மை விவரங்கள் வெளிவரவே இல்லை.

விசாரணை அதிகாரி சொன்னது என்ன?-ஆடியோ ஆதாரம்!

judge santhanamநிர்மலாதேவி வழக்கின் மர்ம முடிச்சுக்களை ஒவ்வொன்றாக அவிழ்த்துவரும் முருகனின் மனைவி சுஜாவை, ஒத்தக்கடையில் உள்ள அவருடைய வீட்டில் சந்தித்தோம். அவருடைய பெற்றோர், தம்பி ஜெகதீஷ், தங்கை சுவிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

""புத்தாக்கப் பயிற்சிக்கு வந்த நிர்மலாதேவியை என் கணவர் முருகனுக்கு அறிமுகம் செய்து வைத்தது தொலைதூர கல்வித்துறையில் பணிபுரியும் ரவிச்சந்திரன்தான். அறையில் தண்ணீர் வசதியில்லை என்று நிர்மலாதேவி குறை கூற, புத்தாக்கப் பயிற்சியை நடத்திய அதிகாரி கலைச்செல்வன், இப்போது கவர்னர் தங்கியதாகச் சொல்லப்படும், பல்கலைக்கழக கெஸ்ட் ஹவுசில் அறை ஒதுக்கிக் கொடுத்தார். அதோடு நிற்காமல், பல்கலை காரில் தினமும் நிர்மலாதேவியை அருப்புக்கோட்டையில் உள்ள அவருடைய வீட்டுக்கு அனுப்பவும் செய்தார். செல்வாக்கு மிக்கவரான கலைச்செல்வன் பி.ஆர்.பி.க்கு உறவினர். பல்கலையில் உயர் பொறுப்பில் உள்ளவர்களுக்கும் நிர்மலாதேவிக்கும்தான் தொடர்பு இருந்திருக்கிறது. ஆனால், கருப்பசாமிக்கும் முருகனுக்காகவுமே கல்லூரி மாணவிகளிடம் நிர்மலாதேவி பேசியதாக சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.ராஜேஸ்வரி குற்றம் சாட்டினார். அதனால் கோபப்பட்ட முருகன், ‘"நிர்மலாதேவியை நேரில் அழைத்து வாருங்கள். நானே அவரைக் கேட்கிறேன்' என்று சொல்ல, நிர்மலாதேவியையும் முருகனையும் ஒரே இடத்தில் வைத்து விசாரித்திருக்கிறார்கள். அப்போது நிர்மலாதேவி, "முருகனுக்கும் நான் மாணவிகளிடம் செல்போனில் பேசியதற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை' என்றிருக்கிறார்.

sudha-murugan

பட்டமளிப்பு விழாவில் கவர்னர் கலந்துகொண்டபோது, முருகன் அவருடைய அறையில்தான் இருந்தார். இந்த விஷயத்தை சந்தானம் விசாரணையின்போது எடுத்துச் சொன்னோம். முருகன் குறித்த உண்மையை அறிந்த விசாரணை அதிகாரி சந்தானம் ‘"சி.பி.சி.ஐ.டி. முன், என்னால் எதுவும் பண்ண முடியாது. முருகனை விடச்சொல்லி, சிபாரிசு செய்யவும் முடியாது. சி.பி.சி.ஐ.டி. உயர் அதிகாரியான ஏ.டி.ஜி.பி.யிடம் பேசுங்கள். உங்களுடைய நிலைமை எனக்குப் புரிகிறது. அனாவசியமாக மாட்டிக்கொண்டு அவமானப்பட்டு கஷ்டப்படுகிறார் முருகன்' என்று அனுதாபம் காட்டியபோது, ஒட்டுமொத்தமாக முருகனுக்கு ஜாமீனே கொடுக்காமல் வழக்கை முடித்துவிடுவார்களோ என்ற சந்தேகத்தை முன்வைத்தோம். அதற்கு சந்தானம் “"அந்த மாதிரியெல்லாம் பண்ண மாட்டாங்க. ஜாமீன் கொடுப்பது குறித்து கோர்ட்தான் முடிவு செய்யும். நிச்சயமாக முருகனுக்கு ஜாமீன் கிடைக்கும்' என்று நம்பிக்கையோடு சொன்னார். ஆனால், இன்று வரையிலும் ஜாமீன் கிடைக்கவில்லை'' என்று வேதனையை வெளிப்படுத்தியவர்கள், அவர்களின் உரையாடலின் போது ஆடியோவில் பதிவான சந்தானத்தின் வார்த்தைகளை, நம்மிடம் ‘ப்ளே’ செய்தார்கள்.

மதுரை மத்திய சிறையில் மனுபோட்டு, அக்டோபர் 15-ம் தேதி முருகனை சந்தித்த மைத்துனர் ஜெகதீஷிடம் ’’விசாரணையின்போது ""கருப்பசாமியை கழுத்திலேயே குத்தினார் சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. முத்துசங்கரலிங்கம். "அப்ரூவராக மாறிவிடு' என்று மிரட்டினார். சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி.ராஜேஸ்வரி கவர்னர் அலுவலகத்தின் கைப்பாவையாகச் செயல்பட்டார்'' என்று கூறியிருக்கிறார் முருகன்.