நடிகை விஜயலட்சுமி, நா.த. கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தொடுத்த வழக்கில், வழக்கை விரைந்து முடிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில்... காவல்துறை சீமானின் வீட்டில் அழைப்பாணை ஒட்ட, அதை அவர்கள் வீட்டிலுள்ளவர்கள் கிழிக்க, கடந்த சில தினங்களாக பல்வேறு பரபரப்புகள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
"தவளை தன் வாயால் கெடும்' என்பார்கள்.… சீமானையும் இதில் சேர்த்துக்கொள்ளலாம்.
அழைப்பாணை சம்பவம் குறித்து தர்மபுரியில் பத்திரியாளர்களைச் சந்தித்து பேட்டியளித்த சீமான், "அதென்ன பாலியல் வழக்கு…. யார் அந்தப் பொம்பளை? …சொல்லிட்டா குற்றம் ஆகிடுமா… ஆயிரம் பேர் ஆயிரம் சொல்வாங்க. விசாரிக்கணும்ல. விசாரிக்காமலே நீ உறுதி பண்ணிடுவியா? என்னமோ வயசுக்கு வந்த பிள்ளைய, குச்சிலில் இருந்து தூக்கிட்டுப் போய் சோளக் காட்டுல வெச்சு குண்டுக்கட்டா கற்பழிச்சு விட்டதை மாதிரி கதறிக்கிட்டிருக்கீங்க எல்லாரும். உங்க மனநிலை என்ன?… என்னை அரசால சமாளிக்க முடியலை. அப்பப்ப ஒரு பொம்பளைய முன்னால கொண்டுவந்து நிறுத்துது. என்னமோ கல்லூரில படிச்சுக் கிட்டிருக்கிற பொம்பளைய கடத்திக் கிட்டுப் போய் கற்பழிச்சு விட்ட மாதிரி… என்னாங்கடா?''
-என கற்பழிப்பு என்ற சொல்லே நாகரிகமற்றது என ஊடகங்கள் அந்த சொல்லையே தவிர்க்கும் நிலையில், ஒரு கட்சியின் தலைவரான சீமான், தன்னைச் சுற்றி பெண் நிர்வாகிகளை வைத்துக்கொண்டு கொஞ்சமும் தயக்கமின்றி அந்த சொல்லைப் பயன்படுத்துகிறார்.
வழக்கை வாபஸ் வாங்க நடிகை விஜய லட்சுமிக்கு 2 கோடி ரூபாய் கொடுத்து பேரம் நடந்ததாக தகவல்கள் வருகிறதே என்று சீமா னின் மனைவி கயல்விழியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு, "2 கோடி ரூபாயா?… அவ்வளவு பணம் யார்கிட்ட இருக்கு அவங்களுக்கு கொடுக்கிறதுக்கு. அப்படி அவங்களுக்குக் கொடுக்கணும்னு அவசியமும் இல்லையே'' என்கிறார்.
சீமானோ அதுகுறித்து இன்னொரு பேட்டியில், "உதவின்னு கேட்டு வரும்போது கொடுத்துத் தொலைக்கிறதுதான். அவங்களுக் கும் நமக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உதவின்னு கேட்டதும் தம்பிங்ககிட்ட ஏதாவது உதவிவிடுங்கன்னு சொன்னேன். தம்பிகளும் இரண்டு மூணு மாசம் உதவியிருப் பாங்க'' இப்படி மனைவி சொன்னதுக்கு மாறாக சீமான் பேசியிருக்கிறார்.
அதேபோல் சேலம் விமான நிலையத்தில், "இந்த வழக்கை மீண்டும் நீதிமன்றத்துக்குக் கொண்டுசென்றதே நான்தான்'' என்ற சீமான், “"இந்த வழக்கு ரொம்ப நாளா துயரமா இருக்கு. திரும்பியும் ஒருக்க விசாரிச்சு விடுங்கன்னு சொன்னேன். இது முற்றுப்பெற்றுட்டா என்னை ஒண்ணும் செய்யமுடி யாது''’என்று வழக்கு வரக் காரணம் நான்தான் எனக் கூறிவிட்டு, கலாட்டா.காம் பேட்டியொன்றில், "தி.மு.க.ங்கிறத நான் சொல்லித்தான் தெரியணும்னா,…நான் எதுவும் பேச முடியாது. இந்த அரசுதான் இதைச் செய்யுது. 10 ஆண்டுகள் தொடர்ச்சியா ஆட்சியிலிருந்த அ.தி.மு.க. இதை எதுவுமே செய்யலை'' என தி.மு.க. மீது பழிபோட்டு மாற்றிப் பேசுகிறார்.
இதற்கு பதிலடியாக விஜய லட்சுமியோ, "இன்னைக்கு மீண்டும் பிரஸ்மீட்ல விஜயலட்சுமிய தி.மு.க. காரங்க கூட்டி வந்திருக்கிறதா சொல்லி யிருக்கார். முதன்முதல்ல விஜயலட்சுமிய யாருன்னே தெரியாதுன்னு சொன்னீங்க.. முன்னால காங்கிரஸ் கூட்டிவந்ததா சொல்லியிருக்கீங்க… அடுத்ததா வழக்குக் தொடுத்ததா சொன்னபோது அவங்களை பா.ஜ.க. காரங்க இயக்கிக்கிட்டிருக்கிறதா சொன்னீங்க… அப்புறம் மதுரை செல்வத்தை வெச்சு 2023ல ஒரு பேச்சுவார்த்தைக்கு வந்தீங்க. அப்ப மாசாமாசம் எனக்கு 50,000 போட்டுர்றேன்னு சொன்னீங்க.… சொன்ன மாதிரி போட்டீங்க. என்கிட்ட இருந்து வீடியோவெல்லாம் வாங்கினீங்க.
உங்க பொன்னான வாயிலயிருந்து பொண் டாட்டி...… பொண்டாட்டி என பம்முன வீடியோ வெல்லாம் காவல்துறைகிட்ட கொடுத்திருக்கேன். அதை போலீஸ் நீதிமன்றத்துல கொடுத்து, அதையெல்லாம் பார்த்து, "விஜயலட்சுமி உங்க முதல் மனைவியா?'ன்னு கேட்டிருக்காங்க. இப்ப ரெண்டு நாளுக்கு முன்னாலகூட பேச்சுவார்த் தைக்குக் கூப்பிட்டீங்க. என் பாவம் உங்களை சும்மாவிடாது'' என்றார்.
விஜயலட்சுமியோடான தொடர்பை நியாயப் படுத்துவதாக நினைத்து, சுற்றிலும் பெண்களை வைத்துக்கொண்டு பொதுவெளியில் ஆணாதிக்கத் திமிரோடு மிகமோசமாகப் பேசியிருக்கிறார்.
"விருப்பமில்லாம ஒரு பெண்ணை வலுக் கட்டாயமா கடத்திட்டுப் போய் வன்புணர்வு செய்தாதான் அது குற்றம். விரும்பிப் படுத்தா அதுக் குப் பேர் என்ன நீங்க சொல்லுங்க? பதினைஞ்சு வருஷமா நீங்க எல்லாரும் சேர்ந்து, என்னை, என் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரையும் கற்பழிக்கிறீங்க. எங்க மனநிலை எப்படி இருக்கும்? இந்த இடத்தில அரசியல்ல இவ்வளவு உயரத்தில நான் இல்லாம இருந்து, நான் சாதாரண திரைப்பட இயக்குநரா இருந்தா நீங்க பேசுவீங்களா, அவா பேசுவாளா?'' என்கிறார்.
மற்றொரு வீடியோவில், "அந்தப் பழக்கம் திருமணம்கிற இடத்துக்கே வரலை. மொத்தமாவே விஜயலட்சுமியுடன் ஆறேழு மாதங்கள் மட்டுமே பழக்கம் இருந்தது. அது பழக்கம் மட்டுமே. விரும்பித்தான உறவு வச்சிட்டீங்க. பிடிக்கலை, பிரிஞ்சுபோயிட் டீங்க. இதை யாரும் அவங்ககிட்ட கேள்வி கேட்கமாட்டிங்கிறீங்க. காதல்னு ஒண்ணு இருந்தா உலகத்துல இப்படி முச்சந்தில நின்னு கத்திக்கிட்டு இருப்பாங்களா? இது காதலா? கண்றாவியா?'' எனக் கேள்வி கேட் டதன்மூலம், தனது செயல் கண்றாவியானது என சீமானே ஒப்புக்கொள்கிறார்.
அதோடு நிறுத்தாமல், "1 ஆண்டுக்குள் 7 முறை கருக்கலைத்த சாதனையாளன் நானாத் தான் இருப்பேன்'' என்று தனது கீழ்த்தரமான செயலை சாதனைபோல் சொல்லிச் சிரிக்கிறார். ஆக, முதலில் விஜயலட்சுமி யாரென்றே தெரியா தென்றவர் அடுத்தடுத்து, விஜயலட்சுமியுடன் அந்தரங்க உறவிலிருந்ததையும், அதற்கு விலையாக மாதாமாதம் 50 ஆயிரம் ரூபாயை, அதுவும் தான் செய்த தப்புக்கு தம்பிகளை பணம் கொடுக்க வைத்ததை ஒப்புக்கொள்கிறார்! வழக்கு நீதிமன்றத்திற்கு போவதற்குள் இன்னும் என்னென்ன கோமாளித்தனமெல்லாம் பண்ணக் காத்திருக்கிறாரோ சீமான்.
இந்நிலையில், இவ்வளவு நாளாக நடிகை விஜயலட்சுமியோடு சிறிது காலம் குடும்பம் நடத்தியதாக மட்டுமே சொல்லிவந்த சீமான், இறுதியாக, விஜயலட்சுமியை பாலியல் தொழி லாளி என்றே செய்தியாளர்களிடம் சொல்லி அவரை இழிவுபடுத்திப் பேசினார். செய்தி யாளர்களை சந்தித்த சீமான், விஜயலட்சுமி குறித்து... "என்னை பாலியல் குற்றவாளின்னு நீங்க எப்படி சொல்வீங்க? ஒரு பாலியல் தொழிலாளி அவ... அதற்கு ஆதாரங்களை நான் காட்டுறேன்... நான் 15 ஆண்டுகள் கண்ணியமா இருந்தபோது நீங்கள்லாம் என்ன புடுங்குனீங்க? அவதான் பண்ணுனா... அவ ளுக்குதான் மனசு இருக்கு... அவளுக்குதான் காயம்படும்... அவளுக்குதான் நீதி... எங்க வீட்டுல பெண்கள் இல்லையா? என்னை பெற்ற தாய் இல்லையா? என் உடன்பிறந்த அக்கா தங்கைகள் இல்லையா? என்னை உயிரா நேசிச்சு வாழ்ற மனைவியில்ல... அவங் களுக்கெல்லாம் மனசு இல்ல, காயம் இல்ல.. ஒரு சமூகத்தை நேசித்து நிற்கிற மகனை முச்சந்தியில் நிறுத்தி தெனம் அவமானப் படுத்திக்கிட்டிருக்கீங்க... உங்களுக்கெல்லாம் என்ன தகுதி இருக்கு?'' என கேள்வியெழுப்பினார்.
தன்னை பாலியல் தொழிலாளி என்று இழிவுபடுத்தியதைக் கேட்டு ஆற்றாமையால் விஜயலட்சுமி வெளியிட்ட வீடியோவில், "நான் பாலியல் தொழிலாளியாடா? டேய், நான் பாலியல் தொழிலாளியா? இதுநாள் வரைக் கும் நீ தப்பிச்சிருப்படா... இந்த நொடியி லிருந்து உன்னை எப்படி செருப்பாலடிக்கப் போறேன்னு பாரு... பாலியல் தொழிலாளின்னா நான் இன்னைக்கு எங்கக்காவ வச்சுக்கிட்டு பெங்க்ளூர்ல தவிச்சுக்கிட்டு கெடப்பேனாடா? நாசமாப்போவடா... நீ நாசமாப்போவடா! என்னோட கண்ணீரு உன்ன என்ன பண்ணப்போகுது பாரு! உன்னைய என்ன பண்ணப்போறேன் பாரு'' என்று கதறியழுது, சீமானுக்கு எதிராகப் பேசியுள்ளார்.
தன்னோடு ஒரு காலத்தில் இணைந்து வாழ்ந்த ஒரு பெண்ணை இந்த அளவுக்கு இழிவுபடுத்திப் பேசியிருப்பது அனைவர் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
____________
இறுதிச் சுற்று!
சீமானுக்கு எதிரான நடிகை விஜயலட்சுமியின் பாலியல் குற்றசாட்டை 3 மாதத்தில் விசாரித்து முடிக்க வேண்டும் என்று சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து, இந்த வழக்கில் போலீசார் தீவிரம்காட்டிய நிலையில், சீமானுக்கு எதி ரான பாலியல் வழக்கின் விசாரணை முடிவுக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்பட்டது. இதற்கிடையே, இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறை யீடு செய்திருந்த சீமான், "தனக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு தடைவிதிக்க வேண்டும்' என்று கோரி யிருந்தார். இவ்வழக்கின் விசாரணை 3-ந் தேதி வந்தது. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், வழக் கின் விசாரணைக்கு தடை விதித்ததுடன், "இரு வருக்குமிடையிலான இப்பிரச்சனையை பேசித் தீர்க்க வாய்ப்புள்ளதா என்பதை ஆராய்ந்து பார்க்கவும்' என்றும் அறிவுறுத்தியுள்ளது.
-இளையர்
_______________
சீமானுக்கு எதிராக பெண்கள் கொந்தளிப்பு!
பெண்கள் குறித்து சீமான் இழிவாகப் பேசியதற்கு அரசியலில் இயங்கிவரும் சர்வ கட்சிப் பெண்களும் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். தி.மு.க. எம்.பி. கனிமொழி செய்தியாளர்களிடம் கூறுகையில், "சீமான் வீட்டில் இருக்கக் கூடிய பெண்களே இதுகுறித்து கேள்வி எழுப்பவேண்டும். இதைவிடக் கேவலமாக பெண்களை அவதூறாக பேசுவதை கேட்டுக்கொண்டு, சகித்துக்கொண்டு எப்படி கட்சியில் இருக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை'' என்று விமர்சித்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி தனது பதிவில், "இவரெல்லாம் ஒரு அரசியல் கட்சியின் தலைவராக இருப்பது வெட்கக்கேடானது. தமிழ்நாட்டிற்கே தலைகுனிவு. பாதிக்கப்பட்ட பெண்ணை அவமதிப்பது மட்டுமல்லாமல் பெண் இனத்தையே சீமான் அவமதிக்கிறார். இப்படி ஆபாசமாக பாலியல் வக்கிரத் தோடு, பெண்களை அவமதிக்கும் வகையில்,பெண்களின் பாதுகாப்பிற்கும், கண்ணியத்திற்கும் அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசுகிற ஒருவரை ஒரு சமூகமாக நாம் கடுமையாக எதிர்க்கவேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மயிலாடுதுறை காங்கிரஸ் எம்.பி. சுதா, தனது எக்ஸ் தளத்தில், "தான் ஒரு மோசமான அரசியல்வாதி மட்டுமல்ல, அநாகரிகமான மனிதர் என மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். பெண்கள் தொடர்பாக பொதுவெளியில், அயோக்கியர்கள் கூட பேசத்தயங்கும் வார்த்தைகளை கூச்சமின்றி பேசியிருக்கிறார். 50%க்கு மேல் பெண்கள் வசிக்கும் ஒரு மாநிலத்தில் உட்கார்ந்துகொண்டு, பெண்மையைக் கொச்சைப் படுத்திக்கொண்டிருக்கிறார் சீமான். பெரியார் தொடர்பாக ஆதாரமின்றி அவதூறாக சீமான் பேசியபோது, அவர் எங்கள் தீம் பார்ட்னர் என்று சொன்ன தமிழிசை சௌந்தரராஜன், இப்போது என்ன சொல்லப் போகிறார்?. தீம் பார்ட்னரின் கருத்தை ஆதரிக்கிறாரா?'' என்று கேள்வியெழுப்பியுள்ளார்.
சி.பி.எம். மூத்த தலைவர்களில் ஒருவரான உ.வாசுகி, "கலப்படமற்ற அசலான குரூரமான ஆணாதிக்க மூளை சீமானுக்கு... ஒரு கட்சியின் தலைவர், ரேப் அக்யூஸ்டு... இத்தனை விசாரணைக்குப் பின் னுமா ரேப் சட்டம் தெரியவில்லை? பாதிக்கப்பட்டவரை (survivor) வேறு நக்கல் செய்கிறார், நா.த.க. உறுப்பினர்கள் இதற்காகவே கூண்டோடு விலக வேண்டும்'' என்று சீமானை காட்டமாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
சீமானின் மோசமான பேச்சு குறித்து டாக்டர் ஷர்மிளா ஒரு பேட்டியில், "சீமான் ஒரு மூன்றாந்தர பாலியல் பொறுக்கி என்பது எல்லோருக்கும் தெரியும். ஒரு மனிதனுக்கு எவ்வளவு ஆணவம், எகத்தாளம் இருந்தால் ஒரு பிரஸ்மீட்ல இப்படி ஒரு பாலியல் குற்றத்தை நார்மலைஸ் பண்ண முயற்சிபண்ண முடியும்கறதுதான், எனக்கு சீமான் மீதான முதல் கோபம். இரண்டாவது, அதைவிட அதிக கோபம் என்னன்னா, சுற்றி பெண்கள் நின்னுட்டிருக்காங்க. பிரஸ் மீட்ல. இந்தாளு பேசுறத கேட்டுட்டு இவங்கள்லாம் மௌனமா இருக்காங்க. உங்க வீட்டில் பெண் இருந்து இப்படி நடந்திருந்தா... அந்த குற்றவாளி இப்படி தெனாவெட்டா பேசியிருந்தா, நீங்க என்ன செஞ்சிருப்பீங்க? உங்க ரத்தம் கொதிச்சிருக்காதா?'' என்று கடுமையாகக் கேள்வியெழுப்பி யுள்ளார்.
-கௌதமன்