Advertisment

முதல்வருக்கு எதிராக வாக்குமூலம்! அமலாக்கத்துறை டார்ச்சர்! -திணறும் செந்தில்பாலாஜி

dd

சென்னை புழல் சிறையில் நீதிமன்ற காவலில் இருந்துவந்த அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக நீண்ட சட்டப் போராட்டங் களை நடத்தி, ஐந்து நாட்களுக்கு தங்களின் கஸ்டடியில் எடுத்திருக்கிறது அமலாக்கத்துறை. கஸ்டடிக்குச் செல்லாமலே ஜாமின் கிடைத்துவிடும் என செந்தில்பாலாஜியும் தி.மு.க. தலைமையும் நம்பிக்கொண்டிருந்த நிலையில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து அமலாக்கத்துறையின் கஸ்டடிக்கு செந்தில் பாலாஜி சென்றிருப்பது அறிவாலயத்தை அதிர வைத்திருக்கிறது.

Advertisment

இந்த நிலையில், என்ன மாதிரியான கேள்வி கள் கேட்கப்பட்டது? அதனை எப்படி செந்தில் பாலாஜி எதிர்கொண்டிருக்கிறார்? வாக்குமூலம் ஏதேனும் தந்திருக்கிறாரா? என்றெல்லாம் தி.மு.க. தரப்பில் நடக்கும் விவாதங்கள், ஆலோசனைகள் நீண்டுகொண்டேயிருக்கின்றன.

Advertisment

senthilbalaji

இதற்கிடையே முதல்வர் ஸ்டாலினையும் அவரது குடும்ப உறவுகளையும் சிக்க வைப்பதற் கான வாக்குமூலத்தை செந்தில் பாலாஜியிடமிருந்து பெறும் முயற்சியில் பகீரதப்பிரயத்தனம் செய்திருக்கிறது அமலாக்கத்துறை.

புழல் சிறையில் அமலாக்கத்துறை!

செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டது சட்டவிரோதம் அல்ல; அவரை கஸ்டடியில் எடுத்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்று கடந்த 7-ந்தேதி உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்றத் தில் உடனடியாக மனு செய்தது அமலாக்கத்துறை. 8 நாட்கள் கஸ்டடி கேட்கப்பட்ட நிலையில் 5 நாட்களுக்கு அனுமதி தந்தார் நீதிபதி அல்லி! அனுமதி கிடைத்தமாத்திரத்தில் புழல் சிறைக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் விரைந்தனர். ஜூன் 13-ந்தேதி செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்ட போது நடந்ததுபோல இப்போது நடக்க அனு மதிக்கக்கூடாது என்கிற திட்டம் அவர்களிடம் இருந்தது. அதிகாரிகள் எதிர்பார்த்தது போலவே, "உடல்ரீதியாக செந்தில்பாலாஜி பலகீனமாக இருக்கிறார். கோர்ட் தீர்ப்பு வந்ததிலிருந்து அவரது பி.பி. சீராக இல்லை. பதட்டமாக இருக்கிறார். இதய அறுவைச் சிகிச்சை செய்திருப்பதால் மனரீதியாகக் கிடைக்கும் அதிர்ச்சிகள் அவரைstalin பாதிக்கும். அதனால், இங்கேயே உங்களின் விசாரணையை வைத்துக்கொள்ளலாமே' என்று சிறை மருத்துவர்கள் தெரிவித்திருக்கிறார்கள். அதனை ஏற்கமறுத்த அமலாக்கத்துறையினர், "அவரது உடல்நிலை எப்படி இருக்குன்னு நீங்கள் சர்டிஃபை பண்றீங்களா? அல்லது நாங்கள் டாக்டர்களை வரவழைக்கலாமா?' என குரலை உயர்த்தியதும், செந்தில்பாலாஜியை பரிசோதித்து, உடல்நலம் சீராக இருப்பதாக டாக்டர்கள் சர்டிஃபை செய் துள்ளனர். இரவு உணவு சாப்பிட வைத்து சட்ட விதி முறைகளின்படி அமலாக்கத்துறையிடம் செந்தில் பாலாஜியை ஒப்படைத்தது சிறை நிர்வாகம்.

பா

பாலாஜியை கவ்விய பயம்!

முகத்தில் தாடி முளைத்து மிக சோகமாக இருந்தார் செந்தில்பாலாஜி. அமலாக்கத்துறையின ருக்கும் டாக்டர்களுக்கும் நடந்த உரையாடல்களின் போது எதுவும் அவர் பேசவில்லை. நடப்பதை அமைதியாகக் கவனித்தபடி இருந்தார். ஃபார்மா லிட்டி முடிந்ததும் இரவு 8:30-க்கு செந்தில்பாலாஜி யை காரில் ஏற்றிக்கொள்ள, அவரது இருபுறமும் இரண்டு அதிகாரிகள் அமர்ந்து கொண்டார்கள். கார் விரைந்தது. செந்தில்பாலாஜி மிகவும் இறுக்க மாக இருப்பதைப் பார்த்து, அவரை இயல்பு நிலைக்கு கொண்டுவர, "ஃப்ரீயா இருங்க பாலாஜி. தண்ணீர் குடிக்கிறீர்களா?''’என சாதாரணமாக அதி காரிகள் கேட்டனர். தலையை அசைத்து வேண்டாம் என்றவர், வேறு எதையும் பேசவில்லை. இயல்பு நிலைக்கு அவரைக் கொண்டுவர அதிகாரி கள் எடுத்த முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. மிகவும் பதட்டமாக இருந்தவர், சட்டென்று, "என்னை எங்கே கூட்டிக்கிட்டு போறீங்க? உங்க ஆபீஸுக்கா? இல்லை, ஏர்போர்டுக்கா?''’என்று கேட்டுள்ளார் செந்தில்பாலாஜி. டெல்லிக்கு அழைத்து செல்வார்களோ என்ற சந்தேகத்தில் அப்படி கேட்டிருக்கிறார். அவரது முகத்தில் பயம் ஏகத்துக்கும் கவ்வியிருந்தது. அதிகாரிகளோ, "நுங் கம்பாக்கம் அலுவலகத்துக்குத்தான் போறோம்'' என்று சொல்ல, அதில் ஒருவித நக்கல் இருந்துள்ளது.

கஸ்டடியில் பாலாஜி!

நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனிலுள்ள அமலாக்கத்துறையின் இயக்குநர் அலுவலகத்தில் 4-வது மாடியிலுள்ள கைதிகளின் விசாரணை அறையில் அடைக்கப்பட்டார் செந்தில்பாலாஜி. 30 நிமிடம் அவரை தனியாக இருக்க வைத்து வெளி யிலிருந்தபடி அதிகாரிகள் கவனித்தனர். அவரது உடல் நிலையை கவனிப்பதற்காக டாக்டர்களும் வரவழைக்கப்பட்டிருந்தனர். சாஸ்திரி பவனின் வெளியேயும் உள்ளேயும் மத்திய போலீசாரின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. அறையில் அடைக்கப்பட்ட முதல் அரை மணி நேரத்துக்கு எந்த விசா ரணையும் நடக்கவில்லை. அதன் பிறகு டெபுடி டைரக்டர் கார்த்திக் திவேரி உட்பட 4 அதிகாரிகள் பாலாஜியின் அறைக்குள் சென்ற னர். பாலாஜியிடம் "சாப்பிட ஏதேனும் வேண்டுமா? மாத்திரை எடுத்துக் கொண்டீர்களா? குடும் பத்தில் எத்தனை பேர் இருக்கி றார்கள்?'' என்பது போன்ற மிகச்சாதாரணமாக நலம் விசா ரிக்கும் கேள்விகளை ஆரம்பத் தில் கேட்டனர். சாப்பிட எதுவும் வேண்டாம் என்றவர், குடும்பத் தினர் பற்றிய விபரங்களைத் தெரிவித்திருக்கிறார்.

ஜெயலலிதா ஆட்சியில்...!…

"போக்குவரத்துத்துறையில் எந்த கால கட்டத்தில் அமைச்ச ராக இருந்தீர்கள்? எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்? அமைச்சரவையிலிருந்து ஜெயலலிதா ஏன் நீக்கினார்?'' என்றெல்லாம் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு தெளிவாக பதில் சொன்ன பாலாஜி, "ஜெய லலிதா ஆட்சி யில் ஒருத்தரை சேர்ப்பதற்கும் நீக்குவதற்குமான காரணம் யாருக் கும் தெரியாது'' எனச் சொல்லியிருக்கிறார். விசா ரணை தொடர்ந்த நிலையில், "ரொம்பவும் டயர்டா இருக்கேன்'' என பாலாஜி சொல்ல, அப்போது நேரம் இரவு 11:40 மணி. அதன்பிறகு, "நீங்க தூங்குங்க; நாளை காலை 9 மணிக்கு பார்க்கலாம்'' எனச் சொல்லிவிட்டு வெளியே வந்தனர் அதிகாரிகள்.

அமலாக்கத்துறையின் கிடுக்கிப்பிடி!

விடியற்காலை நாலரை மணிக்கெல்லாம் எழுந்துகொண்டார். அவருக்கு டவல், சோப்பு, ப்ரஸ் உள்ளிட்ட பொருட்களை அவரது உறவினர் கள், வழக்கறிஞர்கள் மூலம் கொடுத்தனுப்பி யிருந்தனர். அதைக் கொடுக்க அனுமதிக்கவில்லை. பாலாஜிக்குத் தேவையான பொருட்களை அதிகாரிகளே வாங்கிக் கொடுத்தனர். காலை 6 மணிக்கு வந்த அதிகாரிகள், பாலாஜியின் இரவு நேரத்தை ரீ-வைண்ட் செய்து பார்த்தனர். டாக்டர்களிடம் அவரது மனநிலை குறித்து விசாரித்தனர். பாலாஜி குளித்து முடித்தார். காலை 8:30க்கு இட்லி சாப்பிட்டார். மருந்துகள் எடுத்துக் கொண்டார். 9 மணிக்கு விசாரணை தொடங்கியது. ஒரு நாளைக்கு 50 கேள்விகள் என 200 கேள்விகளை தயாரித்து வைத்திருந்தனர். ஆரம்பத் தில் ஆமாம், இல்லை என்கிற பதில் பெறுகிற வகையில் கேள்விகள் சாதாரணமாக இருந்தன. அவர் மீது போடப்பட்ட வழக்கு என்பது போக்குவரத்துத்துறை வேலை மோசடி வழக்குதான். அது குறித்த கேள்விக்கு, "மோசடி எதுவும் நடக்கவில்லை. பணம் எதையும் நான் வாங்கவில்லை'' என பாலாஜி சொல்ல, "மோசடி நடக்கவில்லை; பணம் வாங்கவில்லைன்னா, பிறகு எதற்கு கோர்ட்டுக்கு வெளியே பணத்தை திருப்பிக் கொடுத்துவிட்ட தாகவும் சமாதானம் ஆகிவிட்டதாகவும் கோர்ட்டில் மனு போட்டீர்கள்? அதன்படி ஒரு வழக்கு தள்ளுபடி ஆகியிருக்கு, தெரியுமா?'' என்று அதிகாரிகள் கொக்கி போட... இந்த கேள்வி வரும் என எதிர்பார்த்தாரோ என்னவோ, "இதெல்லாம் எனக்குத் தெரியாது, என் தம்பிக்குத் தெரிந்திருக்க லாம்'' எனச் சொல்லியிருக்கிறார் பாலாஜி. அப்போது, "உங்க தம்பி அசோக் மூலம்தான் பணம் தரப்பட்டது என பாதிக்கப்பட்டவர்களின் ஸ்டேட்மெண்ட் இருக்கிறது'' என அதிகாரிகள் சொல்ல, "அப்படியா? எனக்குத் தெரியாது. பிசினஸுக்காக அவன் பணம் வாங்கியிருக்கலாம். அரசு வேலைக்காக பணம் வாங்கவில்லை'' எனச் சொல்ல, இதைச் சுற்றியே கேள்விகள் நகர்ந்தன.

வங்கியில் வரவு! திணறிய பாலாஜி!

"நீங்கள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த நேரத்தில், மோசடி நடந்த காலத்தில் உங்க வங்கிக் கணக்கில் 1.34 கோடியும், உங்க மனைவி கணக்கில் 29.55 லட்சமும் டெபாசிட் ஆகியிருக்கு. இந்த பணம் எப்படி வந்தது?'' என்று திடீரென்று அதிகாரிகள் கேட்க, ஒரு கணம் அவருக்கு விறுவிறுத்துவிட்டது. சுதாரித்துக்கொண்ட பாலாஜி, "எங்க சொத்துக்கள் சிலதை வித்து அந்த பணத்தை நண்பர்களின் உதவிக்காக கொடுத் திருந்தான் என் தம்பி. அந்த பணத்தை திருப்பிக் கொடுத்தனர். அதுதான் வங்கியில் போடப் பட்டது'' எனச் சொல்ல, "அந்த காலக்கட்டத்தில் நீங்கள் சொத்து வித்ததற்கான எந்த ஆவணமும் இல்லையே?'' என்று கேட்க, அதற்குப் பதில் சொல்லமுடியாமல் திணறியுள்ளார் செந்தில் பாலாஜி.

ss

பினாமி பெயரில் சொத்துக்கள்! 60 ஆவணங்கள் பதுக்கல்!

காலையில் 4 மணி நேரம், மதியம் 2 மணி நேரம், இரவு 4 மணி நேரம் என ஒருநாளைக்கு குறைந்த பட்சம் 10 மணி நேரம் அவரிடம் விசாரணை நடந்திருக்கிறது. இரண்டாவது நாளில் நடந்த விசாரணையின்போது, "உங்கள் பினாமி பெயரில் 25 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை வெறும் 10.88 லட்சத்திற்கு வாங்கியிருக்கிறீர்கள்'' என்று சொல்ல, "என் பெயரில் எந்த சொத்தும் இல்லை'' என மறுத்துள்ளார் பாலாஜி. உடனே, சில ஆவணங்களை அவர்முன் எடுத்துப் போட்ட அதிகாரிகள், "இது மாதிரி 60 சொத்துகளுக்கான ஆவணங்கள் இருக்கு. உங்கள் நெருங்கிய பினாமி வேடசந்தூர் சாமிநாதனிடம் (தி.மு.க. ஒ.செ.) நீங்க பதுக்கி வைத்திருக்கும் ஆவணங்கள் இது. இப்படி நிறைய ஆதாரங்கள் இருக்கிறது. இதெல்லாம் எப்படி வந்தது?'' என்று அழுத்தமாகக் கேட்க, "அதெல்லாம் எனக்குத் தெரியாது. சாமிநாதன் கட்சிக்காரர். பினாமி யெல்லாம் கிடையாது'' என்று படபடவென சொல்லிவிட்டு மயக்கமாகியிருக்கிறார் பாலாஜி. அதன்பிறகு அவருக்கு ரெஸ்ட் கொடுத்துள்ளனர் அதிகாரிகள்.

முதல்வருக்கு எதிராக வாக்குமூலம்?

மூன்றாவது மற்றும் நான்காவது நாள் விசாரணையில் கேள்விகள் கடுமையாக இருந்துள்ளன. போக்குவரத்துத்துறை வழக்கு என்பதைத் தாண்டி செந்தில்பாலாஜி, அவரது தம்பி அசோக், இவர்களின் உறவினர்கள் மற்றும் பினாமிகள், நண்பர்கள் என ஈரோடு சச்சிதானந்தம், செந்தில், மெஸ் மணி, வேடசந்தூர் சாமிநாதன் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட நபர்களின் பங்களாக்கள், வீடுகள், அலுவலகங்களில் நடந்தப்பட்ட ரெய்டின் போது கிடைத்த ஆவணங்கள், பத்திரப்பதிவுகள், கணக்கில் காட்டப்படாத பணம், சட்டவிரோத பார்கள் மூலம் கிடைத்த வருவாயின் கணக்கு வழக்கு ஆதாரங்கள் என அனைத்தையும் மையப்படுத்தியே கேள்விகள் இருந்தன. ஒவ்வொரு கேள்வியும் ஒரு அணுகுண்டாகவே இருந்துள்ளது. குறிப்பாக, "சட்டவிரோத பார்கள் மூலம் கிடைத்த பணத்தையெல்லாம் எங்கே பதுக்கி வைத் திருக்கிறீர்கள்? யார் சொல்லி சட்டவிரோத பார்கள் நடத்தினீர்கள்? யார் யாருக்கெல்லாம் அந்த பணம் பகிரப்பட்டது? இதெல்லாம் முதலமைச்சருக்கு தெரி யுமா? பணம் வந்த வழி, யாருக்காக வசூலிக்கப்பட்டது, யார் சொல்லி வசூலிக்கப்பட்டது என்கிற பல விசயங்கள் எங்களுக்குத் தெரியும். உங்கள் பினாமிகளும் நண்பர்களுமே எங்களிடம் நிறைய விசயங்களை கக்கியிருக்கிறார்கள். அதனால், இதெல்லாம் பொய் என்றும், எனக்கு தெரியாது என்றும் சொல்லி உண்மை களை மறைக்கப் பார்த்தீங்கன்னா, உங்களுக்குத்தான் சிக்கல். ஏன்னா, எங்களிடம் பல ஆதாரங்கள் இருக்கு. உண்மையை மட்டும் சொல்லுங்க'' என்று அதிரடி காட்டியிருக்கிறார்கள் அமலாக்கத்துறையினர். மேலும் பல போட்டோக்களை காட்டி, இவர்களுக்கும் உங்க ளுக்கும் என்ன சம்பந்தம் என்றெல்லாம் கேட்டுள்ளனர். கஸ்டடியில் கேட்கப்பட்ட கேள்விகள், முதலமைச்சர் ஸ்டாலினுக்கும் அவரது குடும்ப உறவுகளுக்கும் எதிராக செந்தில்பாலாஜியிடம் வாக்குமூலம் பெறுகிற தொனியிலேயே இருந்துள்ளது. அமலாக்கத்துறையின் அதிரடியில் கிறுகிறுத்துப்போன பாலாஜி, அதிகாரி களின் எதிர்பார்ப்புகளுக்கு இடம் கொடுக்காமல், சட்டவிரோதமாக எதுவும் நடக்கவில்லை, தெரியாது, நினைவில்லை என்பதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டே இருந்திருக்கிறார்.

ss

செந்தில்பாலாஜி மீண்டும் கைதா?

பாலாஜியிடம் ஐந்துநாள் விசாரணை போதவில்லை; இன்னும் பல கேள்விகளுக்குப் பதில் பெறவேண்டும் என்று சொல்லி கஸ்டடி காலத்தை நீட்டிக்க அனுமதி கேட்கும் திட்டத்தில் அமலாக்கத் துறை இருப்பதாக தகவல்கள் கிடைக்கின்றன. இதற்கிடையே, சட்டவிரோத பார்கள் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்திருப்பதாகக் கண்டறிந்துள்ள அதிகாரிகள், பினாமிகள் சொத்து பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அதில் செந்தில் பாலாஜியை மீண்டும் கைது செய்ய ஆலோசிக்கிறார்கள். இந்த நிலையில், செந்தில்பாலாஜியின் தம்பி அசோக்குமார், கரூர் -சேலம் பிரதான சாலையில் புதிதாகக் கட்டிவரும் பிரமாண்டமான பங்களாவை பத்திரப்பதிவு அலுவலகம் மூலம் முடக்கி வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இதன்மீது எந்த பதிவும் நடக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளது. இந்த நிலையில், புதிய பங்களாவில் திடீரென 9-ந் தேதி ரெய்டு நடத்திய அமலாக்கத்துறையினர், இந்த சொத்து குறித்த ஆவணங்கள் மற்றும் விவரங்களுடன் நேரில் ஆஜராகி விளக்க மளிக்குமாறு அசோக்குமாரின் மனைவி நிர்மலாவுக்கு சம்மன் அனுப்பியுள்ளது. இதற்கிடையே, தலைமறைவாகியுள்ள அசோக்குமாரை சட்டரீதியாக கைது செய்வதற்கான வழிகளையும் ஆராய்ந்துள்ள னர். செந்தில்பாலாஜி மீண்டும் கைது செய்யப்பட்டால் விசாரணை டெல்லியில்தான் நடக்கும் என்கிறார்கள். செந்தில் பாலாஜியின் கஸ்டடி, முதல்வர் தரப்பில் டென்சனை அதிகரித்தபடி இருக்கிறது. மூத்த வழக்கறிஞர்களிடம் விவாதித்தபடி இருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.

nkn120823
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe