Advertisment

மாநாடு ரெடி! தனித்துப் போட்டி! விஜய் வியூகம்!

elaiyaselvan (957)

டிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரித்து பதிவு செய்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது கட்சியை கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார் விஜய்.

Advertisment

தனது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்குமா? அல்லது அரசியல் விளையாட்டுக்களை விளையாடி தடை போடுவார்களா? என்றெல்லாம் பல கேள்விகளை கட்சியின் தலைவர் விஜய்யும், மூத்த நிர்வாகிகளும் கடந்த 6 மாதங்களாக சுமந்துகொண்டிருந்தனர்.

Advertisment

vijay

இப்படிப்பட்ட நிலையில்தான், த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தத் தீர்மானித்தார். அதனையொட்டி, கட்சியின் கொடியையும், கட்சிப் பாடலையும் சமீபத்தில் அறிவித்தார் விஜய். ஆனால், கட்சிக்கான அங்கீகாரம் குறித்த தகவல்கள் எதுவும் டெல்லியிலிருந்து கிடைக்காமல் இருந்தது.

புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டால் அதனை அங்கீகரிப்பதா? நிராகரிப்பதா? என்பதை ஆராய் வதற்கு 6 மாத காலத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள

டிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாக அங்கீகரித்து பதிவு செய்திருக்கிறது இந்திய தேர்தல் ஆணையம். தமிழக வெற்றிக் கழகம் என்கிற தனது கட்சியை கடந்த பிப்ரவரியில் தேர்தல் ஆணையத்தில் விண்ணப்பித்திருந்தார் விஜய்.

Advertisment

தனது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் குறிப்பிட்ட காலத்தில் கிடைக்குமா? அல்லது அரசியல் விளையாட்டுக்களை விளையாடி தடை போடுவார்களா? என்றெல்லாம் பல கேள்விகளை கட்சியின் தலைவர் விஜய்யும், மூத்த நிர்வாகிகளும் கடந்த 6 மாதங்களாக சுமந்துகொண்டிருந்தனர்.

Advertisment

vijay

இப்படிப்பட்ட நிலையில்தான், த.வெ.க.வின் முதல் மாநில மாநாட்டை நடத்தத் தீர்மானித்தார். அதனையொட்டி, கட்சியின் கொடியையும், கட்சிப் பாடலையும் சமீபத்தில் அறிவித்தார் விஜய். ஆனால், கட்சிக்கான அங்கீகாரம் குறித்த தகவல்கள் எதுவும் டெல்லியிலிருந்து கிடைக்காமல் இருந்தது.

புதிய கட்சியின் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து விட்டால் அதனை அங்கீகரிப்பதா? நிராகரிப்பதா? என்பதை ஆராய் வதற்கு 6 மாத காலத்தை தேர்தல் ஆணையம் எடுத்துக்கொள்ளும். ஆனால், 6 மாதங்கள் முடிந்த நிலையிலும், கட்சிக்கான அங்கீகாரம் குறித்து உறுதியான தகவல் இல்லாத நிலையில், அங்கீகாரம் குறித்த தவிப்பு விஜய்யிடம் இருந்தது. காரணம், கட்சியின் கொடி, பாடல் என அறிவிக்கப்பட்டுவிட்ட நிலையில், கட்சிக்கான அங்கீகாரத்துடன் முதல் மாநாட்டை நடத்தினால் தான் கெத்து என நினைத்திருந்தார் விஜய்.

அந்த வகையில், தற்போது தேர்தல் ஆணையம் தனது கட்சி யை அங்கீகரித்திருப்பதில் விஜய்யும், த.வெ.க. கட்சித் தொண்டர்களும் ஏக உற்சாகத்தில் இருக்கின்றனர்.

இதனை அதிகாரப்பூர்வ மாகத் தெரிவித்துள்ள விஜய், "த.வெ.க.வை அர சியல் கட்சியாக பதிவு செய்து தேர்தல் அரசிய லில் பங்குபெற அனுமதி வழங்கியுள்ளது தேர்தல் ஆணையம். திசைகளை வெல்வதற்கான முன்னறி விப்பிற்கு முதற்கதவு திறந்துள்ளது. தடைகளைத் தகர்த்தெறிந்து தமிழக மக்களுக்கான அரசியல் கட்சியாக வலம் வருவோம்''’என்று கூறியிருக்கிறார்.

இவரது கட்சியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்திருக்கும் அதேசமயம், மாநாட்டுக்கு அனுமதி கொடுத்துள்ளது தி.மு.க. அரசின் காவல்துறை. இதனால் இரட்டிப்பு சந்தோஷத்தில் இருக்கிறார் விஜய்.

vvமாநாட்டுக்கு அனுமதி கேட்டு காவல்துறை யில் முறைப்படி விண்ணப்பித்தும் அனுமதி கிடைக்குமா? அல்லது அனுமதி மறுக்கப்படுமா? என்கிற கேள்விகள் கடந்த 10 நாட்களாக விஜய்யைக் குடைந்துகொண்டிருந்தது. போலீசார் அனுமதி கொடுக்கவில்லையெனில் நீதிமன்றத்தில் முறையிட்டு அனுமதி பெறுவோம் என்கிற அளவுக்கு திட்டமிட்டிருந்தார் விஜய்.

இப்படிப்பட்ட சூழலில்தான் போலீஸின் அனுமதியும் கிடைக்க, இரட்டிப்பு மகிழ்ச்சியில் குதூகலமாகியிருக்கிறார்கள் த.வெ.க.வினர். இனிப்புகள் வழங்கி, பட்டாசுகளை வெடித்து தங்களின் உற்சாகத்தை வெளிப்படுத்தி வருகின்ற னர். தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம், மாநாட்டுக்கான போலீசின் அனுமதி ஆகியவை கிடைத்திருக்கும் சூழலில் மாநாட்டுப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய்.

முதல் மாநில மாநாட்டில் கட்சியின் கொள்கைகள், கோட்பாடுகள், அரசியல் நிலைப் பாடுகள், கொடியின் வரலாறு என அனைத்தையும் வரிசைப்படுத்தி விவரிக்க தீர்மானித்துள்ள விஜய், அதுகுறித்து கட்சியின் முக்கிய நிர்வாகிகளிடம் ஆழமாக விவாதித்து வருகிறார். கட்சியின் கொள்கைகள், அரசியல் நிலைப்பாடு குறித்து கட்சியின் பெயரை அறிவிக்கும் காலகட்டத்தி லேயே விஜய் முடிவு செய்துவிட்டார்.

அந்த வகையில், கொள்கைகளைத் தீர்மானித்த பிறகே கட்சியை பதிவு செய்ய விண்ணப்பித்தார். அதனால் கொள்கைகள் குறித்த விளக்கங்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதுதான் இப்போது விரிவாக விவாதிக்கப்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் எந்த ஒரு பிரதான கட்சியுடனும் கூட்டணி கிடையாது என்பதே எங்கள் கட்சியின் அரசியல் நிலைப்பாடாக இருக்கிறது. அதனை மாநாட்டில் விஜய் உறுதிப்படுத்துவார் என்கிறார்கள் த.வெ.க. நிர்வாகிகள்.

இதற்கிடையே, முதல் மாநில மாநாட் டில் அரசியல் பிர பலங்கள் பலரை கட்சியில் இணைப் பதற்கான ஒரு முயற்சி நடந்து வருகிறது. பலரிடமும் இது குறித்துப் பேசிவருகின்றனர் த.வெ.க. முக்கிய நிர்வாகிகள். அந்த வகையில், வன்னியர் சமூகத்தைச் சேர்ந்தவரும் முன்னாள் அமைச்சருமான செஞ்சி ராமச்சந்திரனை த.வெ.க. முக்கியஸ்தர் அணுகியிருக்கிறார்.

தற்போது அ.தி.மு.க.வின் அமைப்புச் செய லாளராக இருந்துவருகிறார் செஞ்சியார். ஆனால், அக்கட்சியில் உள்ள வன்னியர் சமூக சீனியர்கள் சிலரால் செஞ்சி ராமச்சந்திரனுக்கு உரிய முக்கியத் துவம் தராமல் வைத்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால் அ.தி.மு.க.வில் பட்டும் படாமலும் இருந்துவருகிறார் செஞ்சியார்.

தே.மு.தி.க. கட்சியை கேப்டன் விஜயகாந்த் தொடங்கியபோது, எம்.ஜி.ஆரின் நன்மதிப்பை பெற்றவரும், தமிழக அரசியலில் சாணக்கியர் என்று புகழப்பட்டவரும், முன்னாள் அமைச்ச ரும், வன்னியர் சமூகத்தை சேர்ந்தவருமான பண்ருட்டி ராமச்சந்திரனை அணுகி, அவரது சம்மதத்தைப் பெற்று அவரை தனது கட்சியில் இணைத்த கேப்டன் விஜய்காந்த், அவரை தே.மு.தி.க.வின் அவைத்தலைவர் பதவியில் அமரவைத்தார்.

விஜய்காந்த் மீது மரியாதை வைத்துள்ள விஜய், அவரது பாணியில், வன்னியரான செஞ்சி ராமச்சந்திரனை கட்சியில் இணைக்க விரும்புகிறார். அதற்காக செஞ்சியாரிடம் த.வெ.க. முக்கியஸ்தர் ஒருவர் அணுக, செஞ்சியாரும் இது குறித்து தனது நலன்விரும்பிகளிடம் விவாதித்துவிட்டு, ஓ.கே. சொல்லியிருப்பதாகத் தகவல் கிடைக்கிறது. செஞ்சியார் இணையும் பட்சத்தில் அவருக்கு அவைத்தலைவர் பதவி கிடைக்கும் என்கின்றனர்.

nkn110924
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe