யற்கையாகவே வஞ்சிக்கப்பட்ட காவிரி டெல்டா பகுதியின் சட்டப் பேரவை தொகுதி, திருத்துறைப்பூண்டி (தனி) தொகுதி. நிலத்தடி நன்னீர் வளமற்ற ‘‘உவர்நீர் வளம்” மட்டுமே கொண்ட நிலப்பகுதி இது. மூன்று போகம் ரெண்டாகி ஒரு போகம்கூட காண இயலாது வைக்கோல்கூட மிஞ்சாத விவசாயக் கூலிகளின் பிரதிநிதியாக டெல்டா மண்ணின் மைந்தர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள சட்டப் பேரவை உறுப்பினர் மாரிமுத்து எம்.எல்.ஏ.

mla

தந்தை கண்ணு, தாய் தங்கம்மாள் இருவரும் விவசாயக்கூலிகள். மனைவி ஜெயசுதா, மகள் தென்றல், மகன் ஜெயவர்மன். காடுவாக்குடியில் பிறந்து மன்னார்குடி ராஜகோபாலசாமி அரசு கலைக் கல்லூரியில் வணிகவியல் பட்டம் முடித்தார். 1994-இல் இளைஞர் பெருமன்றத்தின் காடுவாக்குடி கிளைச் செயலாளர். 1999-ல் இளை ஞர் பெருமன்ற கோட்டூர் ஒன்றியச் செயலாளர். 1999-2006-வரை இளைஞர் பெருமன்ற ஒ.செய லாளர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகக் குழு உறுப்பினர். 2006-ல் ஆதிச்சபுரம் கோட்டூர் ஒன் றிய மாநாட்டில் கட்சியின் ஒ.துணை செயலாளர்.

க.மாரிமுத்து எம்.எல்.ஏ. பற்றி தமிழ் மாநில விவசாய தொழிலாளர்சங்க திருவாரூர் மா.செய லாளரும், மாநில செயலாளர் மற்றும் திருத் துறைப்பூண்டி யூனியன் சேர்மன் தோழர் அ.பாஸ்கர் பெருமிதத்துடன், "ஏழைப்பங்காளன், எளிய குடிசைவாசி, சமரசம் செய்து கொள்ளாத போராளி. ஒன்றியச் செயலாளர் களப்பால் பி.ராஜேந்திரன் நிலத்தகராறு என்ற சாக்கில் ஆதிக்கசக்திகளால் படுகொலை செய்யப்பட, கட்சியின் மாநிலக்குழு வழிகாட்டுதலில் களப்பால் பி.ராஜேந்திரன் குடும்பத்தை கொலையாளிகளின் சதிப் பிடியி-ருந்து காப்பாற்றி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத்தந்தவர்.

Advertisment

இலங்கைத் தமிழர் நலனுக்கான போராட்டத்தில் மற்ற சிலரைப்போல விளம் பரப்படுத்திக் கொள்ளாது அகதிகளை ஆதரித்து உதவியவர். கஜா புயல், கொரோனா காலங்களில் மக்களோடு மக்களாக நடந்தும், சைக்கிள், பைக், டிராக்டர், மாட்டுவண்டிகளில் சென்று வயல் வரப்புகளில் படுத்துறங்கி தன் களப்பணியால் மாற்றுக்கட்சி குடும்ப உறுப்பினர்களும் "நம்ம தோழர் மாரிமுத்து'’என்று சொல்லும்படி பணியாற்றியவர். காவிரி நீருக்கான தொடர் போராட்டம். விவசாயிகள் நலனுக்கான கோலப்பன் குழு சார்ந்த விவசாயத் தொழிலாளர் நலவாரியம். ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு போராட்டம் எல்லாவற்றிலும் முன்னிலையில் நின்றவர்''’என அடுக்கிக்கொண்டே போகிறார்.

mla

இப்போதும் தன் தொகுதி மக்கள் பலரையும் போலவே குடிசை வீட்டில்தான் மாரிமுத்து வசிக்கிறார். இப்பகுதியில், இந்திரா குடியிருப்புத் திட்டத்தின்கீழ் கலைஞர் ஆட்சிக் காலத் தில் கட்டித்தரப்பட்ட கான்கிரீட் வீடுகளோடு சரி. மற்றபடி அனைத்தும் குடிசை வீடுகள்தான். ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டித்தருவேன்” என்று எடப்பாடி பழனிச்சாமி வாய் வார்த்தை கொடுத்திருந்தார். ஒன்றும் நடக்கவில்லை.

Advertisment

மக்களின் பேராதர வுடன் வெற்றி பெற்றிருக்கும் மாரிமுத்துவிடம் வாக்காளர் கள் வைத்துள்ள கோரிக்கை கள் ஏராளம். நல்ல நீர், தொகுதி முழுக்க கான்கிரீட் வீடுகள், ரயில்வே லைனை மாற்றி சோதனை ஓட்டம் நடந்தும் அசையாமல் இருக் கும் திருவாரூர் காரைக்குடி ரயில் போக்குவரத்து... என நிறைய உள்ளது. முன்னாள் எம்.எல்.ஏ. உலகநாதன் வலி யுறுத்திப் பெற்ற புறவழிச் சாலை நிதி அறநிலையத் துறை ‘ஸ்டேயால் கிடப்பில் கிடக்க, "ஐந்து வருடங்களுக் குள் புறவழிச்சாலை கொண்டு வருவேன்' என்ற உறுதி அளித்துள்ளார் இந்நாள் எம்.எல்.ஏ..

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் ஆழமான நட்பு கலந்த தோழமை மற்றும் செயல் வேகத்துடன் இணைந்து ‘‘தனித் தொகுதி யை ‘‘சிறப்புத் தனித்தன்மை” கொண்ட தொகுதியாக மாற்றுவார் என்ற எதிர் பார்ப்பு நிலவுகிறது.

இனிமை மாறாத அக அழகு, ஒரு ரூபாய் கூட அடுத் தவன் காசுக்கு ஆசைப்படாத உழைப்பாளி, போர்க்குணம் கொண்ட விவசாயக் கூ-களின் தோழர் மாரிமுத்து வால் அது நடக்கும் என்ற நம்பிக்கையும் மக்களிடம் உள்ளது.

-சுந்தர் சிவலிங்கம்