Advertisment

பூரணம் இல்லா தோழர் வாழ்வு! ஜி.ராமகிருஷ்ணன் உருக்கம்!

df

மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் வெளியீடான "கம்யூனிசம் நேற்று- இன்று-நாளை' எழுத்தாளருமான இடதுசாரி சிந்தனையாளர் தோழர் இரா.ஜவஹரின் துணைவியார் பூரணம், கோவிட்-19 பாதிப்பால் கடந்த 24ந் தேதி சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

Advertisment

gr

சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பூரணம், கம்யூனிச தோழர்கள் மற்றும் நக்கீரன் குடும்பத்தாரிடம் தாயன்புடன் நடந்துகொண்டவர்.

பொடா சட்டத்தின் கீழ் நமது நக்கீரன் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்டு 252 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பெரும் சட்டப்போராட்டத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்சியாளர்கள் மீதான அச்சத்தால் உறுதிப்பத்திரம் அளிக்க பலரும் தயங்கிய நிலையில், பூர்ணம் அம்மா அவர்கள், "என் தம்பிக்கு நான் ஷ்யூரிட்டி தருகிறேன். வேலை என்ன ஆனாலும் கவலையில்லை' என்று மனதிடத்துடன் உறுதிப் பத்திரம் தந்தவர். அவரது இழப்பு அனைவரையும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கும் நிலையில், மா

மூத்த பத்திரிகையாளரும், நக்கீரன் வெளியீடான "கம்யூனிசம் நேற்று- இன்று-நாளை' எழுத்தாளருமான இடதுசாரி சிந்தனையாளர் தோழர் இரா.ஜவஹரின் துணைவியார் பூரணம், கோவிட்-19 பாதிப்பால் கடந்த 24ந் தேதி சிகிச்சை பலனின்றி மறைந்தார்.

Advertisment

gr

சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியையாக பணிபுரிந்து ஓய்வுபெற்ற பூரணம், கம்யூனிச தோழர்கள் மற்றும் நக்கீரன் குடும்பத்தாரிடம் தாயன்புடன் நடந்துகொண்டவர்.

பொடா சட்டத்தின் கீழ் நமது நக்கீரன் ஆசிரியர் மீது பொய் வழக்கு போட்டு 252 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், பெரும் சட்டப்போராட்டத்துக்குப் பிறகு ஜாமீன் வழங்கப்பட்டது. அப்போது, ஆட்சியாளர்கள் மீதான அச்சத்தால் உறுதிப்பத்திரம் அளிக்க பலரும் தயங்கிய நிலையில், பூர்ணம் அம்மா அவர்கள், "என் தம்பிக்கு நான் ஷ்யூரிட்டி தருகிறேன். வேலை என்ன ஆனாலும் கவலையில்லை' என்று மனதிடத்துடன் உறுதிப் பத்திரம் தந்தவர். அவரது இழப்பு அனைவரையும் அதிர்ச்சியிலும், வேதனையிலும் ஆழ்த்தி இருக்கும் நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசினோம்.

Advertisment

""வெற்றிகரமான ஒவ் வொரு ஆணுக்கும் பின்னால் ஒரு பெண் நிச்சயம் இருப்பார். அப்படி, ஒரு பத்திரிகையாளராக, எழுத்தாளராக, நூலாசிரியராக சிறந்து விளங்க மூத்த தோழர் இரா.ஜவஹருக்கு பின்புலமாக இருந்தவர், அவரது துணைவியார் பூரணம்தான். தோழர் ஜவஹரின் வீட்டிற்கு ஏராள மான இளைய தோழர்கள் வருவார்கள், ஜவஹருடன் அரசியல் விவாதிப்பார்கள். மார்க்சியக் கொள்கையை இளைய தலைமுறைக்குப் பயிற்றுவிக்கும் நல்ல பணியை ஜவஹர் வீட்டிலிருந்தே செய்துவருகிறார். நாங்கள் குடும்பமாக ஜவ ஹரின் வீட்டிற்கு செல்வோம்.

jw

அப்படி வருகிறவர்கள் எத்தனை பேராக இருந்தாலும், கொஞ்சமும் அசராமல் பாரமாக நினைக்காமல், உபசரித்து கவனித்துக்கொள்வதில், பூரணம் ஒரு நல்ல பண்பாளராக இருந்தவர். சர்வதேச மகளிர் தினம் உருவானது தொடர்பாக ‘மகளிர் தினம் உண்மை வரலாறு’ என்ற பெயரில், நக்கீரனில் தொடர் ஒன்றை எழுதினார் தோழர் ஜவஹர்.

மார்ச் 8ல் உலக மகளிர் தினம் உருவானது தொடர்பாக, உலக அளவில் பல்வேறு விதமான கருத்துகள் நிலவும் சூழலில், ஆழமான ஆய்வுகளை மேற்கொண்டு எழுதப்பட்ட அந்தத் தொடரை, பிரசுரமாக வெளியிடுங்கள் என்று ஜவஹரிடம் வலியுறுத்தினேன். அதை ஏற்றுக்கொண்ட ஜவஹர் தமிழ், ஆங்கிலம், மலையாளம், இந்தி போன்ற மொழிகளில் பிரசுரமாக வெளியிட்டதோடு, அதனை தனது துணைவியார் பூரணத்திற்கே சமர்ப்பணம் செய்திருந்தார். மேலும், நக்கீரன் பதிப்பான "கம்யூனிசம் நேற்று இன்று நாளை'’ நூல் பல்வேறு பதிப்புகளாக வெளிவந்திருக்கிறது என்றால், அது வெளிவர தோழர் ஜவஹருக்கு அவரது துணைவியார் பூரணம் உறுதுணையாக இல்லாமல், சாத்தியமாகி இருக்காது.

jawar

கணவன் மனைவி எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாக இருவரும் வாழ்ந்து காட்டியிருக்கிறார்கள். கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி பூரணம் மறைந் திருப்பது, மனவேதனை அளிக்கிறது. அவரை இழந்துவாடும் ஜவஹர் மற்றும் குடும்பத்தாருக்கு, எந்த வார்த்தைகளால் ஆறுதல் சொல்வேன் என்று தெரியவில்லை'' என்றார் உடைந்த குரலில்.

""பூரணம் இல்லையென்றால் ஜவஹரின் வாழ்வு பூரணம் இல்லை'' என்று தோழர் ராமகிருஷ்ணன் சொல்லி முடிக்கையில், அவரது குரல் கனத்தது.

-ச.ப.மதிவாணன்

___________

டாக்டர்களுக்கு அரசு தந்த அதிர்ச்சிப் பரிசு!

60க்கும் மேற்பட்ட டாக்டர்களை கொரோனா காலத்தில் பறிகொடுத்துள்ளது தமிழகம். ஊதியம் உள்பட அனைத்து அம்சங்களிலும் மருத்துவப் பணியாளர்கள் இந்த அரசு மீது கடும் அதிருப்தியில் உள்ளனர்.

dr

இது குறித்து நம்மிடம் பேசிய அரசு மருத்துவர்கள் மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் சங்கத்தின் மாநில நிர்வாகி டாக்டர் எஸ்.பெருமாள்பிள்ளை, ""எங்களின் ஊதியக் கோரிக்கையை உறுதியளித்தபடி அமைச்சர் விஜயபாஸ்கர் நிறைவேற்றாததால், காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்துக்குத் தள்ளப்பட்டோம். போராட்டத்தை வாபஸ் பெற்றால் கோரிக்கையை நிறைவேற்றுகிறேன்'' என சொன் னார் முதலமைச்சர். போராட்டத்தை வாபஸ் பெற்றோம். ஆனால், கோரிக்கையை மட்டும் முதல்வர் நிறைவேற்றவில்லை.

அதேசமயம், போராட்டத்தில் ஈடுபட்ட 118 டாக்டர்களை பல்வேறு இடங்களுக்கு ட்ரான்ஸ்ஃபர் செய்ததோடு, 17-பி குற்றச்சாட்டுகளையும் சுமத்தியது அரசு. இது தொடர்பான வழக்கில், அரசு டாக்டர்கள் மீதான தண்டனைகளை ரத்து செய்ததுடன், ஊதிய கோரிக்கையை நிறைவேற்றுவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது சென்னை உயர்நீதிமன்றம். தாமதமாகவே இந்த உத்தரவை அரசு நிறைவேற்றியது. அதிலும், 20 டாக்டர்களுக்கு முந்தைய பணியிடம் இப்போது வரை வழங்க வில்லை. மேலும், 17-பி தண்டனை குறிப்பாணையையும் ரத்து செய்ய வில்லை. இதனால் பதவி உயர்வில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும் முடிவுசெய்துள்ளது அரசு. நாங்கள் என்ன தவறு செய்தோம்? கொரோனா நெருக்கடியிலும் உயிருக்கு பயப்படாமல் பணிபுரியும் எங்களை ஏன் இப்படி வஞ்சிக்க வேண்டும்? கொரோனா பாதிப்பால் டாக்டர்கள் பலர் உயிரிழந்த பிறகும், ஏராளமான டாக்டர்களுக்கு தொற்று ஏற்பட்ட பிறகும் அர்ப்பணிப்போடு வேலை செய்யும் எங்களுக்கு அரசு தரும் பரிசு இது தானா?''’ என்கிறார் மிக ஆதங்கமாக.

-இளையர்

nkn300920
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe