"ஹலோ தலைவரே, புது கவர்னரை தமிழக முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்கப் போகிறார்னு செய்திகள் வெளிவருவதை கவனிச்சீங்களா?''”
"கவனிச்சிக்கிட்டுத்தாம்ப்பா இருக்கேன்.. புது கவர்னர் ஆர்.என்.ரவி பதவியேற்பு விழாவில் அமைச்சர்களை முதல்வர் அறிமுகப்படுத்தி வைத்ததையும் கவனிச்சேம்ப்பா...''”
"தலைவரே.. கவர்னரிடம் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்ட அமைச்சர்களில் ஒரு சிலர், தேசியக் கொடி போட்ட காரில் தொடர்ந்து பயணிப்பாங்களான்னு தெரிய லைன்னு கோட்டை வட்டாரத்தில் பரபரப்பா பேச்சு அடிபடுது. ஒவ்வொரு அமைச்சரின் செயல் பாடுகள் பற்றியும் முதல்வருக்கு ரிப்போர்ட் வந்துக்கிட்டே இருக்கு. சிலரது செயல்பாடுகளில் முதல்வ ருக்கு திருப்தி இல்லையாம். முதல் முறை அமைச்சராகியிருக்கும் தென் மாவட்ட அமைச்சர் ஒருவரும், கொங்கு பகுதி அமைச்சர் ஒருவரும் இதில் இருக்காங்களாம். இரண்டு பேருமே இளையவர்கள்தான்.''”
"ம்...''”
"மாநில பா.ஜ.க. தலைவரான அண்ணாமலை, புதிய கவர்னர் ரவியிடம் நெடுஞ்சாலைத் துறை யில் முந்தைய ஆட்சியை விட இப்போது பர்சன்டேஜ் அதிகமாகி விட்டது என மத்திய அமைச்சர் நிதின்கட்காரி வரை ஒப்பந்தக் காரர்கள் மூலமாக தகவல் போயிருக்குன்னு சொல்லி, சில புகார்களைத் தெரிவித்தாராம். அமைச்சர்கள் தொடர்பாக முதல்வருக்கு வரும் ரிப்போர்ட்டில் பெண்கள் சம்பந்தப்பட்ட புகார்களும் தட்டுப்படுவதால் சீரியஸா கவனிக்கப்படுதாம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத டெல்டா மாவட்டங்கள் சார்பில், 3 முறை எம்.எல்.ஏ.வானவருக்கு வாய்ப்பு கொடுப்பது பற்றி ஆலோசிக்கப்படுதாம்.''”
"புதிய கவர்னரின் பதவி ஏற்பு விழாவில் முதல்வர் ஸ்டாலின் காட்டிய பெருந்தன்மையை அ.தி.மு.க.வினரே பாராட்டறாங்களே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்று

"உண்மைதாங்க தலைவரே, தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி பொறுப்பேற்றுக் கொண்டிருக்கிறார். சென்னைக்கு ஆளுநர் வந்த போது, முதல்வர் அவரை நேரில் வரவேற்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனாலும், அவரை முதல்வர், விமான நிலையத்துக்கே போய் வரவேற்றதால், அவருடைய பெருந்தன்மைன்னு அதிகாரிகள் வியப்படைஞ்சாங்க. அதேபோல் ஆளுநரின் பதவியேற்பு விழா சென்னை ராஜ்பவனில் நடந்தது. அதில் இரண்டு புத்தகங்களை கவர்னருக்கு முதல்வர் பரிசளித்தார்.''”
"நானும் பார்த்தேம்ப்பா...''”
"இரண்டும் மிகச் சரியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட புத்தகங்கள். தமிழக கவர்னராக பொறுப்பேற்கும் ஆளுநர், தமிழகத்தின் கலாச்சாரத்தை புரிந்துகொள்ளும் வகையில், அவருக்கு கீழடி நாகரீகம் பற்றிய ஒரு புத்தகத்தையும், சென்னையின் வரலாறு பற்றிய ஒரு ஆய்வுப் புத்தகத்தையும் பரிசளித்தார். ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போன ஆளுநருக்கு மிகச் சரியான புத்தகத்தைத் தான் ஸ்டாலின் பரிசளிச்சிருக்கார் என்கிறார்கள் தமிழறிஞர்கள்.''”
"விழா வைபவம் எப்படி இருந்ததாம்?''“
"பதவியேற்புக்குப் பிறகு முதல்வர் மற்றும் மூத்த அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர்ன்னு கவர்னருக்கு எல்லோரும் வாழ்த்துக்களைத் தெரிவிக்க அவர்களை கவர்னருக்கு முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தி வைத்தார். அப்ப, எதிர்க்கட்சித் தலைவரான எடப்பாடி, நம்மை ஸ்டாலின் முறையா அறிமுகப்படுத்துவாரான்னு தயங்கி நின்னிருக்கார்.''”
"தயக்கம் இருக்கத்தானே செய்யும். கடந்த ஆட்சிக் காலத்தில் இதே மாதிரி கவர்னரின் பதவி ஏற்பு விழாவில், தான் நடந்துக்கிட்டது அவரது நினைவுக்கு வந்திருக்கும்.''”
"சரியாச் சொன்னீங்க தலைவரே, ஜெயலலிதா மறைவுக்கு பிறகு நேரடி கவர்னராக 2017 செப்டம்பரில் பன்வாரிலால் புரோஹித் நியமிக்கப்பட்டார். அவரது பதவியேற்பு நிகழ்வின் போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்த மு.க.ஸ்டாலினுக்கு உரிய மரியாதை தரப்படலை. ஆளுநருக்கு மூத்த அமைச்சர்கள், சபாநாயகர், துணை சபாநாயகர், அதன்பிறகு எதிர்க்கட்சி தலைவர்னு மரபுப்படி இந்த வரிசையில் வாழ்த்துச் சொல்வார்கள். அப்படி எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் வாழ்த்துச் சொல்ல வந்தபோது, அப்ப முதல்வராக இருந்த எடப்பாடி அவரைக் கண்டுகொள்ளவும் இல்லை. அறிமுகப்படுத்தவும் இல்லை. இதனால், தானே போய் கவர்னரிடம் வாழ்த்து சொன்ன ஸ்டாலின், கவர்னரின் விருந்தைப் புறக்கணித்து விட்டுக் கிளம்பி விட்டார். இப்படி தன்னை அப் போது அவமதித்த எடப்பாடியை, பதிலுக்கு அவமதிக்காமல், பெருந்தன்மையோடு, இப்போது கவர்னரிடம் முறைப்படி அறிமுகம் செய்து வைத்து, அனைவ ரையும் ஆச்சரியப் படுத்தி இருக்கி றார் ஸ்டாலின்.''”
"பதவி ஏற்ற வேகத்திலேயே புதிய கவர்னர் கோப்புகளைப் பார்க்க ஆரம்பிச்சிட்டாரே?''”
"ஆமாங்க தலைவரே, பதவியேற்பு வைபவங்கள் முடிஞ்சி, தனது மாளிகைக்குத் திரும்பிய கவர்னர் ரவி, ஒரு மணி நேர ஓய்வுக்குப் பிறகு, ஜனாதிபதி, பிரதமர், ஒன்றிய உள்துறை அமைச்சர் ஆகியோரைத் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களைப் பெற்றிருக்கிறார். அதன் பிறகு தனது குடும்பத்தினருடன் மாமல்லபுரம் சென்று அங்குள்ள சிற்பங்களை கண்டுகளித்த அவர், இரவு ராஜ்பவனுக்குத் திரும்பியதும் தனது அலுவலக டேபிளில் காத்திருந்த பல்வேறு கோப்புகளையும் கவனமாகப் பார்வை யிட்டிருக்கிறார். சில முக்கிய கோப்புகளுக்கு ஒப்புதலளிப்ப தற்கு முன்பு அது குறித்து தனக்கேற்பட்ட சந்தேகங்களை தனது செயலாளர் ஆனந்த்ராவ் விஷ்ணு பாட்டிலிடம் விவாதித்தாராம். அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு 700 சிறைவாசிகளை விடுதலை செய்யும் தி.மு.க அரசின் முடிவுக்கு புதிய ஆளுநர் அனுமதிதருவாராங்கிற கேள்விக்குறி எழுந்திருக்கிறது.''”
"ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. தினகரனுக்கு பழைய குக்கர் சின்னத்தையே தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருக்கே?''”
"ஆமாங்க தலைவரே, சட்டமன்றத் தேர்தலில் 2 சதவீத வாக்குகள் கூட வாங்காத அ.ம.மு.க. கட்சிக்கு ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 9 மாவட் டங்களிலும் போட்டியிடுவதற்கு வசதியாக குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது மாநிலத் தேர்தல் ஆணையம். இது, மற்ற அரசியல் கட்சிகளை ஆச்சரி யப்பட வைத்திருக் கிறது. தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி நிர்வாகி களிடம் சமீபத்தில் தினகரன் கருத்து கேட்டபோது, பலரும், தேர்தலை புறக்கணிக்கலாம். நாம் போட்டியிட்டால் அது தி.மு.க.வுக்குத்தான் சாதகமாகும். மேலும், தேர்தல் செலவுக்கு கட்சித் தலைமையிட மிருந்து கணிசமாக உதவி கிடைத்தால்தான் போட்டியிட முடியும்ன்னு சொல்லியிருக்கிறார்கள். இதைக்கேட்ட தினகரன், தேர்தலை புறக்கணிப்பது தான் சரியானதுன்னு ஆமோதிச்சாராம். ஆனால்...''”
"ஆனால்..?''”
"இந்த நிலையில்தான், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, அவர் கட்சிக்கு குக்கர் சின்னமும் ஒதுக்கப்பட்டிருக்கு. இதனால் உற்சாகமான தினகரன், தேர்தலுக்கு உடனே தயாராகுங்கள்ன்னு தேர்தல் நடக்க இருக்கும் 9 மாவட்டங்களிலும் உள்ள மா.செ.க்களுக்கு தகவல் கொடுத்திருக்கார். ஆனால், கட்சி நிர்வாகிகளோ, சின்னத்தை வச்சி நாக்கையா வழிக்க முடியும்? தேர்தல்னா அதுக்கான செலவை கட்சித் தலைமை தருமா? தந்தால், போட்டியிடுவது பற்றி யோசிக் கிறோம்ன்னு தயங்கித் தயங்கிச் சொல்லியிருக்காங்க. இதைக்கேட்டு அப்செட்டாகிவிட்டாராம் தினகரன். அதனால் கட்சி நிர்வாகிகளிடம், தேர்தலை நாம் புறக்கணித்தால், நாம் அரசியலில் இருந்து விலகுவதாக செய்தி பரவி விடும். அதனால், தேர்தல் செலவை நாம் அட்ஜெஸ்ட் செய்யலாம்ன்னு இப்போதைக்கு சொல்லி வைத்திருக்கிறாராம்.''”
"கொடநாடு கொலை, கொள்ளை விவகாரம் பற்றி, ஆட்சி மேலிடத்தின் கவனத்துக்கு அ.ம.மு.க. தினகரன் சில விபரங்களைக் கொண்டு போயிருக்காரே?''”
"அது உங்க கவனத்துக்கும் வந்துடுச்சுங்களா தலைவரே, அண்மையில் தன் மகள் திருமணத்துக்கு அழைப்பு வைக்க முதல்வரின் மகன் உதயநிதி ஸ்டாலினையும், மருமகன் சபரீசனையும் சந்தித்த தினகரன், இருவரிடமும் மனம்விட்டுப் பேசியிருக்கிறார். அப்போது, சின்னம்மா இப்ப வாய் திறக்கலைன்னாலும், பிறகு ஒருநாள் வாய் திறப்பார். அப்ப எடப்பாடியும் அவர் சகாக்கள் நாலஞ்சு பேரும் கம்பி எண்ணு வாங்கன்னு சொன்னதோட, கொடநாடு பங்களாவில், என்னென்ன திருடப் பட்டது... எந்தெந்த ஆவணங்கள், சொத்துப் பத்திரங்கள் திருடப்பட்டது என்பதை எல்லாம் விலாவாரியாகச் சொல்லியிருக்கிறார். அதை அவர்கள் இருவருமே, ஆச்சரியத்தோடு குறிப்பெடுத்துக் கொண்டார்களாம்.''”
"நானும் ஒரு தகவல் சொல்றேன்.. பனையூரில் உள்ள வீட்டில் நடிகர் விஜய் தனது மன்றத்தினருடன் நடத்திய ஆலோ சனையில் உள் ளாட்சித் தேர்தலில் களமிறங்கு வதுன்னு முடிவு செய்யப்பட்டிருக்கு. கடந்த உள் ளாட்சித் தேர்த லிலேயே விஜய் மன்றத்தினர் ஆங்காங்கே போட்டியிட்டாங்க. இப்ப அதைவிடக் கூடுதலாக களமிறங்க ணும்னு வியூகம் வகுக்கப்பட்டி ருக்கு. அரசியல் விஷயத்தில் தன் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர், அம்மா ஷோபா இருவரும் தன் பெயரைப் பயன்படுத்துவதை விரும்பாத விஜய், தனக்கான வியூகத்தை வகுக்கிறாராம். அ.தி.மு.க.வுக்கு சரியான தலைமை இல்லாத நிலையில், பல சிக்கல்களை அந்தக் கட்சி எதிர்கொள்வதால் இப்போதைக்கு உள்ளாட்சித் தேர்தலில் மன்ற நிர்வாகிகளை களமிறக்கினால், எதிர்காலத்தில் அ.தி.மு.க.வுக்கு மாற்றாகவும், தி.மு.க.வில் உதயநிதி மேலே வரும்போது அவருக்குப் போட்டியாகவும் அரசியலைக் கலக்கலாம்னு விஜய்க்கு ஆலோசனை தரப்பட்டிருக்குதாம்.''’