புகார் சொல்லும் பூம்புகார்! -எப்போது மாறும் இந்த நிலை?

pp

சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து பூம்பு கார் என்னும் திரைக்காவியத்தைப் படைத்த கலைஞர், 1971-ல் தமிழக முதல்வராக வந்தபோது நாகை மாவட்டத்தில் உள்ள சங்ககால துறைமுகப்பட்டினமான காவிரிப் பூம்பட்டினத்தை பூம்புகார் என்கிற சுற்றுலாத்தலமாக வரலாற்றுப் பின்னணியுடன் வடிவமைத்தார். உலகம் முழுவதிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து ரசித்தனர். ஆர்ப்பரிக்கும் வங்கக்கடல் அலைகளும், கண்ணைக்கவரும் வகையில் சிலப்பதிகாரக் கலைக் கூடமும், அழகழகான வண்ணமலர் பூங்காவும், நீந்தி விளையாட நீச்சல் குளமும், ஓய்வெடுக்க கிளிஞ்சல் வீடுகளும், பார்த்து மகிழ பாவை மன்றமும், உயர்ந்து நிற்கும் நெடுங்கல் மன்றமும், காவிரித்தாயின் சங்கமமும் எல்லோரையும் ஈர்க்கும்.

இவைகளுக்கு நடுவில், நடுநாயகமாக கண் ணகி சிலையும் அமைந்து காண்பவரை மகிழ் விக்கக்கூடியது பூம்புகார். பூம்புகாரின் தற்போதைய நிலை என்ன?

ppp

கிருஷ்ணகிரியிலிருந்து குடும்பத்தினரோடு வந்திருந்த ஆனந்தனிடம் கேட்டோம், ""பூம்பு காருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போது வந்தி ருந்தேன். அழக

சிலப்பதிகாரத்தை மையமாக வைத்து பூம்பு கார் என்னும் திரைக்காவியத்தைப் படைத்த கலைஞர், 1971-ல் தமிழக முதல்வராக வந்தபோது நாகை மாவட்டத்தில் உள்ள சங்ககால துறைமுகப்பட்டினமான காவிரிப் பூம்பட்டினத்தை பூம்புகார் என்கிற சுற்றுலாத்தலமாக வரலாற்றுப் பின்னணியுடன் வடிவமைத்தார். உலகம் முழுவதிலிருந்து சுற்றுலா பயணிகள் வந்து ரசித்தனர். ஆர்ப்பரிக்கும் வங்கக்கடல் அலைகளும், கண்ணைக்கவரும் வகையில் சிலப்பதிகாரக் கலைக் கூடமும், அழகழகான வண்ணமலர் பூங்காவும், நீந்தி விளையாட நீச்சல் குளமும், ஓய்வெடுக்க கிளிஞ்சல் வீடுகளும், பார்த்து மகிழ பாவை மன்றமும், உயர்ந்து நிற்கும் நெடுங்கல் மன்றமும், காவிரித்தாயின் சங்கமமும் எல்லோரையும் ஈர்க்கும்.

இவைகளுக்கு நடுவில், நடுநாயகமாக கண் ணகி சிலையும் அமைந்து காண்பவரை மகிழ் விக்கக்கூடியது பூம்புகார். பூம்புகாரின் தற்போதைய நிலை என்ன?

ppp

கிருஷ்ணகிரியிலிருந்து குடும்பத்தினரோடு வந்திருந்த ஆனந்தனிடம் கேட்டோம், ""பூம்பு காருக்கு எட்டாம் வகுப்பு படிக்கும்போது வந்தி ருந்தேன். அழகின் சொர்க்கமாக இருக்கும். அந்த ஆர்வத்தில் என்னுடைய மனைவி, குழந்தை களோடு வந்தேன். ஏன்டா வந்தோம்னு தோணுது. வழிநெடுகிலும் குப்பைகளை அள்ளாமல் துர்நாற்றம். ஈக்கள் முகத்தில் வந்து மொய்க்குது, கலைக்கூடம் சில்லுச்சில்லாக உடைந்துவருகிறது.

பசுமையான பூங்கா பாலைவனம்போல் இருக்கு. நீச்சல்குளத்தில் நீருக்குப் பதில் பிளாஸ்டிக் குப்பைகளும், மதுபாட்டில்களும் நிரம்பிக் கிடக்கிறது. அழகழகான கிளிஞ்சல் வீடுகள், நொறுங்கிப் போனதோடு, குடிகாரர் களின் கூடாரமாகவும், விபச்சாரம் நிகழுமிட மாகவும் இருக்கிறது. பாவை மன்றமும், நெடுங்கல் மன்றமும் கருவேலங்காடாக இருக்கிறது. நடுவில் இருக்கும் கண்ணகி சிலை மண்படிந்து பரிதாபமாக இருக்கிறது. அத்துடன் கூட்டம் கூட்டமாக அமர்ந்து மது அருந்துவது அச்சத்தை உண்டாக்குகிறது. தற்போதுள்ள அரசு பூம்புகாரை அழித்துவிட்டது''’என்கிறார்.

திருச்சியிலிருந்து வந்திருந்த பாலமுருகனும் அவரது குடும்பத்தினரும், ""பிள்ளைகளுக்கு தமிழர்களின் வரலாற்றைக் காட்டுவதற்கும், கலைஞரின் கலைநயத்தை எடுத்துக் கூறவும் வந்தோம். "இதுதான் பூம்புகாரா, இங்க என்ன இருக்குன்னு அழைச்சிட்டு வந்தீங்க?'ன்னு புள்ளைங்க கேட்கிறாங்க''’என்கிறார். கலைக்கூடத் துக்கு செல்ல ஒருநபருக்கு ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்க ஒரு ஊழியர் இருக்கிறார். அதற்கு முன்பே பூம்புகாருக்குள் நுழையும் வாயிலில் ஒருவர் கார், டூவீலர், சுற்றுலா வாகனங்களை மறித்து வசூலிக்கிறார்.

நான்கு வீலருக்கு 15 ரூபாய்க்கு ரசீது கொடுத் துவிட்டு, 100 ரூபா வாங்குகிறார். கலைக்கூடத் தின் உள்ளே அனுப்ப ஒருவர் இருக்கிறார். அவர் எந்நேரமும் சிடுசிடுவென்றே வருபவர்களிடம் பேசி விரட்டுகிறார். பூம்புகார் அ.தி.மு.க. எம். எல்.ஏ. பவுன்ராஜ் தனது நிதியில் பேருந்து நிறுத் தம் கட்டியிருக்கிறார், ஆனால் அதுவும் பரா மரிப்பு இல்லாமல் சிதைந்து கிடக்கிறது. அதன் ஓரமாக இருக்கும் பயணிகள் வந்து தங்கும் விடுதி களை சுற்றிலும் கருவேலம் முள்ளை வெட்டிப் போட்டு அடைத்து வைத்துள்ளனர்.

கலைக்கூட வாயிலில் இருக்கும் ஊழியரான ரெத்தினசாமியிடம் கேட்டோம், ""நாங்க என்ன செய்ய முடியும்ங்க, 30 பேர் வேலை பார்க்கவேண் டிய இடத்துல வெறும் 3 பேர்தான் இருக்கிறோம்.

நான்கு பேர் பணம் வசூலிக்க, ஆபீஸ் வேலை யா இருப்பாங்க. ஒரே ஒரு துப்புரவுத் தொழி லாளி, 33 ஏக்கர் பரப்பளவு இடத்தை சுத்தம் செய்து விடமுடியுமா, இந்த பம்புக்கு ஒரு மோட்டார் வாங் கிக் கொடுக்கச் சொன்னோம், அதுக்கே பணம் இல்லன்னுட்டாங்க''’’ என்கிறார் ஆதங்கமாக.

""நீங்க என்ன நக்கீரன்ல இருந்து வந்திருக் கீங்களா'' என ஆர்வமாக விசாரித்துவிட்டு நம் மிடம் பேசினார் ஒரு ஊழியர், ""ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் வருதுங்க, ஆனா அவ்வளவையும் ஏப்பம் விட்டுடுறாங்க. கலைக் கூடத்திற்கு செல்ல நபருக்கு 5 ரூபாய், தினசரி குறைந்தது 5 ஆயிரம் பேராவது வந்துபோவாங்க, அதோடு வாகன வசூல். அந்த பணத்தை முறையா செலவழித்தாலே சிறப்பா இருக்கும். கடந்த ஆண்டு 2.5 கோடி நிதி ஒதுக்கியதா சொன்னாங்க, அந்தப் பணமும் என்னாச்சுனு தெரியல.

இது சம்பந்தமா யாராவது வாயத்திறந்தால் உனக்கு சம்பளம் வருதா… வேலையமட்டும் பாருன்னு அமைச்சர், எம்.எல்.ஏ.க்கள் சொல்லிடுறாங்க. அதிகாரிங்களும் அதை சாதகமாக்கிக்கொண்டு சம்பாதிக்கிறாங்க. கலைநயத்தோடு உருவான பூம்புகாரை அ.தி.மு.க. அரசு சுத்தமாக அழித்து விட்டது''’என்கிறார் ஏக்கத்துடன். பூம்புகாரின் பராமரிப்பு பணிகள் பற்றி தகவலறியும் உரிமைச் சட்டத்தில் விவரம் கேட்டிருக்கும் வழக்கறிஞர் சிவச்சந்திரனிடம் விசாரித்தோம், ""நீதி தவறிய பாண்டிய அரசை அழித்தவள் கண்ணகி என்பதால் ஆட்சியாளர் களுக்கு ஆகாதவள் என்கிற சென்டிமெண்ட் வேண்டுமென்றே சிலரால் பரப்பப்பட்டு விட்டது. கலைஞர் நாத்திகர் என்பதால் அதை ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ளாமல், வரலாற்று நினைவுச் சின்னமாக நினைத்து உருவாக்கினார். பிறகு வந்த அ.தி.மு.க. அரசுகள் பூம்புகார் பக்கம் திரும்பியே பார்க்கவில்லை''’ என்கிறார் கவலையோடு.

பூம்புகார் சுற்றுலாத்துறை பொறுப்பு அதி காரியான மாதவனிடம் கேட் டோம்.’""பூம்புகார் சீரமைப்புக்காக ஏற்கனவே நிதி ஒதுக்கப்பட்டு விட்டது அடுத்த வாரத்தில் சீரமைப்பு பணிகள் தொடங்கிவிடும்''’என்றார். புகழ் நகரமான பூம்புகாரை புகார் நகரமாக்கிவிட்டார்களே!

-க.செல்வகுமார்

nkn140619
இதையும் படியுங்கள்
Subscribe