டந்த சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. வெற்றிபெற்று தமிழகத்தில் ஆட்சிக்கு வந்தவுடன் நடைபெற்ற பல்வேறு மாவட்ட ஆட்சியர்களின் மாற்றத்தைப்போலவே, அரியலூர் மாவட்ட புதிய ஆட்சியராக ரமண சரஸ்வதி பணியமர்த்தப்பட்டார். நன்முறையில் பணியாற்றிவந்த இவர்மீது, தற்போது கீழ்மட்ட அலுவலர்களை ஜாதியைக் குறிப்பிட்டுத் திட்டியதாக குற்றச்சாட்டு கிளம்பியுள்ளது. இதுகுறித்து நாம் விசாரணை மேற்கொண்டோம்.

கேபிள் டி.வி. தாசில்தாராக இருந்த தேன்மொழி என்பவரை அலுவலகத்தில் நடைபெற்ற ரிவியூ மீட்டிங்கின்போது அவரது செயல்பாடுகள் சரி இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி அவரைக் கண்டித்துள்ளார். இதனால் அவர் தற்கொலைக்கு முயன்று காப்பாற்றப்பட்டதாக ஒரு பேச்சு எழுந்துள்ளது. அதேபோல் ஜெயங்கொண்டம் வட்டார வளர்ச்சி அலுவலர் சரிவர பணி செய்யவில்லை என்பதற்காக ஆய்வுக் கூட் டத்தில் கண்டித்ததாகவும், பைலை தூக்கி வீசியதாகவும் மாவட்ட ஆட்சி யர் மீது குற்றம்சாட்டுகிறார்கள் இப்படிப்பட்ட சில காரணங்களை முன்வைத்து மாவட்ட ஆட்சியர் கீழ்மட்ட அதிகாரிகளை ஜாதி யைச் சொல்லி அவமானப்படுத்துவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

c

திருமானூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் துரை முத்துக் குமரவேல், "எங்கள் பகுதியில் உள்ள 24 மணி நேர சுகாதார நிலையத்தில் முறையாக மருந்து மாத்திரை வழங்கப்படவில்லை என்பது குறித்தும், பொதுப்பணித்துறை வாய்க்காலில் நடைபெற்ற பணிகள் சரியில்லை என்றும் கீழ்மட்ட அதிகாரிகளுக்கு பல புகார்களை அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதுகுறித்து மாவட்ட ஆட்சியருக்கு புகார் அனுப்பினேன். உடனடியாக அதி காரிகள் விரைந்து வந்து சரி செய்தார்கள். ஆட்சியரின் உத்தரவின் படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினார்கள். எனவே மாவட்ட ஆட்சியர் எந்த ஜாதிப் பாகுபாடும் பார்ப்பதில்லை. கீழ் மட்டத்தில் உள்ள அதிகாரிகள், பொதுமக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அதற்கு அலட்சியமும், எதிர்பார்க்கும் பணமுமே காரணமாக இருக்கிறது. பணி செய்யாத அதிகாரிகளை, மற்ற அதிகாரிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் கண்டிப்பதால் அவமானமாகக் கருதும் அதிகாரிகள்தான், அதனைத் திசைதிருப்ப, ஜாதிப்பெயர் சொல்லி ஆட்சியர் திட்டுவதாகக் கிளப்பி விடுகிறார்கள்'' என்கிறார்.

Advertisment

மக்கள் நல அமைப்பைச் சேர்ந்த ஜெயபாலன், "ஒரு மாவட்ட ஆட்சியருக்கு பல்வேறு பணிகள் இருக் கும். அதை விட்டு விட்டு எந்தெந்த அதிகாரிகள் என் னென்ன ஜாதி, என்னென்ன மதம் என்று விசாரணை செய்வதுதான் அவரது வேலையா? இது திட்டமிட்டு ஆட்சியருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில் பரப்பப்பட்ட செய்தி. ஒவ்வொரு அரசு அலுவலகத்திலும், லஞ்சம் வாங்காத அதிகாரிகள் யாராவது இருக்கிறார்களா என்று சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்க மாட்டார்கள். ஏழை எளிய மக்களின் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. அலைய விடுவார்கள். கீழ்மட்ட அதிகாரிகள் பணம் சம்பாதிக்க ஆட்சியர் தடையாக இருப்பதால்தான் இப்படி அபாண்டமாகக் குற்றம்சாட்டுகிறார்கள். நல்ல அதிகாரிகள் மீது வீண்பழி சுமத்துவதை நம்பி அவர்களை இடம்மாற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது" என்றார்.

cc

கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி காந்தி ஜெயந்தியன்று, கோவிந்தபுத்தூர் கிராமத்தில் நடந்த மக்கள் குறை கேட்புக் கூட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியர் மூன்று மணி நேரத் திற்கு மேல் ஒரே இடத்தில் அமர்ந்து மிகப் பொறு மையாக மக்களின் குறைகளை கேட்டதோடு, அவர்களது கோரிக்கைகளைத் தீர்ப்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுத்து வருவதாக கோவிந்தபுத்தூர் கிராம மக்கள் பாராட்டுகிறார்கள். ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் அரசு சார்ந்த ஆய்வுக் கூட்டங்களுக்கு உரிய நேரத்திற்கு வர வேண்டும் என்று, அதிகாரிகளுக்கு மாவட்ட ஆட்சியர் பலமுறை அறிவுறுத்தியும் அதைக் கடைப்பிடிக்காமல் அலட்சியப்படுத்துகிறார்கள். பெரும்பாலும், தவறான செயல்பாட்டால் பணிமாற்ற தண்டனைக்குள்ளான அதிகாரிகள்தான் இந்த மாவட்டத்துக்கு வருகிறார்களாம். இவர்கள் வெளி மாவட்டங்களைச் சேர்ந்தவர்களாக இருப்பதால், அலுவலகக் கூட்டங்களுக்கு இஷ்டத்துக்கு தாமதமாக வருகிறார்களாம். இப்படிப்பட்டவர்களை ஒழுங்குபடுத்த, ஆட்சியர் மெமோ சார்ஜ் கொடுக்கும்போது அசோசியேஷன் பெயரால் ஆட்சியருக்கு எதிராகப் பொய்க் குற்றச்சாட்டுகளைப் பரப்புகிறார்கள் எனச் சில நேர்மையான அலுவலர்கள் கருத்துத் தெரிவித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி கூறுகையில், "அரசு திட்டப்பணிகளை, மக்கள் பணிகளை தொய்வின்றி உடனுக்குடன் செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறது அரசு. அதற்கு ஏற்றாற்போல் இரண்டாம், மூன்றாம் கட்ட அலுவலர்கள் பலர் செயல்படுவதில்லை, ஒத்துழைப்பதில்லை. திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டங்களுக்கு உரிய நேரத்தில் வருவதில்லை. இது குறித்து பலமுறை எடுத்துக்கூறியும் அலட்சியம் செய்வதால் அப்படிப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட காரணங்களால் வேறுவழிகளில் பிரச்சனைகளை ஏற்படுத்துகிறார்கள். இதை ஒழுங்குபடுத்துவதற்கே எட்டு மாதம் ஆனது. மற்றபடி பல அலுவலர்கள், ஊழியர்கள் ஒத்துழைப்பு தருகிறார்கள்'' என்றார். அரசு அதிகாரிகள் தங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படத் தொடங்கினாலே அனைத்துப் பிரச்சனைகளும் முடிவுக்கு வரும்.

Advertisment

.