போன ஆட்சியில் புகார்! இந்த ஆட்சியிலாவது நடவடிக்கை? -பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு!

dd

மிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான க்ரைம் பிரிவிற்கு கடந்த ஆட்சியின்போது நிறைய புகார்கள் வந்தன. அதன்மீது உயரதிகாரிகள் கவனம் செலுத் தினர். ஆனால், மாவட்ட காவல் துறையோ கவனம் செலுத்தாத தால், பழைய புகார்கள் மீது நடவடிக்கையே இல்லை. இதனால் பலரும் பாதிக்கப்பட் டார்கள் என்ற உள்துறை வட்டாரத்தினர், உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொன்னார்கள்.

புதுக்கோட்டையில் குழந்தைகள் நல டாக்டர் ராமதாஸ், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். லெட்டர்பேட் அமைப்புகள் சிலவற்றில் பொறுப்பிலும் இருக்கிறார் ராமதாஸ். டாக்டர் தொழில் மட்டுமல்லாமல் வட்டிக்கு கடன் கொடுப்பதும் இவரது பிஸினெஸ்.

action

அந்த வகையில், கீரனூரை சேர்ந்த பழனியப்பன் என்பவர் சில லட்சங்கள் இவரிடம் கடன் வாங்குகிறார். கடனை திருப்பிக் கொடுப்பதில் சில சிரமங்களை பழனியப்பன் எதிர்கொள்ள, தகாத வார்த்தைகளால் பழனியப்பனை காயப்படுத்தி விடு

மிழக காவல்துறையில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான க்ரைம் பிரிவிற்கு கடந்த ஆட்சியின்போது நிறைய புகார்கள் வந்தன. அதன்மீது உயரதிகாரிகள் கவனம் செலுத் தினர். ஆனால், மாவட்ட காவல் துறையோ கவனம் செலுத்தாத தால், பழைய புகார்கள் மீது நடவடிக்கையே இல்லை. இதனால் பலரும் பாதிக்கப்பட் டார்கள் என்ற உள்துறை வட்டாரத்தினர், உதாரணத்திற்கு ஒரு சம்பவத்தை சொன்னார்கள்.

புதுக்கோட்டையில் குழந்தைகள் நல டாக்டர் ராமதாஸ், தனியார் மருத்துவமனை ஒன்றை நடத்தி வருகிறார். லெட்டர்பேட் அமைப்புகள் சிலவற்றில் பொறுப்பிலும் இருக்கிறார் ராமதாஸ். டாக்டர் தொழில் மட்டுமல்லாமல் வட்டிக்கு கடன் கொடுப்பதும் இவரது பிஸினெஸ்.

action

அந்த வகையில், கீரனூரை சேர்ந்த பழனியப்பன் என்பவர் சில லட்சங்கள் இவரிடம் கடன் வாங்குகிறார். கடனை திருப்பிக் கொடுப்பதில் சில சிரமங்களை பழனியப்பன் எதிர்கொள்ள, தகாத வார்த்தைகளால் பழனியப்பனை காயப்படுத்தி விடுகிறார் டாக்டர் ராமதாஸ்.

இதனால், மனமுடைந்த பழனியப்பன், என் சாவுக்கு டாக்டர்தான் காரணம் என கடிதம் எழுதி, தனது சாதி அமைப்புகளிலுள்ள சிலருக்கு அனுப்பிவைத்துவிட்டு தற்கொலை செய்து கொள்கிறார் பழனியப்பன். போலீசாரிடம் கடிதம் சிக்கு கிறது. இதனையறிந்த ராமதாஸ் புதுக்கோட்டை காவல்துறையில் தனக்கிருக்கும் செல்வாக்கை பயன்படுத்தி அந்த கடிதத்தை கைப்பற்றி விடுகிறார். அதே சமயம், தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக பழனியப்பனின் குடும்பம் சொன்னதை போலீஸ் ஏற்கவில்லை.

சில நாட்கள் கடந்த நிலையில், பழனியப்பன் சாவுக்கு நீதான் காரணம். அவர் எழுதிய கடிதம் என்னிடம் இருக்கிறது. இனியும் சாதியை சொல்லி ஏமாத்தக்கூடாது என தேனியை சேர்ந்த ஒருவர், டாக்டர் ராமதாசுக்கு ஃபோன் போட்டு எச்சரிக்கை செய்ய, மிரண்டு விடுகிறார் ராமதாஸ். இந்த விசயம் வெளியே தெரிந்தால் தனது இமேஜ் பாழாகும் என நினைத்து, தனது சமூகத்தினருக்காக ஆடியோவில் பேசி ஒரு வாட்ஸ் ஆப் மெசேஜை ராமதாஸ் பகிர்கிறார். அதில், தனக்கு ஃபோன் வந்ததையும் அதைக்கேட்டு இரவு முழுக்க தூக்கமில்லை என்றும் விவரித்து விட்டு, தனக்கு ஃபோன் பேசிய நபரின் குடும்பத்தை விமர்சிக்கும் தொனியில், பெண்கள் எல்லாம் விபச்சாரிகள்; இழி தொழில் செய்பவர்கள்; மன்னிக்கவும், எல்லா பெண்களையும் நான் சொல்லவில்லை என ராமதாஸ் விமர்சிப்பது அந்த ஆடியோவில் பதிவாகியுள்ளது.

கீரனூரிலுள்ள சதாசிவம் என்பவரிடம் ராமதாஸ் பேசிய மற்றொரு ஆடியோவும் வாட்ஸ் ஆப்பில் பரவியது. அந்த ஆடியோவில், பழனியப்பனை நான் கொன்று விட்டேன் என அவன் சொல்கிறான். அந்த லெட்டர் அவனிடம் இருக்கு தாம். அந்த குடும்பம் பதில் சொன்னால்தான் அவனுக்கு செருப்பால் அடித்தமாதிரி இருக்கும். கீரனூரிலுள்ள பசங்களெல்லாம் அவனிடம் பேசுங்கள். அதை ரெக்கார்ட் பண்ணி எனக்கு அனுப்புங்கள் என இளைஞர்களை தூண்டி விடுகிறார் ராமதாஸ்.

action

இதனையடுத்து, ஒரு இளை ஞர் ராமதாசுக்கு ஆதரவாக பேசும் ஆடியோவில், ராமதாசுக்கு ஃபோன் செய்த நபரை வெட்டு வோம் என்ற ரீதியில் பேசுகிறார்.

இந்த ஆடியோ மெசேஜ் களை பென் ட்ரைவில் காப்பி பண்ணி டி.ஜி.பி. அலுவலகத்துக் கும், பெண்கள் மற்றும் குழந்தை களுக்கு எதிரான மாநில குற்றப் பிரிவுக்கும் பாதிக்கப்பட்டவர்கள் தங்கள் அடையாளத்தை மறைத்து கடந்த ஜனவரி மாதம் புகார் அனுப்பியிருந்தார்கள்.

இந்த பிரிவின் அப்போ தைய ஏ.டி.ஜி.பி.யாக இருந்த சீமா அகர்வால் ஐ.பி.எஸ்., தனக்கு வந்த புகாரையும் பென் ட்ரைவையும் புதுக்கோட்டை காவல்துறைக்கு அனுப்பி, புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டிருந் தார். ஆனால், நோ ஆக்ஷன். இப்படி நிறைய கம்ப்ளைண்டு கள் முடக்கப்பட்டன.

இந்த நிலையில்தான், தி.மு.க. ஆட்சி வந்ததும் ஐ.பி.எஸ். அதிகாரிகள் மாற்றப்பட்டனர். அதேசமயம், தங்கள் புகார் மீது முந்தைய ஆட்சியில் நட வடிக்கை எடுக்கப்படவில்லை என புகார்கள் வந்தபடி இருக் கின்றன. சமீபத்தில் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய முதல்வர் ஸ்டாலின், ஆக்ஷன் எடுக்கப்படாமல் இருக்கும் க்ரைம் புகார்கள் மீது உரிய கவனம் செலுத்துங்கள்'' என கேட்டுக்கொண்டார். அதன் படி, தமிழக காவல்துறையிலுள்ள பழைய புகார்கள் தூசு தட்டப்படுகிறது” என்று விரிவாக சுட்டிக்காட்டினார்கள்.

இதுகுறித்து, ராமதாசின் கருத்தறிய அவரை தொடர்பு கொண்டபோது, "என்னைப் பிடிக்காதவர்கள் போட்ட மொட்டை பெட்டிஷன் அது. தனிப்பட்ட ஒருவருக்கும் எனக்கும் உண்டான ஒரு பிரச்சனையில் என்னைப்பற்றி போலீசில் புகார் தந்திருக்கிறார்கள். அதைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி னார்கள். அதுபற்றிய வழக்கும் இருக்கு. நான் தவறாக எதுவும் பேசவில்லை'' என்கிறார். இந்த நிலையில்... புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எஸ்.பி. நிஷா பார்த்திபனை தொடர்பு கொண்டு நாம் கேட்டபோது, "என்ன பிரச்சினைன்னு எனக்குத் தெரியாது, அதுகுறித்து விசாரிக் கிறேன்'' என்றார்.

nkn110821
இதையும் படியுங்கள்
Subscribe