மேகதாட்டு அணை கட்டக்கூடாது என்று தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தாலும் கூட கர்நாடகம் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக பா.ஜ.க. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஆச்சரியப்படுத்தியது.
கொரோனா காலம் என்றாலும், மக்கள் பிரச்சினைக்கான போராட்டம் எனக் கூறி, தஞ்சை பனகல் பார்க் அருகே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
மேகதாட்டு அணை கட்டக்கூடாது என்று தமிழக விவசாயிகள் ஒட்டுமொத்தமாக குரல் கொடுத்தாலும் கூட கர்நாடகம் கேட்பதாக இல்லை. இந்த நிலையில் கர்நாடகாவை ஆளும் பா.ஜ.க.வுக்கு எதிராக தமிழக பா.ஜ.க. உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி ஆச்சரியப்படுத்தியது.
கொரோனா காலம் என்றாலும், மக்கள் பிரச்சினைக்கான போராட்டம் எனக் கூறி, தஞ்சை பனகல் பார்க் அருகே தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தலைமையில் உண்ணாவிரதம் ஏற்பாடுகள் செய்திருந்த நிலையில் ராஜராஜ சோழன் சிலையில் இருந்து மாட்டு வண்டியில் ஏறி உண்ணாவிரதப் பந்தலுக்கு போனார் தமிழக பா.ஜக. தலைவர் அண்ணாமலை. இதனைப் பார்த்த சிலர் பெட்ரோல், டீசல் விலை ஏற்றம் குறித்து மறைமுகமாக மத்திய அரசுக்கும் உணர்த்த தான் இந்த மாட்டு வண்டி பயணம் போல என்றனர்.
உண்ணாவிரதப் பந்தலில் பொன்.ஆர், சி.பி.ஆர், எச்.ராஜா உள்ளிட்ட தலைவர்கள் இருந்தனர். சுமார் 1500 பேர் வரை கூடியிருந்தனர். பந்தலில் பேசும்போது எந்த சூழ்நிலையிலும் மேகதாட்டு அணை கட்டவிடமாட்டோம். எமர்ஜென்சி காலத்தில் கரை வேட்டி கட்டாமல் மறைந்திருந்தவர்கள் தி.மு.க.வினர் என்று தொடர்ந்து தி.மு.க. தாக்குதலே அதிகமாக இருந்தது. அண்ணாமலை தஞ்சையில் பேசிக்கொண்டிருக்கும் போதே அவருக்கு எதிராக கர்நாடகா காங்கிரஸ் போராட்டம் நடந்தது. கர்நாடக முதலமைச்சரோ அணை கட்ட இம்மாத இறுதிக்குள் மத்திய அரசு அனுமதி கொடுக்கும் என்று பேசிக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில்தான் தடையை மீறி ஒன்றுகூடியதாக அண்ணாமலை தலைமையில் சுமார் 1200 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தடையை மீறி பதாகை வைத்ததை அகற்றச் சென்ற மாநகராட்சி ஊழியரை பணிசெய்ய விடாமல் தடுத்ததாகவும் வழக்குப்பதிவு செய்து சிலரை கைது செய்த நிலையில், சிபிஆர் உள்ளிட்டோர் போராட்டம் நடத்த ஆயத்தமானார்கள்.
இப்படி ஒருநாள் முழுவதும் பரபரப்பாகவே நடந்தது பா.ஜ.க. உண்ணாவிரதம்.
அதேநேரத்தில், "டெல்லியில் 8 மாதமாக போராடும் விவசாயிகளை ஒருநாள் கூட பார்க்க மனமில்லாத பா.ஜ.க.தான் தமிழர்களுக்காக தண்ணீர் பெற உண்ணாவிரதம் இருக்கிறார்கள்' என்று பேசிக்கொண்டனர் தஞ்சை நகர மக்களும் விவசாயிகளும்.