Advertisment

பரிவு! மரியாதை! அக்கறை! -சிவகங்கையில் அசத்திய துணை முதல்வர்!

ss

சிவகங்கை சீமைக்கு வருகை தந்து மாணக் கர்களிடம் அக்கறையையும், பயனாளிகளிடம் பரிவையும், கழக முன்னோடியிடம் மரியாதையும் செலுத்தி பொதுமக்கள், கட்சிக்காரர்கள் என அனைவரையும் அசத்தியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

செவ்வாய்க்கிழமை யன்று (17-6-2025) காலை 10.15 மணியளவில், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்ற அரசுத்துறை ஆய்வுகள் மற்றும் கழக நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து புறப் பட்டு திருப்புவனம் வந்த டைந்தார் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின். எழுச்சிமிகு உற்சாக வரவேற்பை கட்சியினர் கொடுத்திருந்தாலும், அங்கு கூடியிருந்த மாணவிகள் ரோசாப்பூக் களையும், கேட்பரீஸ் சாக்லேட்களையும் கொடுத்து 'அண்ணனை' வரவேற்றதில் திக்குமுக்காடிப் போனார் துணை முதல்வர். அடுத்ததாக, தடுப் பணை ஆய்வு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் தடுப்பணை பணியை பார்வையிட்டார். நீர்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோரிடம், "7 ஆயிரம் ஏக்கர் பா

சிவகங்கை சீமைக்கு வருகை தந்து மாணக் கர்களிடம் அக்கறையையும், பயனாளிகளிடம் பரிவையும், கழக முன்னோடியிடம் மரியாதையும் செலுத்தி பொதுமக்கள், கட்சிக்காரர்கள் என அனைவரையும் அசத்தியுள்ளார் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.

செவ்வாய்க்கிழமை யன்று (17-6-2025) காலை 10.15 மணியளவில், சிவகங்கை மாவட்டத்தில் நடைபெறவிருக்கின்ற அரசுத்துறை ஆய்வுகள் மற்றும் கழக நிகழ்ச்சி களில் பங்கேற்பதற்காக மதுரையிலிருந்து புறப் பட்டு திருப்புவனம் வந்த டைந்தார் துணை முதல் வர் உதயநிதி ஸ்டாலின். எழுச்சிமிகு உற்சாக வரவேற்பை கட்சியினர் கொடுத்திருந்தாலும், அங்கு கூடியிருந்த மாணவிகள் ரோசாப்பூக் களையும், கேட்பரீஸ் சாக்லேட்களையும் கொடுத்து 'அண்ணனை' வரவேற்றதில் திக்குமுக்காடிப் போனார் துணை முதல்வர். அடுத்ததாக, தடுப் பணை ஆய்வு. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ரூ.40.27 கோடி மதிப்பில் நடைபெற்றுவரும் தடுப்பணை பணியை பார்வையிட்டார். நீர்வளத்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் ஆகியோரிடம், "7 ஆயிரம் ஏக்கர் பாசனப்பரப்பு பயன்பெறக்கூடிய இந்தத் திட்டத்தை உரிய காலத்திற்குள், தரமாகக் கட்டிமுடிப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும்'' என அறிவுறுத்தினார்.

Advertisment

ss

தொடர்ச்சியாக, சிவகங்கை நகர்மன்ற தலைவர், மாவட்டக் கழக அவைத்தலைவர் உள் ளிட்ட பல்வேறு பொறுப்புக்களில் திறம்பட செயல் பட்டவரான கழக முன்னோடியான சோழபுரத்தி லுள்ள சாத்தையாவின் இல்லத்திற்கு சென்று அவருக்கு மரியாதை செலுத்தினார். துணை முதல்வர், "தலைவர் கலைஞர், தமிழ்நாட்டின் எந்த ஊருக்கு சென்றாலும் அந்த ஊரின் கழக முன்னோடிகளை உரிமையோடு பெயர் சொல்லி அழைப்பார். அச்சமயத்தில் கழக உடன் பிறப்புக் கள் அனைவரும் மகிழ்ச்சியடைவர். அப்படிப்பட்ட கழக முன்னோடிகளை இல்லம் தேடிச்சென்று மரியாதை செய்வதை என்றும் மறக்கமாட் டோம்." என துணைமுதல்வரை பாரட்டுகின்றனர் சிவகங்கை மாவட்டத்திலுள்ள கழகத்தின் முன்னோடிகள்.

Advertisment

தொடர்ந்து சிவகங்கை மாவட்ட ஆட்சியரகத்தில் அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம். அதனைத் தொடர்ந்து ரூ.33.23 கோடி மதிப்பில் நிறைவுற்ற 36 திட்டப்பணிகளைத் தொடங்கி வைத்து ரூ.4.58 கோடி மதிப்பிலான 5 பணிகளுக்கு அடிக்கல் நாட்டிய துணை முதல்வர், 1,512 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில் ஒரு பயனாளி கையில் கட்டு டன் வந்து உதவியைப் பெறும்பொழுது, அவ ரிடம் அதுகுறித்து துணை முதல்வர், "என்னம்மா? கையில் அடிபட்டிருக்கு? என்ன நடந்தது?'' என வாஞ்சையாகக் கேட்க, "இல்லப்பா, பஸ்ஸுக்காக காத்திருக்கும்போது அங்கு வந்த பஸ்ஸின் முகப்பில் கவனக்குறைவாக இடித்துவிட்டது. இப்ப பரவாயில்லைப்பா'' என வெள்ளந்தியாக பதில் கூற அந்த இடமே நெகிழ்ச்சியானது.

மன்னர் துரைசிங்கம் கல்லூரி அருகிலுள்ள சிவகங்கை மாவட்ட விளையாட்டு விடுதியில் திடீரென ஆய்வுசெய்த துணை முதல்வர், தங்குமிடம், கழிவறை மற்றும் குளியலறைகளை ஆய்வுசெய்து சில குறைகளை சுட்டிக்காட்டி உடனே சரி செய்ய வேண்டுமென உத்தரவிட்ட வர், அங்கேயே மாணாக்கர்களுடன் உட்கார்ந்து மதிய உணவு சாப்பிடுவதாக உடனிருந்தவர்களி டம் தெரிவித்தார். உடனிருந்தவர்கள் மறுத்துப் பேச இயலாத நிலை. அங்குள்ள மாணாக்கர்களுடன் இணைந்து சாப்பாட்டுத் தட்டை எடுத்து அங்கேயே அமர்ந்து உணவருந்தினார் துணை முதல்வர். அப்படியே அவர்களோடு சிரித்து மகிழ்ந்தவர், அவர் களின் குறைக ளைக் கேட்கத் தவறவில்லை.

ss

அடுத்ததாக திருப்புத்தூரில் தி.மு.க.வின் 25 சார்பு அணிகளின் பிரதிநிதிகளின் கூட்டத்தில் கலந்துகொண்ட துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், "தி.மு.க.வில் 25 அணிகள் உள்ளன. ஆனால் அ.தி.மு.க.வின் நிலையோ, அவர்களின் கட்சியே 25 அணிகளாக பிரிந்து கிடக்கிறது. அ.தி.மு.க.விலுள்ள அனைத்து அணிகளையும் கட்டுப்படுத்தக்கூடிய ஒரே நபர் டெல்லியிலுள்ள அமித்ஷா. அவரின் கட்டுப்பாட்டில்தான் இன்று ஒட்டுமொத்த அ.தி.மு.க.வும் உள்ளது. அமித்ஷாவின் சூழ்ச்சி வலையில் இன்று எடப்பாடி பழனிசாமி சிக்கியுள்ளார். எல்லா வகையிலும் பா.ஜ.க. வுக்கு சவாலாக உள்ளவர் இந்தியாவிலேயே முதல்வர் மு.க.ஸ்டாலின் மட்டும்தான். எந்த ஆதிக்கத்துக்கும் அடங்காத வரலாற்றைக் கொண்டது சிவகங்கை மண் என்பதை நிரூபிக் கும் வகையில், அடிமை கள் - பாசிஸ்டுகளின் கூட்டணியை 2026 சட் டப்பேரவைத் தேர்தலில் வீழ்த்திட வேண்டும். எதிர்வரும் சட்டப் பேரவைத் தேர்தலில் 200-க்கும் அதிகமான தொகுதிகளில் கழக அணி வெல்ல சிவகங்கை மாவட்டத்திலுள்ள 4 தொகுதிகளிலும் நாம் வெற்றி பெற வேண்டும். இந்தச் சாதனையைப் படைக்க சார்பு அணி நிர்வாகிகள் அயராது உழைக்க வேண்டும்'' என்றார்.

தொடர்ந்து திருப்பத்தூரில் நமக்கு நாமே’ திட்டம் மூலம் ரூ.7.50 லட்சம் செலவில் செம்மொழிப் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்து பெண்களுக்கான மாநில அளவிலான கைப்பந்து போட்டியை தொடங்கி வைத்தார். பின் "மக்கள் முகத்தில் மிளிரும் மகிழ்ச்சியும்- நம்பிக்கையும் தமிழ் நாடு முதலமைச்சரின் தலைமையில் திராவிடமாடல் அரசு 2026-லும் தொடரும் என்பதையே காட்டு கிறது" என்று நம்பிக்கையுடன் கூறினார்.

அதன்பின் நிர்வாகிகளை சந்தித்துப் பேசும்போது, அந்த மண்டபத்தில் வயர் ஷார்ட்டாகி மின்சாரம் துண்டிக்கப்படவும்... அப் செட்டான உதயநிதி, நிர்வாகிகள் சந்திப்பை அதோடு ரத்து செய்து விட்டு, கிளம்பிவிட்டார். துணை முதல்வர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் ஜென்செட் கூட ஏற்பாடு செய்யாதை பலரும் முணுமுணுப்பாய் விமர்சித்தனர்.

nkn250625
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe