காஷ்மீரின் பஹல்காம் மலைப்பகுதியை சுற்றிப் பார்க்கவந்த சுற்றுலாப் பயணிகள் 26 பேர் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் சுட்டுக்கொல்லப் பட்டிருப்பது இந்தியாவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதில் 20 பேர் காயமடைந் திருப்பதும் குறிப்பிடத்தக்கது. 47 ராணுவ வீரர்கள் உயிரிழந்த புல்வாமா தாக்குத லுக்குப் பிறகு காஷ்மீரில் நடத்தப் பட்ட மிகப்பெரிய தாக்குதல் இது.

k

சுதந்திரத்துக்குப் பின் காஷ்மீரை இந்தியா -பாகிஸ் தான் இரு நாடுகளும் உரிமை கொண்டாடிவந்த நிலையில், ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் வசமும், மற்ற பகுதிகள் இந்தியா வசமும் உள்ளன. இந்தியா வசமுள்ள பகுதிகளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் பல்வேறு சமயங்களில் தீவிரவாத நடவடிக்கை களைக் கட்டவிழ்த்துவிட்டு வந்தனர்.

Advertisment

அதேசமயம் காஷ்மீரில் ராணுவ மற்றும் காவல் படையினர் குவிப்புக்கு உள்ளூர் காஷ்மீர் மக்களும் பலகால மாக எதிர்ப்புத் தெரிவித்துவந்தனர். இந்த நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை பா.ஜ.க. அரசு ரத்துசெய்து, அதனை யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது அம்மாநில மக்களைத் தொந்தரவு செய்தது.

பனி சிந்தும் இயற்கையெழில் காரணமாக காஷ்மீர், சுற்றுலா பயணிகளின் சொர்க்கமாகத் திகழ்கிறது. அதிலும், இமயமலையின் அடிவாரத் தில் பனிசூழ அமைந்துள்ள பஹல்காம் பகுதி மினி ஸ்விட்சர்லாந்து என அழைக்கப்படுவதால், இப்பகுதிக்கு சுற்றுலா பயணிகள் மிக அதிகமாக வருகை தருவர். இங்குள்ள பைசரன் குன்றுக்கு வாகனத்தில் வரமுடியாதென்பதால் கால்நடையாக வோ, குதிரைச் சவாரியாகவோ வந்தாகவேண்டும். ஏப்ரல் 22-ஆம் தேதி மக்கள் திரள் சுற்றிப் பார்த்துக்கொண்டிருந்த நிலையில், மதியம் மூன்று மணியளவில் அப்பகுதியைச் சுற்றியுள்ள பைன் வனப்பகுதியின் மரங்களுக்கிடையிலிருந்து வெளிப்பட்ட தீவிரவாதிகள், சுற்றுலாப் பயணி களை அதிநவீன துப்பாக்கியால் சுட்டுக்கொண்டே வெளிப்பட்டனர். அதில் 40-க்கும் அதிகமானவர் கள் காயமடைந்தனர்.

kk

Advertisment

தாக்குதலை நேரில் கண்டவர்களும், இறந்தவர்களோடு வந்தவர்களும், தீவிரவாதிகள் குறிப்பாக ஆண்களைக் குறிவைத்தே தாக்கியதாகத் தெரிவித்துள்ளனர். கர்நாடகத்தைச் சேர்ந்த பல்லவி, தனது கணவர் மஞ்சுநாத் சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில், தன்னையும் சுட்டுக்கொல்லுமாறு தீவிரவாதிகளிடம் கூறியிருக்கிறார். அதற்கு தீவிரவாதி, “"இல்லை, உன்னைச் சுடமாட்டேன். நடந்ததை மோடியிடம் போய் சொல்''”எனக் கூறியதாகத் தெரிவித்துள்ளார்.

தீவிரவாதத் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்த பரமேஸ்வரன், சந்துரு ஆகியோர் காயம் பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை பெற்றுவருகின்ற னர். நடந்ததைக் கண்ட பாலச்சந்திரராவுக்கு அதிர்ச்சியில் ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. கர்நாடகத்தைச் சேர்ந்த தொழிலபதிபர்கள் மஞ்சுநாத்ராவ், பாரத்பூஷன், அரபு நாட்டைச் சேர்ந்த ஒருவர், நேபாளத்தைச் சேர்ந்த ஒருவர் என இரு வெளிநாட்டுப் பயணிகள், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த பிதன் அதிகாரி, சமீர்குஹா, மணீஷ்ரஞ்சன், மகாராஷ்டிராவைச் சேர்ந்த இருவர் என 26 kkபேர் பலியாகியுள்ளனர். தாக்குதலில் கடற்படையைச் சேர்ந்த லெப்டினன்ட் வினய் நார்வாலும், ஐதராபாத் உளவுப் பிரிவு அதிகாரியும் பலியாகியிருப்பது பரிதாபத்துக் குரியது. இதில் வினய் நார்வாலுக்கு திருமணமாகி 6 நாட்களே ஆகியிருப்பதும், தேனிலவு வந்த இடத்தில் பலியாகியிருப்பதும் நெஞ்சை உலுக்குகிறது.

இந்தத் தாக்குதல் குறித்த தகவல்தெரிந்ததும், மத்திய ஆயுதப்படையும் போலீசாரும் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். காயமடைந்தவர்கள் ஹெலிகாப்டர் மூலம் மீட்கப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். காஷ்மீர் பத்திரிகைகள் அனைத்தும் இந்தத் தீவிரவாத தாக்குதலுக்கு எதிர்ப்பைப் பதிவுசெய்யும்விதமாக முதல் பக்கத்தில் அடர் கறுப்புப் பின்னணியில் செய்தியைப் பதிவுசெய்துள்ளன. ஏப்ரல் 24-ஆம் தேதி காஷ்மீர் முழுவதும் பந்த் நடத்தப்பட்டது

தாக்குதல் நடந்த செய்தி தெரிந்ததும் ராணுவ அதிகாரிகள் ஹெலிகாப்டர் உதவியுடன் காயம் பட்டவர்களை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருந்தபோதும் உள்ளூர் மக்கள் காயம்பட்டவர்களைத் தோளில் சுமந்துசென்று, வாகனங்கள் செல்லக்கூடிய சாலைவரை கொண்டு வந்து உதவிபுரிந்தனர். காயம்பட்டவர்களின் உடல்கள் பஹல்காம் மருத்துவமனைக்கும், இறந்தவர்களின் உடல்கள் ஸ்ரீநகர் அரசு மருத்துவமனைக்கும் கொண்டுவரப்பட்டுள்ளன.

தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளில் மூவர் அஸிப் ஃபாவ்ஜி, சுலேமான் ஷா, அபு தல்கா என அடையாளம் காணப்பட்டுள்ளது. தாக்குதலில் காயமடைந்தவர்களின் உதவியுடன் இவர்களின் வரைபடங்களையும் ராணுவம் தயார்செய்துள்ளது. தீவிரவாதிகள் ஜம்முவின் கிஷ்த்வாரிலிருந்து, தெற்கு காஷ்மீரின் கோகர்நாக் வழியாக பைசரனை அடைந்திருக்கலாமென ராணுவம் சந்தேகிக்கிறது. லஷ்கர் -இ -தொய்பாவின் நிழல் அமைப்பான ரெசிஸ்டெண்ட் ஃப்ராண்ட் இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றுள்ளது. பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் சமீபத்திய கோபமூட்டும் அறிக்கையே இந்தத் தாக்குதலுக்குக் காரணமென சந்தேகிக்கப் படுகிறது.

k

பஹல்காம் தாக்குதலையடுத்து அவசரமாக, தனது சவூதி அரேபிய பயணத்திலிருந்து நாடுதிரும் பிய பிரதமர் மோடி, “"இக்கொடூர தாக்குதலுக்குப் பின்னணியில் இருப்பவர்கள், நீதியின்முன் நிறுத்தப்படுவார்கள்'’ எனத் தெரிவித்துள்ளார். அதேசமயம் ஸ்ரீநகர் விரைந்துள்ள இந்திய உள் துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்பு அதிகாரி களுடன் உயர்நிலை ஆய்வுக்கூட்டம் ஒன்றை நடத்தியுள்ளார்.

அதேபோல எதிர்க்கட்சித் தலைவரான ராகுல்காந்தியும் அமெரிக் காவிலிருந்து அவசரமாக இந்தியா திரும்பி, பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் கலந்துகொண்டார்.

தாக்குதல் நடந்ததையடுத்து தீவிரவாதிகள், சுற்றுலா பயணிகளை பேரைக் கேட்டும், முக்கியமாக ஆண்களின் பேண்ட்டை நீக்கச் சொல்லியும் தாக்குதலை மேற்கொண்டதாக செய்தி பரவியது. அதில் சிறிதும் உண்மை இல்லை. தீவிரவாதிகளின் தாக்குதலின் போது, பயணிகளை குதிரைச் சவாரி மூலம் அழைத்துவந்த சையது உசேன் ஷா, தீவிரவாதி களின் துப்பாக்கியைப் பறிக்கமுயன்று உயிரிழந் திருக்கிறார். அதேபோல, உள்ளூர் மக்களால் காப்பாற்றப்பட்ட மற்றொரு பெண், அவர்கள் இனி என் சகோதரர்கள் எனத் தெரிவித்துள்ளதும் வைரலாகிவருகிறது.

அதேசமயம், நடந்த தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய ராணுவத்தில் பணிபுரிந்து ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பக்ஷி, “"மூன்று வருடங்களாக இந்திய ராணுவத்தில் சரிவர ஆட்கள் சேர்க்கப்படவில்லை. தாக்குதல் நடந்த பகுதியில் பாதுகாப்புக்கு போதிய ஆட்கள் இல்லாததும் அசம்பாவிதத்துக்குக் காரணம். பணத்தை மிச்சப்படுத்தும் நோக்கில் பாதுகாப்பு கோட்டைவிடப்பட்டுள்ளது''’எனக் குற்றம்சாட்டியுள்ளார்.

kk

பாகிஸ்தான் ராணுவத் தளபதி, பஹல்காம் தாக்குதலுக்கும் பாகிஸ்தானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லையென மறுத்துள்ளார். ஆனால் தாக்குதலில் பயன்படுத்தப் பட்ட நவீன துப்பாக்கிகள், வாக்கிடாக்கிகள் போன்ற வற்றை ராணுவத்தின் உதவியின்றி இயக்குவதோ, பெறுவதோ சிரமமானது. பாகிஸ்தான் ராணுவத்துக்கும் தீவிரவாத இயக்கங்களுக்கு மான நெருக்கம் உலகமறிந்தது.

kk

இதையடுத்து இந்திய- பாகிஸ்தான் எல்லை மூடப்பட்டதோடு, பாகிஸ்தானைச் சேர்ந்த தூதரக அதிகாரிகளையும் இந்தியா வெளியேற்றியுள்ளது. அதோடு சிந்து நதிநீர் பகிர்வு ஒப்பந்தத்தையும் நிறுத்திவைத்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.

மதவெறி அரசியலும், தீவிரவாதமும் கைகோர்ப்பதால் அடிக்கடி ரத்தத்தில் குளிக்கும் காஷ்மீருக்கு என்றுதான் விடிவுகாலம் பிறக்குமோ!

kk

kk