Advertisment

முகமது பின் துக்ளக்காக கோவை கமிஷனர்..? கண்ணீரில் காவலர்கள்!

police

""எங்களுடைய பதிலை அவர் காது கொடுத்து வாங்குவதில்லை. ஒருதலைபட்சம் தான். எடுத்த எடுப்பிலேயே எங்களுக்கு அவர் கொடுப்பது மெமோ, டிரான்ஸ்பர், இல்லை யெனில் காத்திருப்போர் பட்டியல். பாதிப்புக் குண்டான எங்களைப் பற்றி அவர் தெரிந்த நிலையில், முகமது பின் துக்ளக்காக மாறி, "என்னப்பா... சொல்றதில்லையா, திரும்ப வந்துடு' என்பார். ஆனால், இந்த நாட்களுக்குள் அனுபவிக்கும் வேதனை மன அழுத்தம் சொல்லிமாளாது. வேலையே பார்க்க முடிவதில்லை. இவரால் வி.ஆர்.எஸ். கொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகம்'' என புழுங்குகின்றனர் கோவை மாநகர காவலர்கள். அவர் கள் சுட்டிக்காட்டுவதோ கோவை மாநகர காவல்துறை கமிஷனர் பாலகிருஷ்ணனை.

Advertisment

police

கிழக்கு, மேற்கு, தெற்கு மற்றும் மத்திய மண்டலங்களாக 20 காவல் நிலையங்களை உள்ளடக் கியது கோவை மாநகர காவல்துறை. கமிஷன ராக பாலகிருஷ்ணன் பதவியேற்ற உட னேயே, பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக, கோவை மாநகரத்தில் போக்கு வரத்து நெரிசலை தவிர்க்கும் விதமாக சிக்னல் இல்லா நகரமாக மாற்றும் நோக்கத்தில் யு டர்ன் மற்றும் ரவுண்டானா போக்குவரத்து மாற்று ஏற்பாட்டின் மூலமாக மாநகர நெரிசலை குறைத்தது. நெய்பர் போலீஸ் திட்டம் இவைகள் கமிஷனருக்கு பாராட்டை அளித்தது.

ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்

ரேஸ்கோர்ஸ் பகுதிக்குட்பட்ட காவல் அதிகாரி ஒருவரோ, ""சிக்னல் இல்லா நகரம் திட்டம் அருமை என்றாலும் நகரில் நெரிசல் அதிகமாகத்தான் இருக்கின்றது. மாத டார்கெட் எனும் பெயரில் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளை நிறுத்தி சோதனை மேற்கொள்ளச் சொல்கின்றனர். அதிலும் அவர்களை சோதிக்கும் போது "ஆர்.சி. புக், இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் ஆகியவற்றைக் காட்டுங்கள் என மரி யாதையுடன் கேட்க வேண்டும் எனவும், ஆவணங்களை சரி பார்த்தவுடன், "உங் கள் நேரத்தை வீணடித்து விட் டோம், மன்னிக் கவும்... நீங்கள் புறப்படலாம் என மரியாதை யுடன் அனுப்பி வைக்கவேண் டும்...' எனவும் நீள்கின்றது மைக் கில் வரும் உத்தரவு. ஒரு பக்கம் டார்கெட், மறுபக் கம் இந்த உத்தரவு. இரண் டுமே ஒரே நபரிடமிருந்து. விதியை நொந்தபடி வாகன சோதனையில் ஈடுபட்டு, குடிகாரர்களுக்கு அபராதம் விதித்துவிடுவோம். ஆனால் குறிப்பிட்ட நபரோ 100க்கு அழைத்து, அந்த அதிகாரி என்னை அவமரியாதையாக நடத்தினார் என புகாரளித் தால் போதும். விசாரணை ஏதும் நடத்தாமலேயே உடனடியாக எங்களுக்கு மெமோவோ, டிரான்ஸ்பரோ கொடுத்துவிடுவார் கமிஷனர். அதற்கடுத்த நாளில் ஏதாவது வேலை என்றால், அந்த அதிகாரி இருந்தால் வேலை நன்றாக இருக்கும் என்றால், "ஏன், என்னாச்சு... அப்படியா.? அவனை உடனே வரச்சொல்லுங்க' என்பார். இந்த நிகழ்விற்கு இடைப்பட்ட நாட்களில் எங்களுடைய குடும்பம், எனக்குண்டான மன அழுத்தம் எப்படி இருக்கும்.? ஒரு வேளை அவமானம் தாங்காமால் வேறு ஏதாவது முடிவு எடுத்திருந்தால் என்ன செய்வது.? அதனால் தான் கூறுகின்றேன். எனக்கு போலீஸ் வேலையே வேண்டாமென்று'' என்கிறார் அவர்.

தற்பொழுது தனக்கு போலீஸ் வேண்டா மென்று விருப்ப ஓய்வு கொடுங்கள் என கேட்டவர்களின் எண்ணிக்கை மற்றைய மாவட்ட, மாநகரங்களை விட கோவை மாநகர காவல்துறையில் அதிகம் என்கிறது புள்ளி விபரம். மாநகர கமிஷனர் பாலகிருஷ்ணன், உளவுத் துறை அதிகாரிகளிடமிருந்து வரும் தகவல்களை புறந்தள்ளிவிட்டு, சமூகவலைத்தள தகவல்களையே நம்புகிறார். நாள் முழுவதும் சமூக வலைத்தளங்களி லேயே கவனத்தை செலுத்துகின்றார் என்கிற குற்றச்சாட்டும் கமிஷனர்மேல் உண்டு. இதற்கு உதாரணமாக போத்தனூர் காவல் நிலையத்தில் நடந்த சம்பவத்தை குறிப்பிடுகின்றனர் போத்தனூர் காவல் நிலையத்தார்.

""பாஸ்போர்ட் வெரிபிக்கசனுக்காக வந்த 50 நபர்களை அமர வைத்து, சான் றிதழ்களை சரி பார்த்துக் கொண்டிருந் தார் ராஜ ராஜேஸ்வரி என்ற சிறப்பு எஸ்.ஐ. இதில் ஒரு அம்மணி, கமிஷனர் பாலகிருஷ்ணனுக்கு போன் செய்து தன்னை வெகுநேரம் காக்க வைத்துள்ளார்கள் என புகார் அளித்துள்ளார். அத்து டன் இல்லாமல், ""பால்கியிடம் சொல்லிவிட்டேன். இப்ப பாருங்க... உங்களுக்கு போன் வரும்'' என அலப்பறையும் செய்ய, உடனே அந்த அம்மணி சொன்னதுபோல் போன் வந்தது கமிஷனரிடமிருந்து. உடனடியாக சிறப்பு எஸ்.ஐ. கண் டிக்கப்பட்டதோடு மட்டுமில்லாமல், அடுத்தநாளே பீளமேடு காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டிருக்கின்றார். இது சரியா? இத்த னைக்கும் கமிஷனரை "பால்கி' என செல்லமாக அழைத்த அந்த அம்மணி, கமிஷனரின் இன்ஸ்டாகிராம் ப்ரெண்டாம். கமிஷனரை பொறுத்தவரை பொதுமக்களிடம் நல்லபெயர் வாங்கட்டும். அதற்காக அவருக்கு கீழ் உள்ள ஏ.சி., இன்ஸ் பெக்டர், எஸ்.ஐ. ரேங்கில் உள்ளவர்களெல்லாம் குற்றவாளி களா..? எங்கு போய் இதனை சொல்வது?'' என வருத்தப் படுகின்றனர். கோவை மாநகர காவல் துறையினருக்கு யோகா பயிற்சி, தியானப் பயிற்சி என பல்வேறு உடல்ரீதியான பயிற்சிகளை ஏற்பாடு செய்து வருகிறார் கமிஷனர் பாலகிருஷ்ணன். இது நன்மை எனினும், மாநகரின் பாதுகாப்பில் களப்பணியாற்றும் காவலர்களின் அடிப்படை பிரச்சினைகளைத் தெரிந்துகொள்ளாமல், மாநகர மக்களின் பாதுகாப்பை உணராமல் மக்களிடம் நெருங்கி பழகுகிறோம் என்ற விளம்பர தொனியில் பழகுவது கார்ப்பரேட் கம்பெனி போல் உள்ளது என்கின்றனர் விபரம் அறிந்த அதிகாரிகள்.

சாய்பாபா காலனியைச் சேர்ந்த காவல்அதிகாரி ஒருவரோ, ""நெய்பர் போலீஸ் திட்டத்தினைப் பற்றி கண்டிப் பாக கூறியே ஆகவேண்டும். காவல்நிலைய எல்லைக்குட் பட்ட பகுதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பொதுமக்களிடம் செல்லவேண்டும். அவர்களின் பிரச்சினைகளைக் கேட்டறிந்து அதற்குண்டான அதிகாரிகளை தேடிப்பிடித்து, அதற்கு தீர்வு செய்து தரவேண்டும் என்பதுதான் நெய்பர் போலீஸ் திட்டம்.

இது ஒரு வகையில் நல்ல விஷயம் என்றாலும், கன்ட்ரோல் ரூமிலிருந்து போன் செய்து "அந்த அதிகாரி எப்படி நடந்துகொண்டார்?' என கால்சென்டரிலிருந்து பேசுவது போல் பேச, அவர்களும் "அந்த அதிகாரி சரியாக பேசவில்லை' என்று கூறினால் போதும். அடுத்தநாள் அவர் மாற்றப்படுவார். என்ன சார் நியாயம்? இதைவிட மனஅழுத்தம் என்ன வேண்டும்?'' என்கிறார் அவர்.

பொதுமக்களுடன், காவல்துறையினர் நல்உறவுடன் இருக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் கண்டிக்கும் அதிகாரம் கொண்ட காவலர்களின் கைகள் கட்டி போடப்பட்டுள்ளதாகவும், செய்யாத குற்றத்திற்கு தண்டனை பெறுவதாகவும் குமுறுகின்றனர் கோவை மாநகர காவல்துறையினர்.

இதுகுறித்து கருத்தறிய கமிஷனர் பாலகிருஷ்ணனை தொடர்புகொண்டோம்... பதிலில்லை.

முகமது பின் துக்ளக்காக மாறிய கமிஷனர், தங்களுடைய குரலை கேட்க வேண்டுமென்பது மாநகர போலீஸாரின் வேண்டுகோள்! செவி மடுப்பாரா கமிஷனர்?

படம்: விவேக்

cc

nkn100124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe