Advertisment

ராங்கால் ஆணவப் படுகொலையை தடுக்க ஆணையம்! கூட்டணியில் யார் முதல்வர் வேட்பாளர்? எடப்பாடிக்கு ஷாக் தந்த பா.ஜ.க.!

rang

"ஹலோ தலைவரே, தங்களுக்கு விருப்பமானதை சாதித்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் டெல்லி பா.ஜ.க., தமிழக அரசியலில் நடிகர் விஜய்யை வைத்து புதிய ரூட்டில் காய் நகர்த்தத் திட்டமிடுகிறது.''”

Advertisment

"அவங்க விஜய்யை வைத்து, தமிழகத்தில் வேடிக்கை காட்டப் போறாங்கன்னு சொல்லு.''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. கூட்டணியில் மாற்றுச் சிந்தனை ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளில் பாதி தொகுதியும், முதல்வர் பதவியும் தங்களுக்கு வேண்டும் என்று  த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் சொல்ல, ’தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக்குத் தலைமை வகிப்பது அ.தி.மு.க.தான். அந்த உரிமையில் சொல்கிறேன். விஜய்யின் த.வெ.க.வுக்கு 40 சீட் தருவதுதான் நியாயம். ஏனெனில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட்டுகளைக் கொடுக்கவேண்டி இருக்கிறதே’ என்று எடப்பாடி சொல்கிறாராம். இதை யெல்லாம் பார்த்த பா.ஜ.க., அ.தி.மு.க. இல்லாமல் த.வெ.க., டி.டி.வி.தினகரன் மற்றும் உதிரிக்கட்சிகளை வைத்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்கிவிட லாம் என்றும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதை விட்டுவிட்டு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த லாம் என்றும் திட்டமிடுகிறதாம். இது குறித்த அஜெண்டா, அமித்ஷாவின் டேபிளுக்குச் சென்றிருக்கிறது என்று கமலாலயத் தரப் பினரே சொல்கிறார்கள்.''”

"கரூர் துயரத்தைத் தொடர்ந்து பரப்புரைப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த  நடிகர் விஜய், இன்றோடு 23 நாட்களாக வெளிச்சத்துக்கு வரவே இல்லை.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட, பயணத்தையும் அவர் ரத்து செய்திருந்தார். இந்தசூழ லில் அது தொடர்பான  வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் வெளியே  

"ஹலோ தலைவரே, தங்களுக்கு விருப்பமானதை சாதித்துக் கொள்ள எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கும் டெல்லி பா.ஜ.க., தமிழக அரசியலில் நடிகர் விஜய்யை வைத்து புதிய ரூட்டில் காய் நகர்த்தத் திட்டமிடுகிறது.''”

Advertisment

"அவங்க விஜய்யை வைத்து, தமிழகத்தில் வேடிக்கை காட்டப் போறாங்கன்னு சொல்லு.''”

Advertisment

"உண்மைதாங்க தலைவரே, பா.ஜ.க. கூட்டணியில் மாற்றுச் சிந்தனை ஆரம்பித்திருக்கிறது என்கிறார்கள். கூட்டணிப் பேச்சுவார்த்தையின்போது, தமிழகத்தின் ஒட்டுமொத்த தொகுதிகளில் பாதி தொகுதியும், முதல்வர் பதவியும் தங்களுக்கு வேண்டும் என்று  த.வெ.க. தலைவரான நடிகர் விஜய் சொல்ல, ’தமிழகத்தைப் பொறுத்தவரை கூட்டணிக்குத் தலைமை வகிப்பது அ.தி.மு.க.தான். அந்த உரிமையில் சொல்கிறேன். விஜய்யின் த.வெ.க.வுக்கு 40 சீட் தருவதுதான் நியாயம். ஏனெனில் மற்ற கூட்டணிக் கட்சிகளுக்கும் சீட்டுகளைக் கொடுக்கவேண்டி இருக்கிறதே’ என்று எடப்பாடி சொல்கிறாராம். இதை யெல்லாம் பார்த்த பா.ஜ.க., அ.தி.மு.க. இல்லாமல் த.வெ.க., டி.டி.வி.தினகரன் மற்றும் உதிரிக்கட்சிகளை வைத்து ஒரு பலமான கூட்டணியை உருவாக்கிவிட லாம் என்றும் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி என்பதை விட்டுவிட்டு, விஜய்யை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்த லாம் என்றும் திட்டமிடுகிறதாம். இது குறித்த அஜெண்டா, அமித்ஷாவின் டேபிளுக்குச் சென்றிருக்கிறது என்று கமலாலயத் தரப் பினரே சொல்கிறார்கள்.''”

"கரூர் துயரத்தைத் தொடர்ந்து பரப்புரைப் பயணத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்த  நடிகர் விஜய், இன்றோடு 23 நாட்களாக வெளிச்சத்துக்கு வரவே இல்லை.  உயிரிழந்தவர்களின் குடும்பத்தின ரைச் சந்தித்து ஆறுதல் சொல்ல ஏற்பாடு செய்யப்பட்ட, பயணத்தையும் அவர் ரத்து செய்திருந்தார். இந்தசூழ லில் அது தொடர்பான  வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றி, உச்சநீதி மன்றம் உத்தரவிட்டதைத் தொடர்ந்து அவர் வெளியே   வந்திருக்கிறார். பனையூர் கட்சி அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகளுடன் விவாதித்த அவர், தீபாவளி முடிந்ததும் கரூருக்குச் செல்ல முடிவு செய்திருக்கிறார். இதற்கான ஏற்பாடுகள் சீக்ரெட்டாக நடக்கிறது. அடுத்து, நவம்பர் மாதம் முதல் தனது பிரச்சாரப் பயணத்தையும் அவர் தொடரவிருக்கிறாராம்.''”

"முதல்ல அவர் கட்சி நிர்வாகிகளுடன் பேசுன போட்டோ ஒண்ணாச்சும் வெளியிடட்டும், அதுக்கப்புறமா டேஞ்சரஸ் ரோட் ஷோவ நடத்துறாரா பார்ப்போம்?''”

"தனது பிரச்சாரத்தை அந்தந்த மாவட் டத்தின் முக்கிய தெருக்களில் நடத்துவதைத் தவிர்க்கலாமா? என்கிற ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு மாற்றாக, அங்கங்கே குறிப்பிட்ட மைதான பரப்புகளில் ஸ்டேஜ் அமைத்துப் பேசலாம் என்றும், அந்த மைதான பரப்புகளையொட்டியே ஹெலிபேடு களை அமைத்து, வான்வெளிப் பயணம் செய்து, பிரச்சாரத்தைத் தொடங்கலாம் என்றும் சிலர் ஆலோசனை சொல்லியிருக் கிறார்கள். ஆனால், இன்னும் சிலரோ, ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டேஜ் அமைக்க இடத்தை தேடுவதிலும் அதற்கு அனுமதி கிடைப்பதிலும் நிறைய சிக்கல் இருக்கும். அதில் ஆளும் தரப்பின் தலையீடும் இருக்கும். அதற்கெல்லாம் நாட்கள் நமக்கு போதாது. அதனால், வழக்கம்போல மக்கள் சந்திப்பை ரோட் ஷோ மூலம் நடத்துவது தான் சரியாக இருக்கும் என்று  தெரிவித் துள்ளனர். இதுபற்றி விஜய் இன்னும் முடிவெடுக்கவில்லையாம். இதற்கிடையே, மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்புகள் பல இடங்களிலும் நிரப்பப்படாமல் இருப்ப தால், அந்த இடங்களுக்கு பொறுப்பாளர் களை நியமிக்கச் சொல்லியிருக்கிறாராம்  விஜய்.''’

"கரூர் விவகாரத்தில் சி.பி.ஐ., தன் விசா ரணையை அதிரடியாக நடத்தும் என்கிறார் களே?''” 

rang2

"கரூர் வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றியது உச்சநீதிமன்றம். மேலும், தமிழக அரசு அமைத்த அருணா ஜெகதீசன் தலைமையி லான ஒரு நபர் கமிஷனையும், சென்னை உயர் நீதிமன்றம் அமைத்த அஸ்ராகார்க் தலை மையிலான சிறப்பு புலனாய்வுக் குழுவையும் அது ரத்து செய்திருக்கிறது. இதனால் கரூர் வழக்கில் எந்த விசாரணையையும் மாநில அரசால் தொடங்க முடியாது. இந்த நிலையில், இதுவரை சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களையும் சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருப்பதால், கரூருக்கு வந்த சி.பி.ஐ. எஸ்.பி. பிரவீன்குமார், காவல்துறை இன்ஸ்பெக்டர் திருமலையிட மிருந்து, அங்கு நடந்த அசம்பாவிதம் குறித்த ஃபைல்களை கேட்டு வாங்கியிருக்கிறார். எனினும் முக்கியமான ஃபைல்களை அவரிடம் இன்ஸ்பெக்டர் ஒப்படைக்கவில்லை என்கிறார்கள் காவல்துறையினரே. இந்நிலையில், தமிழக அரசு முன்பு நியமித்திருந்த எஸ்.ஐ.டி. குழு தங்கியிருந்த அலுவலகத்தின் பின்புறத் தில், எரிந்த நிலையில் காகிதங்களும், ஒரு பென்டிரைவும் இருப்பதை படம்பிடித்த சில ஊடகங்கள், முக்கிய ஆவணங்களை எரித்துவிட்டதாக செய்தி வெளியிட் டன. இதுகுறித்து தமிழக போலீசார் அளித்த விளக்கத்தில், "சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணை நடத்தும்போதும், விசாரணையை முடிக்கும்போதும், வழக்கிற்கு தேவையற்ற ஆவணங்களை தீயிட்டு அழிப்பது வழக்கமானதுதான். அதேபோல், சி.பி.ஐ.யிடம் ஆவணங்களை சமர்ப்பித்த பிறகு, தேவையற்ற காகிதங்கள், பென்டிரைவ்களை எரித்துள்ளனர்' என்று தெரிவித்துள்ளனர்.''

"இந்த நிலையில் விஜய்யைத் தனது வளையத்திற் குள் கொண்டுவந்து விசாரிக்க சி.பி.ஐ. திட்டமிட்டுள் ளது. அவரிடம் விசாரிப்பதற்கு முன்பாக, கரூர் சம்பவத் திற்கு 2 நாள் முன்பும், சம்பவம் நடந்த பிறகான 5 நாட்களில் அவர் யார் யாரிடம் விவாதித்தார்? விஜய்யை யார், யார் தொடர்புகொண்டு பேசினார்கள் என்பது உள்ளிட்ட தகவல்களையும் சி.பி.ஐ. அதிகாரிகள் சேகரித்து வருகிறார்களாம்.''’

"புஸ்ஸி ஆனந்தின் போக்கு கட்சியினரை சோர்வடைய வைத்திருக்கிறது என்கிறார்களே?''”

"கரூர் சம்பவத்தில் காவல்துறை பதிவு செய்த எஃப்.ஐ.ஆரில் முதல் குற்றவாளியாக கரூர் மாவட்ட த.வெ.க. செயலாளர் மதியழகன், இரண்டாவது குற்ற வாளியாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரை சேர்த்திருந்தனர். இதில் மதியழ கன் கைது செய்யப்பட்டார். கைதை எதிர்கொண்டு சிறைக்கும் மதி சென்றார். ஆனால், புஸ்ஸி ஆனந்த் இதனை எதிர்கொள்ளாமல், முன்ஜாமீனுக்கு முயற்சி செய்தார். அது கிடைக்காத நிலையில் கைது சம்பவத்தை அவர் எதிர்கொண்டிருக்க வேண்டும். அப்படி எதிர்கொண்டிருந்தால் கட்சி நிர்வாகிகளுக்கும், கட்சிக் கும் புதிய இமேஜ் கிடைத் திருக்கும். நிர்வாகிகளும் தொண்டர்களும் தைரியமாக அரசியல் செய்யவார்கள். ஆனால், கைது நடவடிக் கையை எதிர்கொள் ளாமல் தலை மறைவானார் புஸ்ஸி ஆனந்த். இந்த செய்கை, கட்சியின் இமேஜை டேமேஜ் ஆக்கியதுடன், நிர்வாகிகளும் மனதளவில் சோர்வடைந்துள்ள னர். போலீஸ் நடவடிக்கைகள் குறித்த பயம் அவர்களுக்கு வந்திருக்கிறது என்கிறார்கள்.''”

"அவங்க யோசிக்கிறது சரிதானேப்பா? அதேபோல் புஸ்ஸியை கட்சிப் பொறுப்பிலிருந்து  நீக்கணும் என்கிற குரலும் த.வெ.க.வில் எழுந்துவரு கிறதே?''”

"ஆளும் கட்சியின் அதிரடிகளை துணிச்சலுடன் எதிர்கொண்டால்தானே, அடுத்த நிலையில் இருக்கும் நிர்வாகிகளுக்கும் துணிச்சல் வரும். இந்த நிலையில், பயத்துடனேயே அரசியல் செய்யும் புஸ்ஸி ஆனந்தை பதவியிலிருந்து இறக்கி, அவருக்கு பதிலாக துணிச்சலுடன் இயங்கும் வேறு ஒருவரை நியமியுங்கள் என்று விஜய்க்கு த.வெ.க. நிர்வாகிகள் தரப்பிலிருந்து யோசனைகள் பறக்கின்றன. இதில் கொடுமை என்னவெனில், அவருக்கு எதிராக நிர்வாகிகள் அனுப்பும் புகார்கள் அவரிடமே செல்வதுதான். இதனைக் கண்டு ஏகத்துக்கும் அப்-செட்டாகியிருக்கிறாராம் புஸ்ஸி ஆனந்த். அத்துடன் இத்தகைய புகார்களை அனுப்புவது ஆதவ் அர்ஜுனாவின் ரகசிய உத்தரவில் அவரது ஆதராவளர்கள்தான் அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள் என்கிற தகவலும் புஸ்ஸி ஆனந்துக்கு தெரிந்ததால் மேலும் அதிர்ச்சியில் இருக்கிறார். விரைவில், புஸ்ஸி ஆனந்துக்கும் ஆதவ் அர்ஜுனா ஆதரவாளர்களுக்கிடையே பகிரங்கமாக மோதல் வெடிக்கும் என்கிற நிலை, அங்கே நிலவுகிறது.''” 

"திமுக செந்தில்பாலாஜியை, அ.தி.மு.க. செங்கோட்டையன் சந்தித்ததாகச் சொல்கிறார்களே?''”

rang1

"சமீபத்தில் அ.தி.மு.க. செங்கோட்டையன், தி.மு.க. முன்னாள் அமைச்சரான செந்தில்பாலாஜியை சந்தித்திருக்கிறார். காரணம், இந்தமுறை அவருக்கு எடப்பாடி சீட் தரமாட்டார் என்று அவர் நினைக்கிறாராம். எனவே, ’அப்படி ஒரு சூழல் வந்தால், தி.மு.க. ஆதரவுடன் சுயேட்சையாக நின்று சட்டமன்றம் போக விரும்பு கிறேன். அதற்கு உதவவேண்டும்’ என்று செந்தில்பாலாஜியிடம் அவர் கேட்டுக்கொண்டாராம். ஒரு பக்கம் பா.ஜ.க. ஆதரவைக் கேட்டுக்கொண்டிருக்கும் செங்ஸ், மறுபக்கம் தி.மு.க.வின் ஆதரவை யும் கேட்பதைப் பார்த்து, அவரது ஆதரவாளர்களே அதிர்ந்து போயிருக்கிறார்களாம்.''”

"நானும் ஒரு மிக முக்கிய மான ஒரு தகவலைப் பகிர்ந்துக் கறேன். தமிழகத்தில் நிகழும் ஆணவப் படுகொலைகளைத் தடுக்க தனிச்சட்டம் இயற்றப்படும் என அண்மையில் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தபடி, வெள்ளிக்கிழமை நடந்த சட்ட மன்றக் கூட்டத்தில், இதற்கென ஓய்வுபெற்ற நீதிபதி கே.என். பாஷா தலைமையில் ஆணையம் அமைக்கப்பட இருப்பதாக அறி விக்கப்பட்டது. இந்த ஆணையத் தில் சட்ட நிபுணர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், மானுடவியல் அறிஞர்கள் என பலரும் இடம் பெறுவர். இதனையடுத்து, அரசியல் தலைவர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், சட்ட வல்லுநர்கள், பாதிக்கப்படும் சமூகத்தினர் உள்ளிட்ட அனைத் துத் தரப்பினரின் கருத்துக்களை யும் அறிந்து, தனது பரிந்துரை களை அரசுக்கு இந்த ஆணையம் வழங்கும். அதன் அடிப்படையில் ஆணவப் படுகொலைகளை தடுப்பதற்குரிய தனிச்சட்டம் இயற்றப்பட இருக்கிறது. தி.மு.க. அரசின் இந்த முன்னெடுப்பை, அதன் தோழமைக் கட்சியினர் மகிழ்வோடு வரவேற்றுள்ளனர்.''” 

nkn221025
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe