கமிஷன் ஃபர்ஸ்ட்! பணி நியமனம் நெக்ஸ்ட்! -செவிலியர்கள் படும் பாடு!

nurse

கொரோனா இரண்டாம்கட்ட அலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு மிகுந்த தேவையாக இருக்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் இல்லா விட்டால் கொரோனா பாதிப்புகளும் மரணங்களும் கட்டுக்கடங்காமல் போய்விடும். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் செவிலியர்களின் பற்றாக்குறை அதி கரித்துவரும் நிலையிலும், செவிலியர்களின் பணி நியமனம் தாமதம் செய்யப் பட்டுவருவது அவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

nurse

தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் 1,212 காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போதுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஜனவரி 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கும் அதே ஊதியம் வழங்கவேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து இறந்துபோன செவிலி

கொரோனா இரண்டாம்கட்ட அலை உச்சத்தைத் தொட்டுள்ள நிலையில், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களின் பங்கு மிகுந்த தேவையாக இருக்கிறது. அவர்களின் அர்ப்பணிப்பும் சேவையும் இல்லா விட்டால் கொரோனா பாதிப்புகளும் மரணங்களும் கட்டுக்கடங்காமல் போய்விடும். தமிழ்நாடு முழுவதுமுள்ள அரசு பொது மருத்துவமனைகளில் செவிலியர்களின் பற்றாக்குறை அதி கரித்துவரும் நிலையிலும், செவிலியர்களின் பணி நியமனம் தாமதம் செய்யப் பட்டுவருவது அவர்களிடையே கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது.

nurse

தமிழகம் முழுவதிலுமுள்ள அரசு மருத்துவமனைகளில் 1,212 காலிப் பணியிடங்கள் உள்ளன. தற்போதுள்ள 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று ஜனவரி 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது செவிலியர்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும், நிரந்தர செவிலியர்களுக்கு வழங்கும் அதே ஊதியம் வழங்கவேண்டும். கொரோனா காலகட்டத்தில் பணிபுரிந்து இறந்துபோன செவிலியர்களுக்கு நஷ்ட ஈடும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப் பணியும் வழங்கவேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர்.

இந்த நிலையில் போராட்டக்காரர்களிடம் சுகாதாரத்துறை செயலாளர் பேச்சுவார்த்தை நடத்தி, இறுதியாக பிப்ரவரி 15-ஆம் தேதிக்குள் அனைத்து ஒப்பந்தப் பணியாளர்களும் நிரந்தரமாக்கப்படுவார்கள் என்று எழுத்துமூலமாக உத்தரவாதம் கொடுத்தார். அதன்பிறகே ஒப்பந்தப் பணியாளர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்துசென்றனர்.

இதையடுத்து பிப்ரவரி 25-ஆம் தேதி 1200 பேரை பணிநிரந்தரம் செய்வதற்காக பட்டியலிட்டிருந்த நிலையில், அவர்களை தமிழகம் முழுவதுமுள்ள காலியாக உள்ள இடங்களுக்கு பணிநியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கச் சொல்லியுள்ளார் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்.

nn

நிலுவையில் வைக்கப்பட்ட லிஸ்டில் 800-க்கும் மேற்பட்டவர்களிடம் 5 லட்சம் தொடங்கி 10 லட்சம் வரையிலும் பணம் வசூலிக்கப்பட்டுள்ளதாக பட்டியலில் இடம்பெற்றவர்களிடமிருந்தே முணுமுணுப்பு எழுந் துள்ளது. இந்த கலெக்சன் பணியை செவிலியர் சங்கத்திலுள்ள முக்கிய நபரான காளியம்மாள், வளர்மதி, ஐஸ்வர்யா, பாரிவள்ளல், ரவி சீதாராமன் ஆகியோர் முடித்து செந்தில்நாதனிடம் கொடுக்க, அதை மினிஸ்டரின் பர்ஸனல் பி.ஏ.வைச் சந்தித்து அந்த லிஸ்ட்டைக் கொடுத்து விடுவார்களாம். அதன்படியே பணி நியமனம் நடைபெறுமாம்.

வேலை கிடைத்துவிடும் என்று நினைத்து பணம் கொடுத் தவர்கள் ஆட்சியே முடிந்துவிட்டதே, இனி எப்போது பணியில் நியமிப்பார்கள் என்று வெளியில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் தவித்துவருகிறார்கள். இந்த பணவசூல் சம்பந்தமாக நக்கீரன், 2020, டிசம்பர் 5-8 இதழில் "நர்சிங் போஸ்ட் மோசடி! சி.எம். செக்யூரிட்டி மனைவி ஆடியோ மிரட்டல்' என்ற கட்டுரையை வெளி யிட்டது.

இந்த முழு பிரச்சனைகளுக்கும் காரணம் அரசு செவிலியர்கள் சங்கச் செயலாளர் வளர்மதிதான் என்றும், இப்படி ஒரு சங்கம் இயங்குகிறதா என்று பொள்ளாச்சியைச் சேர்ந்த தன்னார்வலர் ஒருவர் தகவலறியும் உரிமைச் சட்டத்தில் கேட்டதற்கு அதுபோன்ற சங்கமே இயங்கவில்லை என்று பதில் வந்துள்ளதாம். இப்படி தேர்தல் நேரத்தில்கூட தேர்தல் விதிமுறைகளையும் மீறி பணத்தை வாங்கிக்கொண்டு பொள்ளாச்சியில் 3 செவிலியர்கள் 2 டாக்டர்களை பணியிடமாற்றம் செய்துள்ளனர்.

தற்போது நிலுவையிலுள்ள காலி இடத்தை ஒப்பந்த ஊழியர்களுக்குக் கொடுத்துவிட்டால், மீண்டும் புதிய ஒப்பந்த ஊழியர்கள் பணிநியமனம் செய்யப்படுவர். அப்படிச் செய்தால் செவிலியர்கள் சுழற்சிமுறையில் இயங்க முடியும். அதைவிடுத்து சுயநல நோக் கில் பணி நியமனமோ, பணியிட மாற்றமோ செய்யாமல் இருப்பது செவிலியர்களை குமுற வைத்துள்ளது.

தமிழகத்தில் ஒருநாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத் தைத் தாண்டிவரும் சூழ்நிலையில், செவிலியர் களுக்கு வேலைப்பளு அதிகமாக இருக்கிறது. எனவே வேலைப்பளு கடுமையாக இருப்பதை கருத்தில் கொண்டு கூடுதல் செவிலியர்களை பணியமர்த்த வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டோம். தற்போது மிகவும் குறைவாக செவிலியர்கள் இருக்கின்ற காரணத்தால் விடுமுறைகூட எடுக்கமுடியாத சூழல் ஏற் பட்டுள்ளது.

131 ஜி.ஓ.வின்படி பணி மூப்புக்கேற்ப வருடத்திற்கு ஒருமுறை ஜெனரல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பணி இடமாற்றம் செய்யவேண்டும். இதுபோன்ற கவுன்சிலிங் நடத்தாமல் இவர்களாகவே அமைச்சருக்கு வேண்டிய நபர்களைப் பின்புலமாக வைத்துக்கொண்டு பணத்தின் மூலமாகவே பணியிடை மாற்றம் செய்கிறார்கள்” என செவிலியர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.

இதுதொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அவர்களிடம் கேட்டபோது, “"வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதால் பணி நியமனம் செய்ய முடியவில்லை''’என்றார். மேலும் அதிக விளக்கம் கேட்டபோது, "தற்போது கொரோனா பணி நெருக்கடி இருப்பதால் பேச இயலாது''’என மறுத்துவிட்டார்.

அமைச்சர் விஜயபாஸ்கரோ, "யாரோ கூறும் கட்டுக்கதைக்கெல்லாம் என்னால் பதில் சொல்லமுடியாது''’என பணவசூல் விவகாரங்களை மறுத்தார்.

nkn050521
இதையும் படியுங்கள்
Subscribe