Advertisment

கமிஷன் தகராறு! சிக்கும் மாறி அமைச்சர்!

ss

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமாக 6.9 ஏக்கர் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை விற்றுத்தருவ தாக பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரி களான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் சுந்தர்ராஜனிடம் பேசு கின்றனர்.

இடத்தை விற்பனை செய்து, 30 கோடி ரூபாய் இடத்தின் உரிமையாள ருக்கு, மீதி ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷுக்கு என முடிவாகி 2010 ஆகஸ்ட் மாதம் விற்பனை செய் வதற்காக பவர் வாங்கு கின்றனர். இதன்பின்னர் ராமமூர்த்தி- ஜெய பிரகாஷுடன் தொழி லதிபர்கள் சேகர்ரெட்டி, உத்தம்சந்த், தி.மு.க.வின் இரண்டு முக்கிய பிர முகர்கள் பார்ட்னர்களாகி இடத்தை விற்பனை செய்ய முயன்றனர். அது இழுத்துக்கொண்டே போகிறது.

Advertisment

cs

2013-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்ச ராகயிருந்த வீரமணி, அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அதிலிருந்து 5000 சதுர அடியை 30 கோடிக்கு வாங்கிக்கொள்கிறேன் என்கிறார். ஓராண்டு கடந்தும் வாங்கவில்லை. பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரமானந்தா தண்

வேலூர் புதிய பேருந்து நிலையம் அருகே சுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமாக 6.9 ஏக்கர் காலியிடம் இருந்தது. இந்த இடத்தை விற்றுத்தருவ தாக பிரபல ரியல் எஸ்டேட் வியாபாரி களான ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷ் இருவரும் சுந்தர்ராஜனிடம் பேசு கின்றனர்.

இடத்தை விற்பனை செய்து, 30 கோடி ரூபாய் இடத்தின் உரிமையாள ருக்கு, மீதி ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷுக்கு என முடிவாகி 2010 ஆகஸ்ட் மாதம் விற்பனை செய் வதற்காக பவர் வாங்கு கின்றனர். இதன்பின்னர் ராமமூர்த்தி- ஜெய பிரகாஷுடன் தொழி லதிபர்கள் சேகர்ரெட்டி, உத்தம்சந்த், தி.மு.க.வின் இரண்டு முக்கிய பிர முகர்கள் பார்ட்னர்களாகி இடத்தை விற்பனை செய்ய முயன்றனர். அது இழுத்துக்கொண்டே போகிறது.

Advertisment

cs

2013-ல் அ.தி.மு.க. ஆட்சியில் அமைச்ச ராகயிருந்த வீரமணி, அந்த இடத்தைப் பார்த்துவிட்டு அதிலிருந்து 5000 சதுர அடியை 30 கோடிக்கு வாங்கிக்கொள்கிறேன் என்கிறார். ஓராண்டு கடந்தும் வாங்கவில்லை. பின்னர் ஆந்திராவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரமானந்தா தண்டாவை ராமமூர்த்திக்கு அறிமுகப்படுத்தி, இவர் இந்த இடத்தை வாங்கிக்கொள்வார் என்கிறார் வீரமணி. மொத்த இடத்தையும் விலைபேசி பிரமானந்தாவும், ஜோதிர்மாயி எஸ்டேட் நிறுவன உரிமையாளர் சத்தியநாராயணாவும் ஜோதிர்மாயி நிறுவனத்தின் பெயரில் 60 கோடிக்கு வாங்கினர்.

அந்த இடத்தை ராமமூர்த்தி, ஜெயப்பிரகாஷிடமே மீண்டும் லீஸுக்குத் தருகின்றனர். அடுத்த இரண்டாண்டில் ஜோதிர்மாயி எஸ்டேட் கம்பெனியில் சத்தியநாராயணாவின் பங்கை சேகர்ரெட்டி வாங்குகிறார். இப்போது அந்த இடத்தின் உரிமையாளராக பிரமானந்தாவும், சேகர்ரெட்டியும் மாறிவிடு கின்றனர். இந்த இட விற்பனையில் ராமமூர்த்தி- ஜெயப்பிரகாஷுக்கு கமிஷனாக 19 கோடி தருவ தாகச் சொல்லப்பட்டாலும் அந்தத் தொகையைத் தராமல் ஏமாற்றி யுள்ளனர். எனக்குச் சேரவேண்டிய தொகையைத் தந்தால்தான் இடத்தைக் காலி செய்வேன் என அங்கு பார்க்கிங் வைத்திருந்த ராமமூர்த்தி காலிசெய்ய மறுக்கிறார். 2019-ல் அமைச்சராக இருந்த வீரமணி, தனது ஆட்களை வைத்தும், போலீஸை வைத்தும் ராமமூர்த்தியை விரட்டிவிட்டு, இடத்தை சேகர்ரெட்டி- பிரமானந்தா வசம் ஒப்படைக்கிறார். இதுபற்றி ராமமூர்த்தி காவல்துறை டி.ஜி.பி.யிடம் புகார் தந்தும் பலனில்லை. ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 5 ஆண்டுகளாக அடங்கியிருந்த இந்த விவகாரம் இப்போது மீண்டும் வெடித்துள்ளது.

Advertisment

cs

கடந்த வாரம் சேகர்ரெட்டியின் உறவினரும், முன்னாள் கவுன்சிலருமான அ.தி.மு.க. ரிஷிகுமார், வேலூர் எஸ்.பி.யைத் சந்தித்து ஒரு மனு தந்தார். அவரிடம் நாம் பேசியபோது, "பிரமானந்தாரெட்டிக்கும் சேகர்ரெட்டிக்கும் சொந்தமான இடத்தை நான் லீஸுக்கு எடுத்து ஜோதிர்மாயி பார்க்கிங் பகுதியாக நடத்திவருகிறேன். அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் கே.சி. வீரமணி செல் போனில் தொடர்பு கொண்டு, ‘"பிர மானந்தாவுக்காக பேசுகிறேன். அந்த இடத்தை காலி செய்துவிட்டு நீ வெளியில போ'’ என என்னை மிரட்டினார். இடத்தின் உரிமையாளர்கள் இருவரும் என்னிடம் எதுவும் சொல்லவில்லை, இவர் காலி செய்யச் சொல்லி மிரட்டுகிறார். நான் இதுபற்றி சேகர்ரெட்டியிடம் சொன்னேன். அவர் போலீஸில் புகார் தா’ என்றார்... அதன்படி புகார் தந்துள்ளேன்'' என்றார்.

இந்த விவகாரம் மீண்டும் வெளிவந்த நிலையில் வீரமணிக்கு தேர்தல் ஆணையம் அதிர்ச்சியைத் தந்துள்ளது. 2021-ஆம் ஆண்டு ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதி வேட்பாளரான வீரமணி தாக்கல்செய்த பிரமாண பத்திரத்தில், வருமானவரிக் கணக்கு எண் மாற்றித் தந்துள்ளார், சொத்துகள் மற்றும் பண விவரங்களை மறைத்துள்ளார் என உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார் ராமமூர்த்தி. நீதிமன்ற உத்தரவுப்படி தேர்தல் ஆணையம் ஆய்வுசெய்ததில் வீரமணி தனது சில சொத்துக்களைக் காட்டவில்லை எனத்தெரிந்து, திருப்பத்தூர் மாவட்ட ஜோலார்பேட்டை தொகுதி தேர்தல் அலுவலரிடம் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யச்சொல்லி கடிதம் அனுப்பிவைத்தது. அது கடந்த சில மாதங்களாக கிடப்பில் இருந்தது. கடந்த 12-ஆம் தேதி திருப்பத்தூர் மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. நவம்பர் 26-ஆம் தேதி வழக்கு விசாரணைக்கு வருகிறது.

இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க. மா.செ.வான முன்னாள் அமைச்சர் வீரமணியின் கருத்தறிய தொடர்புகொண்ட போது, நமது அழைப்பை எடுக்கவில்லை.

தற்போது இந்த சொத்து தொடர்பாக மட்டும் சுமார் 10-க்கும் மேற்பட்ட வழக்குகள் உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்றம், செபி அமைப்பில் நிலுவையில் உள்ளன. இந்த இடத்தின் இன்றைய மார்க்கெட் மதிப்பு 300 கோடி ரூபாய். வீரமணி அமைச்சராக இருந்தபோது இதில் புரோக்கராக செயல்பட்ட ராமமூர்த்தியை விரட்டியதற்கு சேகர்ரெட்டி தரப்பு கமிஷன் தரவேண்டும். அதைத் தராமல் ஏமாற்றியதால் சேகர்ரெட்டி கட்டுப்பாட்டிலுள்ள அந்த இடத்தை தன் கண்ட்ரோலில் கொண்டுவர முயற்சிக்கிறார் வீரமணி.

"நீ அதிகாரத்தில் இருக்கும்போது என்னை மிரட்டி எனக்கு கமிஷன் கிடைக்காமல் செய்தல்ல, என் கமிஷன் எனக்கு வரவேண்டும், அதுவரை உன்னை விடமாட்டேன்' என வீரமணிக்கு எதிராக தேர்தல் ஆணையத்துக்கு சென்றார் ராம மூர்த்தி. அந்த புகாரில்தான் இப்போது சிக்கிக்கொண்டுள்ளார் என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.

-து.ராஜா

nkn301124
இதையும் படியுங்கள்
Subscribe