விருத்தாசலத்தில் நக ராட்சிக்குச் சொந்தமான நாச்சியார் குளம் உள்ளது. "பசுமை விருத்தாசலம்' என்கிற சுற்றுச்சூழல் அமைப்பு சார்பில், நகராட்சி நிர்வாகத்திடம் அனு மதி பெற்று, பொதுமக்கள் பங் கேற்புடன் இந்தக் குளம் தூர்வா ரும் பணி தொடங்கி, முடியும் தறுவாயில் உள்ளது. இந்தப் ‘"பசுமை விருத்தாசலம்'’ என்ற அமைப்பை நடத்திவரும் தியாக. இளையராஜா, தி.மு.க.வை சேர்ந்தவர். உதயநிதி ஸ்டாலின் மன்ற மாவட்ட பொருளாளராக உள்ளார். குளம் தூர் வாரும் பணிக்கு பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், குடியிருப்போர் சங்கத்தினர், பொது நல சங்கங் கள் தாமாக முன்வந்து நிதி கொடுத்து ஊக்கப்படுத்தினர். புதராகக் கிடந்த குளம், தண்ணீர் சேமிக்கும் அளவுக்கு தற்போது தூர்வாரப்பட்டு 90% வேலை முடிவடைந்துள்ளன.
இந்நிலையில்"பசுமை விருத்தாசலம்மற்றும்குடியிருப் போர் நலசங்கம்சார்பில் நாச்சியார்குளம்புனரமைப்பு' எனகுளக்கரையில் போர்டு வைக்கப்பட்டது.அதைத் தொடர்ந்து கடந்த 12.11.2019 அன்று காலை திடீரென விருத்தா சலம்எம்.எல்.ஏ.கலைச்செல்வன் தலைமையில் குளத்தை அ.தி. மு.க.வினர் பார்வையிட்டுக் கொண்டிருந்த போதே "ஜல் சக்தி அபியான்' திட்டத்தின்கீழ் குளம் தூர்வாரும்பணி,திறப்பாளர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.’என நகராட்சி சார்பில் போர்டு வைக்கப்பட்டது.
இதுபற்றி அறிந்ததும் நக ராட்சி போர்டுக்கு எதிர்ப்பு தெரி வித்து தி.மு.க. மேற்கு மாவட்ட செயலாளர் வெ.கணேசன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமார் உள்ளிட்டோர் திரண்டு அ.தி.மு.கவினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதையடுத்து இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் நீதிமன்றம் மூலம் சட்டரீதியாக தீர்வு காணுமாறு அறிவுறுத்திஇருதரப்பினரையும் சமாதானம்செய்து அப்புறப் படுத்தினர். இதுகுறித்து நம் மிடம் பேசிய தியாக.இளைய ராஜா, ""பொதுமக்களால் தூர் வாரப்பட்ட குளத்தை ஜல்சக்தி அபியான் திட்டத்தில் தூர் வாரியதாக போர்டு வைத்துள்ள னர். நிதிஒதுக்கி முறைகேடு நடக்கஉள்ளது.இதுதொடர்பாக ஆட்சியரிடம் புகார் அளித்துள் ளோம். நீதிமன்றத்திலும் வழக் குப் போட உள்ளோம்'' என்றார். கலைச்செல்வனிடம் இதுகுறித்து நாம் பேசுகையில், ""தொண்டு நிறு வனம் என்ற பெயரில் தி.மு.க.வினர் லட்சக்கணக்கான ரூபாய் வசூல் செய்துள்ளனர். எனக்கு பல இடங்களிலிருந்து புகார்கள் வந்ததன் அடிப்படையில் நகராட் சிக் குளம் பொதுமக்களுக்கான தாக இருக்க வேண்டும் என்றுதான் நான் நடவடிக்கை எடுத்தேன்''’’என்கிறார்.
தி.மு.க., அ.தி.மு.க. இடையேயான இந்த மோதலால் நீராதாரம் பாது காப்பு கேள்விக்குறியாக இருக் கிறது.
-சுந்தரபாண்டியன்