தி.மு.க ஆட்சி அமைந்த நாள் முதலே, வேலுமணியிடம் எப்போது ரெய்டு என்ற கேள்விதான் பலமாக இருந்தது. கடந்த 10-ந் தேதி, அதிகாலை 5:45 மணியளவில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு கங்காதர் உத்தரவின் பேரில், போலீஸ் அதிகாரிகள், எஸ்.பி.வேலுமணி வீட்டிலும், அவருக்குத் தொடர்புடைய 60 இடங்களிலும் ரெய்டு நடத்தினார்கள். தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதியும், அறப்போர் இயக்கமும் கொடுத்த புகார்களின் அடிப்படையிலேயே எஸ்.பி. .வேலுமணியை நெருங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
கடந்த 2014-ம் வருடத்தில் மே மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதற்குப்பின்னர் நான்கு வருடங்களில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் 464 கோடி ரூபாயும், கோவை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் 346 கோடி ரூபாய் என மொத்தம் 811 கோடிக்கு ஊழல்கள் நடந்திருக்கின்றன. வேலுமணி தனது சகோதரர் அன்பரசன் பெயரிலும், தன்னைச் சார்ந்தவர்கள் பெயரிலும் இந்த ஊழல் முறைகேடுகளை நடத்தியிருக்கிறார் என்பதுதான் புகார்.
இதுபற்றி பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர், "ஒரு பணிக்காக டெண்டர் விடும்போது 10 பேர் அல்லது 5 பேராவது டெண்டர் கோருவார்கள். அதில் யார் குறைவாக கேட்கிறார்களோ அவருக்குத்தான் டெண்டர் தரப்படும். ஆனால் இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் நூற்றுக்கணக்கான டெண்டர்கள
தி.மு.க ஆட்சி அமைந்த நாள் முதலே, வேலுமணியிடம் எப்போது ரெய்டு என்ற கேள்விதான் பலமாக இருந்தது. கடந்த 10-ந் தேதி, அதிகாலை 5:45 மணியளவில் சென்னை லஞ்ச ஒழிப்பு போலீஸ் சூப்பிரண்டு கங்காதர் உத்தரவின் பேரில், போலீஸ் அதிகாரிகள், எஸ்.பி.வேலுமணி வீட்டிலும், அவருக்குத் தொடர்புடைய 60 இடங்களிலும் ரெய்டு நடத்தினார்கள். தி.மு.க.வின் ஆர்.எஸ்.பாரதியும், அறப்போர் இயக்கமும் கொடுத்த புகார்களின் அடிப்படையிலேயே எஸ்.பி. .வேலுமணியை நெருங்கியிருக்கிறது லஞ்ச ஒழிப்புத்துறை.
கடந்த 2014-ம் வருடத்தில் மே மாதம் எஸ்.பி.வேலுமணி உள்ளாட்சித்துறை அமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். அதற்குப்பின்னர் நான்கு வருடங்களில் சென்னை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் 464 கோடி ரூபாயும், கோவை மாநகராட்சியில் டெண்டர் விடுவதில் 346 கோடி ரூபாய் என மொத்தம் 811 கோடிக்கு ஊழல்கள் நடந்திருக்கின்றன. வேலுமணி தனது சகோதரர் அன்பரசன் பெயரிலும், தன்னைச் சார்ந்தவர்கள் பெயரிலும் இந்த ஊழல் முறைகேடுகளை நடத்தியிருக்கிறார் என்பதுதான் புகார்.
இதுபற்றி பேசிய லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர், "ஒரு பணிக்காக டெண்டர் விடும்போது 10 பேர் அல்லது 5 பேராவது டெண்டர் கோருவார்கள். அதில் யார் குறைவாக கேட்கிறார்களோ அவருக்குத்தான் டெண்டர் தரப்படும். ஆனால் இந்த இரண்டு மாநகராட்சிகளிலும் நூற்றுக்கணக்கான டெண்டர்களை இரண்டே பேர்தான் கேட்டிருக்கிறார்கள். ஒருவர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன், இன்னொருவர் அவரிடம் வேலை செய்யும் ராஜரத்தினம்.
ஆன்லைன் வழியாக டெண்டர் எடுக்க, ஒரே கணினியையும், ஒரே இணையதள முகவரியையும், ஒரே செல்போன் நம்பரையுமே கோவை மாநகராட்சியில் கொடுத்திருக்கிறார்கள். ஒரே ஐ.பி. அட்ரஸையே இருவரும் பயன்படுத்தியிருக்கிறார்கள். இதையொட்டியே ஊழல் நடந்திருப்பதை நாங்கள் உறுதி செய்துகொண்டோம். அதுபோலவே வேலுமணிக்கு வலதுகரம் எனச் சொல்லப்படும் வடவள்ளி சந்திரசேகர், கே.சி.பி. டைரக்டர் சந்திரபிரகாஷ் பெயரிலும் இதே வகையில் முறைகேடாக பல டெண்டர்கள் எடுக்கப்பட்டிருக்கின்றன.
அதேபோல கே.சி.பி. நிறுவனம் சாலை அமைக்க டெண்டர் கோருகிறது. அதே சாலை அமைக்கும் டெண்டர் கேட்டு சந்திரபிரகாஷ் என்பவரும் டெண்டர் கோருகிறார் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. நிறுவனமும், அந்நிறுவனத்தின் உரிமையாளருமே டெண்டருக் காக போட்டிபோடுகிறார்கள்... இப்படி பல சிங்கிள் டெண்டர்கள் நடந்திருக்கின்றன.
ஒரு சாலை அமைக்கும் டெண்டர்... சந்தை மதிப்பிலேயே நாலரை கோடியில் செய்து விடலாம். ஆனால் ஏழு கோடிக்கு டெண்டர் கொடுத்திருக்கிறார்கள். இப்படி நூற்றுக்கணக்கான டெண்டர்களில் அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியுள்ள னர். அதனால், ஊழல் தடுப்புச் சட்டத்தின்படி கூட்டுச் சதி, மோசடி மற்றும் லஞ்ச ஊழல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளில் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
811 கோடி மதிப்பிலான பணிகளில் 25-லிருந்து 40 சதவீதம் வரை, அதாவது 200-லிருந்து 300 கோடி ஊழல் செய்திருக்கிறார்கள்'' என்றார் உறுதியாய்.
இந்த நிலையில்... எஸ்.பி. வேலுமணி, அன்பரசன், வேலுமணிக்கு நெருக்கமான சந்திர பிரகாஷ், சந்திரசேகர், ஆர்.முருகேசன், ஜேசு ராபர்ட்ராஜா, கு.ராஜன் ஆகியோர் மீதும், கே.சி.பி என்ஜினீயர்ஸ், ஏஸ்டெக் மெஷினரி, கன்ஸ்ட் ரானிக்ஸ் இன்பெரா, மகாகணபதி ஜூவல்லர்ஸ், கன்ஸ்ட்ராமல் குட், ஆலயம் பவுண்டரீஸ், வைதுர்யா ஓட்டல்ஸ், ரத்னா லட்சுமி ஓட்டல்ஸ், ஆழம்ஹோல்டு அண்டு டைமண்ட்ஸ், ஆர்.எஸ்.பி. இன்ப்ரா ஆகிய நிறுவனங்கள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதை யொட்டியே இந்த ரெய்டு நடத்தப்படுவதை அறிந்த கட்சிக்காரர்கள், "அஞ்சமாட்டோம்... அஞ்ச மாட்டோம்... பொய் வழக்குக்கு அஞ்ச மாட்டோம்' என்று எஸ்.பி.வேலுமணியின் வீட்டிற்கு முன்பு குவிந்தனர். 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப் பட்டிருந்தனர். அவர்களுடன் கட்சியினர் தள்ளுமுள்ளுவில் ஈடுபட்டனர்.
காலை டிபன், மதிய சாப்பாடு, ரோஸ்மில்க், டீ, வாட்டர் பாட்டில் அனைத்தும் கட்சிக்காரர்களுக்குத் தடையின்றி சப்ளை யாகின. தி.மு.க தரப்பில் தொண்டாமுத்தூர் பகுதியில் பட்டாசு சத்தம் கேட்டது.
மாலை வரை ரெய்டு நடைபெற்ற வேலுமணியின் வீட்டில் இருந்து, லாக்கர் சாவி, ரொக்கப் பணம் 13 லட்சம், முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள், வேலு மணியின் மனைவி வித்யாதேவியிடம் ஒப்புதல் கையெழுத்து வாங்கிக்கொண்டு கிளம்பினர். அவரது அண்ணன் அன்பரசனின் கோவைப் புதூர் வீடு, மைத்துனர் புல்லட் ராஜா என்கிற சண்முகராஜாவின் மதுக்கரை வீட்டிலும், வடவள்ளி சந்திரசேகர் வீட்டிலும் இருந்து ரெய்டு நடத்திவிட்டு அதிகாரிகள் கிளம்பிச் சென்றனர். கே.சி.பி நிறுவனத்தின் சந்திரபிரகாஷ், தனக்கு நெஞ்சு வலி என்று தனியார் ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகிவிட்டார்.
ஆனைமலை காளியாபுரத்தில் எஸ்.பி.வேலுமணியின் அண்ணன் அன்பரசனின் நண்பர் திருமலைசாமி என்பவர் நடத்தும் மளிகைக் கடையிலும் சோதனை நடந்தது. அவரது மளிகைக் கடையிலும், வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். அன்னூர் கடத்தூரில் செயல்பட்டுவரும் ஏஸ்டெக் மெஷினரி காம்பொனண்ட்ஸ் கம்பெனிக்குள்ளும் சோதனை நடந்து, தமிழக அரசிற்கு பல பொருட்களை சப்ளை செய்தது தொடர்பாக விசாரிக்கப்பட்டுள்ளது.
"காலையில் ரெய்டு நடக்கும்' என முதல்நாளே வேலுமணி தனது சொந்த பந்தங்களுக்குத் தெரிவித்துவிட்டாராம். மதுக்கரையில் உள்ள வேலுமணியின் மைத்துனர் சண்முகராஜா முக்கிய கட்சிக்காரர் களுக்கு அதிகாலை 4 மணியிலிருந்தே போன் போட்டு, வீட்டுக்கு வரச் செய்துவிட்டார் என்கிறார்கள்.
___________________________________________
புகார் கொடுத்த இருவர்
கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் ரகுநாத் என்பவர் கோவை லஞ்ச ஒழிப்பு காவல் துறை அலுவலகத்தில் கொடுத்த புகாரில்... "கோவை மாவட்டத்தில் அனைத்துத் துறை ஒப்பந்தங்களிலும் 12 சதவிகிதம் கமிஷன் பெறுவதை முன்னாள் அமைச்சர் வேலுமணி வாடிக்கையாக வைத்திருக்கிறார் என்பது உள்பட பல புகார்களைத் தெரிவித்திருந்தார். இதே போல கோவையை சேர்ந்த திருவேங்கடம் என்பவரும் சென்னை காவல் ஆணையரைச் சந்தித்து வேலுமணியிடம் 2016-ஆம் ஆண்டு காண்ட்ராக்ட் சம்பந்தமாக முன்தொகையாக ரூ. 1 கோடியே 20 லட்சம் கமிஷன் கொடுத்தேன். க்ரீன்வேஸ் சாலை ரோஜா இல்லத்தில் 1 கோடியும், அதன்பின் 20 லட்சமும் தந்தேன். அவருடைய பி.ஏ. பார்த்திபனிடம் ஐந்துலட்ச ரூபாயையும் கொடுத்தேன். சொன்னபடி சிவில் காண்ட்ராக்ட் பணிகளை ஒதுக்கவில்லை. பணமும் தரவில்லை. கேட்டால் மிரட்டுகிறார்'' எனத் தெரிவித்திருந்தார்.
நீதிபதி எம்.சத்தியநாராயணன் தலைமையிலான சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச், ஆரம்ப விசாரணையை நடத்த டி.வி.ஏ.சி. காவல்துறை கண்காணிப்பாளர் ஆர்.பொன்னியை நியமித்தது. ஆர்.பொன்னி, ஐ.பி.எஸ். விசாரணை நடத்திய பிறகு, 18 டிசம்பர் 2019 அன்று ஓர் அறிக்கையை தாக்கல் செய்தும், எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய எந்த வழக்கும் பதியப்படவில்லை. இப்போது வழக்கு பதியப் பட்டிருக்கிறது.