மெல்ல குறையத் தொடங்கியிருக்கும் கொரோனா இரண்டாவது அலையை முழுமையாகக் கட்டுப்படுத்தி, மூன்றாவது அலையின் பாதிப்பிலிருந்து தற்காத்துக் கொள்ள எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள்- அளிக்கப்பட வேண்டிய சிகிச்சைகள் குறித்து இந்திய அளவிலும் தமிழ்நாட்டிலும் அரசுகள் முயற்சி எடுத்து வரும் நிலையில்...

m

சில சிறப்பான ஆலோசனைகளை அறிவியல் முறைப் படியும் -அனுபவ வாயிலாக வும் முன்வைக்கிறார் பிரபல தனியார் மருத்துவமனையான காவேரி மருத்துவமனையில் புற்றுநோய் அறுவை சிகிச்சை மருத்துவரான கலீல் ரஹ்மான் எம்.எஸ். ஆங்கில மருத்துவத் துடன் பாரம்பரிய மருத்துவ முறையை இணைத்து மேற் கொள்ளும் கூட்டு மருத்துவம் நல்ல பலனளிக்கும் என்பதே இவரது கருத்தாகும். இவர், சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை, ராயப்பேட்டை பொது மருத்துவமனை, திருவல்லிக்கேணி கஸ்தூரிபாய் மருத்துவமனை உள்ளிட்டவற்றில் புற்றுநோய் சிகிசையளித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரிடம் சில கேள்விகளை வைத்தோம்.

ஆங்கில மருத்துவரான நீங்களே கூட்டுமருத்துவம் வேண்டும் என்று சொல்கிறீர்களே, இதை இந்திய மருத்துவ கவுன்சில் ஏற்குமா?

Advertisment

மருத்துவர் கலீல்: சிறந்தவை எங்கிருக்கிறதோ அதை மனமுவந்து உணர்ந்து ஏற்றுக்கொள்வதுதான் அறிவியலின் அடிப்படையி லான வாழ்க்கை. மருத்துவத் திலும் நாம் சாதி மதப் பாகு பாடுகளைப் பார்க்கக்கூடாது. எந்த நோய்க்கு எந்த மருத் துவம் சரியாக இருக்கிறதோ அதை ஏற்பதுதான் அறிவுப் பூர்வமானது. நான் ஆங்கில மருத்துவர்தான். புற்று நோய் மருத்துவத்துறையில் சிறந்த மருத்துவர் என்ற பெயரைப் பெற்றிருக்கிறேன். ஆயிரக் கணக்கான நோயாளிகளுக்கு சிகிசையளித்து, அதில் பெரும்பாலானவர்களை குணப்படுத்தி அவர்களை இயல்பு வாழ்க்கைக்கு அனுப்பியிருக்கிறேன். மருத்துவம் என்பது மகத்தான கண்டுபிடிப்பு. அது இன்று நேற்றல்ல, மனிதன் தோன்றிய நாள் முதலே, அவனை நோய்நொடிகளில் இருந்து பாதுகாத்து வருகிறது.

dd

எந்த நாடாக இருந்தாலும் சரி, ஆங்கில மருத்துவம் கண்டிபிடிக்கப்படும் முன், இந்த உலகை அந்தந்த நாட்டின் இயற்கை மருத் துவம்தானே பராமரித்து வந்திருக்கிறது. அதேபோல் இந்திய மக்களுக்கு ஆயுர் வேதமும் தமிழர்களுக்கு சித்தவைத்தியமும்தான் கை கொடுத்து வந்தது. வெள்ளைக்காரர்கள் வரும்வரை நம் தமிழ் மக்களுக்கு சித்தர்கள்தான் மருத்துவ மாமேதைகளாகத் திகழ்ந்தார்கள். அதனால், ஆங்கில மருத்துவம்தான் உயர்வு, மற்ற மருத்துவ முறை கள் தவறானது என்று கருதும் போக்கைக் கைவிடவேண்டும். மக்களுக்கு பலன் தராத எந்த மருத்துவமும், மக்களிடம் செல்வாக்கு பெற்றிருக்க முடி யாது. அதைப் பெரும்பாலா னோர் உணர்வதில்லை. இந்தத் தெளிவு எனக்கு இருப்பதால் தான், ஆங்கில மருத்துவத்தால் கைவிடப்பட்டவர்களைக்கூட என்னால் முழுமையாகக் குணப்படுத்த முடிகிறது.

Advertisment

எப்படிப்பட்ட நோயாளி களை குணப்படுத்தினீர்கள்?

மருத்துவர் கலீல்: புற்றுநோயைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆரம்ப கட்டத்தில் இதை சரிப்படுத்த முனையலாம், மிகவும் முற்றிய நிலையில் உள்ளவர்களை குணப்படுத்த முடியாது என்று, அவர்களை இருக்கும்வரை பராமரிக்கும் நிலைதான் இப்போது இருக்கிறது. இந்த நிலையில் ஒரு விபத்தில் சிக்கி ஓய் வெடுக்கவேண்டிய நிலையில் இருந்தபோது, ஒரு சித்த மருத்துவ நூலைப் படிக்க நேர்ந்தது. அதில் புற்றுநோய் உட்பட பல வகையான நோய்களையும் முழுமையாகத் தீர்க்க முடியும் என்று சொல் லப்பட்டிருந்தது. உடனே, மருத்துவத்தால் கைவிடப் பட்டிருந்த, புற்று நோயாளிகள் 10 பேரை ஆய்வுக்கு எடுத்துக் கொண்டேன். வழக்கமான ஆங்கில மருத்துவத்தோடு, அவர்களுக்கு அந்த சித்த மருந்துகளையும் சேர்த்துக் கொடுத்தேன். என்ன ஆச்சரியம் என்றால், அவர்கள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பினார்கள். அவர்களில் 5 பேருக்கு நோயின் அறிகுறியே இல்லை. மற்றவர்களும் விரைவாக குணமடைந்து வருகிறார்கள். இதை இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் நிரூபிக்க நினைத்த நேரத்தில்தான் கொரோனா வந்தது. அதனால் கொரோனா நோயாளிகளிடமும், ஆங்கில மருத்துவத்துடன், எந்த பின்விளைவையும் ஏற்படுத்தாத ஆயுர்வேதா மற்றும் சித்த மருந்துகளையும் கவனமாகக் கொடுத்தேன். அவர்கள் விரைவாக குணமடைந்தார்கள். இதுபோல் என்னிடம் வந்த 300-க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகளை முழுவதுமாக குணமாக்கியிருக்கிறேன்.

அப்படி என்னென்ன மருந்துகளைக் கொடுத்தீர் கள் என்று சொல்ல முடியுமா?

நான் புதிதாக எந்த மருந்தையும் கண்டுபிடிக்க வில்லை. ஏற்கனவே புழக்கத் தில் உள்ள மருந்துகளையே கூட்டு மருத்துவமாகப் பரிந்துரைக்கிறேன். இதை அவரவரும் அவரவர் மருத் துவர்களின் ஆலோசனையின் பேரில் கொரோனா தடுப்புக் காகவும் ஆரம்ப நிலை பாதிப்புக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். கொரோனா நோயாளிகளுக்கு இந்த மருந்துகளை மருத்துவர்கள் பயன்படுத்தினால், விரைவான பயனை எட்டலாம்.

Neem Guard கேப்சூலை வெறும் வயிற்றில் காலையில் மட்டும் 2 எடுத்துக்கொள்ள லாம். இது வைரஸை முழுமையாக ஒடுக்கும். Fore Lact கேப்சூலை காலையில் மட்டும் 2 எடுத்துக்கொள்ளலாம். இது நோய் எதிர்ப்பு சக்தியை பலமாக்கும். ஆய ஈன்ழ்ன்ம்ண்ய் கேப்சூலை தினசரி இரவு 1 மட்டும் எடுத்துக்கொண்டால் போதுமானது. இது நுரையீரல் பிரச்சினையை சரிசெய்யும். ஆக்சிஜன் பிரச்சினையைத் தடுக்கும்.

ஆரம்ப நிலையில் இருக்கும் கொரோனா நோயாளிகள் இதை எடுக்கத் தொடங்கினாலே மூச்சுத்திணறலைச் சந்திக்கும் நிலை ஏற்படாது. இவற்றோடு, தூதுவளை, ஆடாதொடை, துளசி கலந்த மாத்திரைகள் அல்லது டானிக்கையும் சேர்த்து எடுத்துக்கொள்ளலாம். மேற் சொன்ன மருந்துகளை 30 நாள் எடுத்துக்கொண்டால் ஆறேழு மாதத்திற்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறையும். நோய்த் தொற்றின் நிலவரத்துக்கு ஏற்ப, Montec LC எனும் ஆங்கில மருந்தையும் கொடுக்கலாம். முற்றிய நிலையில் மூச்சுத் திணறலுக்கு ஆளாகும் நோயாளிகளுக்கு மருத்துவர் கள் Dexamenthasone எனும் ஸ்டீரய்டு இஞ்ஜெக்ஷனை செலுத்த நேரும். இப்படியாக மருத்துவக் கலவை மூலம் கொரோனா நோயாளிகளை எளிதாகக் குணப்படுத்தலாம். மரணத்தில் இருந்து அவர்களைக் காப்பாற்றலாம். உருமாறிய கொரோனாவாக இருந்தாலும், பூஞ்சைத் தொற்றாக இருந்தாலும், இந்த மருந்துகள் சரிசெய்யும்.

அவர்களுக்கு நம்பிக்கை இல்லை என்றால், வழக்கமான மருந்து மாத்திரைகளோடு, மருத்துவர்கள் இந்த சித்த மருந்துகளையும் கொடுக்கட்டும். இதனால் எந்த பின்விளைவும் இல்லை. ஆனால் நிரந்தர குணம் உண்டு.

இதை அரசின் கவனத்துக்கு எடுத்துச்சென்றீர்களா?

மருத்துவர் கலீல்: இந்தக் கூட்டுமருத்துவத்தை ஏற்கவேண்டும் என்று, இந்திய மருத்துவக் கவுன்சிலிடமும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்த்தனிடமும் இது தொடர்பாக உரிய ஆவணங்களோடு கோரிக்கை வைத் திருக்கிறேன். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அப்போதிருந்த சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷிடமும் இதை வலியுறுத்தியிருக்கிறேன். இப்போதும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சு.வின் கவனத்துக்கும் என் கருத்தைக் கொண்டு போயிருக்கிறேன். த.ம.மு.க. தலைவர் ஜவாஹிருல்லா அவர்கள்மூலம் முதல்வர் ஸ்டாலின் கவனத்துக்கும் இதை எடுத்துச் சென்றிருக்கிறேன். இப்போதைய அரசு இந்த மருத்துவ முறையைக்கையில் எடுத்தால், பெரும்பாலான மரணங்களைத் தடுக்கலாம். இதன்மூலம் மூன்றாம் அலையில் இருந்தும் தப்பிக்கமுடியும் என்பது என் அழுத்தமான நம்பிக்கை.

-தமிழ்நாடன்