இரண்டு மாதங்களுக்கு முன்னர் கொடநாடு எஸ்டேட்டிற்கு உட்பட்ட கோத்தகிரி பத்திரப்பதிவு அலுவல கத்திற்கு வருமான வரித்துறையினர் வந்து இறங்கினார்கள். கொட நாடு எஸ்டேட்டின் பத்திரம் இருக்குதா? என்றே பார்க்க வந்திருப்பதாய் சொல்லியிருக்கிறார்கள். அலுவலக பதிவாளர் உட்பட அத்தனை பேருமே புதியவர்கள் என்பதால், உடனே யாராலும் பதிலளிக்க முடியவில்லை. கோத்தகிரியில் பத்திரப் பதிவாளராய் இருந்த பெரியநாயக்கன்பாளையம் முனுசாமியை நோக்கி கை நீட்டியிருக்கிறர்கள்.
வருமான வரித்துறை அதிகாரிகளிடம் பேசிய ரிடையர்டு முனுசாமி. "கொடநாடு எஸ்டேட் கம்பெனி ட்ரான்ஸ் பராத்தான் ஆச்சு. அதாவது இன்கம்மிங் பார்ட்னரா ஏற்கனவே இருந்தவங்கள அவுட்கோயிங் பார்ட்னரா ஆக்கிட்டாங்க. அது கம்பெனிஸ் ஆக்ட்படிதான் இருக்கு. ஏற்கனவே இருந்த ஓனரை வெளியே அனுப்பிட்டு ஜெயலலிதா, சசிகலா குரூப் ஆக்கிரமிப்பு பண்ணிட்டாங்க. கம்பெனி நேம் எதுவும் மாறலை.
1996-ல வெளியேற்றப் பட்ட பார்ட்னர்கள் பிரச்சனைபண்ணி, மைசூர் கோர்ட்ல எந்த வில்லங்க மும் பண்ணக் கூடாதுன்னு ஸ்டே வாங்கிட்டாங்க. நான் ரிட்டயர்டு ஆகிற வரைக்கும் அந்த ஸ்டே தொடர்ந்துட்டுதான் இருந்துச்சு. பத்திரம் பதியாமலே இவுங்க இன்கம்மிங், அவுட் கோயிங் பார்ட்னரா வந்ததுனால சிட்டா வந்து கொடநாடு எஸ்டேட் பிரைவேட் லிமிடெட்னு போட்டு, ஏற்கனவே இருந்த பார்ட்னரை எல்லாம் மாத்தி , இவுங்க பார்ட்னரா வந்த மாதிரி சிட்டா தாலுகா ஆபீஸ்ல எபெக்ட் ஆயிருச்சு. அந்த கொடநாடு எஸ்டேட் இப்படித்தான் ஜெயலலிதா, சசிகலா பெயர்ல ட்ரான்ஸ்பர் ஆச்சு'' என முனுசாமி சொல்லியிருக்கிறார்.
அவர் சொன்ன தகவல்களை உள்வாங்கிக் கொண்ட வருமானவரித் துறையினர் சென்னையில் உள்ள ரெஜிஸ்டர் ஆப் கம்பெனி அலுவலகத்தில் இருந்து கொடநாடு எஸ்டேட்டின் பத்திரத்தை எல்லாம் எடுத்துவிட்டார்கள்.
இந்நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட ஐந்து மாஜி அமைச்சர்களின் டாக்குமெண்டுகளை கோவை மண்டலத்தின் பத்திரப் பதிவாளர் செல்வகுமார், கொடநாடு மேனேஜர் நடராஜனோடு சேர்ந்து திரும்பவும் அவர்களின் பெயருக்கே மாற்றிக் கொடுத்த விவகாரம் பெரிதாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. செல்வகுமார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் எவ்வளவு சொத்துக் களை சேர்த்திருக்கிறார் என்பதை விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்டிருக்கிறது. வேலுமணிக்கு வேண்டியவரும், ரெய்டுக்குள்ளானவருமான சந்திரசேகரன், செல்வகுமாருக்கு கேக் ஊட்டும் போட்டோவும் வெளியாகியுள்ளது.
யார் இந்த செல்வகுமார்? என்னென்ன சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்? என கோவை மாவட்ட பத்திரப் பதிவுத் துறையில் தகவல் சேகரிப்பில் இறங்கினோம். அவர்கள் சொல்லும் தகவல்கள் பகீர் ரகம்.
சிவகங்கையைச் சேர்ந்தவர் செல்வகுமார். 19 ஆண்டுகளுக்கு முன்னர் கோவைக்கு வந்தார். கொட நாடு மேனேஜர் நடராஜன் இவருக்கு தாய்மாமா என்பது யாருக்கும் தெரியாத ரகசியம். கொடநாடு எஸ்டேட்டிற்கு சசிகலா மூலம் நடராஜன் வந்தபோது அங்கே மேனேஜராக பணியாற்றிக்கொண்டிருந்தவர் ரவிச்சந்திரன். அவரை மட்டம் தட்டுவது நடராஜன் வழக்கம்.
எஸ்டேட்டிற்கு தாய்மாமா நடராஜனை சந்திக்க போய் வருவார் செல்வகுமார். அந்த சமயத்தில் நடராஜனிடமிருந்து வாயா, போயா என்கிற வசைச் சொற்களை ரவிச்சந்திரன் வாங்கிக்கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் எஸ்டேட்டை விட்டு, மேனேஜர் பொறுப்பிலிருந்து வெளியேவந்தார் ரவிச்சந்திரன். நடராஜன்முன் நன்றாக வாழ்ந்துகாட்ட வேண்டுமென்று கோத்தகிரியில் TWIN TREE (ட்வின் ட்ரீ) என்னும் காட்டேஜின் ஓனர் ஆனார்.
அந்த சமயத்தில் சசிகலா, இராவணன், நடராஜன் மூலம் கோவை கணபதி பகுதியில் 3 ஆண்டுகளும், பெரியநாயக்கன் பாளையத்தில் இரண்டரை ஆண்டுகளும், சூலூரில் 3 ஆண்டு களும் என கோவை மாவட்டத் திலேயே பணி செய்துவந்தார் செல்வகுமார். அதற்கு பின்னர் மாவட்ட பதிவாளராக பதவி உயர்வு பெற்ற செல்வகுமார் காந்திபுரத்தில் 2 ஆண்டுகளும், கோவை மாவட்ட தணிக்கைப் பிரிவில் 3 ஆண்டு உள்பட 19 ஆண்டுகள் கோவை மாவட் டத்தின் பத்திர பதிவுத் துறையில் பணியாற்றிய ஒரேஆள் ஆவார்.
மாஜி அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் மூலம் கடந்த பத்து ஆண்டு களில் உச்சாணிக் கொம்பில் போய் அமர்ந்து கொண்டார் செல்வகுமார். இந்த செல்வகுமார் ஒரு மாற்றுத் திறனாளி. அவர் வாங்கிப் போடாத இடங்களே இல்லை. PNK கன்ஸ்ட்ரக்சன்ஸ் என்னும் கட்டிடங்கள் கட்டி விற்கும் கம்பெனியில் ஒரு பார்ட்னராக ஆகி பல கோடிகளுக்கு சொந்தக்காரர் ஆனார் செல்வகுமார். அதுபோக அன்னூர் குளத்துப் பாளையத்தில் 5 ஏக்கரில் ஜெய லலிதாவின் கொடநாடு எஸ்டேட் டைப் போல ஒரு பண்ணை வீடும், கொடநாடு போகும் வழியில் 200 கோடி ரூபாய் மதிப்பில் எஸ்டேட் டும் வாங்கிப் போட்டிருக்கிறார்.
அதுபோலவே, கோவை சேரன் மாநகரில் குமுதம் நகரில் பல கோடிகளில் கட்டப்பட்ட வீடும் ஜெயலலிதா பங்களா கெட்டப் போலவே உயர்ந்து நிற்கும். தனக்குக் கீழ் உள்ள 17 சப் ரெஜிஸ்தரர்களில் பெண் அதிகாரி களும், அவர்களுக்கு உதவியாளராக இருக்கும் பெண் களும் பணி மாறுதலோ, பணி உயர்வையோ வேண்டிநின்றால் அன்னூர் பண்ணை வீட்டில் இவரைத் தனியாய் சந்திக்க வேண்டும் என வற்புறுத்துவார். சில சமயங்களில் வீட்டில் மனைவி, குழந்தைகள் ஊருக்கு சென்றுவிட்டால் வீடும் அந்தப்புரமாகிவிடும்.
சில வில்லங்கமான இடங்களை பதிவு செய்து தர... பணக்கத்தை களோடு படுக்கை விஷயங்களையும் கேட்டுப் பெறுவது செல்வகுமாரின் எழுதப்படாத விதி. செல்வகுமார் வாங்கும் அத்தனை சொத்துக்களுக்கும் லீகல் அட்வைசர் வடவள்ளியைச் சேர்ந்த வக்கீல் நவீன்குமார் தான். வேலுமணி, அன்பரசனின் பினாமியென சொல்லப்படும் வடவள்ளி சந்திரசேகரின் லீகல் அட்வைஸர்தான் நவீன்குமார். லஞ்சஒழிப்புத்துறை, அன்பரசன், வடவள்ளி சந்திரசேகர் வீடுகளில் சோதனையிட்ட போது நவீன்குமார் வீட்டையோ, அலுவலகத்தையோ ரெய்டு செய்யவில்லை. ஏனென்றால் மாஜி அமைச்சர், அன்பரசன், சந்திரசேகர் ஆகியோருடைய அத்தனை சொத்து மதிப்பு ஆவணங் கள் அனைத்தும் நவீன்குமாரின் வடவள்ளியில் உள்ள ஸ்ரீ அமித்ரா அலுவலகத்தில்தான் இருந்தது. லஞ்சஒழிப்புத்துறை ரெய்டு வரும் என முன் கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக் குச் சொன்னதும் இந்த செல்வகுமார்தான்.
இந்த நவீன்குமார் மிகச்சாதா ரணமாய் வெங்கடேசன் என்னும் வழக்கறிஞரிடம் ஜூனியராக இருந் தார். சந்திரசேகர் மூலம் 7 ஆண்டுகளில் வடவள்ளி போன்ற சிட்டியில் பெரும் கட்டிடங்களுக்கு சொந்தக்காரரா கிவிட்டார் நவீன்குமார். செல்வகுமா ரின் பண்ணை வீட்டில் சந்திரசேகர், நவீன்குமார் மகிழ்ச்சி சந்திப்பு அடிக் கடி நடக்கும்.
செல்வகுமார் சொத்து விஷயங் கள் இன்னும் இருக்கும் தேடுங்கள் என்கிறார்கள் பத்திரப்பதிவுத் துறையினர்.
கோத்தகிரியின் அ.தி.மு.க.வில் சிலரோ, "இந்த செல்வகுமார் லேசுப் பட்ட ஆள் இல்லை. தன்னை வளர்த் தெடுத்த தாய்மாமன் நடராஜனுக்கே அல்வா கொடுத்த கதை தெரியுங்களா? நடராஜன் தன்னை முன்னிறுத்திக் கொள்ள தனக்கு முன் எஸ்டேட் மேனேஜராய் இருந்த ரவிச்சந்திரனை எஸ்டேட்டை விட்டு துரத்தினார். அந்த ரவிச்சந்திரன் TWIN TREE என்னும் காட்டேஜின் உரிமையாளர் ஆனார். அந்த ரவிச்சந்திரனின் காட்டேஜில் நடராஜனுக்கு தெரியா மல் தன்னையும் பங்குதாரராய் இணைத்துக்கொண்டவர் இந்த செல்வகுமார்தான்' என்கிறார்கள் அந்த பிரம்மாண்ட காட்டேஜை நமக்கு காட்டியபடி.