"காதலிப்பது குற்றமா?' -சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரி முன்பாக மாணவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
என்ன விவகாரம் இது?
அந்தக் கல்லூரியில் பயின்று வந்த சிவகாசியைச் சேர்ந்த சோலைராணி (வயது 19), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வந்த மாணவி, சம்பவம் நடந்த இரவு தாய் மருத்துவமனையில் பணியிலிருந்த நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்ததாக சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவியின்
"காதலிப்பது குற்றமா?' -சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கலைக் கல்லூரி முன்பாக மாணவர்கள் கோஷம் எழுப்பிக் கொண்டிருந்தனர்.
என்ன விவகாரம் இது?
அந்தக் கல்லூரியில் பயின்று வந்த சிவகாசியைச் சேர்ந்த சோலைராணி (வயது 19), வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தந்தை இல்லாத நிலையில் தாயுடன் வசித்து வந்த மாணவி, சம்பவம் நடந்த இரவு தாய் மருத்துவமனையில் பணியிலிருந்த நேரத்தில் தூக்கிட்டு உயிரிழந்ததாக சிவகாசி டவுண் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மாணவியின் மரணத்திற்கு, காதல் தொடர்பான பிரச்சனைகளே காரணம் என்கிறார்கள்.
அதே கல்லூரியில் பயிலும் சீனியர் மாணவருடன் மாணவி பழகியதாகவும், இருவரின் புகைப் படம் முதல்வரின் கவனத்திற்குச் சென்றதையடுத்து, சோலைராணியை அறை முன்பாக நீண்ட நேரம் காத்திருக்க வைத்து கடுமையாகக் கண்டித்ததாகவும் மாணவர்கள் கூறினர். “இனி இப்படிச் செய்ய மாட்டேன்” என மன்னிப்புக் கடிதம் எழுதி வாங்கப்பட்ட நிலையில், அவமானத்துடன் கல்லூரியிலிருந்து வெளியேறிய மாணவி, "எனக்கு நடந்ததை எழுதி வைத்துவிட்டே சாவேன்'’என விரக்தியுடன் கூறியதாகவும், சொன்னபடியே உயிரை விட்டுவிட்ட தாகவும் அவர்கள் வேத னையை வெளிப்படுத்தினர்.
இதுகுறித்து முதல்வர் டாக்டர் அசோக்கை தொடர்பு கொண்டு பேசியபோது “"மாணவி யின் சமூக வலைத்தள ‘ஸ்டேட்டஸ்’ மூலமாக விஷயம் எனக்கு தெரியவந் தது. உடனடியாக அவரது தாயிடம் பேசினேன். மாணவியை அவமானப் படுத்தவில்லை''”என விளக்க மளித்தார்.
சோலைராணியின் உறவினர் செந்தில், "மாணவர்கள் போராடுறது காதலை நியாயப்படுத்தணும்னு இல்ல. அந்த மாணவிக்கு கல்லூரி நிர்வாகம் காட்டிய கண்டிப்பும், அவமானப் படுத்திய விதமும்தான் இப்ப பிரச் சினையா வெடிச்சிருக்கு. இப்படிப்பட்ட நேரத்துல மாணவியை தனியா அழைச்சு பேசிட்டு, மனநிலையை புரிஞ்சுக்கிட்டு ஆலோசனை கொடுத் திருக்கணும். அவளுக்கு பாதுகாப்பு உணர்வு தரணும்; அது தான் கல்லூரி நிர்வாகத் தின் கடமை. ஆனா இங்க அது நடக்கல. பயமுறுத்துற மாதிரியும், அவமானப் படுத்துற மாதிரியும் நடந்துக்கிட்டதாலதான் மாணவர்கள் இப்ப ரோட்டுக்கு வந்திருக்காங்க. இந்தக் கல்லூரி நிர் வாகத்தினரை சிவகாசியில பெரிய இடமா பார்க்குறதால, யாராலும் எதிர்த்துப் பேசமுடியாத சூழல் இருக்கு. அதோட, சோலைராணி எழுதி வச்சிருக்காங்கன்னு சொல்லப்படுற கடிதத்தை, அவங்க அம்மாவிடருந்து வாங்கி சத்த மில்லாம மறைச்சிட்டாங்கன்னு சந்தேகமும் எழுந்திருக்கு''’என்றார்.
சிவகாசி டவுண் காவல்நிலை யத்திலோ "சோலைராணி லெட்டர் எதுவும் எழுதி வைக்கல. அவங்க கூட பழகுன பையனுக்கு மெசேஜ் அனுப்பிருப்பாங்க போல. சோலை ராணியோட செல்போன் பேட்டன் லாக்ல இருக்கு. அத ஓபன் பண்ணுன பிறகு விசாரணை தொடரும். காவல்துறை யாரையும் காப்பாத்த நினைக்கல''’என்றனர்.
கல்லூரியில் மாண வர்களின் காதலைக் கட்டுப்படுத்த நினைத்த நிர்வாகம், உயிரின் மதிப்பை மறந்துவிட்டது.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us